இப்ப நீங்க புலக்கு புலக்கென்று அலையிரதால ஆச்சிய அடிக்கடி நினைக்கிறீங்க.. என்னையும் பிள்ளைகளை மறந்துபோறீங்க என்கிறாள் சினுங்கிக்கொண்டே என்ர மனிசி ஆச்சிய பற்றி யார் தவறா கதைத்தாலும் எனக்கு கெட்ட கோவம்தான் வருகிறது அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?
இதுக்கு மேல கதைத்து தும்புக்கட்டைய ஏன் உடைய வைப்பான்னு காட்டானும் இடத்தை காலி பண்னிட்டான்..! இப்பவெல்லாம் காட்டான் பிரச்சனை முத்தபோகுதென்றா இடத்தை காலி பண்னிடுவான் வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?
கோழி என்று சொல்லேக்க எனக்கு அக்கா ஞாபகம்தான் வருது.. நம்ம கிராமத்து வீட்டில கோழி வளக்கிறதெல்லாம் அக்காதான் ஆனா அக்கா கோழிக்கறி சாப்பிட மாட்டா... முட்டையெண்டா வெளுத்து வாங்குவா எங்களுக்கு கோழி சமைத்தால் அக்காவிற்கு இரண்டு முட்டைகள் கட்டாயம் அவித்து வைப்பார்கள்..
அக்காவிற்கு கோழிய அப்புச்சிதான் தவறனையில வாரவங்களோட கதைத்து மலிவா வாங்கி வந்து கொடுப்பார்.. தனிமரம் அடிக்கடி சொல்லுவாரே சகோதர மொழி சகோதர மொழியெண்டு அத பேசுறவங்கதான் அப்புச்சியிண்ட கைய முறிச்சு நீ வீட்டோட மாப்பிளையா போன்னு அனுப்பி வைச்சாங்களாம் இது நான் பிறக்க முன்னம் நடந்த கலவரம்..!?அப்புச்சி அடிக்கடி சொல்லுவார் கைய தடவியபடியே.. ஆனா அப்புச்சி ஒற்ற கையாலேயே சுருட்ட சுத்துரதென்ன மம்பட்டிய பிடிக்குறதென்னன்னு எல்லா வேலையும் செய்வார்..
வீட்டில கோழி சமைக்கிறது வலுகுறைவு ஒன்றில் கோழிக்கு வருத்தம் வந்து ஒரு கோழி சாகோனும்..!? இல்லாட்டி தீபாவளி வரனும் அதுவும் இல்லேன்னா நெருங்கிய சொந்தங்கள் கல்யாணம் செய்து விருந்திற்கு அவர்களை கூப்பிட வேண்டும்..?
என்ன இருந்தாலும் சமைக்க கோழிய பிடித்தா அக்காவிற்கு வைச்சது வைச்சபடி ஐம்பது ரூவா கொடுக்கோனும் நானும் உந்தகாச ஆட்டைய போட தேடி களைத்துபோனதுதான் மிச்சம் இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!?
அப்புச்சி 1,2, மாதகுஞ்சுகளா கொண்டு வந்து கொடுக்கேக்க அக்கா மூஞ்சிய பாக்கோனும்..!! ஓடிபோய் கயிறு கொண்டு வந்து குஞ்சுகள கட்டிவைப்பாள் இரண்டு மூன்று நாளைக்கு... அதுக்கு பிறகு குங்சுகள பிடித்து முதலில் அவற்றுக்கு அடுப்படிய காட்டி காட்ட போய் வீட்ட வா..?? காட்ட போய் வீட்ட வா..?? என்றபடியே வீட்டையும் சுத்தி காட்டுவா ஆமாய்யா அப்பதான் அதுகளுக்கு வீடு பழக்கமாகுமாம்..?
இத எல்லாம் நாங்க பார்துகொண்டிருப்போம் இன்னும் எவ்வளவு நாள்ள தீபாவளி வருதெண்டு யோசித்தபடியே...! வாங்கி வந்த கோழிகளில் சேவல்கள் அதிகமானால் கோவில் திருவிழா முடிந்தவுடன் அவற்றிக்கு சங்குதான்..!!
வளர்ந்த சேவல்களை பிடிப்பதே ஒரு கலை இரவில் வேப்ப மரத்தில் தூங்கும்போது வெளிச்சத்த கண்னுக்கடித்து பிடிக்கோனும் இதில பிசகினா காலையில காட்டான் சேவலுக்கு பின்னால் ஒடுவத வைத்தே இண்டைக்கு வீட்டில என்ன கறியெண்டு கண்டு பிடித்துவிடுவார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்..
ஆனா ஆச்சி இருந்தபடியே சேவலை பிடிப்பா.. கொஞ்ச அரிசிய வாசல்ல இருந்து வீட்டு அறைவரை போடுவா கோழிகள் அவற்றை தின்றபடியே அறைக்குள் நுழைவினம் மெல்ல கதவை சாத்தியபடியே காட்டான் இஞ்ச ஓடிவாடான்னா கறிச்சேவல் காட்டான் கையில..! பிறகென்ன பின்வளவில இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ கிடங்க வெட்டுறதுதான்.. (தனிமரம் இப்ப தெரியுதா பூவரசம் பூவ கோயிலுக்கு ஏன் எடுப்பதில்லைன்னு..!?) மேல்கொப்பில தூக்குகயிறு ரெடியாக்கினா.. ஆச்சி வருவா கோழியின் கால்களை ஒரு கையாலும் செட்டைகளை மறு கையாலும் பிடித்தபடியே காட்டான் ரெடியாவான் கோழியுரிக்க..! கோழியோட வந்த ஆச்சி பக்கத்தில உள்ள பனைமரத்த பார்பா...!!? இஞ்ச காட்டான் கட் பண்னுறான் கொலைக்காட்சிகளை சென்சார் அனுமதிக்காதாம் ..?
பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிதுது ஆமாய்யா கோழி இறைச்சியெண்டா புளியங்கொட்ட சப்புற மாதிரி இருக்கோனும்...!
இப்பிடியே போனா காட்டானின் நாக்கு செத்துடும்ன்னு காட்டானுக்கு பயம் வந்திட்டு அப்பதான் காட்டானுக்கு பழம் பெரும் பெருச்சாலி ஒன்று அறிமுகமாச்சு இஞ்சேயும் ஊர்கோழி இருக்கடா என்னட்ட மாட்டு வண்டியில்லேடா நீ வண்டிய கொண்டு வந்தா நான் அந்த இடத்த காட்டுறேண்டான்னு பேரம் பேசியது ...!?
காட்டானுக்கு சொர்கமே திரும்பி வந்த மாதிரிபோச்சு...!! அண்டைக்கு காட்டான் தொடங்கினான் வேட்டய இன்று வரை நிக்கவில்லை .. காட்டானுக்கு அங்க போறதெண்டா ஒரு சுகம் வாருங்கோ எங்கட ஊர் வயல் வெளிகள் மாதிரியிருக்கு உத கடந்துதான் காட்டான் போவான்..!
இந்த மிசினில சுடுதண்ணி கொதிக்குது இஞ்ச கரண்டுல ஒரு சின்ன மிசினிருக்கு ...ஆச்சி பனையில செய்கிற வேலைய இந்த பட்டன்னு செய்யும் அதுக்கு பிறகு இந்த சுடுதண்ணிக்குள்ளார கொஞ்ச நேரம் விட்டுட்டு பக்கத்தில உள்ள மிசினில விட்டா செட்டைய எடுத்து தரும்
ஆனா காட்டான் சுடு தண்ணிக்க போட விடமாட்டான் ..!? வேட்டிய மடிச்சு கட்டிற்று வேலைய தொடங்கினான்னா பத்து நிமிசத்தில முடிச்சிடுவான் வேலைய என்ன மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ
ஊரில ஒரு சொல்வட இருக்கு அவள தொடுவானேன்.. கவலைப்படுவானேன்னு..? அதபோல உங்களுக்கு கோழி உரிப்ப காட்டுறன்னு .. கோழிய வாங்கிட்டான் இந்த காட்டான்..! இத வீட்டில கொண்டுபோனா மனிசி சொல்லும் நீயே கறி குழம்ப வையன்னு சரி மாப்பிளங்கா.. வந்தது வந்திட்டீங்க கறி எப்படி இருக்கென்று பாத்திட்டு போங்க..!!?
அடுத்தது எலுப்புகள போட்டு தண்ணீர் சேர்த்து குளம்பா வைப்பான்... இது இரவு சாப்பாட்டுக்கு அதாவது புட்டு அல்லது இடியப்பத்திற்கு நல்லது இத எப்படி சமைக்கிறதென்று கேட்கிறீங்களா ...!?மாப்பிளங்கா ஒரு ஆண் சமைக்க தெரியாதெண்டா எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?
122 comments:
கோழி பிடிக்கும் கதை அருமை.. ஊர் வாசனையை மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி
//பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிதுது //
ஆமாம் பாஸ்... என்ன இருந்தாலும் ஊர்க்கோழி ஊர்க்கோழிதான்
கோழியை கறியாக்குவதையும் அருமையா, நகைச்சுவையா சொல்லியிருக்குறீங்க பாஸ்
ரைட்டு, காட்டானா கொக்கா...]]கொக்கு அல்ல ஹி ஹி]]
எலேய் சூப்பர் மண் வாசனை ஞாபகம் அருமையா இருக்கு...!!!
எலேய் நான் ஊர்லதாம்லேய் இருக்கேன் எங்கட அம்மாச்சிகிட்டே கதைச்சி கோழி கறி சாப்பிட போறேன் இன்டைக்கி.....
நீங்க கலக்குங்க நண்பா
வணக்கம் காட்டான், இருங்க படிச்சிட்டு வாரேன்
பாஸ், கொஞ்சம் பிசி, நைட் வந்து கும்மியடிக்கிறேன், மன்னிக்கவும்,
மதுரன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
கோழி பிடிக்கும் கதை அருமை.. ஊர் வாசனையை மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி
நன்றி மதுரன் கறிய ருசித்தவுடன் கருத்தும் இட்டதற்கு நன்றி நன்றி..!!?
ஊர்க்கோழி நல்ல ருசிதான்.. உங்கள மாதிரி சின்ன பசங்க அத சொல்லேக்க கவனமாதான் மறு கருத்து இட வேண்டியிருக்கு இதுல ஒன்றும் உள்குத்து ஒன்றும் இல்லைத்தானே மாப்பிள..!?
MANO நாஞ்சில் மனோ has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ரைட்டு, காட்டானா கொக்கா...]]கொக்கு அல்ல ஹி ஹி]]
எலேய் சூப்பர் மண் வாசனை ஞாபகம் அருமையா இருக்கு...!!!
எலேய் நான் ஊர்லதாம்லேய் இருக்கேன் எங்கட அம்மாச்சிகிட்டே கதைச்சி கோழி கறி சாப்பிட போறேன் இன்டைக்கி.....
நன்றி மாப்பிள நன்றி..! உங்கட வருகைக்கும் கருத்துக்கும்...
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
பாஸ், கொஞ்சம் பிசி, நைட் வந்து கும்மியடிக்கிறேன், மன்னிக்கவும்,
மாப்பிள நீ ஆறுதலா வா நீ என்ன உன்ர வேலையை மட்டுமா பார்க்கிறாய் காட்டானைபோன்றோரின் ஊர்சோலியையும்தானே பார்க்கிராய்..!?
"என் ராஜபாட்டை"- ராஜா has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
நீங்க கலக்குங்க நண்பா
இன்று எனது வலையில் ...
வருகைக்கு நன்றி மாப்பிள கட்டாயம் வருகிறேன் உங்கட வீட்டு வாசலுக்கும் கும்மியடிக்க..!
/////பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிது////
என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர்ச் சாவல் போல வராது மாப்பு.....
மாப்ள கோழி பிரியாணி சமைக்க தெரியும்யா...உம்ம போல பகிர சரியா தெரியல!...அழகா சொல்லி இருக்கீங்க நன்றி!
கோழிக்கறி நல்லாத்தான் இருக்க என்ன இருந்தாலும் ஊர்க்கோழியின் சுவை பண்ணைக்கோழியில் இல்லைத்தான்!
இப்ப எல்லாம் பறவைக்காச்சல் என்று பாதிப்பயம் ஊட்டுறாங்க!
♔ம.தி.சுதா♔ has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
/////பிரான்ஸ் வந்து சப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்குகாக வளர்கிறாங்களோ என்று என்னை சதேகபடவைக்கிது////
என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர்ச் சாவல் போல வராது மாப்பு.....
வாங்க மாப்பிள நீங்க சொலுறது உண்மைதான் மாப்பிள அங்க குஞ்சுகள அவிட்டு விட்டா ஆறு மாதத்திற்கு தேடமாட்டம்...! அதுவும் தானா இரைகளை பொறுக்கி திண்டு மம்மி நான் வளர்ந்திட்டேன் கணக்கா..!? காட்டான் கண்முன்னால ஓடி திரிஞ்சா அவனுக்கு வாயூராதோ மாப்பிள..
அட உன்ர பதிவு வட மாதிரி வந்திருந்தா சேவல் என்ற சொல்ல மாத்தியிருப்பன்..? சேவல் எனக்கு வாங்கையான்னு மரியாதையாகூப்பிட்டு தூர வைக்கிறமாதிரியிருக்கு ...!? சாவல் வாடா மச்சான்னு கூப்பிடுற மாதிரியிருக்கு இதுக்குதான் ஆச்சி நாலெழுத்து படிடா காட்டான்னு தலையில் அடித்தா கேட்டானா இந்த காட்டான்..?
சில சகோரதர மொழி நண்பர்கள் இன்னும் நம் உணர்வைப் புரிந்தவர்கள் அதனால்தான் நான் அவர்களுடன் நட்பாக இருக்கின்றேன் தனிமரத்தை இப்போது கல்லால் அடிப்பவர்கள் அதிகமாகுது உடனே நிரூபனைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கப்போறன்!
நம்மூரில் பூவரசுக்கு கீழ் வைரவர் இருப்பார் அவர்கிட்ட யாரும் கிடங்கு கிட்டமாட்டினம் இப்ப வெள்ளரசுகள் குழியே கிண்டுது நானும் வெளிநடப்பு செய்யப்போரேன் என்னை காட்டான் வம்பில் மாட்டிவிடுவதால்.
விக்கியுலகம் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
மாப்ள கோழி பிரியாணி சமைக்க தெரியும்யா...உம்ம போல பகிர சரியா தெரியல!...அழகா சொல்லி இருக்கீங்க நன்றி!
வாங்க மாப்பிள நீதான்யா நவீன யுகத்திற்கு சரியான ஆம்பிள ...! மனிசிக்கு வக்கனையா சமைச்சு கொடுக்க தெரியாதவங்களின் எதிர் காலம் குடும்ப நல நீதி மன்றத்தின் படிகளில் தொலையப்போகிறது..!
இப்பவே சொல்லிப்புட்டன் வருங்கால மாப்பிளங்களே உசாராவுங்க..! கிளாஸ் கிளாஸ்ன்னுறாங்களே..!?(காட்டானுக்கும் மற்ற கிளாஸ் தெரியும்..!?) அப்புடி ஒரு சமையல் கிளாஸ் எடுக்க காட்டான் தயார் அத்துடன் தற்பாதுகாப்புக்கு பாத்திரங்களை பயன் படுத்துவது எப்படின்னும் சொல்லித்தர இந்த காட்டான் தயார்..!?
நோகப்போகும் இதயங்களே வாருங்கள்..!? நொந்து போன இதயத்திடம் பாடம் பயில..!?
ஆஹா, ஹும்... இன்னைக்கு அறுசுவை பதிவோ
கலக்குங்க பாஸ்
//அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!//
ஹி ஹி ,
இப்போத்தான் தெரியுது நீங்க ஏன் பாட்டி மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க என்று.
//மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ//
காட்டான் வெகுவிரைவில் பிரான்ஸ் மாமா வீட்டில் இருந்துகொண்டு
வாழ்க்கை வரலாறு எழுத போறாரு எண்டு நினைக்குறேன்.
பின்னே இந்த ரேஞ்சுக்கு போனா மிருகவதை சட்டத்தில் கீழ் புடிச்சு உள்ளே போடமாட்டாங்க ..?
பாஸ் நான் இறைச்சி வகை ஒன்றும் சாப்புடுறது இல்லை,
இயல்பாகவே நமக்கு இரக்க சுபாவம் அதிகம், இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
//எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?//
ஹி ஹி ,
நாங்க எல்லாம் ரெம்ப உசாரு இல்ல,
நாங்க எல்லாம் சமையல் பழகீட்டுத்தான் காதலிக்கவே தொடங்கினோம்
தனிமரத்திற்கும் துஷிக்கும் காட்டான் கருத்தெண்ட பேர்ல மாபாரதம் எழுதி போடுறான் வெயிட்பன்னுங்கோ வேலயில நிக்கிறான் காட்டான்..!?
கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
//எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க ஓடிப்போய் சமையல பற்றி அப்பாவிடம் கேட்டுக்கொண்டு வாங்க....!!!?//
ஹி ஹி ,
நாங்க எல்லாம் ரெம்ப உசாரு இல்ல,
நாங்க எல்லாம் சமையல் பழகீட்டுத்தான் காதலிக்கவே தொடங்கினோம்
இப்பிடிதான் இருகோனும் மாப்பிள இததான் வெள்ளக்காரன் சொல்லுவான் குட்டுபோய்..!? என்று பாத்தியா உன்ன எனக்கு பிடிக்கிறதுக்கு இந்த தகுதியும் ஒரு கூடுதல் காரணம்
பாஸ் நான் இறைச்சி வகை ஒன்றும் சாப்புடுறது இல்லை,
இயல்பாகவே நமக்கு இரக்க சுபாவம் அதிகம், இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
Posted by "கற்றது தமிழ்" துஷ்யந்தன் to காட்டான் at 15 July 2011 01
அடபாவி நான் என்னடா உனக்கு துரோகம் செய்தனான்..? இப்பதான் பதிவுலகிற்கே வந்தனான்.. உன்னால லாச்சப்பல் வரும்போது செம்ப கையில கொண்டு போறன்..? இப்ப வேற பயமா இருக்கு எங்க இறைச்சி சாப்பிடாம பண்னிவிடுவாயோன்னு வெள்ளிக்கிழமை வீட்ட வருகிறதுக்கே பயப்படுறன் வீட்டில சைவம்ன்னு..!?
இதில வேற காட்டாண்ட அடுத்த பதிவுல வேற கைய வச்சிட்ட ஆமாயா காட்டான் அடுத்த பதிவில ஆடு எப்படி உரிக்கிறதெண்டு விளக்குவதற்காக ஒரு ஆட்டை பிடித்து வைத்திருக்கிறான் இப்ப அது மொட்ட மாடியில நிக்கிது என்ர பாவம் உன்ன சும்மா விடாது மாப்பிள..!
இதில வேற பயபுள்ள இரக்க சுபாவமாம் மாப்பு உன்ர கேற்றர் பிரான்சுக்கு சரிவராது மாப்பு..!!?
//மாபிளங்கா காட்டான் எப்பிடி கோழிய உரிச்சான்னு பாக்கபோறீங்களா உந்த வேலை நம்மட்ட வேகாது பாரீஸ் பொலிசில கம்பி எண்ண காட்டான் என்ன ......!?ஆ//
காட்டான் வெகுவிரைவில் பிரான்ஸ் மாமா வீட்டில் இருந்துகொண்டு
வாழ்க்கை வரலாறு எழுத போறாரு எண்டு நினைக்குறேன்.
பின்னே இந்த ரேஞ்சுக்கு போனா மிருகவதை சட்டத்தில் கீழ் புடிச்சு உள்ளே போடமாட்டாங்க ..?
Posted by "கற்றது தமிழ்" துஷ்யந்தன் to காட்டான் at 15 July 2011 01:43
மாப்பிள நீ ஒரு முடிவோடதான் இருக்கிறாய்போல் காட்டான பதிவுலகில இருந்தே விரட்டுரதெண்டு இப்பிடியெல்லாம் பயமுறுத்தினா காட்டான் ஓடிடுவான்னு நினைக்கிற..! ஆச்சி சொல்லுவா நினைப்புதான் பிழைப்ப கெடுக்கிரதெண்டு இது ஆட்டைய போடுற காட்டான் கவணம் மாப்பிள லாச்சபல்ல எந்தகடையில சாமான் சட்டு வாங்குற எண்டு பாத்து வப்பேண்டா ஆப்பு...!?
//அதுவும் என்ற மனிசிய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கித்தானே ஆச்சி கூட்டியந்தவா இந்த காட்டானுக்காக..!! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!//
ஹி ஹி ,
இப்போத்தான் தெரியுது நீங்க ஏன் பாட்டி மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க என்று.
Posted by "கற்றது தமிழ்" துஷ்யந்தன் to காட்டான் at 15 July 2011 01:39
மாப்பிள மனச தொடுற மாதிரி இப்பதான் ஒண்டு சொல்லியிருக்க ஆகையால் ஆட்ட அவிட்டு விடப்போறன்...!? வேற பதிவ தேடுவம் மாப்பிளைகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...!?
Nesan has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
நம்மூரில் பூவரசுக்கு கீழ் வைரவர் இருப்பார் அவர்கிட்ட யாரும் கிடங்கு கிட்டமாட்டினம் இப்ப வெள்ளரசுகள் குழியே கிண்டுது நானும் வெளிநடப்பு செய்யப்போரேன் என்னை காட்டான் வம்பில் மாட்டிவிடுவதால்.
Posted by Nesan to காட்டான் at 15 July 2011 00:28
யோவ் மாப்பிள நீ எந்த ஊரில இருந்து வந்தனிங்கன்னு தெரியாது ஆனா எங்க ஊரில் பூவரச நெஞ்சான் கட்டைக்குதான் வளர்பார்கள் இல்லாட்டி வேலியில விறகுக்கு விடுவார்கள் வைரவரு இலுப்ப மரத்துக்கு கீழ இல்லாட்டி நாவல் மரத்துக்கு கீழதான் இருப்பார் அதுவும் இல்லையண்டா பாரீசில நாங்க இருக்கிறதவிட கொஞ்சம் பெரிய ரூமில வைப்பம் இப்பிடியே நீ கதைத்து கொண்டிருந்தா நான் வைக்கவேண்டியிருக்கும் நெஞ்சான் கட்ட உனக்குதான் ...! பின்ன என்ன நானும் மினக்கெட்டு நெஞ்சான் கட்டைய பற்றி எழுதி போட்டா.. கோகில் சதி பண்னீட்டு கொப்பர் சதி பண்னீட்டுன்னு கூவிற ..!?
காட்டாண்ட மனசு வலிக்கிறது எவ்வளவு கஸ்டப்பட்டு எழுத்து கூட்டி எழுதின கருத்து காட்டான புரிங்சுகோ மாப்புள..!?
Nesan has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
சில சகோரதர மொழி நண்பர்கள் இன்னும் நம் உணர்வைப் புரிந்தவர்கள் அதனால்தான் நான் அவர்களுடன் நட்பாக இருக்கின்றேன் தனிமரத்தை இப்போது கல்லால் அடிப்பவர்கள் அதிகமாகுது உடனே நிரூபனைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கப்போறன்!
மாப்பிள உன்னையும் வீட்டோட மாப்பிளையாக்கினா தெரியும் சகோதர மொழி நன்பர்களை பற்றி..!? இதுக்கு மேல காட்டான் கதைக்கமாட்டான் அரசியல் இப்பதான் என்ர ஊருக்கு போக விசா தேவையில்லையாம் காட்டானும் மூட்டை முடிச்சுகள எடுக்குறான் ...!!
ஆச்சி பாத்துக்கொண்டுதான் இருப்பா காட்டன்.
இண்டைக்கு வெள்ளிகிழமை.கோழிக்குழம்பும் கறியுமோ வக்கிறியள் !
இங்க சூப்பன் கோழி எண்டு ஒரு இனம் இருக்கு.அது ஊர்க்கோழிபோல இறுக்கமா இருக்கும்.அதோட எங்கட கடைகளில ஊர்க்கோழி எண்டு சொல்லிக் கொண்டு வருவினம்.கிராமப் பக்கங்களில போய்க் கொண்டுவாறதாம் !
இப்ப எல்லாம் பறவைக்காச்சல் என்று பாதிப்பயம் ஊட்டுறாங்க!
கோழிக்கறி நல்லாத்தான் இருக்க என்ன இருந்தாலும் ஊர்க்கோழியின் சுவை பண்ணைக்கோழியில் இல்லைத்தான்!
Posted by Nesan to காட்டான் at 15 July 2011 00:20
மாப்பிள ஏன் இப்படி பயந்து சாகுற அந்த பறவைக்காச்சல் நோய் தமிழனுக்கு வராது 60டிக்கிரிக்கு மேல சூடாக்கினா எல்லா புழு பூச்சியெல்லாம் செத்துடுமாம்..!? நாங்கதானே காச்சு காச்சென்று காச்சி சக்கையதானே சாப்பிடுறம்...!?
நீ என்னோட வா மாப்பு ஊர்கோழி உயிரோட வாங்கித்தாரன் ..!? வீட்ட கொண்டு வந்து பா பா என்று கூப்பிடாத..!? இஞ்ச மணியடிச்சுதான் சாப்பாடு கொடுக்கிறவ...!?
ஆச்சி பாத்துக்கொண்டுதான் இருப்பா காட்டன்.
இண்டைக்கு வெள்ளிகிழமை.கோழிக்குழம்பும் கறியுமோ வக்கிறியள் !
இங்க சூப்பன் கோழி எண்டு ஒரு இனம் இருக்கு.அது ஊர்க்கோழிபோல இறுக்கமா இருக்கும்.அதோட எங்கட கடைகளில ஊர்க்கோழி எண்டு சொல்லிக் கொண்டு வருவினம்.கிராமப் பக்கங்களில போய்க் கொண்டுவாறதாம் !
Posted by ஹேமா to காட்டான் at 15 July 2011 10:17
நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் ஆச்சி பாத்துக்கொண்டு இருப்பாண்டுதான் வியாழக்கிழமை கோழியடிச்சனான்..!?
இந்த துஷியால ஆட்டையும் அவிட்டு விட்டிட்டு செம்போட திரியுரன் சகோதரி அவனுக்கு ஒரு கண்டன அறிக்கை விடுங்கோ... 20 வருசம் கட்டிக்காத்த காட்டான இரண்டு மாசத்தில அழிச்சிடுவாங்கோன்னு பயமாயிருக்கு...!?
துஷி...காட்டான் பாவம் விடுங்கோ.அவரே கொல்றார்.அவரே சாப்பிடுறார்.அந்த மூஞ்சியை மட்டும் மாத்திவிடுங்கோ.எனக்கு இந்தப்பக்கம் வரப் பயமாக்கிடக்கு.நிரூ வீட்டுப் பொட்டுக்குள்ளாலதான் பயந்து பயந்து இப்பவும் வந்தனான்.எதுக்கும் நிரூ வீரனெல்லோ !
தூமசீலை என்றாள் கோவணம்ன்னு மட்டும் எனக்கு தெரியும்..!!? //
அவ்...தத்துவங்களையெல்லாம் ஆச்சி சொன்னதா அவிழ்த்து விடுறார் காட்டான்,
! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?//
ஏன் ஆச்சி ஏமாத்திக் கட்டி வைச்சிட்டாவோ?
வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?//
மனுசி வீட்டிலை பயங்கரமா கொமாண்டோ தாக்குதல் நடத்துறா என்று நினைக்கிறேன், ஊருக்கு வந்தால் எனக்கொரு போன் பண்ணுங்கோ, நான் உங்களை ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்தியரிடம் புக்கை கட்டக் கூட்டிக் கொண்டு போறேன்;-)))
ஹேமா has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":

நிரூ மாப்பிள முதல்ல பொட்ட அடை ஹேமாவுக்கு என்ரவீட்டுக்க வாரதுக்கு என்ன பயம் ஒரு சகோதரிய சாப்பிட்டுத்தான் வாழவேண்டும்ன்னு காட்டானுக்கு தலையெழுத்தில்ல..!? சட்டியில உள்ளது தானே அகப்பையில வரும் சகோதரி.. என்ர மூஞ்சிய அறுத்து செய்ய நிரூபனிட்ட கேட்டிருக்கன்..புது மூஞ்சி எனக்கும் பிடிக்கோனுமே ..!?
எனக்காக துஷிகிட்ட வேண்டியதற்கு நன்றி சகோதரி..! ஆனா ஒண்டு ஆச்சி சொல்லியிருக்கா டேய் காட்டான் கொண்டா பாவம் திண்டா போச்சென்று.. நான் கொண்டும் போட்டன் திண்டும் போட்டன் பாவமும் போச்சு..!!?
தனிமரம் அடிக்கடி சொல்லுவாரே சகோதர மொழி சகோதர மொழியெண்டு அத பேசுறவங்கதான் அப்புச்சியிண்ட கைய முறிச்சு நீ வீட்டோட மாப்பிளையா போன்னு அனுப்பி வைச்சாங்களாம்//
அட்ரா....அட்ரா.....அட்ரா....சைட் கப்பிலை நேசனுக்க்கு வேறு ஆப்பா.
ஹி...ஹி.....
இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!? //
சே...மானங்கெட்ட வேலை காட்டான், இது கூடத் தெரியாமல் இருக்கிறீங்க, பொம்பிளையளிட்னை பாதுகாப்பு வைப்பகம் எங்க இருக்குத் தெரியுமோ?
’நெஞ்சு சட்டைக்குள்ளே என்றுசொல்லுவீனம்;-))
படத்தில் உள்ள கோழிக்கறி தொடர்பான இரண்டு போட்டோக்கள் தான் நாவில் எச்சில் ஊற வைக்குது,
பதிவினை நகைச்சுவையோடு, ஊர் நினைவுகளும் சேர்த்து கலக்கலாக எழுதியிருக்கிறீங்க.
Nesan said...
சில சகோரதர மொழி நண்பர்கள் இன்னும் நம் உணர்வைப் புரிந்தவர்கள் அதனால்தான் நான் அவர்களுடன் நட்பாக இருக்கின்றேன் தனிமரத்தை இப்போது கல்லால் அடிப்பவர்கள் அதிகமாகுது உடனே நிரூபனைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கப்போறன்!//
எடுங்கடா அந்த அருவாளை;-)))
ஹேமா said...
துஷி...காட்டான் பாவம் விடுங்கோ.அவரே கொல்றார்.அவரே சாப்பிடுறார்.அந்த மூஞ்சியை மட்டும் மாத்திவிடுங்கோ.எனக்கு இந்தப்பக்கம் வரப் பயமாக்கிடக்கு.நிரூ வீட்டுப் பொட்டுக்குள்ளாலதான் பயந்து பயந்து இப்பவும் வந்தனான்.எதுக்கும் நிரூ வீரனெல்லோ !//
சைட் கப்பிலை என்னையும் கடிக்காட்டி, உங்கள் எல்லோருக்கும் சாப்பிட்டது செரிக்காது போல இருக்கே,
ஹி....ஹி....
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ஹேமா said...
துஷி...காட்டான் பாவம் விடுங்கோ.அவரே கொல்றார்.அவரே சாப்பிடுறார்.அந்த மூஞ்சியை மட்டும் மாத்திவிடுங்கோ.எனக்கு இந்தப்பக்கம் வரப் பயமாக்கிடக்கு.நிரூ வீட்டுப் பொட்டுக்குள்ளாலதான் பயந்து பயந்து இப்பவும் வந்தனான்.எதுக்கும் நிரூ வீரனெல்லோ !//
சைட் கப்பிலை என்னையும் கடிக்காட்டி, உங்கள் எல்லோருக்கும் சாப்பிட்டது செரிக்காது போல இருக்கே,
ஹி....ஹி....
வாங்க மாப்பிள ஊர்சோலி முடிஞ்சிதோ..!? எல்லோரும் கடிக்கத்தானே காட்டான் கோழிக்கறி வைச்சிருக்கான் ..? ஏனப்பா ஆக்கள ஆக்கள் கடிக்கிறீங்க ஆக்கள கடிக்கிறது காட்டான் வேல மாப்பிள...?
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
Nesan said...
சில சகோரதர மொழி நண்பர்கள் இன்னும் நம் உணர்வைப் புரிந்தவர்கள் அதனால்தான் நான் அவர்களுடன் நட்பாக இருக்கின்றேன் தனிமரத்தை இப்போது கல்லால் அடிப்பவர்கள் அதிகமாகுது உடனே நிரூபனைக்கூட்டி பஞ்சாயத்து வைக்கப்போறன்!//
எடுங்கடா அந்த அருவாளை;-)))
மாப்பிள முதல்ல அந்த அருவாவ கீழ போடு..!? இதுக்கு முதல்ல மறுமொழி சொல்லு ..? அதென்ன சகோதர மொழி.. சகோதர மொழின்னு கூவுது இந்த கோழி..!? இப்பதானே பார்த்த காட்டான் கோழிய எப்பூடி உரிச்சு வைச்சிருக்கான்னு...?
இவர மாதிரித்தான் அங்க ஒரு தாத்தா கூவின்னுகிடந்தார்.. சகோதர யுத்தம்ன்னு,சகோதர யுத்தம்ன்னு யுத்தம்ன்னு வந்த பிறகு.. வேண்டாம் மாப்பு கோழிதானே உரிச்சனான் தனிமரத்த வெட்டேல்லதானேன்னு சந்தோசப்படு..!?
வா மாப்பிள உனக்கு மூக்கு மேல கோவம் வருது..!
கோழிகறிய மூக்கு முட்ட சாப்பிடு கோவம் கானாம போயிடும்..?
என்ர செல்லம் எங்க நிக்கிற மாப்பிளக்கு ஒரு தலை வாலை இல கொண்டுவா.. போய் கைய கழுவிபோட்டு வா..! அப்புறம் மாப்பு சாப்பாட்டுக்கு முன்ன பெரிசு ஏதாவது வேனும்ன்னா சொல்லு அது பாவிக்காதவங்கள..! கெடுக்கமாட்டான் இந்த காட்டுபய..!(யோவ் தனிமரம் வர்ரேண்டி கைய கழுவ நிரூபன் போகேக்க அவற்ற வால சுட்டுட்டான் காட்டான் அத வைச்சு உனக்கு நான் ஊதப்போறேண்டா சங்கு...?)
படத்தில் உள்ள கோழிக்கறி தொடர்பான இரண்டு போட்டோக்கள் தான் நாவில் எச்சில் ஊற வைக்குது,
பதிவினை நகைச்சுவையோடு, ஊர் நினைவுகளும் சேர்த்து கலக்கலாக எழுதியிருக்கிறீங்க.
Posted by நிரூபன் to காட்டான் at 15 July 2011 15:29
அதுதானே இலையே போட்டுட்டன் வந்து சாப்பிட்டு போ மாப்பு
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
இண்டைக்கு வரை அந்த காச எங்க வைத்திருந்தாலெண்டு நான் கண்டு பிடிக்கவில்ல காட்டாண்ட தொழில்ல நேர்ந்த பெரிய அவமானம் அதுதான்....!!? //
சே...மானங்கெட்ட வேலை காட்டான், இது கூடத் தெரியாமல் இருக்கிறீங்க, பொம்பிளையளிட்னை பாதுகாப்பு வைப்பகம் எங்க இருக்குத் தெரியுமோ?
’நெஞ்சு சட்டைக்குள்ளே என்றுசொல்லுவீனம்;-))
மாப்பிள உந்த ஆராச்சியெல்லாம் காட்டான் தொடங்க முன்னமே..!? காட்டான்.. அதவிடு அதென்ன சொல்லுவினம் நீ பார்கவேயில்லையோ மாப்பு..!?
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?//
மனுசி வீட்டிலை பயங்கரமா கொமாண்டோ தாக்குதல் நடத்துறா என்று நினைக்கிறேன், ஊருக்கு வந்தால் எனக்கொரு போன் பண்ணுங்கோ, நான் உங்களை ஒட்டகப்புலம் முறிவு நெறிவு வைத்தியரிடம் புக்கை கட்டக் கூட்டிக் கொண்டு போறேன்;-)))
நன்றி மாப்பிள இதுக்குதான் உனக்கு தலை வாலையிலையில பந்தி வைச்சவன் காட்டான்..!?
நிரூபன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
தூமசீலை என்றாள் கோவணம்ன்னு மட்டும் எனக்கு தெரியும்..!!? //
அவ்...தத்துவங்களையெல்லாம் ஆச்சி சொன்னதா அவிழ்த்து விடுறார் காட்டான்,
இப்பதானே மாப்பு சமாதானமானோம் சாப்பிட்டு முடி முதல்ல..!?
ஹிஹி வந்திட்டம்லே...இனி வருவம்லே...
நல்லா பிடிக்கிராங்கையா கோழி ஹிஹி
யோவ் அந்த காட்டான் படம் கனவில கூட வருதியா...அவ்வவ்
மைந்தன் சிவா has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
யோவ் அந்த காட்டான் படம் கனவில கூட வருதியா...அவ்வவ்
ஹிஹி வந்திட்டம்லே...இனி வருவம்லே...
நல்லா பிடிக்கிராங்கையா கோழி ஹிஹி
வாய்யா வா படலையில குழய பாத்துட்டபோல ..வந்து சாப்பிட்டு போங்க..
இப்பிடி கடைசியில வந்ததால இறைச்சிய காட்டான் வைட்சுக்கு எடுத்து முடிச்சிட்டான்..!? இப்ப எலும்புக்கறிதான்யா இருக்கு அடுத்த முறை முதல் பந்திக்கே வாயா...
காட்டான் மூஞ்சிய பார்க கொஞ்சம் கஸ்ரம்தான்யா என்ன செய்கிறது சட்டியில இருந்தாதானே அகப்பையில வரும்..!?
நீ வராம போனா மாப்பிள உன்ர வீட்டு படலை பூரா குழையாதான்யா இருக்கும் கவனம் மாப்பு..!? காட்டான் பதிவுலகத்தில ஒரு புது மாப்பிள ..! புது மாப்பிள எப்பவும்... ஆர்வமாய்தான்யா இருப்பார்..!?
நிரூபன் said...
! அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?//
ஏன் ஆச்சி ஏமாத்திக் கட்டி வைச்சிட்டாவோ?
மாப்பிள யார ஏமாத்தி..!? காட்டாண்ட மூஞ்சிய பாத்துபுட்டுமா இந்த கேள்வி..
பிரான்ஸ் தேசிய தினத்தில கோழிக் குழம்பு வச்சிருக்கிறியள்!பலன்ரைனோ,ஜே!பி(Balentine,ou J&B)யோ????????????
பிரான்ஸ் வந்து சாப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்காக வளர்க்கிறாங்களோ என்று என்னை சந்தேகப்படவைக்கிது.////ஐரோப்பிய கோழிகளெல்லாம் உயிர் வாழ்வது வெறும் இருபத்தியொரு நாட்கள் மட்டுமே,தெரியாதா?திறந்த வெளியில் கோழி வளர்க்கும் கோழிப் பண்ணைக்கு தான் நீங்கள் போயிருக்கிறீர்கள்!விலை கொஞ்சம் அதிகமானாலும் சுவை அதிகம் தான்!
காட்டான் said...
நிரூபன் said...
அதனால ஆச்சிமேல இவளுக்கு ஒரு இனம்புரியாத ஒரு கடுப்பிருக்கிறது..!!?//
ஏன் ஆச்சி ஏமாத்திக் கட்டி வைச்சிட்டாவோ?
மாப்பிள யார ஏமாத்தி..!? காட்டாண்ட மூஞ்சிய பாத்துபுட்டுமா இந்த கேள்வி..////இந்த மூஞ்சியப் பாத்திட்டுத் தான் கேட்டிருக்கார் போல!!!!!!!!!!
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":

டேய் காட்டான் இஞ்ச பாரடா சொன்னா கேட்டியா பழைய அரவிந்த சாமி படத்த போடு போடன்னு இப்ப பார் எல்லாரும் வந்து கும்மியடிக்கிறாங்க.. உன்ர மூஞ்சிய பார்த்து..!
ஆச்சி வந்திருக்கிற மாப்பிள ஊரெல்லாம் மேஞ்சு கடைசியா என்னட்ட வந்திருக்கிறார் அவர எமாத்த முடியாது..
இதுக்குதாண்டா சொன்னனான் ப்ளாக்கிள இருக்கிற எல்லாற்ற படலையையும் தட்டி குழ வைச்சா உன்ர மூஞ்சிய கண்டு பிடிச்சிடுவாங்கன்னு கேட்டியா..? இப்ப பார் ஆச்சிக்கு கெட்ட பேர் வாங்கியந்திட்ட...!?
பிரான்ஸ் வந்து சாப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்காக வளர்க்கிறாங்களோ என்று என்னை சந்தேகப்படவைக்கிது.////ஐரோப்பிய கோழிகளெல்லாம் உயிர் வாழ்வது வெறும் இருபத்தியொரு நாட்கள் மட்டுமே,தெரியாதா?திறந்த வெளியில் கோழி வளர்க்கும் கோழிப் பண்ணைக்கு தான் நீங்கள் போயிருக்கிறீர்கள்!விலை கொஞ்சம் அதிகமானாலும் சுவை அதிகம் தான்!
ஆமாயா பொந்துவாசில இருக்கு அங்க போய் காட்டான் பா ப பா ப என்னு கூப்பிட்டு பார்தான் கோழி வரவில்ல அப்புறம்தான் முதலாலி மணியடிச்சார் காட்டாண்ட காலடியில வந்து நிக்குது.. அதுதாங்க இத நான் கொல்லல அந்த மிசின்ல தலைய கொடுத்தது..!?
இதவிட காட்டானுக்கு பிடித்தது ஊரில் கோழிய விரட்டி பிடிப்பதுதான் அப்படி செய்யும்போது வேலியில் விழுவோம் கல் தடக்கி விழுவோம் இதெல்லாம் சேர்ந்து கோழிமேல் கோவம் வரும் அதனால் ஆச்சி பனையில் கோழிக்கு சங்கூதும்போது பார்தாலும்..!? மூக்கு முட்ட சாப்பிட்டோம்..!?
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
பிரான்ஸ் தேசிய தினத்தில கோழிக் குழம்பு வச்சிருக்கிறியள்!பலன்ரைனோ,ஜே!பி(Balentine,ou J&B)யோ????????????
டேய் காட்டான் அங்க என்னடா சத்தம்
ஆச்சி அது ஒண்டுமில்ல வந்த மாப்பிள கேட்கிறார் நான் சாப்பாட்டுக்கு முன்னம் குடிப்பேனே..! உடம்பு பலமா இருக்க மருந்து அத எந்த கடையில வாங்கினான்னு..!
சரிடா வந்தவருக்கும் அந்த மருந்த கொடு அவரும் உன்ன மாதிரி குஸ்தியா வரட்டும்..!?
மாப்பிள இஞ்ச வா உன்ர கால காட்டடா இந்த காட்டான் சரண்டர்..!(இத வெளியில சொலாத மாப்பிள காட்டாண்ட இமேச்ஸ் தூளாகிடும்)
ஐயா பரமசிவம் நான் உங்கள் அடிமையாகிட்டன் சீ ரசிகனாகிட்டன்
ஐயா ஐயா காட்டானே-தமிழ்
ஐயா, நானும் காட்டானே
மெய்யா பட்டிக் காட்டானே-அதன்
மேன்மையை எழுதி விட்டேனே
கோழியை பிடிப்பேன் கவிதையிலே-அதன்
குழம்பை அறியேன் வாழ்க்கையிலே
மேழியை பிடித்து உழுவேனே-உழவன்
மேன்மையை எடுத்து மொழிவேனே
ஈழத் தமிழை கற்றிடுவேன்-உம்
எழுத்தைப படித்து பெற்றிடுவேன்
தாழம் பூவின் மணம்போல-நீர்
தருவீர் இந்த தினம்போல
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said...
பிரான்ஸ் வந்து சாப்பிட்ட கோழியெல்லாம் பல்லில்லாதவங்களுக்காக வளர்க்கிறாங்களோ என்று என்னை சந்தேகப்படவைக்கிது.////ஐரோப்பிய கோழிகளெல்லாம் உயிர் வாழ்வது வெறும் இருபத்தியொரு நாட்கள் மட்டுமே,தெரியாதா?திறந்த வெளியில் கோழி வளர்க்கும் கோழிப் பண்ணைக்கு தான் நீங்கள் போயிருக்கிறீர்கள்!விலை கொஞ்சம் அதிகமானாலும் சுவை அதிகம் தான்!
ஆமாயா பொந்துவாசில இருக்கு அங்க போய் காட்டான் பா ப பா ப என்னு கூப்பிட்டு பார்தான் கோழி வரவில்ல அப்புறம்தான் முதலாலி மணியடிச்சார் காட்டாண்ட காலடியில வந்து நிக்குது.. அதுதாங்க இத நான் கொல்லல அந்த மிசின்ல தலைய கொடுத்தது..!? இதவிட காட்டானுக்கு பிடித்தது ஊரில் கோழிய விரட்டி பிடிப்பதுதான் அப்படி செய்யும்போது வேலியில் விழுவோம் கல் தடக்கி விழுவோம் இதெல்லாம் சேர்ந்து கோழிமேல் கோவம் வரும் அதனால் ஆச்சி பனையில் கோழிக்கு சங்கூதும்போது பார்தாலும்..!? மூக்கு முட்ட சாப்பிட்டோம்..!?////மூக்கு முட்ட சாப்பிட்டோம்"எண்டு எழுதிப்போட்டு கேள்விக்குறியும் ஆச்சரியக் குறியும் போட்டிருக்கு?எங்கட ஐயர்மார் சொல்லுவினம் தீர்த்தம்(தண்ணீரை அப்படி சொல்வார்கள்)சாப்பிட்டோம் என்று!அது போலவா?
சரிடா வந்தவருக்கும் அந்த மருந்த கொடு அவரும் உன்ன மாதிரி "குஸ்தி"யா வரட்டும்..!?////அதெப்படி ஆச்சிக்குத் தெரியும் நான் ஒல்லியெண்டு?உங்களுக்குத் தான் சொல்லுறன்,ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதயுங்கோ!என்ர வயதும்,நிறையும் ஒண்டு!(AGE&WEIGHT)
காட்டான் said.....டேய் காட்டான் இஞ்ச பாரடா சொன்னா கேட்டியா பழைய அரவிந்த சாமி படத்த போடு போடன்னு இப்ப பார் எல்லாரும் வந்து கும்மியடிக்கிறாங்க.. உன்ர மூஞ்சிய பார்த்து..!///பழைய அரவிந்தசாமி???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காட்டான் said.....இதுக்குதாண்டா சொன்னனான் ப்ளாக்கிள இருக்கிற எல்லாற்ற படலையையும் தட்டி குழ வைச்சா உன்ர மூஞ்சிய கண்டு பிடிச்சிடுவாங்கன்னு கேட்டியா..? இப்ப பார் ஆச்சிக்கு கெட்ட பேர் வாங்கியந்திட்ட...!?////):):):):):):):):):):):):):):):
காட்டான் said...காட்டான் ஒரு புது மாப்பிள ..! புது மாப்பிள எப்பவும்... ஆர்வமாய்தான்யா இருப்பார்..!?/////கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லாயிருக்கும்!எங்களுக்கும் குசாலா இருக்குமெல்லே?ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!!!!!
///வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?/////இனி உயிர்க்கோழி வாங்கி அடிக்கேக்கை,எலும்பை தனியா எடுத்து சூப்பு (ரசம்) வச்சுக் குடியுங்கோ! புது மாப்பிள எண்டேக்கை கொஞ்சம் முன் பின்னாத் தான் இருக்கும்!சூப்பு வச்சுக் குடிச்சியளெண்டா உடம்பு கொஞ்சம் தேறீடும்!தாங்கும் சக்தி கூடும்!!!
MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நான் ஊர்லதாம்லேய் இருக்கேன் எங்கட அம்மாச்சிகிட்டே கதைச்சி கோழி கறி சாப்பிட போறேன் இன்டைக்கி...../////அதுக்கு முன்னாடி நீங்க "குளிக்கணும்" சார்!(யார் கூடன்னாலும்)ஈழத்தில சொல்லுவாங்க "கூழானாலும் குளித்துக் குடி"ன்னு!அதனால,நீங்க மொதல்ல குளிக்கிறீங்க,அப்புறம் குடிக்கிறீங்க,அப்புறமா கோழி குழம்போட சாப்பிடுறீங்க சரியா?
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
MANO நாஞ்சில் மனோ said...
எலேய் நான் ஊர்லதாம்லேய் இருக்கேன் எங்கட அம்மாச்சிகிட்டே கதைச்சி கோழி கறி சாப்பிட போறேன் இன்டைக்கி...../////அதுக்கு முன்னாடி நீங்க "குளிக்கணும்" சார்!(யார் கூடன்னாலும்)ஈழத்தில சொல்லுவாங்க "கூழானாலும் குளித்துக் குடி"ன்னு!அதனால,நீங்க மொதல்ல குளிக்கிறீங்க,அப்புறம் குடிக்கிறீங்க,அப்புறமா கோழி குழம்போட சாப்பிடுறீங்க சரியா?
அடடா காட்டான் எல்லாற்ர வீட்டையும் போய் கும்மியடிச்சது இப்ப வேலை செய்யுது..மாப்பிள உனக்கும் குழ வைக்க வந்தனான் வீடு பூட்டியிருக்கு.. பிரான்சில கள்ளர்கள் கூடவெண்டுதானே பூட்டி வைச்சிருக்க காட்டான் இஞ்சயே குழ போடுறான் உனக்கு..!
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
///வர வர காட்டானின் உடம்பில் தாங்கும் சக்தி குறைந்ததுகொண்டு வருகிறது..!?/////இனி உயிர்க்கோழி வாங்கி அடிக்கேக்கை,எலும்பை தனியா எடுத்து சூப்பு (ரசம்) வச்சுக் குடியுங்கோ! புது மாப்பிள எண்டேக்கை கொஞ்சம் முன் பின்னாத் தான் இருக்கும்!சூப்பு வச்சுக் குடிச்சியளெண்டா உடம்பு கொஞ்சம் தேறீடும்!தாங்கும் சக்தி கூடும்!!!
டேய் மாப்பிள இந்தாடா பல்லி முட்ட சித்தபு வீட்டில புது படம் ஓடுதாம் போய் பார்.. புது மாப்பிளய கொஞ்சம் விடடா..! என்ர அனுபவத்த உனக்கு சொல்லாம வேற யாருக்கு சொல்லுவன்...!?
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
காட்டான் said.....இதுக்குதாண்டா சொன்னனான் ப்ளாக்கிள இருக்கிற எல்லாற்ற படலையையும் தட்டி குழ வைச்சா உன்ர மூஞ்சிய கண்டு பிடிச்சிடுவாங்கன்னு கேட்டியா..? இப்ப பார் ஆச்சிக்கு கெட்ட பேர் வாங்கியந்திட்ட...!?////):):):):):):):):):):):):):):):
வடுவா உன்ர கால்ல விழுந்தா பிறகும் நீ என்ன விடேல.. இனி காட்டாண்ட வீச்சருவாதான் பேசபோது..
டேய் புது மாப்பிளைய ஏதாவது செய்ய விடடா..?
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
காட்டான் said.....இதுக்குதாண்டா சொன்னனான் ப்ளாக்கிள இருக்கிற எல்லாற்ற படலையையும் தட்டி குழ வைச்சா உன்ர மூஞ்சிய கண்டு பிடிச்சிடுவாங்கன்னு கேட்டியா..? இப்ப பார் ஆச்சிக்கு கெட்ட பேர் வாங்கியந்திட்ட...!?////):):):):):):):):):):):):):):):
வடுவா உன்ர கால்ல விழுந்தா பிறகும் நீ என்ன விடேல.. இனி காட்டாண்ட வீச்சருவாதான் பேசபோது..
டேய் புது மாப்பிளைய ஏதாவது செய்ய விடடா..?
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
காட்டான் said.....இதுக்குதாண்டா சொன்னனான் ப்ளாக்கிள இருக்கிற எல்லாற்ற படலையையும் தட்டி குழ வைச்சா உன்ர மூஞ்சிய கண்டு பிடிச்சிடுவாங்கன்னு கேட்டியா..? இப்ப பார் ஆச்சிக்கு கெட்ட பேர் வாங்கியந்திட்ட...!?////):):):):):):):):):):):):):):):
வடுவா உன்ர கால்ல விழுந்தா பிறகும் நீ என்ன விடேல.. இனி காட்டாண்ட வீச்சருவாதான் பேசபோது..
டேய் புது மாப்பிளைய ஏதாவது செய்ய விடடா..?
காட்டான் said.....டேய் காட்டான் இஞ்ச பாரடா சொன்னா கேட்டியா பழைய அரவிந்த சாமி படத்த போடு போடன்னு இப்ப பார் எல்லாரும் வந்து கும்மியடிக்கிறாங்க.. உன்ர மூஞ்சிய பார்த்து..!///பழைய அரவிந்தசாமி???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Posted by Yoga.s.FR to காட்டான் at 17 July 2011 01:20
மாப்பிள ஆச்சிக்கு கூட தெரிஞ்ச ரகசியம் உனக்கு தெரியேல்ல..
இப்ப இருக்கிர அவரை விட காட்டான் கொள்ளை அழகடா மாப்பு..!
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
சரிடா வந்தவருக்கும் அந்த மருந்த கொடு அவரும் உன்ன மாதிரி "குஸ்தி"யா வரட்டும்..!?////அதெப்படி ஆச்சிக்குத் தெரியும் நான் ஒல்லியெண்டு?உங்களுக்குத் தான் சொல்லுறன்,ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதயுங்கோ!என்ர வயதும்,நிறையும் ஒண்டு!(AGE&WEIGHT)
ஆகா இவன் காட்டானுக்கு வைக்கிறாண்டா ஆப்பு ..
உன்ன முன்னமே தெரிஞ்சிருந்தா கருத்துக்களை போடுவதில் சாதனை செய்திருக்கலாம் எல்லா பதிவர்களின் வகுத்துல புளிய கரைச்சிருக்ளாம் இப்ப மட்டும் என்ன குறஞ்சு போச்சு அடுத்த பதிவுக்கு வா இப்ப என்னை ரூமுக்க போக விடடா..!
புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ஐயா ஐயா காட்டானே-தமிழ்
ஐயா, நானும் காட்டானே
மெய்யா பட்டிக் காட்டானே-அதன்
மேன்மையை எழுதி விட்டேனே
கோழியை பிடிப்பேன் கவிதையிலே-அதன்
குழம்பை அறியேன் வாழ்க்கையிலே
மேழியை பிடித்து உழுவேனே-உழவன்
மேன்மையை எடுத்து மொழிவேனே
ஈழத் தமிழை கற்றிடுவேன்-உம்
எழுத்தைப படித்து பெற்றிடுவேன்
தாழம் பூவின் மணம்போல-நீர்
தருவீர் இந்த தினம்போல
புலவர் சா இராமாநுசம்
Posted by புலவர் சா இராமாநுசம் to காட்டான் at 16 July 2011 23:58
நன்றி ஐய்யா நன்றி நீங்களும் ஒரு சைவ காட்டான்னு நினைக்கும் போதே..! ஏதோ என்ர அப்புச்சிய பார்ததுபோல் இருக்கையா.. காட்டான் உங்க வீட்ட குழ வைச்சு போட்டான்னு பார்த்தவுடனேயே என்ர வீட்ட வந்ததற்கு நன்றி ஐயா நன்றி..
கவி அழகன் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ஐயா பரமசிவம் நான் உங்கள் அடிமையாகிட்டன் சீ ரசிகனாகிட்டன்
நன்றி மாலை வருகிரேன் கும்மியடிக்க..!?
கோழி கறி நல்லா இருக்கு நண்பரே .முதல் முறையாக உங்கள் பதிவிற்கு வந்தேன் .
நல்ல விருந்து படைத்து விட்டீர்கள் .நன்றி நண்பரே .
இப்பிடி எல்லோரும் வருவாங்கன்னு தெரிஞ்சா ஆட்ட அவுக்காம வச்சிருந்திருக்களாம்..
வேண்டாம் வேண்டாம் என்ர மாப்பிள கோவிக்கிறான்..!
இப்ப என்னை ரூமுக்க போக விடடா..!/////):):):):):):):):):):)
மாப்பிள ஆச்சிக்கு கூட தெரிஞ்ச ரகசியம் உனக்கு தெரியேல்ல..
இப்ப இருக்கிர அவரை விட காட்டான் கொள்ளை அழகடா மாப்பு..!///ஒரிஜினல் வேணும்யா,ஒரிஜினல்!பிரான்சில எந்தக் கந்தோருக்குப் போனாலும் போட்டோக் கொப்பி செல்லாது!கூடவே ஒரிஜினலும் கேப்பாங்க,இல்ல?அதனால"ஒரிஜினல்" போடுங்க,நம்புறோம்!மத்தப்படி,வாய்ச்சவடால் எல்லாம் செல்லாது,மருமவனே!
லாச்சப்பல் வரும்போது செம்ப கையில கொண்டு போறன்..?////நான் வரியத்தில ஒருக்காத் தான் லாசப்பலுக்குப் போகேக்கை "செம்பு" கொண்டு போறனான்,மருத்து நீர் கோயில்ல வாங்க!நீங்கள் ஏன் டெய்லி செம்போட போறியள்?
வடுவா உன்ர கால்ல விழுந்தா பிறகும் நீ என்ன விடேல்ல.. இனி காட்டாண்ட வீச்சருவாதான் பேசப்போகுது..///சரி,சரி டென்சனாகாதீங்க,இதுக்கு வேற புறம்பா கேஸ் புக் பண்ணிப் போடுவாங்கள்!பிரெஞ்சுப் பொலீசைப் பற்றி தெரியும் தான?வானுக்க ஏத்தைய்க்க அன்பா,பாசமா சிரிச்சுப் பேசுவாங்கள்.வான் ஓட,ஓட கொமிசாறியாவுக்கை நுழைய முதல்,பிரிச்சு மேஞ்சிடுவாங்கள்!ரெண்டு காலுக்குமிடையில என்னமோ இருக்கிறமாதிரி இருக்கும்,,நடக்கேக்க!!!!!!!!!!!!
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
வடுவா உன்ர கால்ல விழுந்தா பிறகும் நீ என்ன விடேல்ல.. இனி காட்டாண்ட வீச்சருவாதான் பேசப்போகுது..///சரி,சரி டென்சனாகாதீங்க,இதுக்கு வேற புறம்பா கேஸ் புக் பண்ணிப் போடுவாங்கள்!பிரெஞ்சுப் பொலீசைப் பற்றி தெரியும் தான?வானுக்க ஏத்தைய்க்க அன்பா,பாசமா சிரிச்சுப் பேசுவாங்கள்.வான் ஓட,ஓட கொமிசாறியாவுக்கை நுழைய முதல்,பிரிச்சு மேஞ்சிடுவாங்கள்!ரெண்டு காலுக்குமிடையில என்னமோ இருக்கிறமாதிரி இருக்கும்,,நடக்கேக்க!!!!!!!!!!!!
மாப்பிள இப்படி ஒருக்கா எனக்கும் செம்பை நெளித்தவர்கள்தான் ஒரு புதுவருடத்தையே அவர்கள் வானுக்குள்ள கொண்டாட வைத்து boi b (அங்கால சொல்லமாட்டன் பொல்ல கொடுத்து அடி வாங்க மாட்டன்)இல் அதிகாலை என்னையும் நன்பர்களையும் இறக்கிவிட்டார்கள் கையில் அப்போது காசில்லை என்பதை இப்போதே சொல்கிறேன் இல்லாவிட்டா நீ அதற்கும் ஒரு ஈய தட்டி விடுவாய் இண்டைக்கு மாப்புக்கு லீவு போல
காட்டான் ஒரு பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டான் இந்த பதிவிக்கே இப்பிடி குத்துறாய் என்ர அடுத்த பதிவு உன்ர வாய்கு அவள்தான் என்ன அத எழுத விட்டா மாப்பிள
Yoga.s.FR has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
மாப்பிள ஆச்சிக்கு கூட தெரிஞ்ச ரகசியம் உனக்கு தெரியேல்ல..
இப்ப இருக்கிர அவரை விட காட்டான் கொள்ளை அழகடா மாப்பு..!///ஒரிஜினல் வேணும்யா,ஒரிஜினல்!பிரான்சில எந்தக் கந்தோருக்குப் போனாலும் போட்டோக் கொப்பி செல்லாது!கூடவே ஒரிஜினலும் கேப்பாங்க,இல்ல?அதனால"ஒரிஜினல்" போடுங்க,நம்புறோம்!மத்தப்படி,வாய்ச்சவடால் எல்லாம் செல்லாது,மருமவனே!
இப்பதான் என்ர கல்யாணவீட்ட போட்டோ எடுத்தவர் வந்து போட்டோ எடுத்துகொண்டு ஆத்துக்கு போறார் அதிகமா கறுப்படிச்சிடுத்தாம் அதுதான் கழுவி கொண்டு வர போட்டார் புது படத்த ஆச்சி ok பண்ணினால் நீ பார்பாய் வெகு விரைவில்..
கந்தோர விடு நான் பத்து வேலை செய்தனான் போட்டோகொப்பி கொடுத்துதான் இதுக்கு மேல சொன்னா செம்பு பெரிசா நெளிந்திடும்..! என்ன திடீர்ரென்று மருமோனேன்னு கூப்பிடுர உதெல்லாம் என்னட்ட சரிவராது நீ எனக்கு மாப்பிள தாண்டோய்..
Yoga.S.Fr has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
இப்ப என்னை ரூமுக்க போக விடடா..!/////):):):):):):):):):):)
இததாண்டா நேத்தில இருந்து சொல்கிறேன் கேக்கிறியா இப்படி நீயும் நானுமே கருத்து போட்டுகொண்டிருந்தா மற்ற பதிவர்கள் நினைப்பார்கள் காட்டான் காச கொடுத்து யாரையோ பிடிச்சு வைச்சிருக்கான்னு ஏற்கனவே பிள்ள பிடிக்க போய் கெட்ட பேர் வாங்கீட்டன் இதிலவேற உன்ற தொல்லை..!?
தங்கள் பதிவு மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக இருக்கு. உங்க புரொபைல் படம் பார்த்து பயந்துட்டேன். எனக்கு பள்ளிவாசலில் மந்திரிச்சு கயிறு கட்டணும் என்று என்னோட பாட்டிகூட சொல்லிட்டிருக்காங்க.
கடம்பவன குயில் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
தங்கள் பதிவு மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக இருக்கு. உங்க புரொபைல் படம் பார்த்து பயந்துட்டேன். எனக்கு பள்ளிவாசலில் மந்திரிச்சு கயிறு கட்டணும் என்று என்னோட பாட்டிகூட சொல்லிட்டிருக்காங்க.
பார்தீங்களா எங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை என்று எனக்கும் கூட ஆச்சிதான் எல்லாமே..
எல்லோருமே என்னுடைய போட்டோவ பார்த்து பயந்து மலையால மந்திரவாதிகளிடம் போவதால் இனி நான் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகைய கமிசனாக பெற முடிவு செய்துள்ளேன்.. பயந்துபோய் மந்திரவாதிகளிடம் சென்றவர்கள் அவர்களின் அவர்களின் முகவரிகளை தாருங்கள்..(இனி நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை காட்டான் தனது உன்மையான அழகான படத்தை பிடித்துள்ளான் மிக விரைவில் அதை நீங்கள் கான்பீர்கள் இப்போது மகிழ்ச்சிதானே கடம்பவன குயிலே..?)
இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "களவும் கற்று மற....??":
அரசியலில் இதெல்லாம் சகசமப்பு..!//
அருமையான பதிவு...
நன்றி அம்மா நன்றி எல்லாரையும் கடிச்சு அனுப்பும் காட்டான் உங்கட பேர பார்த்தவுடன் கொஞ்சம் பின்வாங்கிட்டான் பயத்தோட..!?
அது வேறு ஒன்றுமில்ல ஊரில என்ர வீட்டுப்பக்கம் இருக்கும் கோவில் ஒரு துர்க்கை அம்மன் ஆலையம் அதன் பெயர் இராஜராஜஸ்வரி அம்மன் ஆலையம் காட்டானைப்பற்றி தெரியும்தானே உச்சரிப்பில உலக சாதனை செய்வான் அதனால அப்புச்சி கூப்பிடுகிமாதிரியே கன்னியள் கோவில் என்றே அழைப்பேன்.. கோழிக்குழம்ப வைச்சிட்டு கோவில பற்றி கதைக்கிறானேன்னு என்ர பக்கம் வராம விட்டுறாதீங்க அடுத்த பதிவ ஆச்சியில்லாம ஒண்டிக்கொண்டியா வந்து போடுறேன் ஆதரவு தாருங்கோ நீங்க என்ர வீட்ட வந்து குழ வைச்சு போனதற்கு நன்றி நன்றி..
காட்டான் said...
Yoga.S.Fr has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
இப்ப என்னை ரூமுக்க போக விடடா..!/////):):):):):):):):):):)
இததாண்டா நேத்தில இருந்து சொல்கிறேன் கேக்கிறியா இப்படி நீயும் நானுமே கருத்து போட்டுகொண்டிருந்தா மற்ற பதிவர்கள் நினைப்பார்கள் காட்டான் காச கொடுத்து யாரையோ பிடிச்சு வைச்சிருக்கான்னு ஏற்கனவே பிள்ள பிடிக்க போய் கெட்ட பேர் வாங்கீட்டன் இதிலவேற உன்ற தொல்லை..!?////வுடு ஜூட்!!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி மாப்பிள அடுத்த பதிவு உனக்கு கும்மியடிக்க வசதியா இஞ்ச நடக்கிற கூத்ததான் எழுதப்போறன் உனக்கு இது கூடுதல் வசதி கட்டாயம் வந்து கும்மியடி மாப்பிள புதுசா படம் போட்டுட்டன் அதுக்கு நீ கருத்து சொல்லல இது தாண்டா ஒரியில்..
ஐயா காட்டான்........
எனக்கு எங்கட வீட்டில கோழி உரித்து தான் ஜாபகம் வந்தது..
வெளிநாட்டில இருக்குறது கோழி இல்லை...
என்பக்கமும் வந்து பாருங்கோவன் நேரம் இருந்தால்..
akulan has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ஐயா காட்டான்........
எனக்கு எங்கட வீட்டில கோழி உரித்து தான் ஜாபகம் வந்தது..
வெளிநாட்டில இருக்குறது கோழி இல்லை...
என்பக்கமும் வந்து பாருங்கோவன் நேரம் இருந்தால்..
நன்றி உங்கட வருகைக்கும் கருத்திற்கும் காட்டானின் படலையில் இழ வைத்துவிட்டீர்கள் காட்டான் ஒரளவு பண்பாடும் தெரிந்தவன்..!? கட்டாயம் வருகிறேன் உங்கள் வீட்டிக்கும்..குழ வைக்க..
எனக்கும் இந்த கோழி பிடிச்ச அனுபவம் உண்டு காட்டான் சார்.
கிராமத்து நினைவுகள் எப்போதும் சுகம்தான்.
கோழி மட்டும்தானா?!!!, ஆடு பின்னாடி ஓடிய அனுபவம் இல்லியோ....:)
உங்க யாழ் தமிழ் புரிய கொஞ்சமே கொஞ்சூண்டு கஷ்டமா இருந்தாலும், அதுல ஒரு ஈர்ப்பு இருக்கத்தான்யா செய்யுது.
100
காட்டான் said...
நன்றி மாப்பிள அடுத்த பதிவு உனக்கு கும்மியடிக்க வசதியா இஞ்ச நடக்கிற கூத்ததான் எழுதப்போறன் உனக்கு இது கூடுதல் வசதி கட்டாயம் வந்து கும்மியடி மாப்பிள புதுசா படம் போட்டுட்டன் அதுக்கு நீ கருத்து சொல்லல இது தாண்டா ஒரியில்..////அதை விட இது பயங்கரமாயிருக்குது!அந்தப் போட்டோவில வெறும் பல்லைத் தான் பாக்கேலாமக் கிடந்துது.இதில...............................................................?!
Jey has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
ஆட்ட அவிட்டு விட்டுட்டன் மாப்பிள இஞ்ச வள்ளலார் வாருசுங்க கூடிட்டாங்க..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காட்டான் உங்கட வீட்டாண்ட குழ போட்டவன் பார்தீர்களா அத நீங்க வைச்சிருக்கிர குறும்பாட்டு குடு மாப்பிள
சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
100
இப்பதான்யா தெரியுது நீங்க ஏன் இவ்வளவு நாள் கழித்து வாரீங்கன்னு 100வது கருத்த சீக்கிரம் என்னை அடைய வைத்த மாப்பிள yoga.s.frக்கு இந்த நேரத்தில நன்றிய உங்கள் மூலமா தெரிவிக்கிறேன்..
அதை விட இது பயங்கரமாயிருக்குது!அந்தப் போட்டோவில வெறும் பல்லைத் தான் பாக்கேலாமக் கிடந்துது.இதில...............................................................?!
Posted by Yoga.s.FR to காட்டான் at 19 July 2011 02:56
ஹி..ஹி...மாப்பு இப்ப வெய்யில்காலம்..! அதுதான் இப்பிடி வெளிகிட்டுட்டன்.. இதவிட கூட பார்கவேனுன்னா காட்டான் கடலுக்கு போறான் வா ..!? அங்க நீ என்னை பார்கமாட்டாய் என்று தெரிஞ்சும் கூப்பிடிறன்..!
நோ......................!!!!!!!!!!!!!!!!!கடல் எண்டாலே எனக்குப் பயம்!அதிலயும் நீங்கள் கூப்பிடைக்கை,ஐயோ,நினைக்கவே மயிர்?! கூச்செறியுது!
நோ......................!!!!!!!!!!!!!!!!!கடல் எண்டாலே எனக்குப் பயம்!அதிலயும் நீங்கள் கூப்பிடைக்கை,ஐயோ,நினைக்கவே மயிர்?! கூச்செறியுது!
யோவ் சொன்னா கேள்..
அங்க ஒண்டும் புடுங்க முடியாது வாயா.. வா..?
சூப்பர் மண்வாசனைங்க........... நாட்டுக்கோழி சூப்பர்.....!
பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
நன்றி ஐயா நன்றி உங்கட வருகைக்கும் கருத்துக்கும் ..
படம் மாத்தியாச்சு....அப்பாடி.கொஞ்சம் பரவால்ல.இந்தத் தாத்தா வடிவா இருக்கிறார் !
கோழி பிடிசிங்களே அருமையான தொகுப்பு.
ஹேமா has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
நன்றி சகோதரி படத்த மாற்றவேண்டும் என தொடங்கி வைத்ததே நீங்கள்தான் உங்களை தொடர்ந்து எல்லோருமே சொன்னதால் நிரூபன் என்னை இப்படி மாற்றினார் இதன் மூலம் நிரூபனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
நன்றி மாப்பிள நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நான் சைவம்.. என்ன கமெண்ட் போடறதுன்னு தெரில.. ஹி ஹி
சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "கோழி.. கொண்டக் கோழி..!":
இப்பிடி ஒரு வரியில எழுதீட்டு ஓடுறீங்கன்னுதான் காட்டான் சைவமா ஒரு பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறான்... நீங்க தப்ப முடியாது ஆமா..?
ஐயா ஐயா காட்டானே-தமிழ்
ஐயா, நானும் காட்டானே
மெய்யா பட்டிக் காட்டானே-அதன்
மேன்மையை எழுதி விட்டேனே
கோழியை பிடிப்பேன் கவிதையிலே-அதன்
குழம்பை அறியேன் வாழ்க்கையிலே
மேழியை பிடித்து உழுவேனே-உழவன்
மேன்மையை எடுத்து மொழிவேனே
ஈழத் தமிழை கற்றிடுவேன்-உம்
எழுத்தைப படித்து பெற்றிடுவேன்
தாழம் பூவின் மணம்போல-நீர்
தருவீர் இந்த தினம்போல
ஆமா இருக்காதா பின்ன .நம்ம காட்டானோட
கையெழுத்துத்தான் .கைதேர்ந்த தமிழனோட
மெய்யெழுத்து ..ம்ம்ம்ம்ம்ம் ......நன்றி காட்டானே .
வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்...
நானும் உந்தகாச ஆட்டைய போட தேடி களைத்துபோனதுதான் மிச்சம் //
ஹா ஹா.... இது வேறயா
!(இது சைட் டிஸ்சுக்கு மிகவும் ஏற்றது..!'?)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
மாப்பிளங்கா ஒரு ஆண் சமைக்க தெரியாதெண்டா எப்படியப்பு நீங்கள்லாம் இந்த காலத்தில கன்னாலம் கட்டி குடும்பம் நடத்த போறீங்க //
வெளுத்து வாங்குறீங்களே மாம்ஸ்... இனி சமையல் கத்துக்கிட்டுதான் மறுவேளை...
பிராய்லர் வந்ததிலேருந்து நாட்டுக்கோழி எங்கே மாம்ஸ்... :-(
வந்தது வந்திட்டீங்க கறி எப்படி இருக்கென்று பாத்திட்டு போங்க..!!?//
நல்ல ருசியா சமைச்சு போட்டுட்டீங்க... நன்றி மாம்ஸ்
Post a Comment