முகப்பு

Friday 12 August 2011

மணியண்ணை...

வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல.. ஒங்களுக்கெல்லாம் என்ர நன்றீங்க..

இண்டைக்கு ஏதாவது எழுதிபோட்டுட்டு ஊரில கோழிக்கு அடவைச்சிட்டு மணித்தியாலத்துக்கொருக்கா கோழிய தூக்கி முட்டயெல்லாம் பொரிச்சிட்டோன்னு பாக்கிற சின்ன வயது காட்டானபோல நானும் இனி கருத்து பெட்டிய உந்த எலிமூச்சில கையவைச்சு தட்டித்தட்டி பாக்க போறேனுங்க....

இண்டைக்கு என்னத்த எழுதலாம் என்னு யோசிக்கேக்க..என்ர தங்கச்சி டெலிபோன எடுத்து என்னண்ண அக்காவ பற்றி மட்டும் எழுதுறாய் நானும் பிரான்சிலதானே இருக்கிறன் நீ சொன்னமாதுரி உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையார்கள் இருக்காங்கன்னு தோற்றத்த ஏற்படுத்துறேனேண்ண...?? அதுக்காச்சும் என்ன பற்றி நீ எழுதலாம்தாணேண்ணன்னு சொல்லுறாள்..

அட இவளபற்றி நான் என்னத்த எழுதவெண்டு பாக்கிறன்.. ஆமாங்க சின்ன வயசில நாங்க எந்த கும்மு கும்மினாலும் அத வாங்கிக்கொண்டு  எங்களுக்கு பின்னாலேயே சுத்துவாள்.. இவளிண்ட கையில காசும் இருக்காது ஆட்டைய போட... ஆனா எனக்கு நல்ல ஞாபகமிருக்கு... அப்ப நாங்க வீடு திருத்திகொண்டிருந்தோமுங்க ஒரு பத்து பதினைந்து வேலையாள்கள் வேலைசெய்து கொண்டிருந்தாங்க அம்மாவும் ஆச்சியும் அவசர வேலையா எங்கேயோ போட்டாங்க...
பின்னேரம் எல்லாருக்கும் கோப்பி கொடுக்கோனும்..

 நானும் சும்மா தங்கச்சியிட்ட சொன்னேன் இவங்களுக்கெல்லாம் கோப்பி போடம்மான்னு அவளும் ஓடிபோய் எல்லாருக்கும் கோப்பி போட்டுக்கொண்டு வாறா.. எங்கட வீட்டிலேயே குட்டியா ஒல்லியா இருப்பாள் அப்ப அவ்ள்... வேலைக்காரஙகளிக்கெல்லாம் ஒரே ஆச்சரியமா போச்சுங்க... அப்ப அஞ்சு வயசு பிள்ளையே வீட்டு வேலையெல்லாம் அழகா செய்யும்...

இப்ப காட்டானும் பாக்கிறன் இஞ்ச இருக்கிற பிள்ளையல..!!!?? ஒரு சுடுதண்ணிகூட போட கஸ்டப்படுகிறாங்க... பருப்புக்குள்ள தாளிக்க போடுற செத்தல் மிளகாய பார்த்தாவே ஒலகத்தில இருக்கிற எல்லா சண்டைப்பயிற்சியயும் ஒண்டா செய்யிற மாதிரி  ஆ..ஒ..ஐயோன்னு சவுண்டு விடுறாங்கய்யா...

அதுதானய்யா நானும் பயத்தோட பாக்கிறேன்... போனமாசம் மணியண்ணை என்னை கூப்பிட்டு டேய் காட்டான் என்ர பிள்ளைக்கு நீதானே பேரு வைச்சாய்ன்னார்.. ஆமாண்ண அதுக்கென்ன இப்போன்னா பேரு வைச்ச நீயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து சொல்லுன்னார்..!!

அட பொண்ணுக்கு நல்ல பேருதான்யா வைச்சனான் யாழினின்னு ஆனா நீங்க அவளுக்கு நல்ல படிப்ப கொடுத்து கை நிறைய சம்பாதிக்கவும் வச்சிட்டீங்க இல்லைன்னேல...  கொஞ்சம் சமைக்கவும் பழக்கியிருக்கலாம்தானேன்னன்..

அட காட்டுப்பயலே அதுக்குதானேடா உன்ன கூப்பிட்டனான் உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார் அதுதான் இப்ப நல்ல ஒரு மாப்பிளய தேடிக்கொண்டு இருந்தேன்..

 வேலைக்கு போகேக்க அடிக்கடி ஒரு பொடியன பாக்கிறனான் நல்ல அழகா அம்சமா இருப்பான்.. சும்மா பேச்சு கொடுத்து பார்தேன் பிரான்சுக்கு வந்து ரெண்டு வருசமாச்சாம் விசா இல்லையெண்டும் கொமிசனில விசா கேட்டு மூன்றாவது ரீயப்பீல் பண்ணியிருக்கெண்டார் எண்டும் சொன்னார்..

நானும் ஒரு புது புரோக்கர் என்ற நினைப்பில அவரிட்ட கதைய விட்டுப்பார்தேன் கலியாணம் கட்டிட்டியோன்னு அவனும் இல்லையென்னு சொல்ல எனக்கு தலையில பல்பு எரிஞ்சுது..  இவனும் பிரன்சில இருக்கிறான் மணியண்ணைக்கும் புது மாப்பிளைய ஸ்பொன்சர் செய்யிர தொல்லையெல்லாம் இல்லைன்னு..!! விசாவோட கைநிறைய சம்பாதிக்கிற பொண்ணு இருக்கிறா விருப்பமெண்டா சொல்லப்புன்னு என்ர டெலிபோன நம்பர கொடுத்துட்டு வந்தன்.
அட அவனுக்கு என்ன அவசரமோ தெரியல வீட்ட போய் சேரேல்ல டெலிபோன் வருகுது அம்மாட்ட கதைச்சிட்டேண்ண அவாவும் ஓமெண்டுட்டாண்ண.. போட்டோவெல்லாம் பார்க்க தேவையில்லண்ண.. சம்பந்தத்த முடிச்சிடுவோமென்னான்... எனக்கு டக்கன்னு ஒரு சந்தேகம் என்னடா இவன் இப்பிடி அமளிப்படுகிறானே ஏதாவது வில்லங்கமாச்சென்னா என்ர மகளபோல இருக்கிற அந்த பிள்ளையின் வாழ்கை பாழாகக்கூடாதுன்னு சரி தம்பி அவங்கள நேரிலபோய் கதைச்சுப்போட்டு சொல்லுறேன்னுட்டு இவனைப்பற்றி ஒரு துப்பறியும் சிங்கமாய் தோண்டிப்பார்த்தேன் இவற்ற நண்பர்களோட கதைச்சுப்பார்த்தவரையிலும் நானும் தோண்டி துலாவின வரையிலும் பொடியன் பரவாயில்லன்னு ஒரு முடிவுக்கு வந்தேங்க..

மணியண்ணையிட்ட கதைச்சு பொடியண்ட ஜாதகத்தையும் வாங்கியந்து பொருத்தமும் பாத்தோமுங்க நல்ல பொருத்தம் கல்யாணம் செய்யலாம்ன்னு சாஸ்திரியும் சொல்லீட்டார் ஆனா பிள்ளைக்கு ஏதோ தோஸம்ன்னு ரெண்டு மாசத்துக்கு பிறகுதான் கல்யாணத்த வைக்கச்சொன்னாருங்க..

அடுத்த நாள் பொடியனோட கதைச்சு வீட்டில ஆராவது பெரியவங்க இருந்தா வெத்தில பாக்கு தட்டத்தோட வாடா பொண்ணு பார்த்து நடுமாறுவம்ன்னு சொல்லி அவனை எதிர்பார்த்து மணியண்ண வீட்டில நான் குடும்பதோட போய் நின்னா அவனும் பத்து பதினைஞ்சு பால்குடியலோட வாறார் வீட்டுக்கு..

மணியண்ண என்னை ஒரு மாதிரி பாக்கிறார்.. நானும் மணியண்ண காதில சொன்னேன் இப்ப இவங்கதானே பெரியவங்க உதையெல்லாம் கணக்கெடுக்காதீங்க தாலி கழுத்தில ஏறினோன பாருங்க இந்த தம்பிமார மாப்பிளைக்கு தெரியாதெண்டு என்ர அனுபவத்த சொன்னேனுங்க....  அவரும் சரிடா காட்டான்னு தட்ட மாத்திட்டார்...

இப்ப கொஞ்சக்காலமா ஐப்பசியில வார கல்யாண வீட்டிற்கு இப்பவே கோல் புக் பண்ணுறதில இருந்து சாப்பாடு வரைக்கும் என்ர தலையில விட்டுட்டார் மணியண்ண நேற்று வரைக்கும் உந்த விசயங்களுக்குதான் ஓடி திரிஞ்சேன் சந்தோசமா... அந்த மாப்பிள  டெலிபோன் எடுக்கும்வரை...!!!!????

டெலிபோன எடுத்த அந்த மாப்பிள வாயில முட்டய வச்சிருக்கிற மாதிரி சொல்லுரார்.. அண்ண எனக்கு நேற்று விசா ஓகே பண்ணி கடிதம் வந்திருக்கென்றான்.. பாத்தியோடா அந்த பிள்ளையிண்ட ராசி உனக்கு விசா கிடைச்சிருக்கென்னேன்.. அவனோ அனுங்கிக்கொண்டு சொல்லுறான்.. அம்மாவுக்கு இந்த கல்யாணத்தில இஸ்டமில்ல நானும்அம்மா சொல்ல மீறி ஒண்டும் செய்ய முடியாதெண்டுறான்... எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நல்ல சுத்த தமிழ்ல நாலு விட்டன் அவனோ டெலிபோன கட்பண்ணிட்டு போட்டான்...

அட இந்த நாய்தான் இப்பிடி சொல்லுதெண்டா.. அவன் அம்மாவுக்கு எங்க போச்சு புத்தி.. இவனுக்கும் ரெண்டு சகோதரிகள் இருக்கினம்தானே அவைக்கு இந்த நாய் செய்ததுபோல யாராவது செய்தா ஓமெண்டு விடுவானோ இந்த நாய்..!!!?

வீட்ட வந்து மணியண்ணைக்கு டெலிபோன எடுக்கிறன் கையெல்லா நடுங்குது.. விசயத்த மணியண்ணையிட்ட சொன்னா அப்புறம்ன்னு சுவாரசியமா கத கேக்குற மாதிரி கேக்கிறார்.. என்ன அண்ண இப்பிடி இருக்கிறீங்கன்னா.. டேய் காட்டான் இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணம் கட்டினா என்னவெல்லாம் செய்வான்னு யோசிச்சுப் பாரடான்னுரார்...!!!? மணியண்ண என்னோட கோவபடலைன்றதே சந்தோசம்தான் ஆனா இந்த மாப்பிளையின்ர மண்டேக்க என்ன இருக்கென்று யோசித்து பாக்குறன்...

ஆரம்பத்தில கலியானத்துக்கு செக்கு மாடு மாதிரி காட்டான சுத்தி வந்தவன்.. விசா கிடைச்சோன பாத்திருப்பான் படிச்சு வேலைக்கு போற பிள்ளை இந்த நாட்ட நல்லா தெரிஞ்ச பிள்ள பாச ஒரு பிரச்சன இல்லாத பிள்ள இவள கட்டினா தான் வீட்டில பெரிய பிஸ்தான்னு காட்ட முடியாதுன்னு யோசிட்டான் போல.. இவனுக்கு தேவையெல்லாம் ஒரு பிள்ள பெத்து போடுற,வீட்ட சுத்தம் செய்யுற,சாப்பாடு சமைச்சு போடுற,உடல் பசிய தீர்கிற ஒரு இயந்திரம்... அது எங்க இருக்கென்னு யாராவது சொன்னா புண்ணியமாபோகும்... அத வாங்கி இந்த நாயிட்ட குடுத்திட்டா ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகாதையா...!!?

 பின்குறிப்பு:- எல்லோரும் மன்னிச்சிடுங்க நாய்,பேய்ன்னு எழுதினத்துக்கு.. அடுத்து இது கற்பனைக் கதையில்ல.. காட்டான் உண்மையாகவே அனுபவித்த நிசமுங்கோ..  மணியண்ணயின் பேர மட்டும் இதற்கு பாவிச்சேன்.. அவர் என்ர குறியீடுதானே...!!??

பதிவுக்கு ஏற்ற மாதிரி அவரும் மாறுவாருங்கோ.!!!???  அப்ப மணியண்ண யார் என்கிறீர்களா.. அவர் நானாகவும் இருப்பார்..!!?? நீங்களாகவும் இருப்பார்..!!?? தானாகவும் இருப்பார்..!!? என்ர மணியண்ணை ஒரு மாயாவியுங்கோ..!!????

பாருங்கையா.. புலக்கு புலக்கென்னு திரிஞ்சதில காட்டான் தோட்டத்தை கவனிக்காம விட்டுட்டான்யா... காட்டான் புடுங்குற குழயெல்லாம் இஞ்ச இருந்து தானையா..!!!???

118 comments:

Anonymous said...

///ஊரில கோழிக்கு அடவைச்சிட்டு மணித்தியாலத்துக்கொருக்கா கோழிய தூக்கி முட்டயெல்லாம் பொரிச்சிட்டோன்னு பாக்கிற சின்ன வயது காட்டானபோல// அப்ப நீங்க கனக்க கோழி பிடிச்சிருப்பீங்க போல மிஸ்டர் காட்டு..))

Anonymous said...

///ஆமாங்க சின்ன வயசில நாங்க எந்த கும்மு கும்மினாலும் அத வாங்கிக்கொண்டு எங்களுக்கு பின்னாலேயே சுத்துவாள்.. /// நிகம் எல்லாம் வளர்த்து வச்சு உங்களை பிறாண்ட மாட்டாங்களா (அனுபவம் ஹிஹி )

காட்டான் said...

மாப்பிள கள்ள கோழி பிடிக்கேலேயேன்னு சந்தோசப்படு

Anonymous said...

///அட காட்டுப்பயலே அதுக்குதானேடா உன்ன கூப்பிட்டனான் உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார் அதுதான் இப்ப நல்ல ஒரு மாப்பிளய தேடிக்கொண்டு இருந்தேன்..// உங்க ஆத்துக்காரி கொடுத்து வச்சவங்க பாஸ் ஹிஹி

காட்டான் said...

///ஆமாங்க சின்ன வயசில நாங்க எந்த கும்மு கும்மினாலும் அத வாங்கிக்கொண்டு எங்களுக்கு பின்னாலேயே சுத்துவாள்.. /// நிகம் எல்லாம் வளர்த்து வச்சு உங்களை பிறாண்ட மாட்டாங்களா (அனுபவம் ஹிஹி )
அப்ப ஊதினா விழுந்துடுற சின்னப்பிள்ளை அவள் நான் தப்பிச்சேன்யா..

Anonymous said...

///டெலிபோன எடுத்த அந்த மாப்பிள வாயில முட்டய வச்சிருக்கிற மாதிரி சொல்லுரார்.. அண்ண எனக்கு நேற்று விசா ஓகே பண்ணி கடிதம் வந்திருக்கென்றான்.. பாத்தியோடா அந்த பிள்ளையிண்ட ராசி உனக்கு விசா கிடைச்சிருக்கென்னேன்.. அவனோ அனுங்கிக்கொண்டு சொல்லுறான்.. அம்மாவுக்கு இந்த கல்யாணத்தில இஸ்டமில்ல நானும்அம்மா சொல்ல மீறி ஒண்டும் செய்ய முடியாதெண்டுறான்/// இப்பிடி கொடுமை எல்லாம் நடக்குதோ(((

Anonymous said...

கந்தசாமி குழ போட்டான் ;-)

Chitra said...

நல்லவேளை..... திருமணம் , இரண்டு மாதங்களுக்கு தள்ளி போச்சு... இல்லையென்றால், அந்த பெண்ணின் கதி? கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். இந்த மாதிரி ஆட்கள், சரியான விசா status க்காகத்தான் திருமணம் செய்கிறார்கள். நல்ல பெண்ணுடன் குடித்தனம் செய்ய அல்ல என்று தெரிகிறது. :-(

ஆமாம் சகோதரி... நல்ல காலம் காட்டானும் மாட்டியிருப்பான்.. தோஸமென்னு சொன்ன சாஸ்திரியை இப்பவும் நினைச்சு பாஇக்கிறேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா... காட்டான் நல்லா கதை சொல்லுதீரு

செங்கோவி said...

மனுசியை விட விசா பெருசுன்னு நினைக்கற பயலுவலுக்கு பொண்ணு கொடுக்கலாமா..மணியண்ணை தப்பிச்சதுன்னு விடுங்கோ.

காட்டான் said...

தமிழ்வாசி - Prakash said...
ஹா..ஹா... காட்டான் நல்லா கதை சொல்லுதீரு

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்து பதிவுக்கும்...

Mahi_Granny said...

தப்பிச்சோம் என நினைத்து சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். உங்கட மணியண்ணை நல்ல விதத்தில் இதை எடுத்தது பெரிய விஷயம் .காட்டான் அருமையான விவரணை . வாழ்த்துக்கள்

காட்டான் said...

செங்கோவிsaid...
மனுசியை விட விசா பெருசுன்னு நினைக்கற பயலுவலுக்கு பொண்ணு கொடுக்கலாமா..மணியண்ணை தப்பிச்சதுன்னு விடுங்கோ.

12 August 2011 13:47
அதில்ல மாப்பிள இஞ்ச கொஞ்சப்பேர் மனிசி தன்னை விட கொஞ்சம் தெரிஞ்சாலலே கடுப்பாகுறாங்க.. தாழ்வு மனப்பான்மைன்னு சொலலாமா..??

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்து பதிவுக்கும்..

செங்கோவி said...

//மனிசி தன்னை விட கொஞ்சம் தெரிஞ்சாலலே கடுப்பாகுறாங்க.. தாழ்வு மனப்பான்மைன்னு சொலலாமா..??//

அதே தான்..வேறென்ன?

தமிழ்மணத்துக்கும் மணியண்ணைக்கும் என்ன பிரச்சினை? ஏன் சேர மாட்டேங்கிறாங்க?

காட்டான் said...

Mahi_Granny said...
தப்பிச்சோம் என நினைத்து சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். உங்கட மணியண்ணை நல்ல விதத்தில் இதை எடுத்தது பெரிய விஷயம் .காட்டான் அருமையான விவரணை . வாழ்த்துக்கள்

இப்ப நானும் மணியண்ணைய போலதான் எதையுமே சீரியசா எடுக்கிறதில்லைன்னு முடிவெடுத்திட்டேனுங்க...

நன்றி உங்கள் வருகைக்கும் கருதுப்பதிவுக்கும்..

காட்டான் said...

செங்கோவிsaid...
//மனிசி தன்னை விட கொஞ்சம் தெரிஞ்சாலலே கடுப்பாகுறாங்க.. தாழ்வு மனப்பான்மைன்னு சொலலாமா..??//

அதே தான்..வேறென்ன?

தமிழ்மணத்துக்கும் மணியண்ணைக்கும் என்ன பிரச்சினை? ஏன் சேர மாட்டேங்கிறாங்க?

உங்களுக்கு தெரியும்தானே நான் பதிவுலகத்திற்கு புது மாப்பிள அனுபவம் கம்மி அதை சரிப்படுத்துகிறேன்...

ஆகுலன் said...

உப்படி எல்லாம் நடக்குது என்டு கேகேக்க
கோபம் தான் வருகுது உவனுகளில....

நீங்க சொல்லுற கதையல கேகேக்க பிரான்ஸ் பற்றி ஒரு தப்பான ஓட்டம்....யாருக்கும் தெரியும் மாற்ற நாடுகளை பற்றி காட்டான் போல் ஒராள் சொல்லுற வரைக்கும்...

எனக்கு அந்த பெண்ணின் தகப்பனது மனநிலை பிடித்திருகுது....

ஆகுலன் said...

அது என்ன என்ட பக்கம் வந்தனீங்க குழ போடாம போட்டியள் குழ முடிஞ்சுதா....

அது என்ன செரியா அல்லது ஆப்பிள் ஆஆ........

காட்டான் said...

ஆகுலன்said...
அது என்ன என்ட பக்கம் வந்தனீங்க குழ போடாம போட்டியள் குழ முடிஞ்சுதா....

அது என்ன செரியா அல்லது ஆப்பிள் ஆஆ........

12 August 2011 14:43
என்ர செல்லம் அப்பிடியெல்லாம் யோசிக்காத இப்ப கொஞ்சம் பிள்ளைகளோட லீவில இருக்கிறதால இப்பிடி ஒரு சிக்கல்.. உனக்கு போட்ட பின்னூட்டம் ஒரு பாக்கிங்கில நின்னுதான் என்ர டெலிபோன் மூலம்.. காட்டானிடம் தோட்டமே இருக்கு கவலைப்படாதே..

அந்த தோட்டம் ஒரு விவசாய பண்ணையில் உள்ள அப்பில் தோட்டம் எவ்வளவு அப்பில் மண்ணில் வீனாகிறதேன்னு ஆதங்கத்தில் எடுத்த வீடியோ சும்மா பீலாவிட்டேன் அவ்வளவும்தான்.. இந்த தோட்டத்திற்கு போகும் வழியில்தான் உனக்கு பின்னூட்டமிட்டேன்...

காட்டான் said...

ஆகுலன்said...
உப்படி எல்லாம் நடக்குது என்டு கேகேக்க
கோபம் தான் வருகுது உவனுகளில....

நீங்க சொல்லுற கதையல கேகேக்க பிரான்ஸ் பற்றி ஒரு தப்பான ஓட்டம்....யாருக்கும் தெரியும் மாற்ற நாடுகளை பற்றி காட்டான் போல் ஒராள் சொல்லுற வரைக்கும்...

எனக்கு அந்த பெண்ணின் தகப்பனது மனநிலை பிடித்திருகுது....

எனக்கும் கூட அவருடைய மனநிலை பிடிக்கும்.. அதனால்தான் அவருடைய பெண்ணுக்கு நல்ல ஒரு பையன் மாப்பிள்ளையாய் வர இருக்கிறார்.. ஆனா இந்த கல்யாணத்த நான் பேசலப்பா..

ஆகுலன் said...

காட்டான் நீங்க சொன்னமாதிரி பிள்ளையளுக்கு நேரம் ஒதுகுங்கோ...அப்புறம் பதிவு பக்கம் வாருங்கோ..அப்ப குட்டி காட்டானுகளுக்கு சந்தோஷம் தான்....

காட்டான் said...

ஆகுலன்said...
காட்டான் நீங்க சொன்னமாதிரி பிள்ளையளுக்கு நேரம் ஒதுகுங்கோ...அப்புறம் பதிவு பக்கம் வாருங்கோ..அப்ப குட்டி காட்டானுகளுக்கு சந்தோஷம் தான்....

நன்றி ஆகுலன்.. உங்களை நான் பிரான்சுக்கு வாங்கோன்னு சொன்னதி ஜோக்கில்ல நீங்க உங்கள் குடும்பத்தோடே வரலாம் காட்டான் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவான்...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தமிழ் மணத்தில் வோட்டு போட்டால் பதியவில்லை என்று வருகிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

Mathuran said...

//வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல//

என்னது கைகூட இப்ப ஓடுதா?

Mathuran said...

நாதாரிப் பயலுகள்.. நீங்க நாய் பேய்ன்னு எழுதினதில தப்பே இல்ல காட்டான்

Unknown said...

மாப்ள இப்படியும் இருக்காங்களா....வாக்கு நாக்குங்கறது எல்லாம் பொய்த்து போய் விட்டதோ.....ச்சே மனசு ஒரு குரங்குன்னு சரியாத்தான்யா சொன்னாங்க பெரியவங்க......அட்டகாசமா பகிர்ந்து இருக்கீங்க நன்றி

சக்தி கல்வி மையம் said...

காட்டான் குழ போட்டுதான் .. அப்படின்னா என்ன?

Unknown said...

காட்டான் யாரும் உமக்கு ஈடு
ஆக மாட்டான்!

உம் பதிவை முழுவதும்
படித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
எளிய, இனிய, யாழ்ப்பாண
நடை மிகவும் கவர்ந்தது

புலவர் ச‍ இராமாநுசம்

கூடல் பாலா said...

அடி பொழி பதிவு ....நானும் குழ போட்டேன் ...

காட்டான் said...

Rathnavel has left a new comment on your post "மணியண்ணை...": 

நல்ல பதிவு.
தமிழ் மணத்தில் வோட்டு போட்டால் பதியவில்லை என்று வருகிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள். 

நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும்.. தமிழ் மணத்தை சரிசெய்ய பார்க்கிறேன்...

காட்டான் said...

மதுரன் has left a new comment on your post "மணியண்ணை...": 

//வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல//

என்னது கைகூட இப்ப ஓடுதா? 

ஆமா மாப்பிள இஞ்ச கையுமோடேலன்னா எங்களுக்கு காப்பு போட்டுடுவாங்க...

காட்டான் said...

மதுரன் has left a new comment on your post "மணியண்ணை...": 

நாதாரிப் பயலுகள்.. நீங்க நாய் பேய்ன்னு எழுதினதில தப்பே இல்ல காட்டான் 

நன்றி மாப்பிள உன்ர வருகைக்கும் கருத்து பதிவிற்கும்...

காட்டான் said...

விக்கியுலகம் has left a new comment on your post "மணியண்ணை...": 

மாப்ள இப்படியும் இருக்காங்களா....வாக்கு நாக்குங்கறது எல்லாம் பொய்த்து போய் விட்டதோ.....ச்சே மனசு ஒரு குரங்குன்னு சரியாத்தான்யா சொன்னாங்க பெரியவங்க......அட்டகாசமா பகிர்ந்து இருக்கீங்க நன்றி 

மாப்பிள இப்ப முன்ன மாதிரியில மணிதர்கள்.. ஆனா இவர் நீங்க சொன்னதுபோல் வாக்கு நாக்கு செத்த ஆளுதான் அத்தோடு தாழ்வு மனப்பான்மை..!!?? 

நன்றி மாப்பிள உன்ர வருகைக்கும் கருத்து பதிவிற்கும்..!!??

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "மணியண்ணை...": 

காட்டான் யாரும் உமக்கு ஈடு
ஆக மாட்டான்!

உம் பதிவை முழுவதும் 
படித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
எளிய, இனிய, யாழ்ப்பாண
நடை மிகவும் கவர்ந்தது

புலவர் ச‍ இராமாநுசம் 

நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.. நான் பேச்சுத்தமிழில் எழுவதையும் விரும்பி வாசிக்கிறீர்களே..!!??

காட்டான் said...

koodal bala has left a new comment on your post "மணியண்ணை...": 

அடி பொழி பதிவு ....நானும் குழ போட்டேன் ... 

நன்றி மாப்பிள என்ர படலையில குழ போட்டதற்கு...

சி.பி.செந்தில்குமார் said...

>>இவளிண்ட கையில காசும் இருக்காது ஆட்டைய போட.

aahaa ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம்>

சி.பி.செந்தில்குமார் said...

>>.. அடுத்து இது கற்பனைக் கதையில்ல.

ungka உங்க எழுத்து நடைலயே இது ஒரு உண்மைச்சம்பவம்கறது தெரிஞ்சிடுச்சே?

காட்டான் said...

சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "மணியண்ணை...": 

>>இவளிண்ட கையில காசும் இருக்காது ஆட்டைய போட.

aahaa ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம்> 
நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்து பதிவிற்கும்...

Yoga.s.FR said...

எனக்குத் தெரிஞ்சு இப்பிடி வேற சம்பவங்களும் நடந்திருக்கு!அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லையே?அனேகமான ஆண்கள், ஏன் பெண்கள் கூட"விசா"வைத் திருமணம் செய்யவே விரும்புகிறார்கள்!இங்கு என்றில்லை,எங்கும் உள்ளது தான்!உங்களுக்கென்ன விசா இருக்கிறது ஏன் குடியுரிமையே இருக்கிறதே?என்று கேட்டால் பதில் உரைப்பது சிரமமானதில்லையா?ஐரோப்பாவில் மட்டுமல்ல அமெரிக்க,ஆசிய நாடுகளிலும் "முதிர் குமர்கள்"இருக்கிறார்கள்,விசாவுடனும்,இன்றியும்!ஆண்டவன் துணை!!!!!

Yoga.s.FR said...

நானும் பிரான்சிலதானே இருக்கிறன் "நீ சொன்னமாதிரி" உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையாளர்கள் இருக்காங்கன்னு ஒரு தோற்றத்த ஏற்படுத்துறனேண்ண...??////ஓ,கத அப்பிடிப் போகுதோ?மவனே மாட்டின....................................?!

Yoga.s.FR said...

உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார்.////என்னை மாதிரியோ??????????

Yoga.s.FR said...

எனக்கு தலையில பல்பு எரிஞ்சுது!!!!!!///நீங்க நிலக்கரிச் சுரங்கத்திலயே வேல பாக்கிறியள்?

Yoga.s.FR said...

இவனைப்பற்றி ஒரு துப்பறியும் சிங்கமாய் தோண்டிப்பார்த்தேன்.///பெரிய துப்பறியும் பிரபாகர் போல?

கவி அழகன் said...

கட்டாநிண்ட நிலைமை இப்படியா போச்சே
தோட்டத கவனியுங்கப்ப பிறகு அப்புச்சி மேல இருந்து பாத்திட்டு கனவில வந்து பேசும்

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

வாங்கண்ணாத்த வாங்க நீங்க சொலுறது சரிதான்.. இது பிரான்ஸ் மட்டும் சம்பந்தப்பட்ட  விடயமில்லதான்.. ஆனா முதிர் குமாரர்கள் இப்ப வார பொடியங்களிடம் இல்லை அவர்கள் விமானத்தில் ஏறும்போதே தங்கள் காதலிகளுக்கும் டிக்கற் புக்பண்ணிட்டுதான் ஏறுகிறார்கள்.. முந்தி கல்யாண்ம் செய்பவர்களின் 37,38களில்தான் இருக்கும்.. ஆனால் இப்போது அப்படியா..!!? சின்ன பொடியங்க எல்லாம் குப்பினோடதானே(நண்பிகள்) திரியுறாங்கண்ண...!!!!)))

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

நானும் பிரான்சிலதானே இருக்கிறன் "நீ சொன்னமாதிரி" உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையாளர்கள் இருக்காங்கன்னு ஒரு தோற்றத்த ஏற்படுத்துறனேண்ண...??////ஓ,கத அப்பிடிப் போகுதோ?மவனே மாட்டின....................................?! 

என்ன செய்யுறதண்ண நானும் பங்கு மாக்கற்ற பாக்கிறவங்க போல டாஸ்போட்டில போய் ஒவ்வொரு நாளும் பாக்கிறன் அந்த குறியீடு ஏறுற மாதிரி தெரியேல அதுதான் சின்ன டெக்கினிக்கு செய்து பாக்கிறன்.. மூஞ்சிப்புததகத்திலேயும் ஏத்தீட்டன் ஒருத்தரும் வாறத கானோமண்ண..!!!!???

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார்.////என்னை மாதிரியோ?????????? 

பருவாயில்லையே நான் மட்டுதான் இப்பிடியோன்னு பார்தேன்.. உங்கட கருத்த பார்த்தா.. எங்கப்பன் குதிருக்க இல்லைன்னு நிறையபேர்  வருவாங்க போல..!!???????

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

எனக்கு தலையில பல்பு எரிஞ்சுது!!!!!!///நீங்க நிலக்கரிச் சுரங்கத்திலயே வேல பாக்கிறியள்? 

இதுதான் விசயம் தெரிஞ்சவங்களோட இருக்கேக்க வாற சிக்கல் என்னையறியாமலே பொல்ல தந்திட்டன்.. ஆனா நானும் வடிவேலு மாதிரிதான்..!??? எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் அண்ண....!!???

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

இவனைப்பற்றி ஒரு துப்பறியும் சிங்கமாய் தோண்டிப்பார்த்தேன்.///பெரிய துப்பறியும் பிரபாகர் போல? 

நக்கலு..!!?? செய்யுங்கையா செய்யுங்க..!!??? ஹி.. ஹி..ஹ்..

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "மணியண்ணை...": 

கட்டாநிண்ட நிலைமை இப்படியா போச்சே 
தோட்டத கவனியுங்கப்ப பிறகு அப்புச்சி மேல இருந்து பாத்திட்டு கனவில வந்து பேசும் 
 ஆமாயா பழங்கள் எல்லாம் நிலத்தில விழுந்து கிடக்குது.. ஊரில நாங்க இப்பி விடுவோமாயா..?? 

கிட்ட வாயா ஒரு உண்மை சொகிறேன்.. இது என்ர தோட்டமெண்டா இவ்வளவு பழங்களை கீழ விழ விட்டிருக்க மாட்டேன்யா..!!!!!??

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

காட்டன் மாமா? எனது ஜாதகத்தினையும் அனுப்பி வைக்கட்டுமா???

ஊரின் பேச்சு வழக்கினை படிக்கும் போது நாங்கள் இழந்தது அதிகமென படுகிறது. உங்களிற்கு, பேச்சு வழக்கினை எழுத்தில் கொண்டுவருவது இயல்பாகவே வருகிறது. அம்மப்பா விடம் கதை கேடது போல் இருக்கிறது எழுத்து: உங்களுக்கு நகைச்சுவை யுணர்வும் அதிகம் தான்.

உங்களுக்கு வயசு எழுபது இருக்குமா? என் அம்மப்பாவின் வயசும் அதுதான் ஹிஹிஹிஹிஹி

Karthikeyan Rajendran said...

ரைட்டு, நட்பு ஆஜர்!!

Yoga.s.FR said...

காட்டான் said......பருவாயில்லையே நான் மட்டுதான் இப்பிடியோன்னு பார்தேன்.. உங்கட கருத்த பார்த்தா.. எங்கப்பன் குதிருக்க இல்லைன்னு நிறையபேர் வருவாங்க போல..!!???????///"நாங்கள்" மட்டுமில்ல,நாங்கள் வந்த காலத்தில "பெட்டி" கொழுவாம வந்த அத்தனை பேரும் ஒரே கேசு தான்!இப்ப "செற்றிலான" பிறகு வந்தாக்கள் தான்???????

Yoga.s.FR said...

சாய் பிரசாத்திட்ட "விசா" இருக்கோ?அப்பிடியெண்டால்,சமைக்க?!த் தெரிஞ்ச பொம்பிள இருக்குது!(மக் டொனால்டில எக்கவுண்ட் துறக்கோணும்!)ரெடியெண்டா சொல்லுங்கோ?

Yoga.s.FR said...

இதுதான் விசயம் தெரிஞ்சவங்களோட இருக்கேக்க வாற சிக்கல் என்னையறியாமலே பொல்ல தந்திட்டன்.. ஆனா நானும் வடிவேலு மாதிரிதான்..!??? எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் அண்ண....!!???///வடிவேலு பொழைப்பே நாறிப் போச்சு!எந்தக் "கிரகம்" பாத்திச்சோ?

Yoga.s.FR said...

இவனுக்கு தேவையெல்லாம் ஒரு பிள்ள பெத்து போடுற,வீட்ட சுத்தம் செய்யுற,சாப்பாடு சமைச்சு போடுற,உடல் பசிய தீர்கிற ஒரு இயந்திரம்... அது எங்க இருக்கென்னு யாராவது சொன்னா புண்ணியமாபோகும்... அத வாங்கி இந்த நாயிட்ட குடுத்திட்டா ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகாதையா...!!?////ஜப்பானில கிடைக்குமாம்!

Unknown said...

@Yoga.s.FR
ஓம் ஓம்... "sortie visa" இருக்கிறது..., அண்ணே உங்களுக்கு மிகவும் நல்ல மனது, நான் இப்படியே இருந்திடுறனே :)
எதுக்கு mc ல் account திறப்பான் பேசமல் ஒரு mc ஐயே வாங்கிடலாமே :) உங்களுக்கு சம்மதமா?? ஹாஹா

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

காட்டான் said......பருவாயில்லையே நான் மட்டுதான் இப்பிடியோன்னு பார்தேன்.. உங்கட கருத்த பார்த்தா.. எங்கப்பன் குதிருக்க இல்லைன்னு நிறையபேர் வருவாங்க போல..!!???????///"நாங்கள்" மட்டுமில்ல,நாங்கள் வந்த காலத்தில "பெட்டி" கொழுவாம வந்த அத்தனை பேரும் ஒரே கேசு தான்!இப்ப "செற்றிலான" பிறகு வந்தாக்கள் தான்??????? 

இப்ப வாரவங்களுக்கு ஏற்கனவே நவிகோவையும்(இரயில் பணணத்துக்கான சீசன் டிக்கற்)வாங்கி வைக்கிறாங்கோண்ண..!!!!!???

காட்டான் said...

அண்ணாத்த அப்ப பெட்டி கொழுவிவந்தவுங்க பாடுதானேண்ண படு கஸ்டம்....!!!???

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "மணியண்ணை...": 

இதுதான் விசயம் தெரிஞ்சவங்களோட இருக்கேக்க வாற சிக்கல் என்னையறியாமலே பொல்ல தந்திட்டன்.. ஆனா நானும் வடிவேலு மாதிரிதான்..!??? எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் அண்ண....!!???///வடிவேலு பொழைப்பே நாறிப் போச்சு!எந்தக் "கிரகம்" பாத்திச்சோ? 

அண்ணாத்த இந்த உள்குத்துதானே வேணாங்கிறது..!!!!!!!!!!!!!!!!

காட்டான் said...

சாய் பிரசாத் has left a new comment on your post "மணியண்ணை...": 

@Yoga.s.FR
ஓம் ஓம்... "sortie visa" இருக்கிறது..., அண்ணே உங்களுக்கு மிகவும் நல்ல மனது, நான் இப்படியே இருந்திடுறனே :)
எதுக்கு mc ல் account திறப்பான் பேசமல் ஒரு mc ஐயே வாங்கிடலாமே :) உங்களுக்கு சம்மதமா?? ஹாஹா 

அட mc ஐயே வாங்கக்கூடிய பெரிய மாப்பிளையா அண்ணாத்த விடாதீங்க.. நானே ஜாதகம் ரெடி பண்ணுறன் சாய் பிரசாந்துக்கு...

காட்டான் said...

சாய் பிரசாத் has left a new comment on your post "மணியண்ணை...": 

காட்டன் மாமா? எனது ஜாதகத்தினையும் அனுப்பி வைக்கட்டுமா???

ஊரின் பேச்சு வழக்கினை படிக்கும் போது நாங்கள் இழந்தது அதிகமென படுகிறது. பேச்சு வழக்கினை எழுத்தில் கொண்டுவருவது இயல்பாகவே வருகிறது உங்களிற்கு. அம்மப்ப விடைம் கதை கேடது போல் இருக்கிறது: உங்களுக்கு நகைச்சுவை யுணர்வு அதுகம் தான். 

ஜாதகம் எனக்கு வேண்டாம் ... பெண்ணின் ஜாதகத்திற்கேற்ப நானே உருவாக்கிறேன் மருமோனே.. அது என்ன ஒரு கூப்பன் காட் சைஸ்தானே..!!?? பெட்டிக்குள் நாங்களே நிறப்பிக்கொள்கிறோம்... படத்த மட்டும் ஈமெயில் பண்ணிடு..

காட்டான் said...

சாய் பிரசாத் has left a new comment on your post "மணியண்ணை...": 

காட்டன் மாமா? எனது ஜாதகத்தினையும் அனுப்பி வைக்கட்டுமா???

ஊரின் பேச்சு வழக்கினை படிக்கும் போது நாங்கள் இழந்தது அதிகமென படுகிறது. உங்களிற்கு, பேச்சு வழக்கினை எழுத்தில் கொண்டுவருவது இயல்பாகவே வருகிறது. அம்மப்பா விடம் கதை கேடது போல் இருக்கிறது எழுத்து: உங்களுக்கு நகைச்சுவை யுணர்வும் அதிகம் தான்.

உங்களுக்கு வயசு எழுபது இருக்குமா? என் அம்மப்பாவின் வயசும் அதுதான் ஹிஹிஹிஹிஹி 

அட என்ன அப்படி சொல்லிபோட்டியள் நான் என்ன அவ்வளவு இளமையாகவா இருக்கிறேன் பேராண்டி...!!!?? உன்ர அம்மப்பாவின் வயதை விட  பத்து வயதுதான் கூட..!!!?? ஹிஹிஹிஹி..

காட்டான் said...

! ஸ்பார்க் கார்த்தி @ has left a new comment on your post "மணியண்ணை...": 

ரைட்டு, நட்பு ஆஜர்!! 
ஓகே நானும் கை கொடுக்கிறேன்...

சுதா SJ said...

வணக்கம் பாஸ்
முதலில் பிந்தி வருவதுக்கு மன்னியுங்கள் கொஞ்சம் பிஸி அதான் பாஸ்.....

உங்கள் மனதை தைத்த ஒரு விஷயத்தை காமெடி கலந்து சொல்லி இருக்கிறீர்கள்
படித்து முடித்த போது சத்தியமாக என் மனசு பாராமாகி விட்டது,
இப்படியும் சில பிறப்புகளா ????
உதுகளை எல்லாம் அம்மணமாக நாடு ரோட்டில் நிக்க வைத்து சுடணும்
அந்த அப்பாவி பெண்ணின் மனசு என்ன பாடு பட்டு இருக்கும் என்று கொஞ்சம் நினைச்சு பார்த்தானா?? பாவம் இந்த மனித உருவ மிருகத்திடம்
எந்த பெண் வந்து மாட்ட போகுதோ? கடவுள் அவளை காப்பாற்றட்டும்.
இவனைப்போல் நானும் சில பேரை அறிந்து இருக்கேன்,

அந்த நேரத்தில் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பார்த்தேன்
பாவம் நீங்கள் எத்தகைய படபடப்புடன் பெண் வீட்டுக்கு போன் அடித்து இருப்பீர்கள்
உங்கள் நிலை யாருக்கும் வர படாது. அந்த பெண்ணின் தந்தை என் மனசில் உயர்ந்து இருக்கிறார்.
அவர் மனசுக்கு அவர் பெண்ணுக்கு உங்களைப்போல் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைவான் கவலையை விடுங்கள் அண்ணா. நல்ல பதிவு ஆனால் என்னை மனசைத்தான் கனக்க செய்து விட்டீர்கள்.

நிரூபன் said...

வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!!???//

அதெப்படி நாம அவ்வளவு சீக்கிரமா நம்ப முடியும்?
பதிவர்களுக்கு கொடுக்கும் ட்ரேங் உங்கள் ப்ளாக்கில் இல்லையே?
எப்படி நம்புவது;-)))))))))))))))))

நிரூபன் said...

வணக்கமுங்க நான் காட்டான் வந்திருக்கேங்க...நீங்ககெல்லாம் என்ர பதிவ வாசித்து கமண்டு போடுறத பாத்தோன காட்டானு கையுமோடல காலுமோடல.. ஒங்களுக்கெல்லாம் என்ர நன்றீங்க..//

அப்ப என்னங்க அண்ணாத்த,
பதிவுக்கு மீட்டர் ஓடுதாக்கும்?
அப்படியே சங்கதி;-)))))))))))

பதிவுக்கும் பரிஸிலை சம்பளம் போடுறாங்களோ,
எப்படியாச்சும் ஒரு பெட்டையை உங்க ஓட்டவடையிட்டை சொல்லிப் பொருத்தம் பார்ப்பித்து பிரான்ஸ் வருவதற்காக கலியாணம் கட்ட வேண்டும் போல இருக்கிறதே?

நிரூபன் said...

இண்டைக்கு ஏதாவது எழுதிபோட்டுட்டு ஊரில கோழிக்கு அடவைச்சிட்டு மணித்தியாலத்துக்கொருக்கா கோழிய தூக்கி முட்டயெல்லாம் பொரிச்சிட்டோன்னு பாக்கிற சின்ன வயது காட்டானபோல நானும் இனி கருத்து பெட்டிய உந்த எலிமூச்சில கையவைச்சு தட்டித்தட்டி பாக்க போறேனுங்க...//

அவ்......பதிவருங்களை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க((((((((((((((((;

நிரூபன் said...

இண்டைக்கு என்னத்த எழுதலாம் என்னு யோசிக்கேக்க..என்ர தங்கச்சி டெலிபோன எடுத்து என்னண்ண அக்காவ பற்றி மட்டும் எழுதுறாய் நானும் பிரான்சிலதானே இருக்கிறன் நீ சொன்னமாதுரி உன்ர வலைப்பதிவுக்க அடிக்கடி போய் உனக்கும் பிரான்சில அதிக பார்வையார்கள் இருக்காங்கன்னு தோற்றத்த ஏற்படுத்துறேனேண்ண...??//

அப்ப அவாதான் பிரான்ஸிலை தான் இருப்பது போன்ற மாயையினை ஏற்படுத்திப் PAGE REFRESH பண்ணித் திரும்பத் திரும்ப உங்கள் வலைப் பதிவுகளைப் பார்க்கிறா போல இருக்கு;-)))))

நிரூபன் said...

இப்ப காட்டானும் பாக்கிறன் இஞ்ச இருக்கிற பிள்ளையல..!!!?? ஒரு சுடுதண்ணிகூட போட கஸ்டப்படுகிறாங்க... பருப்புக்குள்ள தாளிக்க போடுற செத்தல் மிளகாய பார்த்தாவே ஒலகத்தில இருக்கிற எல்லா சண்டைப்பயிற்சியயும் ஒண்டா செய்யிற மாதிரி ஆ..ஒ..ஐயோன்னு சவுண்டு விடுறாங்கய்யா..//

அண்ணாச்சி, அப்படீன்னா சுடுதண்ணி போடுவது எப்படி என்று ஒரு பதிவு எழுதட்டுமா நான்;-)))))))

அவ்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

ஆமாண்ண அதுக்கென்ன இப்போன்னா பேரு வைச்ச நீயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து சொல்லுன்னார்..!!//

அப்போ நீங்கள் புரோக்கர் வேலையும் தொடங்கிட்டீங்கள் போல இருக்கு?

சீதனத்திற்குக் கொமிசனோ?
இல்லேன்னா கலியாணத்திற்கு என்று தனிப்பட்ட கொமிசன் வைத்திருக்கிறீங்களோ;-)))))

நிரூபன் said...

அட பொண்ணுக்கு நல்ல பேருதான்யா வைச்சனான் யாழினின்னு ஆனா நீங்க அவளுக்கு நல்ல படிப்ப கொடுத்து கை நிறைய சம்பாதிக்கவும் வச்சிட்டீங்க இல்லைன்னேல...//

அப்படீன்னா இந்த வலைப் பதிவோடை பேரும் யாழினி என்று வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

நிரூபன் said...

அட காட்டுப்பயலே அதுக்குதானேடா உன்ன கூப்பிட்டனான் உன்ன மாதிரி சமைக்க தெரிஞ்ச மாப்பிள கொண்டு வாடான்னார் அதுதான் இப்ப நல்ல ஒரு மாப்பிளய தேடிக்கொண்டு இருந்தேன்.//

அடடா....உங்க மனிசியின் பாடு பரவா இல்லே போலிருக்கே............

நிரூபன் said...

வேலைக்கு போகேக்க அடிக்கடி ஒரு பொடியன பாக்கிறனான் நல்ல அழகா அம்சமா இருப்பான்.. //

அப்ப நீங்கள் பொடியங்களையும் பார்த்து லுக்கு விடத் தொடங்கிட்டீங்களே.....

யோகா ஐயா.....காட்டானைக் கொஞ்சம் கவனமாக கண்காணியுங்கோ....

ஏன்னா ரூட் மாறுது......

நிரூபன் said...

சும்மா பேச்சு கொடுத்து பார்தேன் பிரான்சுக்கு வந்து ரெண்டு வருசமாச்சாம் விசா இல்லையெண்டும் கொமிசனில விசா கேட்டு மூன்றாவது ரீயப்பீல் பண்ணியிருக்கெண்டார் எண்டும் சொன்னார்..//

ஏன் ஆள் சண்டை முடிஞ்சாப் பிறகே உங்க வந்தவர்?
சண்டை நடக்கும் போது வந்திருந்தால் பொடியங்களாலை பிரச்சினை என்று ஒரு குண்டைப் போட்டு கேஸ் அடிச்சிருக்கலாம் தானே................

அவ்...அவ்ஃப்................

நிரூபன் said...

சும்மா பேச்சு கொடுத்து பார்தேன் பிரான்சுக்கு வந்து ரெண்டு வருசமாச்சாம் விசா இல்லையெண்டும் கொமிசனில விசா கேட்டு மூன்றாவது ரீயப்பீல் பண்ணியிருக்கெண்டார் எண்டும் சொன்னார்....//

இதை நீங்கள் சொல்லித் தான் நாம நம்பனுமாக்கும்;-)))))))
பார்த்தாலே தெரியுதே...

கையுக்குள், கமக்கட்டிற்குள் ஒரு கொக்கத் தடி இருக்கும் போதே தெரிய வேணாம்............

நிரூபன் said...

இவன் இப்பிடி அமளிப்படுகிறானே ஏதாவது வில்லங்கமாச்சென்னா என்ர மகளபோல இருக்கிற அந்த பிள்ளையின் வாழ்கை பாழாகக்கூடாதுன்னு சர//

ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்க்கிறீங்க....

நிரூபன் said...

அட இந்த நாய்தான் இப்பிடி சொல்லுதெண்டா.. அவன் அம்மாவுக்கு எங்க போச்சு புத்தி.. இவனுக்கும் ரெண்டு சகோதரிகள் இருக்கினம்தானே அவைக்கு இந்த நாய் செய்ததுபோல யாராவது செய்தா ஓமெண்டு விடுவானோ இந்த நாய்..!!!?//

செம கடுப்பாகிட்டீங்க போல இருக்கே.............

நிரூபன் said...

பதிவுக்கு ஏற்ற மாதிரி அவரும் மாறுவாருங்கோ.!!!??? அப்ப மணியண்ண யார் என்கிறீர்களா.. அவர் நானாகவும் இருப்பார்..!!?? நீங்களாகவும் இருப்பார்..!!?? தானாகவும் இருப்பார்..!!? என்ர மணியண்ணை ஒரு மாயாவியுங்கோ..!!????//

அவ்...................

ஆய்....மணியண்ணை...
காட்டான் அப்ப இனிமேல் உங்களையும் மணியண்ணை என்று கூப்பிடலாம் தானே.......

நிரூபன் said...

பதிவு, பல காலம் தாய் மண்ணை விட்டுப் பிரிந்திருந்தாலும், இன்றும் மனதினுள் வேரடிவாரம் பற்றிய ஊர் நினைப்புக்கள் ஆழப் பதிந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஊர் வாசனையோடு வந்திருக்கிறது,

கூடவே புலம் பெயர் தமிழர்களில் விசாவிற்காக விசாவினைக் கலியாணம் கட்டும் மனிதர்களின் அவல வாழ்வினை, ஏமாற்று வாழ்வினை நகைச்சுவையோடும், கோபத்தோடும் உண்மைக் கதை வடிவில் பதிவில் தாங்கி வந்திருப்பது மேலும் சிறப்பினைத் தருகிறது.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "மணியண்ணை...": 

வணக்கம் பாஸ் 
முதலில் பிந்தி வருவதுக்கு மன்னியுங்கள் கொஞ்சம் பிஸி அதான் பாஸ்.....

உங்கள் மனதை தைத்த ஒரு விஷயத்தை காமெடி கலந்து சொல்லி இருக்கிறீர்கள்
படித்து முடித்த போது சத்தியமாக என் மனசு பாராமாகி விட்டது,
இப்படியும் சில பிறப்புகளா ????
உதுகளை எல்லாம் அம்மணமாக நாடு ரோட்டில் நிக்க வைத்து சுடணும்
அந்த அப்பாவி பெண்ணின் மனசு என்ன பாடு பட்டு இருக்கும் என்று கொஞ்சம் நினைச்சு பார்த்தானா?? பாவம் இந்த மனித உருவ மிருகத்திடம் 
எந்த பெண் வந்து மாட்ட போகுதோ? கடவுள் அவளை காப்பாற்றட்டும்.
இவனைப்போல் நானும் சில பேரை அறிந்து இருக்கேன், 

அந்த நேரத்தில் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பார்த்தேன் 
பாவம் நீங்கள் எத்தகைய படபடப்புடன் பெண் வீட்டுக்கு போன் அடித்து இருப்பீர்கள் 
உங்கள் நிலை யாருக்கும் வர படாது. அந்த பெண்ணின் தந்தை என் மனசில் உயர்ந்து இருக்கிறார்.
அவர் மனசுக்கு அவர் பெண்ணுக்கு உங்களைப்போல் ஒரு நல்ல மாப்பிள்ளை அமைவான் கவலையை விடுங்கள் அண்ணா. நல்ல பதிவு ஆனால் என்னை மனசைத்தான் கனக்க செய்து விட்டீர்கள். 

நன்றி மாப்பிள உன்ர வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்... நீங்களே அழகாய் மினி பதிவ போட்டுட்டீங்க... பின்னூட்டம் என்ற பேரில.. உங்களைப்போலவே எனக்கும் மணியண்ணையின் குனம் பிடிச்சிடிச்சு....!!!!???

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "மணியண்ணை...": 

வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!!???//

அதெப்படி நாம அவ்வளவு சீக்கிரமா நம்ப முடியும்?
பதிவர்களுக்கு கொடுக்கும் ட்ரேங் உங்கள் ப்ளாக்கில் இல்லையே?
எப்படி நம்புவது;-))))))))))))))))) 

அதுக்குதான் மாப்பிள நான் வாக்குமூலமே தந்திருக்கேன்யா நம்புங்கோன்னு என்னில் நம்பிக்கையில்லையா மாப்பிள...!!!????

பதிவர்களுக்கு கொடுக்கும் ட்ரேங் பாத்தேன்யா.. காட்டானுக்கு பள்ளிகூடத்தில வாத்தியார் போடுற மாதிரி இருக்குது மாப்பிள... இப்பயாவது விளங்குதா ஏன் அடிக்கடி கோழியபற்றியும் முட்டைய பற்றியும் கதைக்கிறான்னு மாப்பிள...!!!!!!!?????))))

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "மணியண்ணை...": 

ஆமாண்ண அதுக்கென்ன இப்போன்னா பேரு வைச்ச நீயே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து சொல்லுன்னார்..!!//

அப்போ நீங்கள் புரோக்கர் வேலையும் தொடங்கிட்டீங்கள் போல இருக்கு?

சீதனத்திற்குக் கொமிசனோ?
இல்லேன்னா கலியாணத்திற்கு என்று தனிப்பட்ட கொமிசன் வைத்திருக்கிறீங்களோ;-))))) 

இஞ்ச இப்ப இதுதான் நல்லா போற தொழில் சம்பந்தம் முடிச்சா 1000€ கமிசன் மாப்பிள..!!! விருப்பம் என்றால் போட்டோவ அனுப்பு... உனக்கு ரேட் கூட ஏன்னா நான் பல பொய் சொல்ல வேண்டியிருக்கும்...!!!??

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "மணியண்ணை...": 

அட பொண்ணுக்கு நல்ல பேருதான்யா வைச்சனான் யாழினின்னு ஆனா நீங்க அவளுக்கு நல்ல படிப்ப கொடுத்து கை நிறைய சம்பாதிக்கவும் வச்சிட்டீங்க இல்லைன்னேல...//

அப்படீன்னா இந்த வலைப் பதிவோடை பேரும் யாழினி என்று வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ 

அப்பிடியெல்லாம் ஒன்றுமில்ல.!!? எனக்கு பொம்புள பிள்ள பிறந்தா வைக்கிறதெண்டு ரெண்டு மூண்டு பேர் செலக்ட் பண்ணி வைச்சிருந்தேன்யா.. அதில ஒரு பேர மணியண்ணையிட்ட கொடுத்திட்டேன்...
இன்னொரு பேர் கனிமொழி.. ஏனோ இப்ப அந்த பேர் எனக்கு  எனக்கு பிடிக்களையா...!!!??)))

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "மணியண்ணை...": 

வேலைக்கு போகேக்க அடிக்கடி ஒரு பொடியன பாக்கிறனான் நல்ல அழகா அம்சமா இருப்பான்.. //

அப்ப நீங்கள் பொடியங்களையும் பார்த்து லுக்கு விடத் தொடங்கிட்டீங்களே.....

யோகா ஐயா.....காட்டானைக் கொஞ்சம் கவனமாக கண்காணியுங்கோ....

ஏன்னா ரூட் மாறுது...... 

மாப்பிள என்னைய நீ தப்பா நினைக்காத இப்ப நான் தொழில்ல இறங்கீட்டன்... தொழில் சுத்தமா இருக்க வேண்டாமா..!!!!??? அதுதான் நான் அப்பிடி பாக்கிறது வேற ஒண்டுமில்லப்பா....!!!??

பிரணவன் said...

பிரணவன் குழ போட்டுட்டான். . .

Anonymous said...

மாப்பிள மணியண்ண நீதானா???

Yoga.s.FR said...

காட்டான் said...மாப்பிள என்னைய நீ தப்பா நினைக்காத இப்ப நான் "தொழில்"ல இறங்கீட்டன்... தொழில் சுத்தமா இருக்க வேண்டாமா..!!!!??? அதுதான் நான் அப்பிடி பாக்கிறது வேற ஒண்டுமில்லப்பா....!!!??////அவர் "தொழில்"ல இறங்கினா சொந்தம் பந்தமெல்லாம் பாக்க மாட்டார்!

இராஜராஜேஸ்வரி said...

இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணம் கட்டினா என்னவெல்லாம் செய்வான்னு யோசிச்சுப் பார்க்கவே பயங்கரமாக அல்லவா இருக்கிறது.!

மாய உலகம் said...

காட்டான்// ங்குற தலைப்ப பாத்தவுடனே மிரண்டுட்டேன்...
வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!!???//

டிஸ்கிரிப்ஸன படிச்சவுடனே சிரிப்பு வந்துடுச்சு ஹா ஹா...

மணியண்ணை சம்பவத்துல ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைய கூட நகைச்சுவை நடையில அழகா சொல்லியிருக்கீங்க... அசத்தல்

கதையில் வரும் மாப்பிள்ளை போல் காரியம் முடிந்தவுடன் கழுட்டிவிடும் கயவர்கள் கோடான கோடி சமூகத்தில் உண்டு... இதில் இரு முக்கிய கதா பாத்திரம் அதில் எது போல் நாம இருக்கனும் என்று ஆசை பட்டால் பெண்ணின் தகப்பன் போல் இருக்க ஆசை படுவோம்.... பதிவை அருமையாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றி

Yaathoramani.blogspot.com said...

உணர்வுபூர்வமான பதிவு
நாய் பேய் எல்லாம் போட்டால்தான்
இயல்பாயிருக்கும்
இல்லையென்றால் கதைபோல் ஆகிவிடும்
ரசித்துப் படித்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

உண்மையின் தரிசனம் நல்ல உணர்வுபூர்வமாக
தெளிவாக அழகிய பேச்சுநடையில் நம்ம காட்டான் சொன்ன கதை
அருமை!!.....அதிலும் அந்தப் பேயன நாய் பேயின்னு சொல்லினது
தப்பு. இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லியிருக்கலாம்.இல்லாட்டிப்போன
இப்ப என்ன?...வாசிச்சவங்க மனசாரச் சொல்லித்தானே இருப்பாங்க.
நன்றி காட்டான் உங்க கதையப் பாத்து திருந்துறவங்க திருந்தட்டும்.
வாழ்த்துக்கள்.மென்மேலும் உங்க கதை தொடரட்டும்......உங்க அம்பாளடியாளும்
குழு போட்டுட்டாள்............

காட்டான் said...

பிரணவன் குழ போட்டுட்டான்

நன்றி மாப்பிள என்ர படலையில குழ போட்டதற்கு....

காட்டான் said...

காட்டான்// ங்குற தலைப்ப பாத்தவுடனே மிரண்டுட்டேன்...
வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!!???//

டிஸ்கிரிப்ஸன படிச்சவுடனே சிரிப்பு வந்துடுச்சு ஹா ஹா...

மணியண்ணை சம்பவத்துல ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைய கூட நகைச்சுவை நடையில அழகா சொல்லியிருக்கீங்க... அசத்தல்

கதையில் வரும் மாப்பிள்ளை போல் காரியம் முடிந்தவுடன் கழுட்டிவிடும் கயவர்கள் கோடான கோடி சமூகத்தில் உண்டு... இதில் இரு முக்கிய கதா பாத்திரம் அதில் எது போல் நாம இருக்கனும் என்று ஆசை பட்டால் பெண்ணின் தகப்பன் போல் இருக்க ஆசை படுவோம்.... பதிவை அருமையாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றி

நன்றி மாப்பிள அழகா பின்னூட்டமிட்டதற்கும் உங்களுடைய வருகைக்கும்...

காட்டான் said...

இராஜராஜேஸ்வரி said...
இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு......

நன்றியம்மா உங்கள் வருகைக்கும் பின்னூட்டமிட்டதற்கும்....

காட்டான் said...

உணர்வுபூர்வமான பதிவு
நாய் பேய் எல்லாம் போட்டால்தான்
இயல்பாயிருக்கும்
இல்லையென்றால் கதைபோல் ஆகிவிடும்
ரசித்துப் படித்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நன்றி ஐயா உங்களை போன்றோர்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு உற்சாக டானிக்....

காட்டான் said...

அம்பாளடியாள் said...
உண்மையின் தரிசனம் நல்ல உணர்வுபூர்வமாக
தெளிவாக அழகிய பேச்சுநடையில் நம்ம காட்டான் சொன்ன கதை
அருமை!!.....அதிலும் அந்தப் பேயன நாய் பேயின்னு சொல்லினது
தப்பு. இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லியிருக்கலாம்.இல்லாட்டிப்போன
இப்ப என்ன?...வாசிச்சவங்க மனசாரச் சொல்லித்தானே இருப்பாங்க.
நன்றி காட்டான் உங்க கதையப் பாத்து திருந்துறவங்க திருந்தட்டும்.
வாழ்த்துக்கள்.மென்மேலும் உங்க கதை தொடரட்டும்......உங்க அம்பாளடியாளும்
குழு போட்டுட்டாள்............

நன்றியம்மா எனது படலையிலும் குழ போட்டதற்கு....

Ayyammal said...

தொடர்ந்து வருகிறேன்,

காட்டான் said...

நன்றி அய்யம்மாள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

காட்டான் said...

நன்றி அய்யம்மாள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

Riyas said...

சுவாரசியமான எழுத்து நடையைக்கொண்ட பதிவி..

//வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!//

இதுவே சிரிக்க வைக்கிறது

காட்டான் said...

Riyas has left a new comment on your post "மணியண்ணை...": 

சுவாரசியமான எழுத்து நடையைக்கொண்ட பதிவி..

//வாங்க..வாங்க..! நம்புங்கோ நானும் ஒரு பதிவருங்க...!!//

இதுவே சிரிக்க வைக்கிறது 

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்..

அம்பாளடியாள் said...

காட்டான்
இன்றும் ஒரு வித்தியாசமான ஆக்கம் என் தளத்தில் உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

அம்பாளடியாள் said...

காட்டான் என் தளத்தில் இன்று ஒரு காதல்க் கவிதை தங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றது .வாழ்த்துக்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் .
நன்றி காட்டான் .....

Unknown said...

வருமா விரைவில் பதுப்பதிவு..?

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

கட்டாயம் ஐயாஅல்லது நாள் செல்லலாம் வேலை பளு அடுத்து மற்றவர்களின் ஆக்கங்களையும் பார்க்க வேண்டி இருப்பதால்தான் எனது ஆக்கம் தள்ளிப்போகின்றது.. என்மீது அன்பு வைத்திருப்பதற்கு நன்றி ஐயா....!!!!

ஆகுலன் said...

உங்கள என் படலை பக்கம் காணேல்ல

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

சக்தி கல்வி மையம் said...

நீங்க., பதிவர்தான் நம்பிட்டேன்..

ரைட்டர் நட்சத்திரா said...

111 பேர் கருத்தா ?

vidivelli said...

காட்டான் அண்ணே நான் எப்பவோ இந்தப்பதிவை படிச்சிட்டேன்..பின்னூட்டம் போடாமல் போட்டேன்..
மன்னிக்கணும்....

/ டேய் காட்டான் இண்டைக்கு விசா கிடைச்சோன பேசி முடிச்ச கல்யாணத்தையே வேண்டாம்ன்னு சொல்லுறவன் நாளைக்கு கல்யாணம் கட்டினா என்னவெல்லாம் செய்வான்னு யோசிச்சுப் பாரடான்னுரார்...!!!? /

பொண்ணுக்கு ஏதோ நல்ல காலம் இருந்திருக்கு..
தப்பிச்சிட்டா...
நல்ல அனுபவங்களை மற்றவருக்கும் எச்சரிக்கைசெய்யும் உங்க பண்பு உயர்ந்தது காட்டான் அண்ணே..
சுவாரசிகமாக நல்ல கருத்தை விதைக்கும் பதிவு,,
அன்புடன் பாராட்டுக்கள்..

காட்டான் said...

நன்றி விடிவெள்ளி நீங்க வாசித்திருப்பீங்கன்னு எனக்கு தெரியும் மாப்பிள ஏன்னா எல்லாற்ர படலைக்கும் போற நீங்க என்னட்டையும் வந்திருப்பீங்கதெரியும்.. அடுத்த பதிவு என்னை பொறுத்வரை முக்கியமான ஒன்று நீங்கள் கட்டாயம் வருகை தாருங்கள் நாளை..

சுதா SJ said...

யோவ் காடான் மாமா.. பதிவு போட்டு இன்னையோட பத்து நாள் முடிஞ்சு போச்சு. என்னது இன்னும் புதுசு ஒண்ணையும் காணோம்.
எங்கள எல்லாம் காக்க வைக்குறது தப்பு மாமா. சீக்கிரம் பதிவு ப்ளிஸ். அப்புறம் டைம் இல்லை என்று எல்லாம் சொல்லப்படாது.
ப்ளாக் பக்கம் வந்துட்டா தீயா வேலை பார்க்கணும் ஆமா சொல்லீட்டேன்

காட்டான் said...

அட மருமோனே இண்டைக்கு ஒரு பதிவ போட முயற்சிக்கிறண்டா... எல்லாற்ர படலையையும் தட்ட வேண்டி இருக்கையா இண்டைகு கட்டயம் போடுறன்...

RAMA RAVI (RAMVI) said...

இன்றுதான் உங்க பதிவுக்கு முதல் முறை வருகிறேன்.உங்க பிரான்ஸ் அனுபவங்கள் அருமையாக இருக்கு.உங்க எழுத்தில் உள்ள இயல்பான நகைசுவை உணர்வு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கு. வாழ்த்துக்கள்.

//இவனுக்கு தேவையெல்லாம் ஒரு பிள்ள பெத்து போடுற,வீட்ட சுத்தம் செய்யுற,சாப்பாடு சமைச்சு போடுற,உடல் பசிய தீர்கிற ஒரு இயந்திரம்... அது எங்க இருக்கென்னு யாராவது சொன்னா புண்ணியமாபோகும்... அத வாங்கி இந்த நாயிட்ட குடுத்திட்டா ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாகாதையா...!!?//

மிகவும் அருமையான வரிகள். இந்த காலத்தில் நிறைய பேர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
நல்ல கருத்துள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

காட்டானைக் காணவில்லை
கண்டால் சொல்லுங்கள்

புலவர் சா இராமாநுசம்