முகப்பு

Saturday, 5 November 2011

சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?

வணக்கமுங்க!
இப்ப கொஞ்ச நாளா நான் என்ர வீட்டுக்கு பின்னால இருக்கிற  'பொட்டால' தான் வீட்டுக்குள்ள போய்வாறன். ஏன்னா படலையில ஒருத்தன் மண்ணெண்னை டின்னோட நிண்டுகொண்டு என்னை வெருட்டுறான்; என்ர பொட்டைய தனக்கு கட்டிவைன்னு.  அட இவன் தீ குளிக்கப்போறேன்னு சொன்னானோ இல்ல 'என்ர மாமனோட' சேர்ந்து டீ குடிக்கப்போறேன்னு சொன்னானோன்னு ஒரு சந்தேகமுங்கோ!

அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..

ஆனா எனக்கு ஒரு விஷயம் இன்னும் விளங்கலேங்கோ; யாற்ற கண்ணுலேயும் படாம பொத்தி பொத்தி வளர்த்த என்ர பொட்டைய இவனுங்க என்னன்னு கண்டுபிடிக்கிறாங்கண்னு எனக்கு விளங்கல.. அதுவும் சரிதானே ஊர் உலகத்தில இல்லாத அழகி என்ர பொட்ட, அப்படிப்பட்டவள இவனுங்க கண்ணுபடாம நான் வளர்க்கிறதுக்கு படுற பாடு இருக்கே..! அப்பப்பா.. சொல்லி மாளாது..!!
                                                      (என்ர பொண்ணு அழகுக்கு இவ எம்மாத்திரமுங்க! )
நானும் என்னடா எல்லாரும் வேலாயுதம் படம்பார்க்க இப்படி அடிச்சுப்பிடிச்சு ஓடுறாங்களேன்னு பார்த்தன். அட! அவங்க அங்க ஹன்சிகான்னு ஒருத்திக்காகதான் இந்த ஓட்டம் ஓடுறாங்கன்னு பின்னதான் தெரிஞ்சுது. அவங்களுக்கே இப்படி ஓடுற என்ர மருமோன்கள், அவள விட நூறு மடங்கு வடிவான என்ர பொட்டைய கண்டுட்டுத்தான் மாமா மாமான்னு இப்ப என்பின்னாடி நிக்கிறாங்க...

எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ! பிரான்சில இருக்கிற என்ர மண்ணெண்ணை டின் மருமோனுக்கு கட்டி வைக்கலாம்தான்; அப்படி செய்தா என்ன இந்த வெருட்டு வெருட்டினவன் என்னை கண்டா பெட்டிப்பாம்பா இருக்கிறதுக்கு நான் என்ர பொட்டைய கொண்டு "ஆவன"செய்யலாம்.  ஆனா, காட்டான் நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்குங்கோ. ஒருத்தனுக்கு வாக்க கொடுத்திட்டு மற்றவங்கள நான் ஏமாத்த விரும்பல..!

அதுதான், நேற்று இதே யோசனையா இருந்ததில நித்திரை வரல்ல. அப்பத்தான் என்ர மணியண்ண டெலிபோன் எடுத்து "காட்டான் நீ உன்ர கிளிக்குஞ்ச பத்தியோ, உந்த மருமோன்கள பத்தியோ யோசிச்சு மண்டைய உடைக்காத. கொஞ்சம் "பூசிமெழுகி" நித்திரைய கொள்ளடா நாளைக்கு நான் வந்து கதைக்கிறேன்" எண்டார்.. ஹி ஹி ஹி அதுதான் நேற்று கொஞ்சம் கூடுதலாவே "பூசீ"ற்றன் போல! என்ர அப்புச்சி கனவில, சிவலயன கையில பிடிச்சுக்கொண்டு நிக்கிறார். "டேய் காட்டான்! இதுக்கேண்டா தலைய போட்டு உடைக்கிறாய்? எங்கட குடும்பத்துக்கும் உன்ர பொட்டைக்கும் தோதான மாப்பிளைய சிவலயன வைச்சு பிடியடா! இல்லாட்டி வெத்தில போடவைச்சு பிடியடா" எண்டுட்டு போட்டார்.. ஹி ஹி அதொன்னுமில்லைங்கோ யார் என்ர சிவலயன அடக்குறாங்களோ அவனுக்குதான் என்ர பொட்ட.. அடுத்து வெத்தில வைச்சு பிடிக்கிறது ஒண்டும் சிக்கல் இல்லிங்கோ! அந்த முறை என்ர அப்புச்சி அடிக்கடி செய்யுறதுதாங்கோ.
                                                                             (மாப்பிளைங்களா ரெடியா)
யாராவது அப்புச்சியிட்ட கடன் வாங்க வந்தால் என்ர அப்புச்சி முதல்ல அவனுக்கு வெத்தில குடுத்துட்டுதான் பேச்ச ஆரம்பிப்பார். வெத்திலய வாங்கினவன் முழு வெத்திலையையும் வாங்கி போட்டான்னா அப்புச்சி காசு கொடுக்கமாட்டார். ஏன்னா, அவனிட்ட கொடுத்த காசு திரும்பி வராதாம்..! கொஞ்சமா எடுத்து போடுறவனுக்குதான் கடன் கொடுப்பார்; அவனுக்குதான் காசின் அருமை தெரியுமாம்.. அதைப்போல யாராவது உழவுக்கு சிவலயன கேட்டு வந்தா முதல்ல 'அடியே சின்னபொட்ட(ஹி ஹி ஆச்சி பேரு) ராசையனுக்கு வெத்தில பெட்டிய கொடடி'ன்னுவார். வந்தவர் வெத்தில போடலைன்னு வைச்சுக்கோங்க அவருக்கு கட்டாயம் சிவலயன கொடுக்கமாட்டார்! ஏன்னா வெத்தில போடுறவன் மாட்ட உழுதுகொண்டு இருக்கேக்க  இடையில இளைப்பாற விட்டுட்டு வரப்பில வேலை செய்யுற பெண்டுகளோட வெத்திலைய போட்டு கொஞ்சம் "அறப்படிச்சிட்டு" தானுங்க திரும்பி வருவான்! அந்த இடைப்பட்ட நேரத்தில மாடுகளும் கொஞ்சம் ஓய்வு எடுத்திடும். இப்ப வேலையில இருக்கிற பொடியங்க 'வெள்ளசுருட்டு' பத்த வெளியில போறாங்களே அதப்போல.. 

 என்ர சிவலயன அடக்கிறவனுக்குத்தான் நான் என்ர பொட்டைய கட்டிக்குடுக்குறதுன்னு முடிவெடுத்தா போதாது; இஞ்ச இருக்கிற நகர சபையில நான் அனுமதி வாங்கோனுமாம்!  நம்ம நாட்டிலன்னா மேசைக்கு கீழால தள்ளியாவது அனுமதி வாங்கலாம். இவனுங்க தானும் செய்யான், மற்றவங்களையும் விடான்னு நிக்கிறவங்க! அதுதான்  நேரடியாவே போய் கேட்டேன் அவங்களிட்ட..  'ரெம்ப சந்தோஷமா வைச்சுக்கோங்க, இஞ்ச பிரெஞ்சுக்காரங்களுக்கும் அது ஒரு புது அனுபவமா இருக்குமென்னாங்க. ஆனா அதுக்கு எல்லா ஒழுங்கும் செய்து அனுமதி வாங்க உன்ர மருமோன்களோட படத்தோட சிவலயனின் படத்தையும் வைச்சு அனுப்புங்கோ நான் அனுமதி வாங்கித்தாரன்'னு அந்த பிள்ளை சொன்னத நம்பி வீட்டுக்கு வந்தா, ரெண்டு நாள் கழிச்சு அந்த பிள்ள டெலிபோனில மிசு(mr) காட்டான் ஒருக்கா நேரில வாங்கோ கதைப்பமெண்டாள்.  அங்க போனா என்ர தலையில இடிய போடுறாள்; மிசு காட்டான் உன்ர சிவலயனைப்பற்றி எங்களுக்கு ஒண்டும் ஆட்சேபனையில்ல. ஆனா, நீங்க தந்த உங்க மருமோன்களோட படத்த பாத்திட்டு அனுமதி தர முடியாதுன்னுட்டாங்களாம்!  ஏன்னா இதுவரை எங்களுக்கு மிருக வதைச்சட்டத்ததான் தெரியும். உன்ர சிவலயனால எங்க நாட்டில மிருகங்களால மனித வதைச்சட்டம் போடனும்போலன்னு சொல்லுறாள். பின்ன நான் குடுத்த போட்டோக்களில எல்லாம் இப்படி நோஞ்சாங்களா நின்னா யார்தான் அனுமதி தருவாங்க...!

அட ஏற்கனவே இதையெல்லாம் கேள்விப்பட்டு கதிகலங்கிப்போய் இருந்த என்ர மருமோன்களுக்கு ரெம்ப சந்தோஷமாய் போச்சு; என்ர சிவலயனிட்ட இருந்து தப்பீடோமெண்டு..

அட சிவலயனதான் விட்டாலும் நான் அடுத்த பரீச்சைக்கு என்ர மருமோன்களுக்கு அழைப்பு வைச்சேன்; அதுதாங்க வெத்திலய வைச்சு அவங்கள்ல யார் என்ர பொட்டைக்கு நல்ல மாப்பிள்ளைன்னு கண்டுபிடிக்கதான். அதுக்குதான் நான் இப்ப உங்களையெல்லாம் வரச்சென்னனான். ஹி ஹி ஹி அட இதிலேயும் சில கில்லாடி மருமோன்கள் தாங்க வெத்திலையே போடுறதில்லைன்னு சொல்லி எஸ்கேப்பாகுறானுங்கோ. அட எங்கேயாவது "பூசி"போட்டு வீட்ட போகேக்க மட்டும் மணம் தெரியாம இருக்க வெத்திலைய சப்பிக்கொண்டு போவானுங்க. ஆனா போட்டிக்குமட்டும் "மாமா நான் ரெம்ப நல்லவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு" ரீலு விடுறானுங்கோ. அட உந்த கதையெல்லாம் என்னட்ட சரிப்பட்டு வராது, நீங்க வந்து வெத்தலைய மடிச்சு எனக்கு எடுத்து தாங்கோ வந்திருக்கிற சபையோரே பாத்துக்கீத்து உங்கள்ள யாரு சிறந்த மருமோன்னு சொல்லட்டும்...

அட அது என்ன ஒரு வெத்திலைய மடிச்சு எடுத்தத வைச்சு என்னன்னு நீ மாப்பிளைய பிடிப்பாய்ன்னு கேட்கிறீங்களா..? நம்ம பண்டைய தமிழர்களின் வாழ்க்கையில வெத்தில ஒரு முக்கியமான பொருளைய்யா! யாருமே வெத்தில பெட்டிய இரவல் கொடுக்கமாட்டாங்க! அது லஷ்சுமியாம் அத்தோட பிறப்பில இருந்து இறப்பு வரை நடக்கிற எல்லா நல்லதோ கெட்டதோ எந்த  காரியத்துக்கும் தமிழண்ட வாழ்க்கையில வெத்தில இருக்குது. அந்த காலத்தில ஊரில யாருடைய வீட்டிலயாவது சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகு வெத்தில கேட்டா உங்கள அடிக்க வருகிற மாதிரி பாப்பாங்க. அப்படியே வெத்திலைய தந்தாலும் அத கிள்ளிப்போட்டுத்தான் தருவாங்க. அப்படி செய்யாட்டி லஷ்சுமி வீட்ட விட்டு போயிடுவாள்ன்னு நம்பினாங்க. அப்படிப்பட்ட வெத்திலய நம்ம முன்னோர்கள் மற்றவர்களின் குண நடைகளை அறிவதற்கும் பயன்படுத்தி இருக்காங்க. ஒருத்தன் பொண்ணு பார்க்க வரும்போது பொண்ணோட சொந்தக்காரங்கெல்லாம் சேர்ந்து மாப்பிள முன்னால உக்காந்துடுவாங்க. மாப்பிள எப்பிடி வெத்தலைய தொட்டார்? எப்படி அதை இரண்டாக பிரித்தார்? எப்படி பாக்கை வெட்டினார்? எவ்வளவு சுன்னாம்பை சேர்த்தார்? அதை எப்படி வாய்க்குள் கொண்டுபோனார்ன்னு எல்லாத்தையும் அவதானிப்பாங்கோ. ஒவ்வொரு செயலின் பின்னாலு அந்த மனிதனின் குண நலன்கள்'ன்னு எல்லாத்தையும் அறியலாமாம்..!!??
                                                               (இது தான்என்ர அப்புச்சின்ர வெத்தில தட்டு)
உண்மைய சொன்னா எனக்கு என்ர பக்கத்தில இருக்கிற மருமோனுக்கு உதெல்லாம் பார்க்காம கட்டி குடுக்க ஆசைதான். அப்பிடி கட்டி குடுத்து வீட்டோட மாப்பிளையா வைச்சு அவரை ஒரு பெட்டிப்பாம்பாக விருப்பம்தான்! ஆனா மற்ற மருமோன்கள் என்னோட சண்டைக்கு வாராங்க. 'அதெப்படி மாமா உனக்கு அவந்தான் முக்கியமா போச்சோ'ன்னு! அதுதாங்க நான் உங்களையெல்லாம் வரவழைச்சிருக்கேனுன்ங்கோ. என்ர மருமோன்கள் பயங்கர கில்லாடிங்கோ; அவங்களுக்கு இடம் கொடுத்தீங்க ஒட்டகத்துக்கு இடம்கொடுத்ததைப்போல போயிடும். நீங்கதான் இவங்கள்ள யாரு என்ர பொட்டைக்கு தோதான மாப்பிளைன்னு பார்த்து சொல்லோனும்! உங்கள நம்பி அந்த பொல்லாத பொடியங்கள கூப்பிடுறன் சரிதானேங்கோ!!

டிஸ்கி :-இந்த  டெம்லேட் அமைக்க உதவி செய்தவர் நிகழ்வுகள் வலைத்தளத்தின்  முதலாளி கந்தசாமிக்கு நன்றி. (இதை அமைத்து தந்ததுக்காக போட்டியில் விசேட சலுகைகள் தரப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்)

145 comments:

மதுரன் said...

மாமா நான் தான் முதலாவது

மதுரன் said...

//அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..//

பின்ன... எனக்கு கட்டி வைக்கேல்ல அப்புறம் துஷிய தீக்குளிக்க வைப்பன் ஆமா

மதுரன் said...

//ஏன்னா வெத்தில போடுறவன் மாட்ட உழுதுகொண்டு இருக்கேக்க இடையில இளைப்பாற விட்டுட்டு வரப்பில வேலை செய்யுற பெண்டுகளோட வெத்திலைய போட்டு கொஞ்சம் "அறப்படிச்சிட்டு" தானுங்க திரும்பி வருவான்!//

இதுக்கும் கலியானத்துக்கும் என்ன சம்மந்தம்

மதுரன் said...

மிச்சத்துக்கு இரவைக்கு வாறன் மாமா

மதுரன் said...

மிச்சத்துக்கு இரவைக்கு வாறன் மாமா

ஆகுலன் said...

நான்தான் இரண்டாவது..பிறகு வாறன்...

துஷ்யந்தன் said...

ஆஹா..... மாமோய்..... இதோ வந்துட்டோம் இல்ல.... பொண்ணு எனக்குத்தானே.... சரி இருங்கோ படிச்சுட்டு வாறன்...

துஷ்யந்தன் said...

///இப்ப கொஞ்ச நாளா நான் என்ர வீட்டுக்கு பின்னால இருக்கிற 'பொட்டால' தான் வீட்டுக்குள்ள போய்வாறன். ஏன்னா படலையில ஒருத்தன் மண்ணெண்னை டின்னோட நிண்டுகொண்டு என்னை வெருட்டுறான்;//

அடப்பாவி மாம்ஸ்.... நானும் வாசலில் நிண்டு எங்கட ரெண்டு நாளா மாமவைக்காணோம் என்று தேடினா.... நீங்க வீட்டு பின்வாசல்வழியா ஒழிச்சு திரியிறேலா.... கிர்ர்ர்

துஷ்யந்தன் said...

//என்ர பொட்டைய தனக்கு கட்டிவைன்னு. அட இவன் தீ குளிக்கப்போறேன்னு சொன்னா//

தீக்குளிக்க போறேன் இல்ல.... போறோம்... புரிஞ்சுதா.

துஷ்யந்தன் said...

//அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும்//

ஆமா ஆமா.... ஊர் உலகத்தில இருக்கிற நாதாரி ....... ......... எல்லாம் மருமோன் எண்டா உப்புடித்தானே ஆகும்.... என்னை கொலைகாரன் ஆக்காமல் முதலில் பொண்ணை என்னோட அனுப்புற வேலையை பாருங்கோ.....

துஷ்யந்தன் said...

//பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா //

அவ்வ்வ்வவ்........................

துஷ்யந்தன் said...

ஆனா எனக்கு ஒரு விஷயம் இன்னும் விளங்கலேங்கோ; யாற்ற கண்ணுலேயும் படாம பொத்தி பொத்தி வளர்த்த என்ர பொட்டைய இவனுங்க என்னன்னு கண்டுபிடிக்கிறாங்கண்னு எனக்கு விளங்கல.///

போங்க மாமா எனக்கு வெக்கம் வெக்கமா வருது....... ஹி ஹி

துஷ்யந்தன் said...

///நானும் என்னடா எல்லாரும் வேலாயுதம் படம்பார்க்க இப்படி அடிச்சுப்பிடிச்சு ஓடுறாங்களேன்னு பார்த்தன். அட! அவங்க அங்க ஹன்சிகான்னு ஒருத்திக்காகதான் இந்த ஓட்டம் ஓடுறாங்கன்னு பின்னதான் தெரிஞ்சுது.////

அப்போ வேலாயுதம் விஜய்க்காக ஓடலை என்று சொல்ல வாறீங்க அதுதானே....?? எங்கப்பா போய்ட்டீங்க மைந்தன். மதுரன். வாரே................. ( யப்பா.... பொண்ணு தராத கடுப்பை காட்டியாச்சு...)

துஷ்யந்தன் said...

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ!//

மாமோய்... நான் சைவ பூனை... நான் புக்கை மட்டும்தான் சாப்புடுவேன்... கூட மில்க்கும்.. ஹி ஹி

துஷ்யந்தன் said...

//பிரான்சில இருக்கிற என்ர மண்ணெண்ணை டின் மருமோனுக்கு கட்டி வைக்கலாம்தான்//

சொல்லாத மாமா.... செய்யுங்க மாம்ஸ் செய்யுங்க.....

துஷ்யந்தன் said...

//என்ன இந்த வெருட்டு வெருட்டினவன் என்னை கண்டா பெட்டிப்பாம்பா இருக்கிறதுக்கு நான் என்ர பொட்டைய கொண்டு "ஆவன"செய்யலாம்//

ஆவன என்றால்...... ஓஹ.... தலையணை மந்திரமா????? ஹி ஹி

காட்டான் said...

டோய் துஷி நீ இன்னும் தூங்கலையா??

துஷ்யந்தன் said...

//மருமோன்கள பத்தியோ யோசிச்சு மண்டைய உடைக்காத. கொஞ்சம் "பூசிமெழுகி" நித்திரைய கொள்ள//

அது சரி..... நல்ல சாட்டு... நீங்க பூசி மெழுகாத நாள் எப்போ இருந்திச்சு மாம்ஸ்.... ஹே.. ஹே...

காட்டான் said...

ஏண்டா மருமோனே விஜய் ரசிகர்களை என்னோட கொலுவி விடுற அவங்களும் போட்டியில நிக்கிறாங்க அவங்களும் வந்தா பிறகு போட்டிய வைச்சுப்போமா இல்லைன்னா நான் பக்கசார்பா நடக்கிறேன்னு கெட்ட பேர் வந்துடும் காட்டானுக்கு வாக்கு முக்கியமடா செல்லமே...

துஷ்யந்தன் said...

//ரெண்டு நாள் கழிச்சு அந்த பிள்ள டெலிபோனில மிசு(mr) காட்டான் ஒருக்கா நேரில வாங்கோ கதைப்பமெண்டாள். அங்க போனா என்ர தலையில இடிய போடுறாள்//

அந்த புள்ள உங்களுக்கு போட்டுச்சா.... இல்ல நீங்க அந்த புள்ளைக்கு போட்டீங்களா??? யோவ் மாமா கல்லைத்தான் சொன்னேன்... ஹீ.. ஹீ..

துஷ்யந்தன் said...

//பின்ன நான் குடுத்த போட்டோக்களில எல்லாம் இப்படி நோஞ்சாங்களா நின்னா யார்தான் அனுமதி தருவாங்க...!///

பாருடா.... மாம்ஸ் மருமோங்கள கலாச்சுட்டாராம்.......

காட்டான் said...

துஷ்யந்தன் said...
//மருமோன்கள பத்தியோ யோசிச்சு மண்டைய உடைக்காத. கொஞ்சம் "பூசிமெழுகி" நித்திரைய கொள்ள//

அது சரி..... நல்ல சாட்டு... நீங்க பூசி மெழுகாத நாள் எப்போ இருந்திச்சு மாம்ஸ்.... ஹே.. ஹே...

டேய் ஏண்டாப்பா பொட்டைய தரலைன்னோட என்ர உள் வீட்டு இரகசியங்கள அவுட்டு வுடுற ஹி ஹி பூசி பெழுகுறதென்னா வீட்ட கூட்டி பெருக்கி மெழுகுறது மருமோனே..

துஷ்யந்தன் said...

//உண்மைய சொன்னா எனக்கு என்ர பக்கத்தில இருக்கிற மருமோனுக்கு உதெல்லாம் பார்க்காம கட்டி குடுக்க ஆசைதான். அப்பிடி கட்டி குடுத்து வீட்டோட மாப்பிளையா வைச்சு அவரை ஒரு பெட்டிப்பாம்பாக விருப்பம்தான்! ஆனா மற்ற மருமோன்கள் என்னோட சண்டைக்கு வாராங்க//

எவண்டா அவன் சண்டைக்கு வாறது.... பிச்சுப்புடுவேன் பிச்சு.... ராஸ்கல்ஸ்..............

காட்டான் said...

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ!//

மாமோய்... நான் சைவ பூனை... நான் புக்கை மட்டும்தான் சாப்புடுவேன்... கூட மில்க்கும்.. ஹி ஹி

5 November 2011 17:27
டோய் மருமோனே புக்கைன்னு மட்டும் இந்த நேரத்தில சொல்லாத.... ஹி ஹி

துஷ்யந்தன் said...

//டிஸ்கி :-இந்த டெம்லேட் அமைக்க உதவி செய்தவர் நிகழ்வுகள் வலைத்தளத்தின் முதலாளி கந்தசாமிக்கு நன்றி. (இதை அமைத்து தந்ததுக்காக போட்டியில் விசேட சலுகைகள் தரப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்//

நம்ம்பலாமா மாமா.... அப்புறம் வடிவேல் அக்காவை வைச்சு பேக்கிரி வாங்கின மாதிரி... நீங்க என் ஆளை வைச்சு டெம்ளேட் அமைச்ச கதை ஆகிறபடாது...... lol

துஷ்யந்தன் said...

காட்டான் said...

டோய் துஷி நீ இன்னும் தூங்கலையா??///

எங்க மாமா நித்தா கொள்ளுறது.... அதான் பொண்ணு எனக்கு கிடைக்குமா இல்லையா என்ற வேதனையில் நான் இருக்கேன் இதில் நீங்க வேற........ அவ்வ்வ்வ்

காட்டான் said...

டோய் துஷி உன்ர ஆட்டத்த மற்ற மருமோன்கள் பார்த்தா காட்டான் மாமா ஏற்கனவே மச் பிக்ஸ் பன்னீட்டுதான் வந்துட்டார்ன்னு நினைச்சிடுவாங்க அவங்களும் வரட்டும் அத்தோட நம்ம பங்காளிங்களும் வரட்டும் பேசி முடிவெடுப்போம் இப்ப எனக்கு கண்ண கட்டுது பிறகு வாறன்..

துஷ்யந்தன் said...

அப்புறம் உங்க ப்ளோகில் என் ஆள் அதான் உங்க மகள் போட்டோ போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்... நான் பார்க்க வேண்டிய என் அழகின் போட்டோவை ஊர் உலகமே பார்க்க தக்கன செய்யத உங்கள் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.........

யாழினி அதான் உங்க மக... அப்பவே சொன்னா.. டேய் துஷி அப்பாவை நம்பி இருக்காதே அவருக்கு யாரும் பூசிமெழுக யாரேனும் ஏதும் வாங்கிக்கொடுத்தால் அவர் அவனுக்கே என்னை கட்டிகொடுப்பதாக வாக்கு கொடுத்துருவார் சோ வா இப்பவே ஓடி போயிறலாம் என்று சொன்னா நான்தான் கேக்கல்ல....... அவ்வ..........

துஷ்யந்தன் said...

சரி சரி கொலை வெறியோட வந்தேன்... இப்போ நீங்க கொஞ்சம் சமாதானமா போறதால பொண்ணு எனக்குத்தான் என்ற நம்பிக்கையில் போறேன்...
அவங்களும் வரட்டும் பேசி தீர்த்துக்கலாம்.......

அப்புறம்.... மாமாவின் புதிய மருமோன்களுக்கு...மாம்ஸின் மகள் யாழினியும் நானும் "அதுக்கு" முதல் இருந்து "அதுக்கு" பின் தொடங்கி இப்போ வரை திக் லவ்வர்ஸ்..

"அது" எதைக்குறிக்கும் என்று சின்ன புள்ளத்தனமா கேக்க படாது... எனக்கு சொல்ல வெக்கமா இருக்கு....துஷி கடிச்ச சாரி அணில் கடிச்ச கொய்யாப்பழம்தான் எனக்கு வேணும் என்று அடம் புடிக்கும் தில்லான மாம்ஸின் புதிய மருமோன்கள் மட்டும்

மேலே போட்டிக்கு வாங்கையா..... ரெண்டுல ஒண்டு பாத்திறலாம்........ கிரர்ர்ர்ர்

காட்டான் said...

மருமோன்களே உங்களை போட்டியில் இருந்து விலக்கி வைக்க துஷி "அது" என்ற வார்த்தையை போட்டு குழப்புகிறார் ஏற்கனவே என்ர பொட்ட சொல்லீட்டாள் அப்பா கைய காட்டுறவனுக்குதான் கழுத்த நீண்டுவேன்னு ஆகையால் மனம் வெதும்பி துஷி சொல்வதை எல்லாம் கணக்கில் எடுக்காதீங்கோ. போட்டி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..

காட்டான் said...

 மதுரன் said...
//அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..//

பின்ன... எனக்கு கட்டி வைக்கேல்ல அப்புறம் துஷிய தீக்குளிக்க வைப்பன் ஆமா

மருமோனே முதல்ல அதை செய் இவன் அடங்க மாட்டேன்னுறானே.. ஹி ஹி அப்புறம் நீயும் போட்டியில இருக்கிறாய் மறக்காதே ஹி ஹி 

காட்டான் said...

 ஆகுலன் said...
நான்தான் இரண்டாவது..பிறகு வாறன்...
5 November 2011 16:53
அட என்ர சின்ன மருமோன் சரி சரி பிறகு வாய்யா..

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
ஹன்சிகா ரசிகர்களுக்கு படித்ததும்
சும்மா பொசுபொசுக்கும்..
ஹா ஹா ஹா

மகேந்திரன் said...

வாங்க.. வாங்க..
வந்து பாருங்க என்று
சிவலயனை வைத்து
சுயம்வரம்...
நல்ல யோசனை மாமோய்...

மகேந்திரன் said...

பதிவின் ஊடாக,
வெத்திலை வைத்து அழைக்கும் நம் பாரம்பரிய
நடைமுறையையும், ஏறுதழுவுதலில் உள்ள மிருகவதை
சட்டத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்து நடையில் மற்றுமொரு
அருமையான பதிவு.

M.Shanmugan said...

துஷிக்குதானே நிறைய மச்சாள் இருக்கினம். அடுத்த மருமோனுக்கு கட்டி வையும்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

மாமோய்..............ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இனிய காலை வணக்கம்,

நான் இங்கிருக்கேன்...

என்னையும் மறக்கலாமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

மாமோய்..
பேஸ்புக்கில சொன்னதைத் தான் இங்கே சொல்கிறேன்.

ப்ளாக் டிசைனிங் அசத்தல்..

சூப்பரா இருக்கு மாம்ஸ்!

நிரூபன் said...

இப்ப கொஞ்ச நாளா நான் என்ர வீட்டுக்கு பின்னால இருக்கிற 'பொட்டால' தான் வீட்டுக்குள்ள போய்வாறன். ஏன்னா படலையில ஒருத்தன் மண்ணெண்னை டின்னோட நிண்டுகொண்டு என்னை வெருட்டுறான்; என்ர பொட்டைய தனக்கு கட்டிவைன்னு. அட இவன் தீ குளிக்கப்போறேன்னு சொன்னானோ இல்ல 'என்ர மாமனோட' சேர்ந்து டீ குடிக்கப்போறேன்னு சொன்னானோன்னு ஒரு சந்தேகமுங்கோ!
//

அண்ணோய் யார் உங்கே பிரான்ஸில நின்று வெடுட்டுறான்?

கண்டிப்பா உவன் ஐடியாமணியாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்..

ஹே....

என்ன தான் ரண களங்கள் நடந்தாலும் மச்சாள் எனக்குத் தானே...

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

அட! இவண்ட வெருட்டுக்கு நான் பயந்து என்ர பொட்டைய கட்டி வைச்சேன்னா எனக்கு உலகம் பூரா இருக்கிற மருமோன்களோட பிரச்சனையா போகும். இஞ்ச பக்கத்தில இருக்கிற அப்பாவி மூஞ்சிக்காரனுக்கே இப்பிடி எண்ணம் வருகுதென்னா மற்றவங்களை நினைச்சுப்பார்த்தா நடுக்கம்தான் வருகுது..
//

அண்ணேய்...

உங்கட வீட்டிற்கு பக்கத்தில இருக்கிற ஆளுங்க என்றால்
ஒன்று துஸி..

இல்லேன்னா ஐடியாமணி..

இரண்டில ஒராள் தான் உங்களுக்கு ஆப்படிச்சிருக்க சான்ஸ் இருக்கு

வேண்ணா சொல்லுங்க.

இந்த ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிட்டு என் தங்கத்தை நான் கூட்டி கொண்டு போறேன்;-)))

இதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

எப்பூடி?

நிரூபன் said...

என்ர மருமோன்கள், அவள விட நூறு மடங்கு வடிவான என்ர பொட்டைய கண்டுட்டுத்தான் மாமா மாமான்னு இப்ப என்பின்னாடி நிக்கிறாங்க...
//

ஹே.....ஹே...............

வேலாயுதம் கோஷ்டிக்கும் கடியா...

மாமா...

ரசிகர்கள் கொதித்து எழப் போகிறார்கள்.

கவனம்,,,,

நிரூபன் said...

எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். //

அவமானம்.

அபச்சாரம்!
எம்மையெல்லாம் ஒரு பெண்ணைக் கேட்டதை காரணமாக வைச்சு அவமானப்படுத்திட்டார் காட்டான் மாமா!

பசங்களா! என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீங்க.
உடனே பொங்க வேண்டியது தானே!

புலி போன்ற வீரமுடைய ஆண் வர்க்கத்தினை பூனைகள் என்று சொல்லி அவதூறு செய்து எங்கள் உணர்ச்சியை உசுப்பி விட்ட காட்டான் மாவிற்கு இன்று இரவு லாச்சப்பலில் வைத்து அடி கொடுக்கப் போறோம்..

பசங்களா! பிரான்ஸில உள்ள நம்மளோட ஆளுங்க இன்னைக்கு காட்டான் மாம்ஸ் ஐ ஒரு வழி பார்த்திடுங்க.

நிரூபன் said...

நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு இருக்குங்கோ. ஒருத்தனுக்கு வாக்க கொடுத்திட்டு மற்றவங்கள நான் ஏமாத்த விரும்பல..!//

ஏன் அண்ணே நாக்குத் தவறிக் கொஞ்சிப் போட்டீங்களோ..

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

புலவர் சா இராமாநுசம் said...

காட்டானின் பதிவுகளில் ஈழத்திழே
காட்டாற்று வெள்ளமென ஓடுமாமே
கேட்டவரும்படித்தவரும்சொல்லலாமேமாட்டாராம் சிரிக்காம் இருக்கயாரும்

யாழ்பாண நடையழகு காட்டானுக்கு நன்றி!

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

யார் என்ர சிவலயன அடக்குறாங்களோ அவனுக்குதான் என்ர பொட்ட.. //

நல்ல வேளை,
கடவுள் புண்ணியத்தில நீங்கள் சிவலயன் என்று சொல்லிட்டு போட்டோ போட்டிருக்கிறீங்க..

இல்லேன்னா நாங்க எல்லோரும் மாறி உங்களின் வேறை எதையாச்சும் அடக்க முயற்சி செய்திருப்பம்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

உன்ர சிவலயனால எங்க நாட்டில மிருகங்களால மனித வதைச்சட்டம் போடனும்போலன்னு சொல்லுறாள். பின்ன நான் குடுத்த போட்டோக்களில எல்லாம் இப்படி நோஞ்சாங்களா நின்னா யார்தான் அனுமதி தருவாங்க...!//

கொய்யாலே....

இப்பவே கிளம்பி வாரோம்,

எங்களைப் பார்த்து நோஞ்சானுங்களா..

மாமா டவுட் இருந்தா கலியாணம் கட்டி வைச்சுப் பாருங்க
எட்டாவது மாசமே! உங்களுக்கு பேரன் பொறப்பான்...
இது எப்பூடி!!!!!!!!!!!!!!!

நிரூபன் said...

கந்தசாமி அண்ணரின் டெம்பிளேட் டிசைனிங் கலக்கலா இருக்கு!
அவருக்கும் வாழ்த்துக்கள்!

மாமா மச்சாள் எனக்குத் தானே!

மாற்றுக் கருத்துச் சொன்னீங்க.
இன்னைக்கே டீ குடிப்பேன் என்று சொல்ல வந்தேன்!

நிரூபன் said...

மகளுக்குச் சுயம்வரம் செய்யுற விடயத்தோடு பண்டைத் தமிழர்களின் வெற்றிலை பாக்கிற்கு உள்ள மகத்துவத்தினையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

ரசித்தேன்.

suryajeeva said...

என் நண்பன் ஒருவன், ஒரு பெண்ணை காதலித்தான்.. அந்த பொண்ணு கிட்ட போய் சொன்னான்... அதுக்கு அந்த பொண்ணு சொன்னது,"எங்க அப்பா எந்த கழுதய கட்ட சொல்றாரோ அதை தான் கட்டுவேன் அப்படின்னு சொன்னா". நான் கழுதையா இருக்க விரும்பல மச்சி அப்படின்னு ராத்திரி பூரா பொலம்பிகிட்டு இருந்தான்

♔ம.தி.சுதா♔ said...

//// இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ! ////

மாமா நான் அடக்க வரட்டுமா? அதோட சீதணமும் வேணாம்... கட்டின சீலையோட அனுப்பினா போதும்.. அதில்லாமல் அனுப்பினாலும் பரவாயில்லை...

♔ம.தி.சுதா♔ said...

பாணரில் நம்ம பாயபுள்ளை யாரோடையோ மணம் வீசுதே... யாருப்பா அது...

RAMVI said...

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். ////இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ//

சிரிக்க சொன்னாலும் சிந்தனையை தூண்டும் பதிவு.

எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நல்லவிதமான வாழ்க்கை அமைய வேண்டுமே என்கிற கவலை எனக்கும் உண்டு.

கவி அழகன் said...

காட்டான் திரும்பி வந்திட்டாயா

காட்டான் said...

மகேந்திரன் said...
அன்புநிறை காட்டான் மாமா,
ஹன்சிகா ரசிகர்களுக்கு படித்ததும்
சும்மா பொசுபொசுக்கும்..
ஹா ஹா ஹா

5 November 2011 19:17
வணக்கம் மாப்பிள வாங்கோ வாங்கோ
ஹி ஹி நான் சொல்ல வந்தது என்ர பொட்டை ஹன்சிகாவ விட அழகுன்னு..[அப்பாடா!!]

காட்டான் said...

M.Shanmugan said...
துஷிக்குதானே நிறைய மச்சாள் இருக்கினம். அடுத்த மருமோனுக்கு கட்டி வையும்.

5 November 2011 20:09

ஆஹா அப்போ துஷிய போட்டியில இருந்து நீக்கிடுவோமா? வேண்டாம் இப்பவே கண்ண கட்டுது அவன் போட்ட கொமொண்டுகள பார்த்து அதுவுமில்லாம டீ குடிக்க தனிய போமாட்டாராம்..

காட்டான் said...

இராஜராஜேஸ்வரி said...
அருமையான சுயம்வர சிந்தனை!

கல்கல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

5 November 2011 20:48

ஹி ஹி நன்றியம்மா வருகைக்கும் கருத்துக்கும்..

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

மாமோய்..............ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இனிய காலை வணக்கம்,

நான் இங்கிருக்கேன்...

என்னையும் மறக்கலாமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 

ஹா ஹா ஹா என்னடா தம்பி ஒரு பொட்டைய கண்டோன உறவெல்லாம் மாறுது!!?? நீ விதானையின் பொட்டையோட ஒரு "இது"ன்னு ஊரெல்லாம் கதை அத்தோட செம்ப பிடிச்சு தீர்ப்பு சொல்லப்போற பங்காளிங்கள்ல நீயும் ஒருத்தன் மறதிடாம செம்போட வாடா செல்லமே.. ஹி ஹி ஹி

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

காட்டானின் பதிவுகளில் ஈழத்திழே
காட்டாற்று வெள்ளமென ஓடுமாமே
கேட்டவரும்படித்தவரும்சொல்லலாமேமாட்டாராம் சிரிக்காம் இருக்கயாரும்

யாழ்பாண நடையழகு காட்டானுக்கு நன்றி! 

புலவர் சா இராமாநுசம் 

வணக்கமய்யா உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். உடம்பை கவனமாய் பாருங்கோ ஐய்யா..

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

காட்டான் திரும்பி வந்திட்டாயா 

ஆமா நான் எங்கேயும் போனாதானே திரும்பி வர..?? ஹி ஹி நன்றி மாப்பிள உங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும்..

காட்டான் said...

suryajeeva has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

என் நண்பன் ஒருவன், ஒரு பெண்ணை காதலித்தான்.. அந்த பொண்ணு கிட்ட போய் சொன்னான்... அதுக்கு அந்த பொண்ணு சொன்னது,"எங்க அப்பா எந்த கழுதய கட்ட சொல்றாரோ அதை தான் கட்டுவேன் அப்படின்னு சொன்னா". நான் கழுதையா இருக்க விரும்பல மச்சி அப்படின்னு ராத்திரி பூரா பொலம்பிகிட்டு இருந்தான் 

ஹா ஹா ஹா வணக்கம் மாப்பிள..

ஆனா என்ர பொட்டைக்கு ஒரு கழுதையும் வேணாம்??  நம்ம மருமோன் ஒருத்தன தெர்வு செய்வோம் அது யார்ன்னுதானே போட்டியே..?

காட்டான் said...

♔ம.தி.சுதா♔ has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

//// இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ! ////

மாமா நான் அடக்க வரட்டுமா? அதோட சீதணமும் வேணாம்... கட்டின சீலையோட அனுப்பினா போதும்.. அதில்லாமல் அனுப்பினாலும் பரவாயில்லை... 

வணக்கம் மதி 
என்ன என்ன நடக்குது இங்க???செம்ப தூக்கவேண்டியவங்களே என்ர பொட்டைய கண்டவுடன் களத்தில இறங்குறீங்க..!!?? நிரூபனுக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும் நல்ல செம்பா தூக்கிகொண்டு வாடா என்ர செல்லத்தம்பி..!!??? நீயெல்லாம் என்ர பங்காளி நல்ல தீர்ப சொல்லுங்கோ.. ஹி ஹி ஹி

நிரூபன் said...

♔ம.தி.சுதா♔ said...
பாணரில் நம்ம பாயபுள்ளை யாரோடையோ மணம் வீசுதே... யாருப்பா அது...
//

மச்சி. நீயுமா?
பதிவை மேல இருந்து கீழ் நோக்கிப் படிச்சாலே புரியுமே மச்சி..

மாமா தான் டிஸ்கியில சொல்லியிருக்காரே..

காட்டான் said...

RAMVI has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும். ////இதில எந்த பூனை நல்ல பூனைன்னு என்னால கண்டுபிடிக்க முடியாம இருக்குங்கோ//

சிரிக்க சொன்னாலும் சிந்தனையை தூண்டும் பதிவு.

எனக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நல்லவிதமான வாழ்க்கை அமைய வேண்டுமே என்கிற கவலை எனக்கும் உண்டு. 

ஹி ஹி கவலைய விட்டுட்டு ஜாலியா இருங்க எதிர்காலம் எப்படியோ? நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

K.s.s.Rajh said...

வணக்கம் மாம்ஸ்..அட நான் லேட்டா வந்துட்டனோ..இருந்தாலும் லேட்டஸா வந்திருக்கன்

K.s.s.Rajh said...

ஓரு பொண்ணு அன்மையில் என்னிடம் சட் பண்ணுச்சி...அதில தன்ற அப்பாவுக்கு பல மருமகன்கள் இருப்பதாகவும்...அதில் ஓருதனை கூட தனக்கு பிடிக்கவில்லை என்றும்.....என்னைதான் அவளுக்கு பிடித்திருக்கு என்றும் சொன்னீச்சு நான் அந்தப்பொண்ணு யார் என்று யோசிச்சு யோசிச்சி குழம்பிப்போயிருந்தேன் இப்பதான் விளங்குது அது மாம்ஸ் இன் மகளா.....
அது ஆல்ரெடி என்கிட்ட சரண்டர் ஆகிடுச்சி......சோ இந்த சுயம்பரம் டம்மிக்குத்தான் எல்லோறும் கெளம்புங்க......

இப்ப புரியுதா நான் ஏன் லேட்டா வந்தேன் என்று.......

K.s.s.Rajh said...

துஷி,மது,போட்டிக்கு நிக்கிறாங்க ஏற்றுக்கொள்ளாம்....நிரூபன் பாஸும் நிற்கிறாரே ஜயகோ................

மதுரன் said...

ராஜ், துஷி....

நீ கலியாணம் கட்ட முதல் ரெண்டுபேர கொலை பண்ணிப்போட்டுத்தான் கட்டுவ எண்டு என்ர சாதகத்த பார்த்த சிவலிங்க சாத்திரியார் சொன்னவர்,, ரெண்டுபேரும் அத உண்மையாக்கிபோடாதீங்கோ....

மதுரன் said...

சுதா அண்ணை & நிரூ

இது இளந்தாரிப்பொடியளுக்கு நடக்கிற சுயம்வரம்... நீங்கள் ஏன் குறுக்க வாறியள்.. இருக்கிற பிள்ளகுட்டியள பள்ளிக்குடத்துக்கு கூட்டியெண்டு போய் விடுங்கோ முதல்ல

காட்டான் said...

K.s.s.Rajh has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

வணக்கம் மாம்ஸ்..அட நான் லேட்டா வந்துட்டனோ..இருந்தாலும் லேட்டஸா வந்திருக்கன் 

வணக்கம் ராசுக்குட்டி நீ லேட்டில்ல ஆனா போட்டியில இருக்கிறீங்க.. ஹி ஹி ஹி

K.s.s.Rajh said...

யோய் முதலில் மாம்ஸ் இன் மகளின் முகத்தை காட்ட சொல்லுங்கோ.இல்லாட்டி ராஜகுமாரன்(இது துஷிக்கு உள்குத்து இல்லை இது பிரபு நடிச்ச படத்தின் பெயர்)படத்தில் முகத்தை காட்டாமல் இருக்கும் வடிவேலுவின் தங்கைச்சியை கவுண்டரும்,செந்திலும் ரூட்டு விட்ட கதையா போயிடும்......சொல்லிட்டேன்.....

ஆனால் கவுண்டர் மாதிரி நானும்,துஷியும் எஸ்கேப் ஆகிடுவம்

அப்பறம் மதுரன் மட்டும் மாட்டிகிட்டு சொல்வார்...இந்த மூச்சிக்கே(மாமாவின் மகள்)உங்களைப்பிடிகலையே ....இனி உங்களுக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான் என்று...

ஆனாலும் நாங்கள் அதை காதில் வாங்காமல் அடுத்த பிகரை பார்த்திட்டு போய்கிட்டே இருப்போம்....

எனவே இதனால் பாதிக்கப்படுவது மதுதான் எனவே முதலில் முகத்தை காட்ட சொல்லுங்கள்...ஹி.ஹி.ஹி.ஹி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்த சுயம்வரத்தில், மே ஐ பார்ட்டிசிபேட்?

காட்டான் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

இந்த சுயம்வரத்தில், மே ஐ பார்ட்டிசிபேட்? 

வணக்கம் வாங்கோ வாங்கோ..
ஏன்யா?ஏன் இந்த "பொல்லு"பிடிக்கிற வயசில..? உங்களால செமம்க்கூட தூக்க முடியாது.. என்ர மருமோன்கள் இத கேள்விப்பட்டா என்ன நடக்குமோன்னு பயமா இருக்கையா..? சிவலயன் திண்டுபோட்ட வைக்கோல் போல தலைய வைச்சிருக்கீங்க படலையிலதான் மண்ணெண்னை டின்னோட மருமோன் நிக்கிறான் வசதி எப்படி..??

நிகழ்வுகள் said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்த சுயம்வரத்தில், மே ஐ பார்ட்டிசிபேட்?/// வயசு போனவர்களுக்கெண்டு இந்த சுயம்வரம் முடிஞ்சா பிறகு ஆறுதலா ஒரு சுயம்வரம் நடத்துகிறார்களாம் .. நான் நீங்க நிரூபன் எல்லாம் ஓரமா குந்தி இருந்து வேடிக்கை (மட்டும்)பார்த்துட்டு அப்புறமா கலந்துக்குவம்.)

நிகழ்வுகள் said...

///துஷ்யந்தன் said...

நம்ம்பலாமா மாமா.... அப்புறம் வடிவேல் அக்காவை வைச்சு பேக்கிரி வாங்கின மாதிரி... நீங்க என் ஆளை வைச்சு டெம்ளேட் அமைச்ச கதை ஆகிறபடாது...... lol /// யோவ் பப்பிளிக்காய் இந்த மேட்டரை எல்லாம் அவிட்டு விடப்படாது.. எல்லாம் பேசி தீர்த்துப்பம் ..நேர வரலாமே ????ஹிஹி

நிகழ்வுகள் said...

///மதுரன் said...

மாமா நான் தான் முதலாவது// ஏன்யா... திண்டு கொளுத்து முத்தி போய் நிக்கிற அந்த சிவலயனிட்ட குத்து வாங்க இவ்வளவு அவசரப்படுகிறா?... முதல்ல ஏதாவது கடைசி ஆசைகள் ஏதாவது இருந்தா நிறைவேற்றிட்டு ஆறுதலா வரலாமே...))

நிகழ்வுகள் said...

////நிரூபன் said...

மாமோய்..............ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இனிய காலை வணக்கம்,

நான் இங்கிருக்கேன்...

என்னையும் மறக்கலாமா?/// ஹிஹி என்ன பாஸ் நட்டங்காண்டல் முன்னாள் விதானையாரின் பெட்டையை கழட்டி விட்டுட்டிங்களா..? )

நிகழ்வுகள் said...

///K.s.s.Rajh said...

யோய் முதலில் மாம்ஸ் இன் மகளின் முகத்தை காட்ட சொல்லுங்கோ.// ஏன் உங்களுக்கு பிடித்த ஐம்பது பெண்களின் லிஸ்டில் இவவையும் சேர்க்கிற பிளானா ஹிஹி

தனிமரம் said...

இந்தப் போட்டிக்கு தம்பி ராச்,மதுரன் மோதட்டும் துசி ஏற்கனவே பிரென்சில் இருபதால் அவருக்கு ஹான்சிகா ஓம் சொல்லுவா என நினைக்கின்றன்!அவ்வ்!

தனிமரம் said...

வெற்றிலை வைக்கும் பாரம்பரியத்துடன் நல்ல ஒரு விடயத்தை சொல்லி ஜோசிக்க
வைத்துள்ளீர்கள் காட்டான்!
ஓட்டைவடையாரை கூட உங்கள் சுமம்வரம் துள்ளி எழ வைத்துள்ளதே!

தனிமரம் said...

வெற்றிலை வைக்கும் பாரம்பரியத்துடன் நல்ல ஒரு விடயத்தை சொல்லி ஜோசிக்க
வைத்துள்ளீர்கள் காட்டான்!
ஓட்டைவடையாரை கூட உங்கள் சுயம்வரம் துள்ளி எழ வைத்துள்ளதே!

தனிமரம் said...

ஹான்சிஹா பிரியர்கள் பலரும் ஓடிவந்து விட்டார்களே !ஹீ ஹீ

ஆகுலன் said...

மாமா பிந்தி வந்ததுக்கு மன்னிக்கவும்..

ஆகுலன் said...

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும்.//

பூனையிடம் ஏன் குடுக்கிறியல் சிறுத்தையிடம் கொடுக்கலாமே...

சிறுத்தை ஒன்று புறப்பட்டது.....

பிரெஞ்சுக்காரன் said...

வணக்கம் காட்டன் அண்ணா! நானும் சுயம்வரத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்!

உங்கள் மகளைத் திருமணம் செய்ய அல்ல! அங்கு நடப்பவற்றைப் ஃபோட்டோ எடுக்க!

நான் நன்றாக ஃபோட்டோ எடுப்பேனாம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்!

Powder Star - Dr. ஐடியாமணி said...

அண்ணர் வணக்கம்!

தம்பிக்குச் சொல்லாமல் உதென்ன சுயம்வரம் வரைக்கும் போட்டியள்?

நீங்கள் எனக்கு அண்ணன் முறை எண்டதால, உங்கட பெட்டை எனக்கும் மகள் முறைதான் வருது! ஆகவே, அவளுக்கு ஒரு கலியாணம் காட்சிய நடத்திவைக்கிற பொறுப்பு எனக்கும் இருக்குத் தானே!

அதால, சுயம்வரத்தில வெல்லுற மருமோனுக்கு, என்ர பங்குக்கு பத்தாயிரம் யூரோ குடுக்குறன்! ஓகே வா?

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

//எப்பிடியோ என்ர கிளிய வளர்த்து இந்த பூனைகள்ல ஒருத்தனிட்டதான் கொடுக்க வேண்டும்.//

பூனையிடம் ஏன் குடுக்கிறியல் சிறுத்தையிடம் கொடுக்கலாமே...

சிறுத்தை ஒன்று புறப்பட்டது..... 

ஹா ஹா வாடா என்ர சின்ன மருமோனே.. போட்டியில நீ நிக்கிறாய் அத மறக்காதே முடிவில தெரியும் யாரு பூனை யாரு சிறுத்தைன்னு.. ஹி ஹி ஹி

காட்டான் said...

பிரெஞ்சுக்காரன் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

வணக்கம் காட்டன் அண்ணா! நானும் சுயம்வரத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்! 

உங்கள் மகளைத் திருமணம் செய்ய அல்ல! அங்கு நடப்பவற்றைப் ஃபோட்டோ எடுக்க!

நான் நன்றாக ஃபோட்டோ எடுப்பேனாம் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்! 

ஹா ஹா ஹா வணக்கம்! வணக்கம்! முதல் வருகை வாங்கோ வாங்கோ..!

நீங்க நல்லா போட்டோ எடுப்பீங்கன்னு எனக்கு தெரியும்.... அப்படியே என்ர கொக்குத்தடியில இருக்கிற "காட்டான் குருவி"யையும் சேர்த்து போட்டோ எடுங்கோ..!!?)))))))

காட்டான் said...

Powder Star - Dr. ஐடியாமணி has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

அண்ணர் வணக்கம்! 

தம்பிக்குச் சொல்லாமல் உதென்ன சுயம்வரம் வரைக்கும் போட்டியள்? 

நீங்கள் எனக்கு அண்ணன் முறை எண்டதால, உங்கட பெட்டை எனக்கும் மகள் முறைதான் வருது! ஆகவே, அவளுக்கு ஒரு கலியாணம் காட்சிய நடத்திவைக்கிற பொறுப்பு எனக்கும் இருக்குத் தானே!

அதால, சுயம்வரத்தில வெல்லுற மருமோனுக்கு, என்ர பங்குக்கு பத்தாயிரம் யூரோ குடுக்குறன்! ஓகே வா? 

வாடா தம்பி.. இப்பவே கண்ண கட்டுதடா!!)) உனக்கு சொல்லிப்போட்டுதான் செய்யலாம்ன்னு இருந்தேன் ஆனா இந்த மண்ணெண்னை டின்காரனோட தொல்ல தாங்காமதான் முடிவெடுத்தேன்.. அத்தோட உன்னட்ட "செம்ப"தாரதுக்கும் எனக்கு பயமா இருக்கையா..!!!??? அனுபவம் அப்படி!!)) ஹி ஹி கோவிக்காத தம்பி (இண்டைக்கு உன்ர அண்ணர ஒரு வழி பண்ணாம விடமாட்டாய் போல!!!??)

காட்டான் said...

Powder Star - Dr. ஐடியாமணி has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

அண்ணர் வணக்கம்! 

தம்பிக்குச் சொல்லாமல் உதென்ன சுயம்வரம் வரைக்கும் போட்டியள்? 

நீங்கள் எனக்கு அண்ணன் முறை எண்டதால, உங்கட பெட்டை எனக்கும் மகள் முறைதான் வருது! ஆகவே, அவளுக்கு ஒரு கலியாணம் காட்சிய நடத்திவைக்கிற பொறுப்பு எனக்கும் இருக்குத் தானே!

அதால, சுயம்வரத்தில வெல்லுற மருமோனுக்கு, என்ர பங்குக்கு பத்தாயிரம் யூரோ குடுக்குறன்! ஓகே வா? 

ஆஹா ஒரு முடிவோடதான் வந்திருக்கிறாய் போல உன்ர பங்கு காசு கையில இல்லைன்னு செம்ப நெளிச்சிடாத மணி.. மருமோன்கள் ஒரு முடிவோடதான் நிக்கிறாங்கள் கவனம்..!!!)))

காட்டான் said...

நிகழ்வுகள் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

///K.s.s.Rajh said...

யோய் முதலில் மாம்ஸ் இன் மகளின் முகத்தை காட்ட சொல்லுங்கோ.// ஏன் உங்களுக்கு பிடித்த ஐம்பது பெண்களின் லிஸ்டில் இவவையும் சேர்க்கிற பிளானா ஹிஹி 

ஹா ஹா ஆமா கந்தசாமி இவன் பாவி இத வைச்சே ஒரு பதிவு தேத்திடுவான்.. ராசுக்குட்டியோட கொஞ்சம் கவனமாய்த்தான் பழகோனும்)))

K.s.s.Rajh said...

////
காட்டான் said...
நிகழ்வுகள் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?":

///K.s.s.Rajh said...

யோய் முதலில் மாம்ஸ் இன் மகளின் முகத்தை காட்ட சொல்லுங்கோ.// ஏன் உங்களுக்கு பிடித்த ஐம்பது பெண்களின் லிஸ்டில் இவவையும் சேர்க்கிற பிளானா ஹிஹி

ஹா ஹா ஆமா கந்தசாமி இவன் பாவி இத வைச்சே ஒரு பதிவு தேத்திடுவான்.. ராசுக்குட்டியோட கொஞ்சம் கவனமாய்த்தான் பழகோனும்))/////

ஹி.ஹி.ஹி.ஹி......ஓரு பதிவு சிக்கிடுச்சி...இதை வச்சு ஓரு செம மொக்கை பதிவு ஒன்று போடுறன் பாருங்க முதலில் உங்கள் சுயம்பரம் முடியட்டும்...ஹி.ஹி.ஹி.ஹி....

செங்கோவி said...

அட..என்ன அதிசயம்...மாம்ஸ் பதிவு போட்டிருக்கார்..

செங்கோவி said...

மாம்ஸ் பொட்டைக்கு இவ்வளவு போட்டியா? அப்போ நிச்சயம் அது மாம்ஸ் மாதிரி இருக்காது..

செங்கோவி said...

சிவாலயனை வச்சு மருமோன் செலக்ட் பண்ணா, கொலைக்கேசுல ஜெயிலுக்குத் தான் போகணும்..

செங்கோவி said...

அந்த வெத்தலை டெக்னிக் நல்ல டெக்னிக்கா இருக்கே..நாமளும் எங்காவது யூஸ் பண்ணுவோம்.

காட்டான் said...

வணக்கம் செங்கோவி வாங்கோ..
நீங்க வேற பதிவு போட்டாத்தான் பதிவராம். அதுதான் என்ர காட்டான் குருவியே சொல்லுதே.. ஹி ஹி சிவலயன பிரபலப்படுத்தியதே நீங்கதான்.. ஆனா என்ர பொட்ட என்னைபோல இல்லைன்னு குண்டைப்போடுறியே மாப்பிள அந்தக்காலத்தில நான் அரவிந்த சாமிபோல..ஹி ஹி சொன்னா நம்பவாபோறீங்க..??

"என் ராஜபாட்டை"- ராஜா said...

காக்குங்க ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்

அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான் நான் இரண்டுநாளா ரூம்போட்டு சிந்திச்சு கண்டுபிடிச்சிட்டனய்யா ஏன் இத்தனைபசங்களும் உம்மட பெண்ணைக்கட்ட துடிக்கிறாங்களென்று. உம்மட single piece dress ஐ பார்த்திட்டு மகளும் single piece dress இலதான் வருவா என்று நினைச்சிட்டாங்கள். அதுதான் இந்த அடிபாடெல்லாம்.

அம்பலத்தார் said...

காட்டான் said...

//டோய் துஷி உன்ர ஆட்டத்த மற்ற மருமோன்கள் பார்த்தா காட்டான் மாமா ஏற்கனவே மச் பிக்ஸ் பன்னீட்டுதான் வந்துட்டார்ன்னு நினைச்சிடுவாங்க...............//

என்ன சம்பந்தி பேச்சு மாறுது அப்ப என்ரை மகனுக்கு Fix பண்ணினது என்ன ஆச்சு Fixed என்றால் Fixed ஆகத்தான் இருக்கணும் இல்லையென்றால் அப்புறம் அரிவாள் தூக்கவேண்டிவரும்

அம்பலத்தார் said...

என்ரை மகன் "உது என்ன காட்டான் மாமா சின்னப்பிள்ளையாட்டம் மாட்டை அடக்கு ஆட்டை அடக்கு என்று சொல்லிக்கொண்டு நிக்கிறார். நான் ஒரெயடியா மாமாவின்ரை பெண்ணை அடக்குகிறன் அப்பா." என்று சொல்லுறான்.

ஹேமா said...

அட...எப்பவும் வந்து பாப்பன்.2-3 நாளா வேலை கூட.நான் பாக்காத நேரம் பதிவு போட்டுக் கலக்கியிருக்கீங்க காட்டான் !

காட்டான் said...

வணக்கம் காட்டான் நான் இரண்டுநாளா ரூம்போட்டு சிந்திச்சு கண்டுபிடிச்சிட்டனய்யா ஏன் இத்தனைபசங்களும் உம்மட பெண்ணைக்கட்ட துடிக்கிறாங்களென்று. உம்மட single piece dress ஐ பார்த்திட்டு மகளும் single piece dress இலதான் வருவா என்று நினைச்சிட்டாங்கள். அதுதான் இந்த அடிபாடெல்லாம். 

ஹா ஹா ஹா.. 
வணக்கம் சம்பந்தி இந்த லொல்லுதானே வேணான்னுறது..  உங்களுக்கு இப்ப பொறாமை நான் போட்டி வைச்சிட்டன்னு அதல்லாம் விட்டுட்டு மாப்பிளைய தாயார் செய்யுங்கோ போட்டிக்கு மற்றத பிறகு பார்க்கலாம்..!!

ஹேமா said...

காட்டான்....நீங்க பிரான்சில கல்யாணப் புரோக்கர் எண்டு கதை அடிபடுது நிரூன்ர பக்கத்தில.நீங்கள் என்னடவெண்டா இவ்வளவு புலம்பியிருக்கிறியள் !

அப்புச்சின்ர வெத்தலைத்தட்டம் நவீனத்துவமா புதுசாக்கிடக்கு.ஆனா அவர் வெத்தில குடுக்கிறதில இருக்கிற வித்தை அசத்தல்.பழசுகள் உண்மையா புத்திசாலிகள்தான் !

துஷிக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்.பிறகு இங்கயும் கணக்கு வைக்கிறார்போல !

காட்டான் said...

அம்பலத்தார் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

என்ரை மகன் "உது என்ன காட்டான் மாமா சின்னப்பிள்ளையாட்டம் மாட்டை அடக்கு ஆட்டை அடக்கு என்று சொல்லிக்கொண்டு நிக்கிறார். நான் ஒரெயடியா மாமாவின்ரை பெண்ணை அடக்குகிறன் அப்பா." என்று சொல்லுறான்.

ஹி ஹி சொல்லுவான் சொல்லுவான் அப்பன் கொடுக்குற தைரியத்திலதான் ஆடுறான் எரியுறத புடுங்கினா கொதிக்கிறது அடங்கும் பாக்கிறன் மச்சான் பாக்குறன்..!! 

காட்டான் said...

அம்பலத்தார் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

காட்டான் said...

//டோய் துஷி உன்ர ஆட்டத்த மற்ற மருமோன்கள் பார்த்தா காட்டான் மாமா ஏற்கனவே மச் பிக்ஸ் பன்னீட்டுதான் வந்துட்டார்ன்னு நினைச்சிடுவாங்க...............//

என்ன சம்பந்தி பேச்சு மாறுது அப்ப என்ரை மகனுக்கு Fix பண்ணினது என்ன ஆச்சு Fixed என்றால் Fixed ஆகத்தான் இருக்கணும் இல்லையென்றால் அப்புறம் அரிவாள் தூக்கவேண்டிவரும் 

மச்சான் அருவாள கீழ போடுங்கோ.. அண்டைக்கு கொஞ்சம் "பூசிப்போட்டு"நிண்டதுல அப்பிடி சொல்லிப்போட்டன் இப்ப போட்டியிண்டு அறிவிச்சா பிறகு பின்வாங்கினா என்ர இமேச் என்னாவது..!! ஹி ஹி ஜி

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ஆட்டத்துல என்னையும் செத்திக்கங்க, மாமு.........

காட்டான் said...

 ஹேமா said...
அட...எப்பவும் வந்து பாப்பன்.2-3 நாளா வேலை கூட.நான் பாக்காத நேரம் பதிவு போட்டுக் கலக்கியிருக்கீங்க காட்டான் !
8 November 2011 05:20

வணக்கம் சகோதரி வாங்கோ வாங்கோ!
இனி நீங்க கொஞ்ச நாளைக்கு என்ர வீட்டுப்பக்கம் எட்டி பார்க்க தேவையில்லை ஏன்னா நான் பதிவு எழுதுற வேகம் உங்களுக்கு தெரியும்தானே..? வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

காட்டான் said...

 ஹேமா said...
காட்டான்....நீங்க பிரான்சில கல்யாணப் புரோக்கர் எண்டு கதை அடிபடுது நிரூன்ர பக்கத்தில.நீங்கள் என்னடவெண்டா இவ்வளவு புலம்பியிருக்கிறியள் !

அப்புச்சின்ர வெத்தலைத்தட்டம் நவீனத்துவமா புதுசாக்கிடக்கு.ஆனா அவர் வெத்தில குடுக்கிறதில இருக்கிற வித்தை அசத்தல்.பழசுகள் உண்மையா புத்திசாலிகள்தான் !

துஷிக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்.பிறகு இங்கயும் கணக்கு வைக்கிறார்போல !
8 November 2011 05:48

ஹி ஹி ஹி அது நான் பிரான்சுக்கு வந்தோன "உழைச்சு" வாங்கிக்குடுத்த வெத்தில பெட்டிங்க..!! உண்மைதான் பெரியவங்க அந்தக்காலத்தில ஒருத்தனின் மூஞ்சிய பார்த்தே இவன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிடுவாங்க.. 

Rathnavel said...

நல்ல பதிவு.
நிறைய புதிய விபரங்கள்.
வாழ்த்துக்கள்.

Ramani said...

வட்டார வழக்கு எழுத்து நடை
கொஞ்சம் படிக்க கடினமாகத் தெரிந்தாலும்
படிக்கப் படிக்க சுகமாகத் தான் இருக்கு
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

காட்டான் said...

 ! ஸ்பார்க் கார்த்தி @ said...
ஆட்டத்துல என்னையும் செத்திக்கங்க, மாமு.........
8 November 2011 08:24
ஹா ஹா ஹா வணக்கம் கார்த்தி வாங்கோ வாங்கோ..! 
என்னங்க பிள்ளைக்கு மாப்பிள பாக்கிறவங்கெல்லாம் போட்டியில பங்கெடுக்கிறது நல்லாவா இருக்கு..?

காட்டான் said...

 Rathnavel said...
நல்ல பதிவு.
நிறைய புதிய விபரங்கள்.
வாழ்த்துக்கள்.
8 November 2011 16:49
வணக்கம் வாங்கோ வாங்கோ..
நன்றி ஐயா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..

காட்டான் said...

 Ramani said...
வட்டார வழக்கு எழுத்து நடை 
கொஞ்சம் படிக்க கடினமாகத் தெரிந்தாலும்
படிக்கப் படிக்க சுகமாகத் தான் இருக்கு
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
8 November 2011 18:27
வணக்கமையா வாங்கோ வாங்கோ...
அப்போ உங்களை கொஞ்சம் சிரமப்படுத்தீட்டன் போல? ஹி ஹி நமக்கு இதுதான்யா வரும்.. வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.

Anonymous said...

மாம்ஸே.... பிளாக் டெம்ப்ளேட் பட்டைய கிளப்புதுங்கோ

Anonymous said...

மாம்ஸ் என்னது இத்தனை பேரு போட்டியா... என்னையும் மறந்திறாதீங்க மாம்ஸ்... நம்ம ரேஞ்சுக்கு டைனோசர கொண்டு வந்து நிப்பாட்டுங்கோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காட்டான் said...

மாய உலகம் has left a new comment on your post "சிவலயனை அடக்கப்போகிறவர் யார் ..?": 

மாம்ஸே.... பிளாக் டெம்ப்ளேட் பட்டைய கிளப்புதுங்கோ 

வாய்யா மாப்பிள வாய்யா எங்க நீ இந்த போட்டியில கலந்துக்க மாட்டியோன்னு பார்த்தேன் வந்திட்டாயா..

டெம்ப்ளேட் எல்லாம் நம்ம நிகழ்வுகள் பிளாக் முதலாலியின் கைவண்ணம் அவருக்குதான் நன்றி சொல்லனும்.

காட்டான் said...

 மாய உலகம் said...
மாம்ஸ் என்னது இத்தனை பேரு போட்டியா... என்னையும் மறந்திறாதீங்க மாம்ஸ்... நம்ம ரேஞ்சுக்கு டைனோசர கொண்டு வந்து நிப்பாட்டுங்கோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
9 November 2011 04:22

உங்கள மறப்பேனா... காட்டான் டைனோசர கொண்டுவரமாட்டான்னு நினைக்காதீங்கோ உங்களுக்காக அத கொண்டு வந்தா போச்சு மாப்பிளைக்கு இல்லாததா.?? ஹி ஹி

athira said...

கடவுளே.... நேற்றுக்காலையும்கூட வந்து எட்டிப் பார்த்திட்டுத்தான் போனேன், பழையதலைப்புத்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

இப்போ இங்கயும் நானும் கார்ட் பெட்டிலதான் ஏறியிருக்கிறேன்போல, இதுவும் வசதிதான்.... எந்தப் பெட்டியெண்டால் என்ன, ரெயினில ஏறினாலே போதுமென நினைப்பன் நான்:)).

சரி நில்லுங்க படிச்சிட்டு வாறேன்.

athira said...

எல்லா மருமக்களும் இப்படி அடிபடுகினமே... ஒருக்கால் எண்டாலும் உங்கட மகளையும் கண்ணில காட்டுங்கோவன், பார்க்காமலே இப்பூடி சவுண்டு விடுகினமே அவ்வ்வ்வ்வ்வ்:))).

// (என்ர பொண்ணு அழகுக்கு இவ எம்மாத்திரமுங்க! )//

ஹா..ஹா..ஹா... நான் இவதான் பொண்ணாக்கும் என நினைச்சுட்டேன் வெடி சொடி:))).

athira said...

//அப்படியே வெத்திலைய தந்தாலும் அத கிள்ளிப்போட்டுத்தான் தருவாங்க. அப்படி செய்யாட்டி லஷ்சுமி வீட்ட விட்டு போயிடுவாள்ன்னு நம்பினாங்க//

இதுதான் அடியைக் கிள்ளிவிட்டுக் கொடுக்கும் காரணமோ? எனக்கு இன்றுதான் இது தெரியும்.

நகைச்சுவையோடு நகைச்சுவையாக வெற்றிலை பற்றிய நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க, முன்னர் அறிந்திராத தகவல்கள்.

athira said...

இன்னும் மாப்பிள்ளை செலக்ட் பண்ணலியோ? நீங்க எப்போ செலக்ட் பண்ணுறது, மகளுக்கு எப்போ திருமணம் ஆகிறது?..

வேணுமெண்டால் இந்தப் பொறுப்பை வலையுலக சகோதரிகளிடம் ஒப்படையுங்கோ, நாங்க நாளைக்கே மாப்பிள்ளையோடு வந்து வாசல்ல நிக்கிறோம்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

athira said...

ஒண்ணே ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் சொல்லிட்டுப் போறேன்....

என்பக்கத்தில 73 ஆவது ஃபலோவர் நீங்க, உங்கட பக்கத்தில 73 ஆவது ஃபலோவர் நான்... அதெப்பூடி?????..

ஊசிக்குறிப்பு:
காதைக்கொண்டுவாங்கோ, நிரூபனுக்கு மட்டும் மகளைக் கொடுத்திடாதையுங்கோ.... ங்கோ ...ங்கோ.... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

காட்டான் said...

athira said...
கடவுளே.... நேற்றுக்காலையும்கூட வந்து எட்டிப் பார்த்திட்டுத்தான் போனேன், பழையதலைப்புத்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

இப்போ இங்கயும் நானும் கார்ட் பெட்டிலதான் ஏறியிருக்கிறேன்போல, இதுவும் வசதிதான்.... எந்தப் பெட்டியெண்டால் என்ன, ரெயினில ஏறினாலே போதுமென நினைப்பன் நான்:)).

சரி நில்லுங்க படிச்சிட்டு வாறேன்.

வாங்கோ சகோதரி வாங்கோ.. நீங்க எந்த பெட்டியில ஏறினாலும் கவளை இல்லை வண்டியில ஏறினா போதுமே..

காட்டான் said...

athira said...
எல்லா மருமக்களும் இப்படி அடிபடுகினமே... ஒருக்கால் எண்டாலும் உங்கட மகளையும் கண்ணில காட்டுங்கோவன், பார்க்காமலே இப்பூடி சவுண்டு விடுகினமே அவ்வ்வ்வ்வ்வ்:))).

// (என்ர பொண்ணு அழகுக்கு இவ எம்மாத்திரமுங்க! )//

ஹா..ஹா..ஹா... நான் இவதான் பொண்ணாக்கும் என நினைச்சுட்டேன் வெடி சொடி:))).

ஹா ஹா ஹா என்ர பொட்டைய உங்களுக்கு காட்டுறதுல எனக்கென்ன குறைஞ்சு போகும் ஆனா போட்டி முடியுறவரை அவள இந்த மருமோன்கள் கண்ணுல காட்டக்கூடாது ஹி ஹி ஏன்னு கேக்காதிங்கோ...!!!

காட்டான் said...

athira said...
இன்னும் மாப்பிள்ளை செலக்ட் பண்ணலியோ? நீங்க எப்போ செலக்ட் பண்ணுறது, மகளுக்கு எப்போ திருமணம் ஆகிறது?..

வேணுமெண்டால் இந்தப் பொறுப்பை வலையுலக சகோதரிகளிடம் ஒப்படையுங்கோ, நாங்க நாளைக்கே மாப்பிள்ளையோடு வந்து வாசல்ல நிக்கிறோம்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

ஹி ஹி சகோதரிகளிடம் பொறுப்ப தந்தா நீங்க சட்டு புட்டென்னு அண்ணனுக்கு சிரமம் வைக்காம கல்யாணத்த முடிச்சிடுவீங்க அப்புறம் என்னைய ஒருத்தனும் மாமா மாமானு சுத்த மாட்டாங்க கொஞ்சம் பவுசு காட்டினாதான் என்ர பொட்டைய பற்றி வரப்போற மருமோனுக்கு ஒரு “இது“இருக்கும்.. ஹி ஹி ஹி

காட்டான் said...

athira said...
ஒண்ணே ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் சொல்லிட்டுப் போறேன்....

என்பக்கத்தில 73 ஆவது ஃபலோவர் நீங்க, உங்கட பக்கத்தில 73 ஆவது ஃபலோவர் நான்... அதெப்பூடி?????..

ஊசிக்குறிப்பு:
காதைக்கொண்டுவாங்கோ, நிரூபனுக்கு மட்டும் மகளைக் கொடுத்திடாதையுங்கோ.... ங்கோ ...ங்கோ.... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

ஆமா நாங்க 73 வது ஃபலோவர்ன்னுறது எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு...!!

நீங்க சொன்னாலும் அந்த விதானையாற்ற பொட்டைய ஏமாத்தினவனுக்கு என்ர பொட்டைய கொடுக முடியாது.. அவருக்கு செம்புதான் திண்ணையில நின்னுகொண்டு தீர்ப்ப சொல்லட்டும் ஹி ஹி

நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்...

athira said...

//நீங்க சொன்னாலும் அந்த விதானையாற்ற பொட்டைய ஏமாத்தினவனுக்கு என்ர பொட்டைய கொடுக முடியாது.. அவருக்கு செம்புதான் திண்ணையில நின்னுகொண்டு தீர்ப்ப சொல்லட்டும் ஹி ஹி //

ஹையோ என்னால சிரிச்சு முடியுதில்லை:)))... இண்டைக்கு நிரூபன் ஏற்கனவே சுடுதண்ணியாக் கொதிச்சுப்போய் இருக்கிறார், இதைப் பார்த்தால்... உங்களுக்கு டமால் டுமீல்தான்...:))) எதுக்கும் பத்திரமா ஐபில் ரவரில ஒளிச்சிருங்கோ:))).

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Yoga.S.FR said...

வணக்கம் காட்டான்!பதினொன்று,பதினொன்று,பதினொன்று வாழ்த்துக்கள்!?எப்படி இருக்கிறீர்கள்?செம டென்ஷனில் இருப்பது தெரிகிறது!இத்தனை நாள் செங்கோவி ப்ளாக்கில் வந்து போயும்,எனக்கு ஒரு "சிக்னல்"கொடுக்காது விட்டு விட்டீர்களே?இன்று தான் கடையில் பொருள் இருப்பது தெரிய வந்தது.மன்னிக்கவும்.லாசப்பலில் நீண்டு,நெடிது வளர்ந்த"மரங்களுக்கு"சிகப்பு வர்ணம் தீட்டும் வெற்றிலை இப்படியும் உதவுவதை எண்ணி அளவிலா மகிழ்ச்சி!மாப்பிள்ளை தேர்வின் போது என்னை நடுவராக அழைக்காததற்கு நன்றி!மீண்டும் சந்திப்போம்!!!!

காட்டான் said...

@ athira 
 ஏற்கனவே நான் அங்கினதான் ஒளிச்சிருந்தேன் இப்ப நீங்க சொல்லிப்போட்டீங்க.. அவன் பாவி "மணிய" அங்கின அனுப்பிடுவான் இடத்த மாத்த வேண்டியதுதான்..ஹி ஹி

காட்டான் said...

@மாயா..
வாழ்த்துக்கு நன்றி மாப்பிள..

காட்டான் said...

 Yoga.S.FR said...
வணக்கம் காட்டான்!பதினொன்று,பதினொன்று,பதினொன்று வாழ்த்துக்கள்!?எப்படி இருக்கிறீர்கள்?செம டென்ஷனில் இருப்பது தெரிகிறது!இத்தனை நாள் செங்கோவி ப்ளாக்கில் வந்து போயும்,எனக்கு ஒரு "சிக்னல்"கொடுக்காது விட்டு விட்டீர்களே?இன்று தான் கடையில் பொருள் இருப்பது தெரிய வந்தது.மன்னிக்கவும்.லாசப்பலில் நீண்டு,நெடிது வளர்ந்த"மரங்களுக்கு"சிகப்பு வர்ணம் தீட்டும் வெற்றிலை இப்படியும் உதவுவதை எண்ணி அளவிலா மகிழ்ச்சி!மாப்பிள்ளை தேர்வின் போது என்னை நடுவராக அழைக்காததற்கு நன்றி!மீண்டும் சந்திப்போம்!!!!
11 November 2011 00:04

வணக்கம் அண்ண! வாங்கோ வாங்கோ!

ஹி ஹி நீங்க ஏற்கனவே நடுவரா இருக்க விருப்பமில்லைன்னு எனக்கு தெரியும்தானே..!! ?

பதிவ போட்டுட்டு அன்றிரவே செங்கோவியின் பிளாக்கிள் உங்களுக்கு அறிவித்தல் போட்டனான்.. கொஞ்ச நேரத்திலேயே அத எடுத்திட்டன் அத பார்க்க விளம்பரம் வேண்டுறத போல இருந்ததால்!!? செங்கோவிகூட பார்திருக்கமாட்டார்ன்னு நினைக்கிறேன்.. நேற்று  உங்களுக்கு கட்டாயம் சொல்லோனும்ன்னு தோனியதால்தான் அப்படி போட்டேன்.. நன்றியண்ண வருகைக்கு..

KANA VARO said...

மாமோய்! நான் போனில வாசிச்சதால கமெண்ட் பண்ண மறந்திட்டன். அதுக்குள்ளை நம்ம பயலுக பின்னி பெடலேடுத்துட்டாங்க.

PUTHIYATHENRAL said...

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

PUTHIYATHENRAL said...

தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

Anonymous said...

காலம் தாழ்த்தி வந்ததுக்கு மன்னிக்கவும்...ஆறுதலாய் பதிவை வாசித்தேன்...

தண்டனையாய் அத்தனை பின்னூட்டங்களையும் வாசித்தேன்...-:)

அடிக்கடி எழுதுங்கள்...

Lakshmi said...

காட்டான் சார் சீக்கிரம் மருமோனைத்தேர்ந்தெடுங்க. நீங்க எக்க சக்க வழிமுறைல்லாம் வச்சிருக்கீங்க பாவம் பொண்ணுக எவ்வளவு நாள் தான் காத்துகிட்டிருக்கும்?

Yoga.S.FR said...

சனி?!வணக்கம்!பொன் ஜூர்!!!!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

RAMVI said...

காட்டான்,தங்களின் பதிவைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கிறேன்.

மாலதி said...

veri nice

அம்பாளடியாள் said...

காட்டானின் புதிய சுயம்வர சிந்தனை அருமையாகப் போகின்றது கதை .இப்ப எங்க பாத்தாலும் பொண்ணு
தேடுற விசயத்தை இந்தக் காட்டானிடம் பல காளைகள்
ஒப்படைத்துவிட்டனர் போலும் .எங்க பாத்தாலும் காட்டானே இந்த விசயத்தில கதானாயகராகத் தோன்றுகின்றார் .வாழ்த்துக்கள் காட்டானே .அப்படியே எங்களையும்
நினைவில் வைக்கத் தவறிவிட்டீர்களே இது நியாயமா.....மிக்க நன்றி காட்டான் பகிர்வுக்கு .

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Rupan com said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-