காட்டான் பசி தாங்க மாட்டான் இப்ப நினைத்து பார்த்தால் தழிழ் ஈனத்தலைவர்(எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிடுங்க உங்களுக்கு தெரியும்தானே காட்டானின் கல்வியறிவு..!) இருந்த உண்ணா விரதத்தை விட கூட நேரம் இருந்திருக்கிறான்...!!?
அப்புறமா ஆச்சி டெலிபோன்ல சொன்னா அட காட்டானே அத நான் வித்தது கந்தயர் வீட்டுக்குதான் அங்க ஒரு அழகான கிளி இருக்கடா எதிர் காலத்தில அந்த கிளிய உன்ர கையில பிடிச்சு கொடுக்கலாமெண்டு யோசிக்கிறன்..? அப்ப நீ வீட்டோட மாப்பிளயாய் இருக்கேக்க அந்த திருக்க வண்டி உதவும்டா..நீ கவலையை விட்டுட்டு வேலையை பாரடான்னா..
அதுக்கு பிறகு காட்டானுக்கு எங்க வேல ஓடபோது..!காட்டானுக்கும் அந்த கிளிய நல்லா தெரியும் அட அந்த கிளி காட்டாண்ட தங்கச்சியோடதான் படித்தது ஆனா ஊரில காட்டானை கண்டா..!!?
மாப்பிளங்களா அது வேற ஒன்னுமில்ல அவ அப்பண்ட தோட்டத்தில வெள்ளரிக்காய்கள் களவு போகுதாம்.. இதில காட்டான் சம்பந்தபட்டிருக்கலாமென யாரோ ஒரு நல்லவாயன் போட்டு கொடுத்திட்டான் இதுக்கெல்லாம் நாங்க என்ன மறுப்பறிக்கையா கொடுக்க முடியும்??இல்ல அந்த அறிக்கையை எழுதவாவுதல் காட்டானுக்கு தெரியுமா..?
இப்ப ஆச்சி திருக்கையை அட்வான்சா கொடுத்து காட்டான்மேல் இருக்கும் காட்டத்த குறைச்சு கிளிமேல கண்ண வைச்சிட்டா என்றவுடனேயே காட்டாண்ட பின் பக்கமெல்லாம் லா..லா என்று வெள்ள உடுப்பில பறக்கினம் தேவதைகள் ...!!
என்றாலும் காட்டானுக்கு ஒரு சந்தேகம் அந்த கிளி யாழ்பாணத்தில பெரிய படிப்பெல்லாம் படிக்க போகுதாமே என்றேன் ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே அவங்கதான் காட்டானின் குடும்பத்தில வர்றத்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமெண்டா அப்பதான் காட்டானுக்கு ஓடி விளங்கிச்சு..!!ஆச்சி படமனுப்பு என்று அடிக்கடி கேட்கேக்க காட்டான் புறாகூடு வீட்டில படமெடுத்து அனுப்பினா ஆச்சி கவலைப்படும்ன்னு ரோட்டில் பாக்கிங்பண்னி இருக்கும் ஒவ்வொரு காருக்கும் முன்னால நின்னு படமெடுத்து அனுப்பியது..!
என்றாலும் காட்டானின் மனசுக்க பிரான்சுக்கு வந்ததில ஒரு லாபம்..?பெரிய படிப்பு படிக்கும் பொண்டாட்டி கிடைக்கப்போறாள் அதுக்கு காட்டான் தன்னை தயார்படுத்த தொடங்கினான்..!?
அதன் முதல் படி ஆச்சி நம்பிக்கொண்டு இருப்பதுபோல் நானும் கார் வாங்கினால் என்ன..?மாட்டு வண்டியிலேயே காலத்தை கழித்தவனுக்கு கார் கனவு நடு இருட்டில துரத்துர நாயப்போல துரத்த தொடங்கியது..!?
அடிப்படையிலேயே இங்கிலீசு தெரியாத காட்டான் பிரன்சை பக்கென்று பிடித்ததற்கு காரணம் வேலைத்தலத்தில் எல்லோருமே பிரன்சுக்காரர்கள் அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் அதனால காட்டான் பிரன்சை மெல்ல மெல்ல அவர்களுடன் கதைத்து பழகிற்றான் காட்டான் அடிப்படையிலேயே வெக்கப்படமாட்டான் அதுவும் அவனுக்கு கை கொடுத்தது ..!
என்றாலும் பள்ளிகூடத்தில சொல்லி தருகிறது விளங்குவது கஸ்ரமாகத்தான் இருந்தது அப்பதான் இந்த வாத்திமார்களின் சைக்கில் காத்த புடிங்கி விட்டதெல்லாம் தேவையில்லாமல் ஞாபகபடுத்திசென்றன..!?
என்றாலும் காட்டானா கொக்கா எழுத்து தேர்வு நடந்த கோலில் நின்று எல்லோரையும் நோட்டம் விட்டான் இலுப்பகட வைரவரை நினைத்துக்கொண்டு ஒரு சைனீஸ் பெண்னுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..!?தேர்வும் முடிந்தது நாற்பது கேள்விகளுக்கு முப்பதொன்பது சரியாக செய்து விட்டான் இந்த காட்டான் சந்தோசத்தில் அந்த பெண்னை திரும்பி பார்த்தான் ஒரு வித நன்றியுணர்வோடு ஆனால் இந்த காட்டானுக்கு இன்றும் விளங்கவில்லை ஏன் அந்த பெண் தேர்வில் தோற்றாள் என்று..!!
அடுத்த தேர்வு காரை ஓட்டி காட்டுவது ஏனோ தெரியவில்லை காட்டான் இதில சுலபமாக வென்று விட்டான்..!??அப்புறமென்ன ஊரில சங்க கட கூப்பன் காட் போல ஒன்றை தந்து இதுதான் உன்ர லைசன் இனி நீ கார் ஓடலாமென அனுப்பி வைத்தார்கள்..
அடுத்து கார் வாங்கும் படலம் ஒரு பழைய R19 காரையும் வாங்கிவிட்டேன் அதன் முன்னால நின்று ஒரு படத்த எடுத்து ஆச்சிக்கு அனுப்பினா அங்க இருந்து அச்சி சொல்கிறா என்னடா இந்த காட்டானுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சோ? நல்ல நல்ல காரெல்லாம் வைச்சிருந்தான் இப்ப என்னடான்னா பேரீசம் பழத்திற்குகூட பெறுமதியில்லாத கார் வாங்கியிக்கிறான்னா..!!
ஆனா பாருங்கோ ஆச்சி கிளிய பிடிச்சு பிரான்சுக்கு அனுப்பும்வரை அந்த படத்த கண்னுல காட்டல்ல கிளிக்கு..!? இப்பதான் யோசிக்கிறன் கிளி படத்த பார்த்திருந்தா ஏர்போட்டிலேயே யோசித்து பார்த்து பறந்திருக்கும்..?இப்ப பாருங்கோ இந்தகாட்டானோட இன்னும் ரெண்டு காட்டான் குட்டிகளை பெத்துபோட்டு....விட்டு சொல்லுறாள் இஞ்ச பாருங்கோ இரவுசாப்பாட்டிற்கு இடியப்பத்த அவிச்சு வையுங்கோ நானும் லைசன்சுக்கு படிக்க பள்ளிகூடம் போட்டு வாரேன்கிறாள்..! ஆச்சிய நினைச்சிகொண்டு இரவுச்சாப்பாட்ட ரெடி பண்னபோறேன்..அது சரி கறி என்ன வைக்கிறதெண்டு சொல்லாம போட்டாளே.. மாப்பிளைங்களா இண்டைக்கு நான் அடிவாங்காம படுக்கபோறதில்லைன்னு தெரியுது எப்புடி இருந்த நான்.!!!?




