காட்டான் பாரீஸ் வந்து விட்ட கொஞ்ச காலத்தின் பின் தான் வைத்திருந்த திருக்க வண்டியை ஆச்சி வித்திட்டா என்று கேள்விபட்டவுடன் உண்ணாவிரதமிருக்க தொடங்கிவிட்டான்..? ஆனால் வாழ்கை முழுவதும் மூக்கு முட்ட ஊர் அரிசிசோத்த சாப்பிட்டவனுக்கு இதில வேற அவண்ட நாய்கும் அதே அளவு வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீடே சுனாமி வந்த புக்குசிமா மாதிரியாகிவிடும்..அதனால்
காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்த மாலையே முடித்துவைத்தான் ..!காட்டான் பசி தாங்க மாட்டான் இப்ப நினைத்து பார்த்தால் தழிழ் ஈனத்தலைவர்(எழுத்து பிழை இருந்தா மன்னிச்சிடுங்க உங்களுக்கு தெரியும்தானே காட்டானின் கல்வியறிவு..!) இருந்த உண்ணா விரதத்தை விட கூட நேரம் இருந்திருக்கிறான்...!!?
அப்புறமா ஆச்சி டெலிபோன்ல சொன்னா அட காட்டானே அத நான் வித்தது கந்தயர் வீட்டுக்குதான் அங்க ஒரு அழகான கிளி இருக்கடா எதிர் காலத்தில அந்த கிளிய உன்ர கையில பிடிச்சு கொடுக்கலாமெண்டு யோசிக்கிறன்..? அப்ப நீ வீட்டோட மாப்பிளயாய் இருக்கேக்க அந்த திருக்க வண்டி உதவும்டா..நீ கவலையை விட்டுட்டு வேலையை பாரடான்னா..
அதுக்கு பிறகு காட்டானுக்கு எங்க வேல ஓடபோது..!காட்டானுக்கும் அந்த கிளிய நல்லா தெரியும் அட அந்த கிளி காட்டாண்ட தங்கச்சியோடதான் படித்தது ஆனா ஊரில காட்டானை கண்டா..!!?
மாப்பிளங்களா அது வேற ஒன்னுமில்ல அவ அப்பண்ட தோட்டத்தில வெள்ளரிக்காய்கள் களவு போகுதாம்.. இதில காட்டான் சம்பந்தபட்டிருக்கலாமென யாரோ ஒரு நல்லவாயன் போட்டு கொடுத்திட்டான் இதுக்கெல்லாம் நாங்க என்ன மறுப்பறிக்கையா கொடுக்க முடியும்??இல்ல அந்த அறிக்கையை எழுதவாவுதல் காட்டானுக்கு தெரியுமா..?
இப்ப ஆச்சி திருக்கையை அட்வான்சா கொடுத்து காட்டான்மேல் இருக்கும் காட்டத்த குறைச்சு கிளிமேல கண்ண வைச்சிட்டா என்றவுடனேயே காட்டாண்ட பின் பக்கமெல்லாம் லா..லா என்று வெள்ள உடுப்பில பறக்கினம் தேவதைகள் ...!!
என்றாலும் காட்டானுக்கு ஒரு சந்தேகம் அந்த கிளி யாழ்பாணத்தில பெரிய படிப்பெல்லாம் படிக்க போகுதாமே என்றேன் ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே அவங்கதான் காட்டானின் குடும்பத்தில வர்றத்துக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமெண்டா அப்பதான் காட்டானுக்கு ஓடி விளங்கிச்சு..!!ஆச்சி படமனுப்பு என்று அடிக்கடி கேட்கேக்க காட்டான் புறாகூடு வீட்டில படமெடுத்து அனுப்பினா ஆச்சி கவலைப்படும்ன்னு ரோட்டில் பாக்கிங்பண்னி இருக்கும் ஒவ்வொரு காருக்கும் முன்னால நின்னு படமெடுத்து அனுப்பியது..!
என்றாலும் காட்டானின் மனசுக்க பிரான்சுக்கு வந்ததில ஒரு லாபம்..?பெரிய படிப்பு படிக்கும் பொண்டாட்டி கிடைக்கப்போறாள் அதுக்கு காட்டான் தன்னை தயார்படுத்த தொடங்கினான்..!?
அதன் முதல் படி ஆச்சி நம்பிக்கொண்டு இருப்பதுபோல் நானும் கார் வாங்கினால் என்ன..?மாட்டு வண்டியிலேயே காலத்தை கழித்தவனுக்கு கார் கனவு நடு இருட்டில துரத்துர நாயப்போல துரத்த தொடங்கியது..!?
அப்பதான் காட்டானுக்கு ஒரு உண்மை விளங்கியது பிரான்சில கார் வாங்குறது ஒன்றும் பெரிய விசயமில்ல ஊரில பல்லி முட்டா வாங்கிறமாதிரி வாங்கலாம் ஆனா அத ஓட்ட லைசன்சு வேனுமாம்..!அட இந்த காட்டான் மாட்டு வண்டி ஓட்டும்போது ஒரு கம்புதான் வைத்திருப்பான் வேற ஒன்றுமே தேவையில்ல.. இப்ப லைசன்சு வாங்கோனும்னா பள்ளிக்கூடம் போகவேனும்ன்னுட்டாங்க இஞ்சதான் காட்டானுக்கு வகுத்த கலக்கதொடங்கியது சின்ன வயசில பள்ளிக்கூடம் போவென்றாவே காச்சட்டையை நனைக்கிற காட்டான் ஒரு கிளிக்காக பள்ளிகூடம் விரும்பி போக தொடங்கினான்..!!
அடிப்படையிலேயே இங்கிலீசு தெரியாத காட்டான் பிரன்சை பக்கென்று பிடித்ததற்கு காரணம் வேலைத்தலத்தில் எல்லோருமே பிரன்சுக்காரர்கள் அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் அதனால காட்டான் பிரன்சை மெல்ல மெல்ல அவர்களுடன் கதைத்து பழகிற்றான் காட்டான் அடிப்படையிலேயே வெக்கப்படமாட்டான் அதுவும் அவனுக்கு கை கொடுத்தது ..!
என்றாலும் பள்ளிகூடத்தில சொல்லி தருகிறது விளங்குவது கஸ்ரமாகத்தான் இருந்தது அப்பதான் இந்த வாத்திமார்களின் சைக்கில் காத்த புடிங்கி விட்டதெல்லாம் தேவையில்லாமல் ஞாபகபடுத்திசென்றன..!?
என்றாலும் காட்டானா கொக்கா எழுத்து தேர்வு நடந்த கோலில் நின்று எல்லோரையும் நோட்டம் விட்டான் இலுப்பகட வைரவரை நினைத்துக்கொண்டு ஒரு சைனீஸ் பெண்னுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..!?தேர்வும் முடிந்தது நாற்பது கேள்விகளுக்கு முப்பதொன்பது சரியாக செய்து விட்டான் இந்த காட்டான் சந்தோசத்தில் அந்த பெண்னை திரும்பி பார்த்தான் ஒரு வித நன்றியுணர்வோடு ஆனால் இந்த காட்டானுக்கு இன்றும் விளங்கவில்லை ஏன் அந்த பெண் தேர்வில் தோற்றாள் என்று..!!
அடுத்த தேர்வு காரை ஓட்டி காட்டுவது ஏனோ தெரியவில்லை காட்டான் இதில சுலபமாக வென்று விட்டான்..!??அப்புறமென்ன ஊரில சங்க கட கூப்பன் காட் போல ஒன்றை தந்து இதுதான் உன்ர லைசன் இனி நீ கார் ஓடலாமென அனுப்பி வைத்தார்கள்..
அடுத்து கார் வாங்கும் படலம் ஒரு பழைய R19 காரையும் வாங்கிவிட்டேன் அதன் முன்னால நின்று ஒரு படத்த எடுத்து ஆச்சிக்கு அனுப்பினா அங்க இருந்து அச்சி சொல்கிறா என்னடா இந்த காட்டானுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடிச்சோ? நல்ல நல்ல காரெல்லாம் வைச்சிருந்தான் இப்ப என்னடான்னா பேரீசம் பழத்திற்குகூட பெறுமதியில்லாத கார் வாங்கியிக்கிறான்னா..!!
ஆனா பாருங்கோ ஆச்சி கிளிய பிடிச்சு பிரான்சுக்கு அனுப்பும்வரை அந்த படத்த கண்னுல காட்டல்ல கிளிக்கு..!? இப்பதான் யோசிக்கிறன் கிளி படத்த பார்த்திருந்தா ஏர்போட்டிலேயே யோசித்து பார்த்து பறந்திருக்கும்..?இப்ப பாருங்கோ இந்தகாட்டானோட இன்னும் ரெண்டு காட்டான் குட்டிகளை பெத்துபோட்டு....விட்டு சொல்லுறாள் இஞ்ச பாருங்கோ இரவுசாப்பாட்டிற்கு இடியப்பத்த அவிச்சு வையுங்கோ நானும் லைசன்சுக்கு படிக்க பள்ளிகூடம் போட்டு வாரேன்கிறாள்..! ஆச்சிய நினைச்சிகொண்டு இரவுச்சாப்பாட்ட ரெடி பண்னபோறேன்..அது சரி கறி என்ன வைக்கிறதெண்டு சொல்லாம போட்டாளே.. மாப்பிளைங்களா இண்டைக்கு நான் அடிவாங்காம படுக்கபோறதில்லைன்னு தெரியுது எப்புடி இருந்த நான்.!!!?
40 comments:
காட்டானின் இந்த அசத்தல் பதிவை முதல் படிக்க கொடுத்து வைத்தது இந்த துஷிக்கா
சந்தோஷம் சந்தோஷம்
பாஸ் பிரான்சில் லைசன்ஸ் எடுப்பது எவ்வளவு கஸ்ரம் என்று நானும் அனுபவித்து இருக்கேன்,
அதை நீங்க இவ்ளோ சுலபமா எடுத்தது
ஹும் நீங்க ரெம்ப பெரியா ஆள் பாஸ்
பாஸ்
அந்த கிளி இப்போ கிடைச்சுட்டுதா இல்லையா
( ஒரு ஆர்வம்தான் )
பாஸ் உங்க எழுத்து நடை எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு பாஸ்,
உங்க எழுத்து நடைக்கு நான் ரசிகன் பாஸ்,
ஊரில் தமிழுக்கு 100 க்கு 100 எடுத்த ஆள் போல இருக்கு,
வாழ்த்துக்கள் பாஸ்
நல்லதொரு அனுபவப் பகிர்வு தான் அருமை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்
தங்கள் புளொக்கர் மொழியை ஆங்கிலத்தக்கு மாற்றலாமே...
அண்ணே அம்மாவான கேக்கிறன் உங்கட பிளாக்கர் அ உங்கட மனிசி படிக்கிரவவோ
கவி அழகன் a ajouté un nouveau commentaire sur votre message "காட்டான் பிடித்த கிளி.." :
அண்ணே அம்மாவான கேக்கிறன் உங்கட பிளாக்கர் அ உங்கட மனிசி படிக்கிரவவா
Envoyé par கவி அழகன் à காட்டான் le 9 juillet 2011 19:53 கவி இஞ்ச இருக்கிற சனங்க மனைவி என்பவள் ஏதோ ஒரு சட பொருள் என்பதுபோல் பார்கிறார்கள்.. ஏனோ தெரியவில்லை எனது மனைவிக்காகவோ உங்களுக்காகவோ சொல்லவில்லை எனது மனைவி என் பிள்ளைகளின் தாய் என்பதை தாண்டி.. எனக்கு ஒரு நல்ல தோழியே..இந்த பதிவில் நான் சொல்வதது இங்க இருக்கிறவங்க எனக்கு படித்த அழகா சிவத்த பெண் வேண்டுமென்கிறார்கள் ஏன் 24 மணித்தியாலமும் மனைவியய் வீட்டுக்குள் பூட்டி வைக்கவா? அவளுக்கும் ஆசா பாசங்கள் இல்லையா..?எனக்கு தெரிந்து இங்கு இருக்கும் எத்தனை பென்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் இங்கு எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கு ஆனால் மனவியாதிக்கு..?இதப்பற்றி ஒரு பதிவு போடுவன் எனக்கு பிரான்சில் இதப்பற்றி பல வருட அனுபவம்.. இருக்கு ஆனால் இவ்வளவு அதி முக்கியமான விசயம் காட்டானின் எழுத்து நடையில் வந்தால்..? ஆகையால் துஷ்யந்தன் முயற்சித்தால் உதவ தயார்..(என்ர பதிவின் முதல் வாசகி என்ற மனிசிதான்யா பின்ன அவள கேட்காம எதையும் நான் செய்வதிலை தும்புக்கட்டையால் ஒவ்வொரு நாளும் அடி வாங்க என்ற உடம்பு என்ன இருபாலா செய்தது மாப்பிள..?)
பாஸ்
அந்த கிளி இப்போ கிடைச்சுட்டுதா இல்லையா
( ஒரு ஆர்வம்தான் )
மாப்பிள காட்டானா கொக்கா அவள்தான் என்ற மனிசியப்பா ..!?
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் a ajouté un nouveau commentaire sur votre message "காட்டான் பிடித்த கிளி.." :
பாஸ் உங்க எழுத்து நடை எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு பாஸ்,
உங்க எழுத்து நடைக்கு நான் ரசிகன் பாஸ்,
ஊரில் தமிழுக்கு 100 க்கு 100 எடுத்த ஆள் போல இருக்கு,
வாழ்த்துக்கள் பாஸ்
Envoyé par "கற்றது தமிழ்" துஷ்யந்தன் à காட்டான் le 9 juillet 2011 16:4
மாப்பிள இது உனக்கே நல்லாவா இருக்கு உன்ற கருத்த பாத்திட்டு மனிசி கேட்கிறாள் துஷ்யந்தனுக்கு எவ்வளவு கொடுத்தேன்னு தேவயா மாப்பிள மனிசிக்கு தெரியும்தானே என்ர கப்பாகுட்டி..?
மதி நாந்தானே சொல்லிட்டன்..! காடானுக்கு இங்கிலீசு தெரியாதென்று என்றாலும் உங்களுக்காகவாவுதல் மனிசிட்ட சொல்லி அத இங்கிலீசுல மாத்த சொல்லுரன் ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகும் என்ன லாச்சப்பலில் ஒரு சேலை வாங்கி கொடுக்கனும்...இப்படியான அதிக செலவுகளை இந்த காட்டானுக்கு கொடுக்கிறீங்களே இது நல்லாவா இருக்கு உங்கட தகுதிக்கு மாப்பிள
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் a ajouté un nouveau commentaire sur votre message "காட்டான் பிடித்த கிளி.." :
பாஸ் பிரான்சில் லைசன்ஸ் எடுப்பது எவ்வளவு கஸ்ரம் என்று நானும் அனுபவித்து இருக்கேன்,
அதை நீங்க இவ்ளோ சுலபமா எடுத்தது
ஹும் நீங்க ரெம்ப பெரியா ஆள் பாஸ்
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் à காட்டான் le 9 juillet 2011 16:46
மாப்பிள நானொன்றும் பெரிய ஆள் இல்லைங்கோ..காட்டான் எதையுமே சீரியசா எடுக்குறதில்ல ஆனா அப்போது லைசன்சு எடுப்பதென்பது இப்போது இருப்பதை விட கொஞ்சம் சுலபம் ஏன் சொல்லுறேன்னா என்ற மனிசி பள்ளியில் இருந்து கொண்டு வந்த புத்தகத்த பார்தேன்...ஒரு பெரிய்ய்ய்ய்ய சோம பாணத்த வேண்டாம்..! எல்லோரும் என்னை சோம பாணத்திலேயே மூழ்கி கிடப்பவன்னு தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள்..அது சரி பாரீஸ் மேயர பற்றி ஒரு பதிவு போடுவதாய் கூறி இருந்தீர்கள் அவரை பற்றி எனக்கு இரண்டு மூன்று தகவள்கள் தெரியும் விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்..!!?உங்கள் வைத்து பல அலுவல்கள் சாதிக்க வேண்யிருக்கு.. பயபடாத மாப்பிள புலக்கு புலக்குன்றாங்கலே அத கொஞ்சம் திருத்த வேண்டியிருக்கு வேற ஒன்றுமில்ல..!??
நல்லா இருக்கிறது கிளிப் பதிவு உந்த லைசன் எடுக்கும் படிப்பு கொஞ்சம் கஸ்ரம்தான் அண்ணிபாடு கஸ்ரம்தான் உங்கள் சோமபாணம் எல்லாம் தெரிந்து கொண்டு சகிச்சுப் போவது என் நண்பன் சோமபாணம் குடுக்கிறான் என்று அடுப்படி சண்டையாம்.
நன்றி நேசன் உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்
நேசன் எங்கட ஆட்கள் தண்ணியடிக்கிறத பார்த்தாள் அடுப்படி சண்டையில்ல வேற என்னவோவெல்லாம் வரும்...?
இல்லாவிட்டால் வீடே சுனாமி வந்த புக்குசிமா மாதிரியாகிவிடும்..அதனால்
காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்த மாலையே முடித்துவைத்தான் ..//
வணக்கம் காட்டான்,
அண்ணாச்சி, மேற் கூறப்படும் வரிகளூடாக தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே சொல்லிய கலைஞரையும் அல்லவா கடிக்கிறார்;-))
ஹி....ஹி....
//ஆச்சியிடம் அட காட்டுப்பயலே உனக்கென்னடா குறைச்சல்.!? நீயும் பெரிய பெரிய காரெல்லாம் வைச்சு ஓடுரேயே //
ஆச்சி டைம்மிங் காமெடி போட்டுக் கலக்கி எடுத்திருக்கிறா.
//அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான்//
இது எல்லாத் தமிழர்களிற்கும் எல்லா ஊர்களிலும் பொதுவான குணம் என்று தான் நான் நினைக்கிறேன்.
கார் வாங்கும் படலத்தை, எங்கள் ஊர் நினைவுகளோடு சேர்த்து எழுதி, புலம் பெயர் தமிழ் வாசனையினையும் ஒருங்கிணைத்து
நகைச்சுவைப் பதிவாகத் தந்திருக்கிறீங்க..
கலக்கல் பதிவு, அப்புறம் ஒரு சின்ன கேள்வி. கோபிக்கிறேல்லை.
வீட்டிலை டெய்லி சமையல் நீங்களோ,
இல்லை அவாவிற்கு லைசென்ஸ் கிளாஸ் இருக்கிற நாளில் மட்டும் சமையல் நீங்களோ.
கலக்கல் பதிவு...சோகமும் தெரிகிறது...நல்ல எழுத்து நடை...தொடர்ந்து வருவோம் என!!
மைந்தன் சிவா a ajouté un nouveau commentaire sur votre message "காட்டான் பிடித்த கிளி.." :
கலக்கல் பதிவு...சோகமும் தெரிகிறது...நல்ல எழுத்து நடை...தொடர்ந்து வருவோம் என!!
நன்றி மாப்பிள நன்றி காட்டான் கோழி பிடிக்க போறான் வந்து விபரமாக பதிவான் பாருங்கோப்பு..!?
வணக்கம் நிரூபன் நீங்கள் நினைப்பதைபோல் ஒவ்வொருநாளும் சமயல் என்னுடையதில்லை..!? எனக்கும் ஒரு நாள் சமையலில் இருந்து விடுதலை தருவாள் என்ர மனிசி அப்பதான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியும் எனக்கும்..!!?? என்னுடைய காயங்களை கிழறாதீங்க வலிதாங்க முடியல மாப்பிளங்களா...!!??
ம.தி. சுதா இனி அடிக்கடி வருவோம் உங்களுக்கு செலவு வைக்காம விடமாட்டோம்..?
,,(காட்டான்''மன்னிச்சுக்கோங்க சுதா நீங்க அனுப்பிய ஈ மெயில காட்டான் கண்டபடி கைய வைச்சு அழிச்சிட்டான் என்ராலும் விசயத்துக்கு வாரன்)
நன்றி மதி சுதா இந்த காட்டானுக்கு செலவு வைக்காம விட மாட்டாயென்று தெரிகிறது உந்த டக்கடாங்கடிக்கெல்லாம் காட்டான் பயந்தவனில்லை (மனிசி பக்கத்தில் இல்லையப்பு...!!?)இது பனங்காட்டு நரி.. இப்ப இஞ்ச பள்ளிகூட லீவு...காட்டான் இனிவரும் இரண்டு மாதங்கள் உங்களை விடுவதாய் இல்லை..?
பாஸ் எப்படி இருக்கீங்க ??
உங்கள் இ.மெயில் க்கு ஒரு தகவல் அனுப்பி உள்ளேன் பாருங்கள்
//ஆகையால் துஷ்யந்தன் முயற்சித்தால் உதவ தயார்//
பாஸ் நீங்க என்ன ரெம்ப பெரிய ஆள் ஆக்கிறிங்க..
நான் ரெம்ப சின்னப்பையன் ப்ளஸ் கத்துக்குட்டி பாஸ்,
நானே வலையில் இப்போத்தான் தடுமாறி தடுமாறி நடைபயிலுகுறேன்,
நீங்க ரெம்ப பெரிய கீரிடங்களை என் தலையில் வைப்பது
பயமா இருக்கு பாஸ், அவ்வவ்
இருந்தாலும் தேங்க்ஸ் பாஸ் :))
//அது சரி பாரீஸ் மேயர பற்றி ஒரு பதிவு போடுவதாய் கூறி இருந்தீர்கள் அவரை பற்றி எனக்கு இரண்டு மூன்று தகவள்கள் தெரியும் விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்..!!?உங்கள் வைத்து பல அலுவல்கள் சாதிக்க வேண்யிருக்கு.. பயபடாத மாப்பிள புலக்கு புலக்குன்றாங்கலே அத கொஞ்சம் திருத்த வேண்டியிருக்கு வேற ஒன்றுமில்ல..!??//
ஹி ஹி
காட்டானுக்கு நினைவு சக்தி அதிகம் போல,
எழுதணும் பாஸ்,
கண்டிப்பா பாஸ்
எனக்கு தெரிந்தத சொல்லிதருவோம் இல்ல.
// மாப்பிள இது உனக்கே நல்லாவா இருக்கு உன்ற கருத்த பாத்திட்டு மனிசி கேட்கிறாள் துஷ்யந்தனுக்கு எவ்வளவு கொடுத்தேன்னு தேவயா மாப்பிள மனிசிக்கு தெரியும்தானே என்ர கப்பாகுட்டி..?/
அருகில் இருப்பவர்களின் திறமை எப்பவுமே நமக்கு தெரியுறது இல்லை,
அவங்ககிட்ட சொல்லுங்க பாஸ்
காட்டானை கட்டியதுக்கு பெருமைப்படச்சொல்லி
அவங்க ரெம்ப லக்கி /
மாப்ள பதிவு பல விஷ்யங்கள சொல்லி போகுது..உங்க மனசயும் நன்றி!
விக்கிக்கு என்ர வணக்கங்கள் உங்க நாய்க்கறி இருக்கோவெண்டு கேட்டதற்கு நீங்கள் பதில் தரவில்லை..!?ஆனால் உங்களை காட்டானுக்கு நல்லா பிடிச்சிருக்கு எதுக்கும் சோசியக்காரனை கேட்டு வையுங்கோ காட்டானோட சேரலாமோ இல்லையோ என்று காட்டான் பசி வந்தால் மனிசனையும் சாப்பிடுவான்னு ஊரில ஒரு பேச்சு ..?
ஆனா நான் சொல்லுறேங்க நான் நல்லவன் ரெம்ப ரெம்ப நல்லவன் சொன்னா நம்புங்கோபா..! ஆனா நாய்க்கறி பற்றி எனக்கு அறியத்தாருங்கள் தயவு கூர்ந்து... பார்தீங்களா காட்டானுக்கும் சபை மரியாத தெரியுது....!?
அருகில் இருப்பவர்களின் திறமை எப்பவுமே நமக்கு தெரியுறது இல்லை,
அவங்ககிட்ட சொல்லுங்க பாஸ்
காட்டானை கட்டியதுக்கு பெருமைப்படச்சொல்லி
அவங்க ரெம்ப லக்கி /
ஆகா காட்டானுக்கும் வக்காலத்து வாங்க ஒருத்தர் வந்திட்டார்..! இனிமேல் வீட்டில் சட்டிபானைகள் என்னை நோக்கி பாய்ந்து வந்தால் மாட்டு வண்டியை நேரே உன்ர வீட்டதான் விடபோறன்..!? பாரப்பு பிரான்ஸ்சுக்குள்ளேயே மீண்டும் அகதிவாழ்கை வாழவேண்டியிருக்கு...!!நீண்ட நாள் தங்க மாட்டான் இந்த காட்டான் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் வாங்கிவை மாப்பிள..!!
பல கருத்துகள் நிறைந்த பதிவு..
வாழ்த்துக்கள்...
பல கருத்துகள் நிறைந்த பதிவு..
வாழ்த்துக்கள்...
நன்றி விடி வெள்ளி உங்கட கருத்துக்கும் வருகைக்கும்... !!
வணக்கம் காட்டான்.உங்கட படத்தைப் பாத்திட்டுப் பயந்து பயந்துதான் உங்கட வீட்டுக்குள்ள நுழைஞ்சன்.ம்...சந்தோஷம்.முந்தைய பதிவுகளும் பாத்தன்.இவ்வளவு நகைச்சுவையா எனக்கு எழுத வராது.சின்னச் சின்ன விஷயத்தைக்கூட வெட்டி விளாசியிருக்கிறியள்.தொடருங்கோ.சிரிக்கக் கொஞ்சம் உங்கள் பக்கமும் வந்து போகிறேன் !
வணக்கம் காட்டான்.உங்கட படத்தைப் பாத்திட்டுப் பயந்து பயந்துதான் உங்கட வீட்டுக்குள்ள நுழைஞ்சன்.ம்...சந்தோஷம்.முந்தைய பதிவுகளும் பாத்தன்.இவ்வளவு நகைச்சுவையா எனக்கு எழுத வராது.சின்னச் சின்ன விஷயத்தைக்கூட வெட்டி விளாசியிருக்கிறியள்.தொடருங்கோ.சிரிக்கக் கொஞ்சம் உங்கள் பக்கமும் வந்து போகிறேன் !
நன்றி ஹேமாக்கா..!? என்ன இருந்தாலும் அக்காவா இருக்க மாட்டீங்க தங்குச்சியா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..!நான் பிறந்தது 1973 எப்பிடி அழைப்பதென்று நீங்கதான் முடிவு பண்னுங்க....!? என்ர வாழ்க்கை முழுவதையும் கிராமத்திலேயே கழித்ததால் கிராமத்து மனிதர்கள் என் மனதில் பதிந்து போனார்கள்..
இங்கு இருக்கும் படம் உங்களை பயமுறுத்தினால் படத்தை மாற்ற தயார் ஆனா அதற்கு பதிலாக வலைபதிவில் உள்ள அனைவருக்குமான ஒரு வேண்டுகோள் நல்ல எனக்கு பிடித்த ஒரு தமிழ் காட்டான் படம் தாருங்கள் படம் என்னைப்போல் இருந்தால் நல்லது.. என்ர படத்த யாராவது பார்க விரும்பினால் மூஞ்சி புத்தகத்தில் packiarajah tharmarajah என்று அடித்து பாருங்கோ காட்டான் எதையுமே காட்டான்னு நினைக்காதீர்கள்...!!??
மாப்ள என் பின்னூட்டத்தில சொல்லி இருந்தேனே. இங்கு நாய் கறிக்கென தனி கிராமம் இருக்கு...இங்கு அட்டகாசமான நாய்க்கறி கிடைக்கும் நன்றி!
மன்னிச்சிடு மாப்பிள காட்டானுக்கு பின்னூட்டம் போட்டவுடன் வேலை முடிந்து விட்டதென்று நினைத்துவிட்டான் நீங்க என்ன பதில் தந்தீர்கள் என்பதை பார்காமல் விட்டுட்டான் இனிமேல் அப்படி நடக்காது..! அனா மாப்பு நீ நல்லா மாட்டிட்ட..! கருத்தென்று காட்டான் கடித்து துப்பிறத எல்லாம் பொறுக்கி பதில் போடப்போற இனி நான் வியட்னாம் வராமமே உந்த நாட்ட பற்றி அறிந்து கொள்ள முடியும்...!
காட்டானிட்ட மாட்டிட்டேயே இனி அவன் உன்ன கடிச்சு துப்ப போறான்..? நாய் கறிய சாப்பிட்ட மட்டும் ஒருக்கா காட்டான் வியட்னாம் மண்ணில் கால் வைக்கத்தான் போறான் மசாலாக்கல வாங்கிவை மாப்பிள ..!!??
அண்ணே நானும் வந்துட்டேன் கும்மி அடிக்க.......ஊரோரம் புளியமரம்.......
MANO நாஞ்சில் மனோ has left a new comment on your post "காட்டான் பிடித்த கிளி..":
அண்ணே நானும் வந்துட்டேன் கும்மி அடிக்க.......ஊரோரம் புளியமரம்.......
நன்றி நன்றி உங்கட வருகைக்கு..
காட்டானுக்கு கும்மி அடிக்கிறதென்றா இருட்டுக்கட அல்வா சாப்பிடுற மாதிரி
பிந்திய வரவு சகோ உங்கள் தளத்திற்கு மன்னிக்கவும் .
இன்றுதான் காட்டனை நீண்ட நாளின் பின் சந்தித்தேன் .எப்பிடி இருக்காரு நம்ம காட்டான் ஏன்னு பார்போம் ஏன்னு வந்தேன் காட்டான் மிக சுவாரசியமா
தன்னோட அனுபவத்த பகிர்ந்துள்ளீர்கள் . அப்புறம் இப்போ எப்பிடி போகுது காட்டானோட லைப் .
பிந்திய வரவு சகோ உங்கள் தளத்திற்கு மன்னிக்கவும் .
இன்றுதான் காட்டனை நீண்ட நாளின் பின் சந்தித்தேன் .எப்பிடி இருக்காரு நம்ம காட்டான் ஏன்னு பார்போம் ஏன்னு வந்தேன் காட்டான் மிக சுவாரசியமா
தன்னோட அனுபவத்த பகிர்ந்துள்ளீர்கள் . அப்புறம் இப்போ எப்பிடி போகுது காட்டானோட லைப் .
மாப்பிள நீ என்ர முதல் கை விசேசம் சும்மாவா சொன்னாங்க பெரியவங்க உன்ர கைவிசேசத்தால ஓகோன்னு போகுது காட்டாண்ட வாழ்கை நன்றி மாப்பிள ஆனா இப்பிடி லேட்டா வராத மாப்பிள சுண்டல் தீர்ந்திடும் ..! இப்ப சின்ன காட்டான்களுக்கு பள்ளிக்கூட விடுமுறை ஆகையால் ஆகையால் துள்ளி விளையாடுகிறான் உன்ர காட்டான் ..!? நாளைக்கு மறக்காம வந்து பார் மாப்பிள காட்டான் கோழி பிடிக்க போறான்..!?
////அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் /// மொழி தெரியாத இடத்தில இது தான் பிரச்சனை ..எனக்கு கூட அனுபவம் ))
நிகழ்வுகள் has left a new comment on your post "காட்டான் பிடித்த கிளி..":
////அத்தோட நாலைஞ்சு பொண்ன்னுங்க வேற அவங்க எதைப்பற்றி கதைத்தாலும் காட்டானிக்கு தன்னைப்பற்றிதானோ கதைக்கிறார்கள் என்று யோசிப்பான் /// மொழி தெரியாத இடத்தில இது தான் பிரச்சனை ..எனக்கு கூட அனுபவம் ))
நன்றி உங்கட வருகைக்கு... கோழியடிச்சு வைச்சிருக்கன் வந்து சாப்பிட்டு கருத்தையும் போட்டு போங்க..!?
அருமையான ஆக்கந்தானையா .நம்ம காட்டான கண்டீகளா?.....
கண்டாச் சொல்லுங்கையா .ரெண்டு கவித காத்துக்கிடக்குன்னு.
இந்த ஏளயோட மனசக் குளிரவைக்குற சாமிய தேடிவந்தேனுன்னு...
காட்டானுக்கு என்ன ஆச்சு ?...இந்த அம்பாளடியாளை மறந்து விட்டார் .பல ஆக்கங்கள் பார்க்காமல் விட்டுச் செல்வதேன் .என் மீது ஏதேனும் கோவமா காட்டானே?....
Post a Comment