முகப்பு

Wednesday, 6 July 2011

ஆசை நூறுவகை...!!??

நீண்ட நாள் எனக்கு ஒரு ஆசை பாரீசின் புகழ் பெற்ற தமிழ் கடை வீதியில் அந்த ஆசையை நிறை வேற்றுவதற்காக காத்திருந்தேன்..

ஆடி மாத சம்பளமும் ஆடியசைந்து என் கைக்கு வர புறப்படி  விஸ்வமடுவிற்கு என்ற மாதிரி (அதை விட கொஞ்சம் பணிவாக..!?)மனைவியிடம் கூறி விட்டு  பிள்ளைகளை தயார் படுத்தினேன் அட ஆமாயா உந்த வேலையெல்லாம் நான் தான் செய்ய வேண்டியிருக்கு..

என்னுடய  மனைவி இதை செய்ய சென்றால் பொடியங்கள் அனுமதிப்பதில்லை கேட்டால் இவங்கள் குட்டி காட்டான்கள் அப்பா செல்லம் என்கிறாள் இதுவும் ஒரு யுக்திதானப்பு..! அப்புறம் வண்டியை எடுத்துக்கொண்டு பாரீஸ் வந்து சேர்ந்தேன் அட என்ர மாட்டு வண்டிக்கே பாரீசில் மணித்தியாலத்திற்கு இரண்டு யூரோக்கள் வசூலிக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது..!?  இத தட்டிக்கேட்க ஆளில்லையா..?இதற்காகவே  வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரீஸ் மேயர் பெர்தொன் து நோயே சார்ந்திருக்கும் பார்டி சோசியால் கட்சிக்கு வோட்டு போடுவதில்லை என என்ர அப்புச்சி போட்டோ மேல் சத்தியம் செய்திருக்கிறேன்..??

பின்ன என்னப்பு இரண்டு மணித்தியாலங்கள் மாட்டு வண்டிய நிப்பாட்டியதற்கே நாலு யூரோக்கள் காலி  சம்பளம் வாங்கியதிலிருந்து பத்து நாளைக்கு இதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை இந்த காட்டான்..!!?(அதுக்கு பிறகு வரவு எட்டணா செலவு பத்தணாதான்..!?)ஆனால் அதை விட இந்த காட்டானுக்கே ஆட்டையை போட்டு விட்டார்கள் நம்மவர் நம்மவர் என்று கூவிகொண்டு திரியும் நம்மவர்கள்..?? ஆமாயா கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மிக கவனமாய் இருங்கோ மாப்பிளங்க... இவர்கள் எல்லா மரகறிகளுக்கும் ஒரே விலையை ஏன் அடிக்கிறார்கள்..? அதுவும் ஒரே சாமான்களை இரண்டுதரம் அடிக்கிறார்கள்..!  நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?

ஆம் இவர்கள் ஆட்டையைபோட வேண்டுமென்றே முடிவெடுத்து விட்டே பட்டறையை தொடுகிறார்கள் போலும்?? இதல் இவர்களிடம் பணிபுரியும் புதிதாய் வந்தவர்களை நினைத்து பார்கவே பயமாக இருக்கிறது இவர்களை பார்கும்போது வேண்டாம்...!?உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..!?எனது மகனுக்கு ரொட்டி(பரோட்டா)என்றால் உயிர் லாச்சப்பல் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு இவற்றை வாங்கி கொடுக்காமல் வருவதில்லை வழமையாய் செல்லு சாப்பாட்டு கடைக்கே சென்றேன் அது கிழமைக்கொரு முதலாளி மாறும் கடபோலும்..? இரண்டு ரொட்டிக்கு இரண்டு யூரோக்களும் கொஞ்ச பருப்புக்கு இரண்டரை யூரோக்களும் எடுத்து எனை சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது போலாக்கிவிட்டார்கள்.

இதை விட இஞ்ச ஒரு கூத்து நடந்தது இலங்கை பொருட்களை புறக்கனிங்கோ புறக்கனியுங்கோவெண்டு நானும் இரண்டாண்டுகளாக இலங்கையிலிருந்து வரும் சோம பாணங்களை தொடுவதில்லை..? அட புறக்கனிக சொன்னவங்களே அத விக்கும்போது இந்த காட்டான் என்ன கேனையனா அவர்கள் கடயிலேயே அந்த சோம பாணத்த வாங்கிக்கொண்டு வரும்போதுதான் காட்டானின் ஆசை??நினைவுக்கு வந்தது அவர்களிடமே பாக்கு வெத்தலை சுண்னாம்பு வாங்கி போட்டுக்கொண்டு வெளியில் வந்து துப்புவதற்கு இடத்தை தேடினால் இந்த காட்டானே வெக்கபடுமளவு மரத்தை சுத்தி துப்போ துப்பென்று துப்பி வைத்துள்ளார்கள் இந்த காட்டானின் முன்னோடிகள்..இதோ காட்டான் சுத்தி சுத்தி துப்பிய இடம்..?

30 comments:

vidivelli said...

nalla pathivu...
valththukkal....


can you come my said?

காட்டான் said...

நன்றி விடிவெள்ளி காட்டானையும் மதித்து வாழ்த்தியதற்கு...

Mathuran said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்

Mathuran said...

//இதை விட இஞ்ச ஒரு கூத்து நடந்தது இலங்கை பொருட்களை புறக்கனிங்கோ புறக்கனியுங்கோவெண்டு நானும் இரண்டாண்டுகளாக இலங்கையிலிருந்து வரும் சோம பாணங்களை தொடுவதில்லை..? அட புறக்கனிக சொன்னவங்களே அத விக்கும்போது இந்த காட்டான் என்ன கேனையனா //

அப்படி கேளுங்க.... இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தை

காட்டான் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ஒரு பதிவில் துஷ்யத்தன் சொன்னதுபோல் எனது செயல் மல்லாக்காய் படுத்திருந்து  துப்புவது போல்தான்...?ஆனால் காட்டானுக்குத்தானே துப்புவது ஒரு கலை மாப்பிள...

தனிமரம் said...

இப்படி பொது இடங்களில் துப்புவது நாகரிகமான செயலா ஆதவன்!

நிரூபன் said...

வணக்கம் ஆதவன், முதலாவது படத்தைப் பார்க்கையில்,

ஆள் நன்றாகப் பாக்குச் சப்புவார் போலிருக்கிறதே;-))

நிரூபன் said...

)மனைவியிடம் கூறி விட்டு பிள்ளைகளை தயார் படுத்தினேன் அட ஆமாயா உந்த வேலையெல்லாம் நான் தான் செய்ய வேண்டியிருக்கு.//

ஹா...வெளிப்படையாகப் பேசும் உங்களின் இந்தக் குணம் பிடிச்சிருக்கு.

நிரூபன் said...

நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?//

டைம்மிங் காமெடி....செம கலக்கல்,

நிரூபன் said...

இரண்டு ரொட்டிக்கு இரண்டு யூரோக்களும் கொஞ்ச பருப்புக்கு இரண்டரை யூரோக்களும் எடுத்து எனை சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது போலாக்கிவிட்டார்கள்.//

ஆஹா....பாஸ் யூரோவை ருப்பீஸ் ஆக மாற்றிக் கொண்டு ஊருக்கு வாங்க. நீங்க செலவு செய்யும் காசிற்கு, கொத்து ரொட்டியே வாங்கிச் சாப்பிடலாம்...

என்ன ஒரு பெரிய ப்ராப்ளம்,
பிளைட் டிக்கற்றிற்கு நிறையச் செலவாகும்;-)))

நிரூபன் said...

பதிவில் பல்சுவை விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க...
எம் தமிழர்கள் ஓட்டு மாட்டு வேலையில் எப்போதும் கில்லாடிகள் என்பதையும்,

வெளிநாட்டிற்கு சென்றாலும், துப்புவதிலும், வீதியோரங்களில் அழுக்குகளை கொட்டுவதிலும் இன்னும் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் என்பதனையும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீங்க.

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்,
பேசமா இலங்கையில் இருந்து பொம்பிளை எடுப்பதை புறக்கணிப்போம் என்று சொன்னா
நமக்கெல்லாம் ஜாலி என்று தோணுது,
உள்ளூரில் நல்ல பொண்ணுங்க மாட்டும்மில்லே;-)))

சுதா SJ said...

//கேட்டால் இவங்கள் குட்டி காட்டான்கள் அப்பா செல்லம் என்கிறாள் இதுவும் ஒரு யுக்திதானப்பு..//அதே அதே பாஸ்

இதே யுக்தி முறையாய் எங்கள் சின்ன வயசில் எங்கள் அம்மாவும் அப்பாவிடம்
பயன்படுத்திய நினைவுகள் வருது பாஸ்,
ஹா ஹா

சுதா SJ said...

//வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரீஸ் மேயர் பெர்தொன் து நோயே சார்ந்திருக்கும் பார்டி சோசியால் கட்சிக்கு வோட்டு போடுவதில்லை என என்ர அப்புச்சி போட்டோ மேல் சத்தியம் செய்திருக்கிறேன்..??//

சத்தியத்தை காப்பாற்றுங்க பாஸ் ஏனெனில் நானும் உவருக்கு ஒட்டு போடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்
காரணம் பற்றி ஒரு தனி பதிவு போடலாம் என்று இருக்கேன்

சுதா SJ said...

//அதுவும் ஒரே சாமான்களை இரண்டுதரம் அடிக்கிறார்கள்.//

உண்மைதான் பாஸ்
நானும் அனுபவித்து எங்கள் வீட்டில் திட்டு வாங்கி இருக்கேன்

சுதா SJ said...

// நான் கேட்கிறேன் இந்த காட்டானாலேயே ஒரு பதிவை தமிழில் போட முடியுமெண்டால் உங்கள் பண பட்டறை இயந்திரத்தை ஏன் ஒவ்வோர் பொருட்களின் பெயர்களையும் தனி தனியாக அடிக்க முடியாது..?//

அசத்தல் அசத்தல்
சிறப்பான எழுத்து நடை

சுதா SJ said...

//இந்த காட்டானே வெக்கபடுமளவு மரத்தை சுத்தி துப்போ துப்பென்று துப்பி வைத்துள்ளார்கள் இந்த காட்டானின் முன்னோடிகள்..இதோ காட்டான் சுத்தி சுத்தி துப்பிய இடம்..?//

ஆஹா ....
பட் ஒண்ணு
ரோட்டில் துப்புறவையல் குப்பை போடுறவையல பார்த்தா
எனக்கு செம கடுப்பாகும் பாஸ்

சுதா SJ said...

உங்கள் புகைப்படம் பரிசின் உண்மை அழகு சொல்லும் புகைப்படங்கள்

சுதா SJ said...

ரியலி அசத்தல் பதிவு பாஸ்
வாழ்த்துக்கள்

காட்டான் said...

நன்றி நிரூபன் உங்கள் கருத்தில் எனக்கு மிக மிக பிடித்தது இலங்கையிலிருந்து பொண்னு எடுப்பதை புறக்கனிப்போம் என்று எழுதியிருந்ததை ஆமா மாப்பிள இந்த பொண்னுங்கள பெத்த அம்மாக்களே இப்படிதான் வெளிநாட்டு மாப்பிளதான் வேனுமெண்டு அடம்பிடிக்கிறாங்க இது எங்கபோய் முடியுமெண்டால் என்ர கதை மாதிரித்தான்...!? இந்த காட்டானுக்கு கல்யாண வயது வந்து விட்டது என்று ஆச்சி பொண்னு தெடுறன் நல்ல சொக்காயோட ஒரு படம் அனுப்படா என்றார் நானும் la defense என்னும் இடத்திலுள்ள அதி உயர கட்டிடத்தின் கீழ் கோட்டு சூட்டோட நின்று படத்த அனுப்பி வைத்தேன்...!ஆச்சி அதகாட்டி யாழ்பாண பல்கலைக்கழகத்தில ஏதோ வாயில நுழையாத படிப்பு படித்துக்கொண்டு இருந்த என்ர மனிசிக்கு காட்டி அவ அப்பனாத்தாலுக்கு மாப்பிளைக்கு இந்த கட்டிடமே சொந்தமெண்டு ரீலு விட்டு இவளை இன்கு அனுப்பி வைச்சாங்க ஏர்போட்டில் இந்த காட்டான பார்தவள் இன்றுவரை பேச்சு மூச்சு இல்ல  ஆனா அடிக்கடி ரேடியோவில ஒரு பாட்ட போடுறாள் ஆ அது என்ன பாட்டு..!?
என் குற்றமா உன் குற்றமா?யார நானு குற்ற்ம் சொல்லவெண்டு இதுக்கு என்ன அர்த்தம் மாப்பிள 

காட்டான் said...

நன்றி துஷ்யந்தன் மாப்பிள நீங்கலெல்லாம் இந்த காட்டானை இப்படியெல்லாம் பாராட்டுவதை பார்கும்போது உண்மையிலேயே இரண்டு குவளை சோமபாணத்தை ஒரே முடக்குல குடித்தமாதிரி இருக்கு..!இந்த காட்டானின் கால் தரையில இல்ல மாப்பிள

காட்டான் said...

என்ன நேசன் இப்படி சொல்லீட்டிங்க ஊரில் எங்க அப்புச்சி நித்திரைக்கு போகும் முன்னர் சட்டியில மண்னை நிறப்பி வைப்பேன் அதிலதான் அப்புச்சி துப்பவேனும் இல்லாட்டி அம்மாவிற்கு கெட்ட கோவம் வரும்..!எங்கட குணம் தெரிந்ததுதானே அப்ப பாரீஸ் மேயர் என்ன செய்ய வேண்டும்..?ஒரு பெரிய மண்சட்டி வைத்திருக்க வேண்டுமோ இல்லையோ..? இதுக்கும் சேர்த்துதான் மாப்பிள வோட்டு போடமாட்டன்னு சொன்னேன்..!

காட்டான் said...

ஆஹா ....
பட் ஒண்ணு
ரோட்டில் துப்புறவையல் குப்பை போடுறவையல பார்த்தா
எனக்கு செம கடுப்பாகும் பாஸ்

 இனிமே லாச்சப்பல் போகும்போது
ஒரு செம்போட போறன் வெத்தில போட்டா அதில துப்பிறேன் ஆனா அந்த கருமத்த வீட்ட கொண்டு வந்து நான் அடி வாங்கோனுமெண்டு நீ நினைக்கிறது நல்லாவா இருக்கு மாப்பிள..!?

உலக சினிமா ரசிகன் said...

ஈழத்தமிழில் நகைச்சுவை நடையை படிக்கும்போது திருப்பதி லட்டு சாப்பிட்ட திருப்தி வருகிறது.வாழ்த்துக்கள்.

நடிகர் சிவக்குமாரும்,எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் மோதிக்கொண்டதை பதிவிட்டிரிக்கிறேன்.
வருகை தாருங்கள்.

கவி அழகன் said...

ஆஹா சுவாரசியமா எழுதியிருக்கின்கள்
வாழ்த்துக்கள்

காட்டான் said...

 கவியழகா உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி நன்றி ...

காட்டான் said...

ஈழத்தமிழில் நகைச்சுவை நடையை படிக்கும்போது திருப்பதி லட்டு சாப்பிட்ட திருப்தி வருகிறது.வாழ்த்துக்கள்.

நடிகர் சிவக்குமாரும்,எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் மோதிக்கொண்டதை பதிவிட்டிரிக்கிறேன்.
வருகை தாருங்கள்.
நன்றி கட்டாயம் வருகை தருகிறேன் இபோது பணி நிமிர்த்தம் நேரம் ஒதுக்க முடியவில்லை நாளை வருகிறேன்..

ஆகுலன் said...

சொல்லுறானே எண்டு தப்பா நினைக்காதீங்கோ காட்டான்..
ஆனா உங்கயும் துப்ப தொடக்கி விட்டார்களே என்றுதான் கவலையாக உள்ளது....எங்களது நாடிலதான் உது பெரிய பிரச்னை இல்லை அனால் மற்றவன் நாட்டில் நாமேன் ஒழுங்காக இருக்க கூடாது..அவன் அவனது நாட்டை அழகாகதானே வைத்திருக்கிறான்....

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "ஆசை நூறுவகை...!!??": 

சொல்லுறானே எண்டு தப்பா நினைக்காதீங்கோ காட்டான்..
ஆனா உங்கயும் துப்ப தொடக்கி விட்டார்களே என்றுதான் கவலையாக உள்ளது....எங்களது நாடிலதான் உது பெரிய பிரச்னை இல்லை அனால் மற்றவன் நாட்டில் நாமேன் ஒழுங்காக இருக்க கூடாது..அவன் அவனது நாட்டை அழகாகதானே வைத்திருக்கிறான்.... 

மாப்பிள இப்பிடி நாங்க இருக்காட்டி நீங்க ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் நாங்க தமிழர் என்று..
ஆனா காட்டான் இப்ப செம்போடதான் பாரீசுக்கு போறான் .. மற்றவர்களும் துப்பாமல் செம்போடு போகுமாறு இந்த காட்டான் உன் சார்பா கேட்டுக்கொள்கிறான் 

அப்புரம் உனக்கு நான் குழ வைக்க வந்தால் கோகில்காரன் ஒரு பெட்டிய போட்டுவிட்டு ஒரு வார்த்தையை தந்து இதை எழுது என்று லொல்லு பண்னுரான் உனக்கு கருத்து போட ஏன் அவன் குறுக்க வாரான் அவனை கட் பண்னிவிடு..!?

ஆகுலன் said...

காட்டான் அதை நான் கட்டாயம் செய்துடுரன்........

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல நகைச்சுவை பதிவு நண்பரே....!