பாத்தீங்களா மாப்புங்களா..இதுதானப்பு நான் புதுசா வாங்கின கால இயந்திரம் என்ன யோசிக்கிறீங்க மாட்டு வண்டிய வைச்சிகினு காலன் கீலன்னு ரீலு விடுகிறேன்னு ஆமாயா இது நிசமாவே ஒரு கால இயந்திரம்தானய்யா இப்ப நாம போகப்போறது எனக்குள்ளார குந்தின்னுகிர கிராமத்து பொருதாரமேதை காட்டான் கந்தசாமியை கூட்டிக்கினு வரத்தான்
பொருளாதாரத்தைப் பற்றி இந்த கம்முனாட்டி கதைக்கப்போறான்னாலே எலி மூஞ்சியில சோத்தான் கைய வைக்க போறீங்களே...மாப்புக்களா இது நீங்க நினைக்கிற பொருளாதரமில்லங்க..! வாங்க.. வாங்க ..நேரிலேயே போய்பாப்பம் குய்ங்.. குய்ங்..அட சக்கரத்த கொஞ்சம் வேகமா சுத்தீட்டன்போல.!
கொய்யா மக்கா உன்மையிலேயே ஏமாந்திட்டிங்களா..!? ஏதோ வந்திட்டிங்க அதுகாச்சும் ஒரு மொக்க பதிவ போடுவம் இந்த காட்டான் எப்பூடி தன் சிறுவயதில் பொருளாதார தேவைகளை தீர்தான் என சொல்லுறான் சிறுவயதில் உனக்கென்னடா பொருளாதார தேவை என்றுதானே கேட்கிறியல் நீங்க மட்டும் என்ன சிறுவயதில் பல்லிமுட்டஇனிப்பு,புலுட்டோ,தோடம்பழஇனிப்பு, இப்பூடி சாப்பிட்டிருப்பிங்கதானே..!? அட நானும் அதுக்குத்தான் காச எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்வது இத சில பெருசுகள் களவெடுக்கிறனாம்..!!
அட நான் கேட்கிறேன் இத களவெண்டே வைத்துக்கோ நான் காச எடுத்து நாளு நாளாச்சு நல்லா கல்பனுசு,வறுத்த விசுக்கோத்து இப்பூடி சாப்பிட்டத கண்டு பிடிக்க வக்கில்ல உங்களுக்கு ஏதோ சித்தப்பு வாங்கி தந்த சோடா சேட்டுல பட்டுட்டு அதவைச்சு கண்டு பிடிக்கிறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.!!?எனக்கு அது இல்லையப்பு...இது ஒரு திறம மாட்டாம ஆட்டையைப் போடுவது எப்பூடி அட அப்பூடி மாட்டினாலும் தப்புவது எப்பூடி..? அததான் சொல்லப்போறான் இந்த காட்டான்..
மாப்புங்களா ஒருத்தரிடமே தொடர்ந்து ஆட்டையை போடாதீர்கள் பின்னர் அவர்கள் எதைத் தொலைத்தாலு முதலாவதாய் வந்து நிற்பது உங்கமுன்னால!?அதன்பின் தொழிலுக்கு தொங்கு திசைதான் ??
முதலில் அம்மாவிடம் இருக்கும் சில்லரைகளை ஆட்டை போடுவதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவைகள் அம்மா வெளியூர் சென்று வந்தாரா..!?ஆமெனில் இதை விட சிறந்த சந்தர்பம் வேறேதுவுமில்லை கடைக்காரர்களும் பஸ் கண்டக்டர்களும் கொடுக்கும் சில்லரைகள் பர்ஸ்சுக்குள் நிறைமாத கர்பிணிபோலிருக்கும்..! இதை அம்மா கணக்கு பார்க முன்னர் ஆட்டையை போட வேண்டும் ஏனெனில் சில்லரைகள் குறைந்தாலும் எங்களை சந்தேகப்படாது கடைக்காரர்களையும் கண்டக்டர்களையும் திட்டித்தீர்பார்..!அப்பொழுது நீங்கள் பால் மணம் மாறா பச்சபுள்ளபோல் மூஞ்சிய வைத்திருத்தல் அவசியம்..!?
அட இவ்வளவு கஸ்ரப்பட்டு எடுத்தாலு சில வேளைகளில் எமது துரோகிகள் காட்டிக் கொடுத்தால்? (அட வீட்டுக்கதான் இருப்பாங்க வேற எங்கேயுமில்ல..!?)இப்ப அம்மான்னா சுமா இல்லேடாவென பிரப்புடன் வருகிறாவா? அமைதி ஓடாதே ஓடினால் அண்ணனோ அக்காவோ பிடித்து கொடுப்பார்கள் அதன் பின்னர் வரும் பூசை பலமானதாய்விடும் சாத்தியம் அதிகம் இப்ப நீ செய்யவேண்டியது இதுதான் பிரம்புடன் சேர்த்து அம்மாவை இறுக்க அனைத்துக்கொள்ளுங்கள் ராசா என்னை விட்டுடு என்று சொல்லும் வரை இப்போது வலது காலை மெதுவாக பின்நகர்த்துங்கள் விடு யுட் ஆனாலும் ஒரு அடி பலமானதாய் முதுகில் விழும் அரசியல்ல இதல்லாம் சகசமப்பு...!
அடுத்து நாம ஆட்டையை போடப்போவது அக்காவிடம் அக்காக்கள் இல்லாதவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதபங்கள் அக்காக்கள் இன்னுமொரு அம்மாக்களே...!?அதற்காக ஆட்டையை போடாதீர்கள் என்று சொல்லவரவில்லை அம்மாவிடமே ஆட்டையை போடும் நாங்க அக்காவிடம் ஆட்டையை போடாவிட்டால் எங்க பாசத்த நிறுபிக்க முடியாது..?இவ் விசயத்தில் நீங்கள் மிக மிக அவதானமாக இருத்தல் அவசியம்..? சரி அக்காவிடம்தானே பர்ஸ் இல்லையே புதையல் எங்கிருக்கும்?அட அனுபவசாலிகளுக்கு இதெல்லாம் ஒரு யுபி யுபி அட அந்த புதயலே அக்காவின் கொம்பாஸ்தான் என்ன என்ன மாப்புங்களா உடனே கொம்பாசை நோக்கி ஓடுகிறீங்க...!?பொரும பொரும கொம்பாச திறக்கமுன் கவனிக்க வேண்டியது அது எந்த திசையில் இருந்தது திறந்தவுடன் மயிலிறகு எப்படி இருந்தது ஆக்கு,ரப்பர் போன்றவை எங்கிருந்தது போன்றவை அவசியம் இதில் ஒரு பொருளை இடம் மாற்றி வைத்தால்..?சங்குதான் சிங்கங்களே..
அடுத்து நாம போற இடம் பாட்டிமார் ஆரம்பத்திலேயே சொல்கிறேன் இவர்களிடம் ஆட்டையை போடுவது சிரமமே..!இவரிடமிருக்கும் புதயல் உள்ளங்கை நெல்லிக்கனி வேற எங்க இருக்கும்? முந்தானை முடிச்சிலதான் ஆனால் இவர்களுக்கு நாம அடிக்கடி தேவைப்படுவோம் கடை தெருக்களுக்கு சென்று வர.. அப்போது வெற்றிலை,பாக்கின் விலையில் விளையாடலாம் விதவிதமாக..!?அத்தோடு கோவில் திருவிழாக்களில் பக்தி மயமாக பாட்டியுடன் கோவிலை சுத்திவந்தால் சுண்டலுடன் முந்தானை முடிச்சும் உங்களுக்கே..!!
அடுத்து நாம போறது தாத்தாமார்கள் எனக்கு தெரிந்து இவர்களிடம்தான் ஆட்டையை போடுவது சுலபம்..? மாமாக்கள்,சித்தப்புக்கள் மாதாமாதம் பாட்டிமார்க்ளுக்கு கைச்செலவுக்கு காசை கொடுப்பார்கள் அப்படியே பாட்டிமார்களுக்கு தெரியாமல் தவறனை செலவுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அழுவார்கள் இதுதான் எங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்து இதை ஒரே போடாக போடாமல் முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு வரவேண்டும்(கொஞ்சம் கொஞ்சமாக)ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு சந்தேகம் வந்து விட்டால்?இடத்தை மாற்றி விடுவார் அதை கண்டு பிடிப்பது ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை..!இப்ப நீங்க மாலை வகுப்புகள் முடித்து வருகிறீர்கள் தாத்தாவும் குட்டித் தூக்கம் போட்டு பாட்டி குடுத்த ஆட்டுப்பால் கோப்பிய ருசித்துக்கொண்டு இருக்கிரார் இப்ப பாட்டிய தேடாதீங்கோ அவங்க கோப்பிய குடுத்த கையோட பக்கத்து வீட்டு பரமாச்சியோட அரட்டையரங்கத்தில இருக்கா..!
இஞ்சதான் நீங்க கவணமாய் காய் நகர்த்த வேண்டும் பக்கதில் ஏதாவது மறைவில் ஒளித்துக் கொள்ளுங்க தாத்தாவின் கோப்பி பேனி வாயிலே கண்ணு முகட்டிலேயா கவலையே வேண்டாம் புதையலை நெருங்கி விட்டோம் எதற்கும் தவரனைக்கு காசு எடுக்க முகட்டில் கை வைக்கும்போது உறுதிப்படுத்திகொள்க..!இதில ஒரு நல்ல விசயம் என்னவெனில் நாங்கதான் முட்டையை பொறுக்குகிறோம்மென தாத்தாவுக்கு தெரிந்தாலும் அவர் நிலமை திருடனுக்கு தேள் கொட்டியதுதான்..?
இதில சிறு சிக்கல் என்னவெண்டால் இந்த தாத்தாக்கள் அடுத்த முறை தங்கள் பிள்ளைகள் வரும்போது ரகசியமாய் போட்டு கொடுப்பார்கள் அவர்களும் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாததால ..!டேய் போய் பள்ளிகூட புத்தகத்தை கொண்டுவாடா என்பார்கள் இதுக்கு பிறகுதான் இருக்கு மாப்பிள ஆப்பு கோழி முதல் வந்ததா முட்ட முதல் வந்ததா?? போன்ற அறிவுபூர்வமான கேள்விகள் கேட்டு ஆப்படிப்பார்கள் இங்கு பாட்டிமார் இருந்தால் தப்பித்தோம் இல்லையென்றால் குத்துங்க எசமான் குத்துங்கதான்..!
இதெல்லாம் கானாட்டி நம்ம நண்பன் பக்கத்து கடை பாலு கல்லாபெட்டியில் இருக்கும் போது போய் அஞ்சு ரூபா கொடுத்து இனிப்பு வாங்குங்க அக்கம் பக்கம் பாத்திட்டு அம்பது ரூபா மிச்சம் தருவான் பாதி உங்களுக்கே..!! மீதிய பள்ளிகூடத்தில அவனிட்ட கொடுத்தா கணக்கு தீர்ந்து போச்சு..!?(நாணயம் முக்கியம்)இதுதாங்க கஸ்டபடாம ஆட்டைய போடுறது??அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!
அடுத்து நாங்க போக போற இடம் தம்பி அல்லது தங்கச்சியிடம் மாப்பிளங்களா பொரும பொரும இஞ்சயெல்லாம் ஆட்டய போடாதீங்க.. இவங்க எங்கள் எதிர் கால அன்னங்கள் இவர்களில் வகுப்பு தோழிகளில் ஒருவர் எங்கள் வருங்கால தமயந்தியாகலாம்??ஆகையால் மற்றவர்களிடம் ஆட்டையை போடும் காசில் இவர்களையும் கவனித்து வைத்திருத்தல் அவசியம்..!
அது சரி இதல்லாம் உன் சொந்த அனுபவமான்னா கேக்கிறீங்க..?ஐய்யோ மாப்புங்களா எனக்கு தொண்ட கட்டிப்போச்சு காதும் சரியா கேக்குதில்லீங்க ...!!கருத்துக்களில் போட்டு தாக்குங்க இந்த உடம்பு எவ்வளவோ தாங்கினது இதையும் தாங்கும்?குத்துங்க எசமான் குத்துங்க..!!?
11 comments:
நல்லாத்தான் களவு செய்து இருக்கிறீங்க .
குத்துங்க எசமான் குத்துங்க..!!?
சொந்த அனுபவம் நல்லாவே இருக்கு .
Nesan a dit…
நல்லாத்தான் களவு செய்து இருக்கிறீங்க .நன்றி நேசன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ...
Mahan.Thamesh a dit…
குத்துங்க எசமான் குத்துங்க..!!?
சொந்த அனுபவம் நல்லாவே இருக்கு .
நன்றி mahan.thameshஇதையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்காத இப்போதய தலைமுறை சிறுவர்களை நினைக்கும்போது மனசு வலிக்கிறது களவைச்சொல்லவில்லை கூட்டுக்குடும்ப வாழ்கையும் சொந்தங்களையும் சொல்கிறேன்...எனக்கே இரண்டு குழந்தைகள் அவர்களிடம் அம்மாவின் உடன் பிறப்புக்கள் எத்தனை பேர் என கேட்டால் ஏதோ கேக்ககூடாததை கேட்டதுபோல் முழிக்கிறாங்க..இந்த விடயத்தில் எந்தன் தலைமுறை கொடுத்து வைத்தவர்கள்..!!
வணக்கம் சகோதரம்,
அருமையான ஒரு பதிவினை எழுதியிருக்கிறீங்க..
கூடவே நகைச்சுவைகளையும் கலந்து கலக்கலாக எழுதியிருக்கிறீங்க.
உங்களின் இப் பதிவு என் பள்ளிக் கால நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவியிருக்கிறது.
நன்றி சகோ.
உங்கள் பதிவினைத் திரட்டிகளில் இணைத்தால், இன்னும் நிறைய வாசகர்கள் வருவார்கள் சகோ.
திரட்டிகளில் பதிவினை இணைப்பதற்கான ஓட்டுப் பட்டைகளை ப்ளாக்கில் எப்படிச் சேர்ப்பது தொடர்பான இணைப்பினை இங்கே பகிர்கிறேன்
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
அட என்ற பதிவுக்கு நிரூபனா...!வாங்க மாப்பிள வாங்க இந்த காட்டானுக்கு வயது அதிகமென்றாலும் உங்கள் பதிவுகள்தான் என்னை எதாவுதல் செய்யடா காட்டான்னு உசுப்பேத்தியது...! நன்றி நன்றி இந்த காட்டானுக்கு மரபட்டை இடிச்சு நாட்டு வைத்தியம்தான் செய்ய தெரியும் இனிமேல் நீங்கள் தந்திருக்கும் ஆலோசனைப்படி திரட்டிகளில் ஓட்டளிப்பு பட்டையை இனைக்க முயற்சிக்கிறேன் மீண்டும் நன்றி மாப்பிள..!
super
உங்கட வருகைக்கு நன்றி துஷ்யந்தா நாளை ஒரு பதிவு போடுறேன் நேரமிருந்தால் வந்து பாருங்கோ இந்த காட்டானையும்..
அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!//
அருமையான பதிவு...
அருமையான பதிவு காட்டான் .இப்ப ஏதாச்சும்களவு எடுக்கணுமே ..ஹி...ஹி ...ஹி ....காட்டான் உங்க பேத்திய பாக்கணுமா?.... இந்த மகளோட வீட்டுக்கு விரைந்து செல்லுங்கள் .ஐஸ் உருகிடப் போகுது .
Post a Comment