முகப்பு

Thursday 16 June 2011

ஏதோ சொல்லுறேங்க..

அணு...!இந்த வார்த்தையை  இதன் செயல்பாட்டை..பள்ளியில்
வாத்தியார்(விஞ்ஞான பாட நேரம் முகட்டிலிருக்கும் மூஞ்சுருக்களைதானே பார்த்துக்கொண்டிருந்தோம்..!?) தலையால் தண்ணி குடித்து
சொல்லித்தந்தாலும் என் போன்ற மரமண்டைகளுக்கு புரியவே புரியாது..!

மார்ச்11க்கு  பின் இப்பொழுதெல்லாம் உலகம் முழுவதும்
அணுவுலைகலைப்பற்றி பேசாதவர்களே இல்லையெனலாம்.. ஜப்பானின் புக்கிசுமா
சம்பவம் உலக அணுவுலைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.!?

தலையிடியும்..காய்ச்சலும் தனக்கு  தனக்கு வந்தால்தான் தெரியுமென்பதுபோல்..!
இப்பத்தான் நானும் முளிச்சுப்பாக்கிறேன்
பிரான்சில் 90%க்கு மேல் அணு மின்சாரம்தானாம்( இலங்கையில் இருக்கும் போதுBBCதமிழ் ஒலி கேட்பதற்காக இரவு
9மணியிலிருந்து 10மணிவரை சைக்கிளை  சுத்திச் சுத்தி நாங்களும் மின்சாரம் தயாரிச்சிருக்கோம்க..!)


ஆற்காட்டாரால் ஆட்சியே போயுள்ள இந்தக்காலத்திலும்கூட..? அணுமின்சாரம் அவசியம்தானா? மிக வளர்சியடைந்த யப்பானாலேயே அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்த முடியாது கையை பிசைந்து
நிற்கும் இன்நேரத்தில் இந்தியாவில் மின்சாரத்திற்காக அதிக அணுவுலைகலை
உருவாக்க திட்டமிடுகிறார்கள்..!?

பிரான்சில் இப்பொழுது அணுவுலைகளைப் பற்றி அனைத்துக்கட்சிகளிடமும்  கருத்து
வேறுபாடுகள்.! பசுமைக்கட்சியைத் தவிர.?மற்றவர்கள் மதில் மேல்
பூனைகளே...ஏனெனில் உலகத்தில் அதிக அணுவுலைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பிரான்சின் அரேவா நிறுவனமும் ஒன்று.

இதற்காகத்தான் நம்ம சித்தப்பு சார்கோசி
அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சர்தாஜித்
தாத்தாவை சந்திச்சு பல ஒப்பந்தங்களை
போட்டுக்கொண்டு வாரார்? ஆனாலும் ஜரோப்பாவில் அணுவுலைகளுக்கு பரவலான எதிர்பு வளர்ந்து வருகிறது.!?

நான் பிரான்ஸ் வந்த ஆரம்ப நாட்களில்
இல்லாத ஒரு மாற்றத்தை கடந்த 5வருடங்களாக உணர்கிறேன்..! அது என்னவெனில் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில்
உள்ள வீடுகளின் கூரைகளில் மின்சார உற்பத்தி பலகைகலையும் வயல் வெளிகளில் காற்றாலைகலையும் காணக்கூடியதாய் இருக்கிறது.. அத்துடன்
வாகன தரிப்பிட  இயந்திரங்கள் இயங்குவது சூரிய ஒளியிலேயே(இந்த குளிர்நாட்டிலேயே..!?)

இவை மட்டுமா? 14/06/2011இல் பெல்ஜியத்தின் தலை நகர் புருக்சலில் இருந்து solarimpulse என்று பெயரிடப்பட்ட சூரிய ஒளி விமானம் பாரிஸ் வந்தடைந்தது.! பாருங்கோப்பு சூரிய ஒளியில் விமானமே ஓட்ட முடியும்போது..(என்ன விமானத்தை காரின் வேகத்திற்கு  இனையாக ஓட்டினார்கள்...!?)
வீட்டுத்தேவைக்கு மின்சாரம் தயாரிக்க முடியாதா மக்கா..?

13/06/20011இல் இத்தாலியில் எடுக்கப்பட்ட
வாக்கெடுப்பில் சில்வியோ பெர்லஸ்கோனி(என்ன கன்றாவிப் பெயரோ..?)அரசின் அணுக்கொள்கையை
எதிர்த்து 95%மான மக்கள் வாக்களித்துள்ளார்கள்(இவருடைய பாலான செயல்பாட்டிற்கும் சேர்த்து குத்தோ குத்தென்று குத்தி விட்டார்கள் வாக்கால்)

இவ்விடயத்தில் சிறந்த செயல்பாடுகளை
யேர்மனியின் அஞ்சேலா மேர்கல் அரசு செயல்படுத்துகிறது 2022க்குள்
அனைத்து அணுவுலைகளையும் மூடவுள்ளது
அதனால்தான் ஜரோப்பாவில் பாச்சா பலிக்காதெண்டு சித்தப்பு இந்தியாவோடு
குழையிரார் இன்னும் இளிச்சவாயர்கள்
இருக்கிறார்களா  என்றுவேறு தேடுகிறார்..!?

இவ்விடயத்தில் இத்தாலியம்மா தன்னுடைய தாய்நாட்டு
மக்களின் முடிவை நினைத்தாவுதல் சித்தப்பு போன்றோரிடம் கவனமாக இருக்கலாம் (இஞ்ச ஆட்டோ வாராதென்று
நினைக்கிறேன்.!) இந்தியாவிற்கு சிறப்பான
மாற்று வழி சூரிய மின்சக்தியும் காற்றாலைகலுமே..!?

இந்திய குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் காற்றாலைக் கருவிகலால் ஜரோப்பாவில் ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள்..!(எல்லாவற்றையும் கண்டு பிடித்து கொடுப்போம் ஆனால் அதை அனுபவிக்க மாட்டோம்?)

நான் நினைக்கிறேன் ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமெண்டதை தவறாக விளங்கி விட்டார்களோ!? இதில வேற கனவுகானு..கனவுகானு..! 2020இல் நாமதான் வல்லரசு(இதுக்கு விளக்கமென்னப்பு.?) என்று கூவிக்கொண்டு திரியுரவர் நாங்க யுரேனியத்த பாவிக்கேலமக்கா... தோரியத்ததான் தோண்டுறம்ன்கிறார் கொக்கமக்கா தோரியம் வெடிச்சான்னா...!?
மனிதன்,மிருகம்ன்னு பிரிச்சு மேயுமோ.!?

தலையை சுத்தி மூக்க தொடாம விசயத்திற்கு வாரன் கொக்க மக்கா இந்தியாவில 365 நாளும் சூரிய ஒளி இருக்கு மக்கா  நன்றாக வீசக்கூடிய ..?
தென்மேற்கு பருவக்காற்று  இருக்கு மக்கா
இதுவும் காணாதென்னா மூன்று பக்கமும்
கட(ன்)ல் இருக்கு மக்கா (விழுந்தும் சாகலாம்,அலைகலை வைத்து மின்சாரமும்
செய்யலாம்) ஆனால் அரசியல் வாதிகளுக்கு தொலை நோக்கு பார்வைகள்..!இல்லை.? (உ+ம்  கலைஞர் போல் நீண்ட கால திட்டமிடல் ..!?இல்லை பின்ன என்ன மக்கா இலவச
தொலைக்காட்சியை கொடுத்த கையோடு கலைஞர் TVயை திறப்பது, கட்சிக்கு வருங்கால தலைவர் பதவிக்கு அண்ணன் தம்பிகளை மோத விடுவது யார் வென்றாலும் குடும்பத்துக்குள்ளாரதான் கட்சி ...!?)

அட நம்ம ராஜபக்ச ஐய்யாவே யப்பான்  மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் (இதவிட்டா வேற இடம் தெரியாது..!?)1237 மெகாவற் சக்தி கொண்ட சூரியசக்தி மின்நிலையம் ஒன்று அமைக்கப்படள்ளதாக 2010டிசம்பரில் அறிவித்திருந்தார்(இப்ப மாத்தையா யப்பானுக்கு உதவி செய்கிறார்..!!??)

எதுவாக இருந்தாலு ஜெயலலிதாம்மா கொண்டு வந்த மழை  நீர் சேகரிப்பு (இப்ப என்ன நிலை..!?சமசீர் கல்விக்கு ஆத்தா அடிச்ச ஆப்பு போல் மழை நீர் சேகரிப்புக்கு தாத்தா ஆப்படித்தாரா..!?) திட்டம் போல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் சூரிய ஒளி சேகரிப்பு பலகைகள் அமைக்க உத்தரவிடவேண்டும்.
அதுவரை அம்மா சொல்வதுபோல் குஜராத்தில இருந்து கொண்டுவாராக, மத்தியதொகுப்பில் இருந்து கொண்டுவாராங்க என்று சொல்வதை கேட்போம் காதுகள் எதற்கு இருக்கின்றன..?

No comments: