முகப்பு

Wednesday, 22 June 2011

சீமானுடன் ஒரு சந்திப்பு..!!

வாங்க பங்காளி  வாங்க..! இப்படி ஒரு தலையங்கம் போட்டுத்தான் உங்களை என்னுடைய வலைப்பதிவுக்க..!வரவைக்கவேண்டியிருக்குது..!?இல்லாட்டி ஏதோ பரம்பரை பகையாளியை கண்டவன் மாதிரி பம்முறிங்களே பங்காளிங்க..

எனது ஈழத்து வாழ்கை முழுவதையும் கிராமத்திலேயே கழித்த
எனக்கு பாரீஸ் வந்த ஆரம்ப காலங்களில்  தவிர்கமுடியாத காரணங்களால் அதிக நெருக்கடி மிக்க இடத்தில் வாழவேண்டி இருந்த அந்த நாட்களை நினைக்கும்போது..! ஐய்யோ  வேனாம் விட்டிடுங்க...!

ஆனாலும் இப்பொழுது  எனது வேலை தலம் அமைந்திருப்பது 14ம் luis மன்னனின் வெர்சை கோட்டைக்கு அருகில் அழகிய காட்டு பகுதியில்..  காட்டுக்கு மத்தியில் மூன்று சிறிய குளங்கள் மான்,முயல் போன்ற சிறிய சாது மிருகங்களும் இருக்கின்றன வேலை நேரங்களில் போக்குவரத்து இடர்பாடு ஏற்பட்டால் (கோடை காலங்களில்)இக்குளக்கரையில் அமர்ந்து பத்திரிக்கைகள் பார்பது அல்லது கணணியில் மேய்வது என பொழுதை கழிப்பேன்..!

 இங்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதத்தின் மத்தியில் வரும் சனி ஞாயிற்று கிழமைகளில் தண்ணீர் திருவிழா (உண்மையானh20!!)நடத்துவார்கள் இது ஒரு சிறுவர்களிற்காண நிகழ்சி..!?கடந்த 10வருடங்களாக இவ்விழாவிற்கு வந்து (நானும் சின்னப்புள்ளதானுங்கோ..!!?)செல்கிறேன். இப்போது இப்படியான விழாக்களிக்கு முன்னர் போல் அதிகமானவர்கள் பங்கு பெறுவதில்லை.. கணணியுகத்தில் எல்லோரும்  வீட்டிக்குள் முடங்குகிறார்கள் இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் இப்படியான விழாக்கள் காணாமல் போகலாம்..!? இவ்வாண்டு கென்னிய நடனக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்கள் ..

எனக்கோர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது பிரான்ஸ் வந்த ஆரம்ப காலங்களில் என்னுடன் நட்பு பாராட்டிய சைமனை(தமிழில் சீமான்..!??)சந்தித்தேன் சைமன்   ஒரு சுவாரசியமான மனிதர் வாழ்கையின் போக்கை அதன் வழியே செல்லவிட்டு தான் அதன் பின்னே பறக்கும் ஒரு சுதந்திர பறவை..!

சைமன் மதங்களை பின் பற்றாத ஒரு யூதர் இவர் பிறந்தது மொரோக்கோ நாட்டின் காசபுலோங்கா நகரத்தில் இவருக்கு பதினொரு சகோதர சகோதரிகள்.(எனக்கு ஒரு சகோதரனை மட்டுமே தெரியும்)ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட பிரான்சுக்கெதிரான போராட்டத்தினால் தனது ஐந்து வயதிலேயே பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்து விட்டார்..!ஆரப்ப நாட்களில் எனக்கு சைமனை ஒரு தொழிலதிபராகவும்(பத்திற்கு மேற்பட்டோர் இவரி தளபாட பட்டறையி வேலை செய்தார்கள்) நல்ல மனிதராகவும்..!? தெரியும்..அன் நாட்களில் லைலா என்ற பெயருடைய அரேபிய பெண்னுடன் வாழ்ந்தார் திருமண ஒப்பந்தமின்றி..?(இருவருக்குமிடையி இருபது வயது வித்தியாசம் அது மட்டுமன்றி இவரின் குடுப்பத்திலும் குழப்பம் இதனால் ...?)

சீன பொருட்களின் இறக்குமதியும் பெரும் பல்பொருள் அங்காடிகளின் வரவும் சைமன் போன்ற சிறு தொழிலதிபர்களை நடுத் தெருவில் விட்டு  விட்டது..!? சைமன்  மட்டுமா? இவரை சார்ந்திருந்த பத்துக் குடும்பங்களையும் சேர்தே !!!?? (இப்படி எத்தனை சைமன்களோ?)இப்பொழுது சைமன் ஒர் கூலித்தொழிலாலி கையில் காசை வைத்திருக்கமாட்டார் அதைப்பற்றி கேட்டால் நாளை நான் இருப்பேனா தெரியாது ஆனால் எனது மனதுக்குள் ஒரு வைராக்கியம் இருக்கிறது இந்த உலகிற்கு எந்த ஒரு சல்லிக்காசையும் விட்டுச் செல்லமாட்டேன்.!!(சமூகத்தின் மேல் கோபம்!!??)

பேச்சு குடும்ப வாழ்கை பற்றி திருப்பியது மிசல்(எனது பெயரை இங்குள்ளவர்கள் உச்சரிக்க சிரமப்படுவதால் எனக்கு நானே இட்ட பெயர்)உனக்கு எத்தனை பிள்ளைகள்?எனக்கு இரண்டு பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டே கைதொலைபேசியில் உள்ள பிள்ளைகளின் புகைபடத்தை காட்டினேன் சிரித்துக்கொண்டே கூறினார் மிசல் நான் ஏன் பிள்ளைகளைப் பெறவில்லையென்று தெரியுமா.!?இப்ப உன்னை போன்ற ஒருவர்
செலவலிப்பது நான்கு பெயருக்கு போகிறது ஆனால் நான் செலவலிப்பது எனக்கு மட்டுமேயென்றான் சிரித்துக்கொண்டே..
இத்துடன் நகைசுவையாக கூறினார்..!!எனக்கு பிள்ளைகள்  பிறந்தால் அனாதையில்லதில் விட்டு விட்டு பதினெட்டு வயது வந்தவுடன் மகனே! நாந்தாண்டா உன் அப்பன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கனுப்புவேன் அப்பணத்தில் மிஞ்சிய வாழ்க்கையை  ஓட்டுவேன் என்கிறார்...!சிரித்துக்கொண்டே..!

நீண்ட அமைதியின் பின்பு சைமனே தொடங்குகிறார்..மிசல் உனக்கு தெரியாததல்ல இப்போதைய எனது நிலையில் திருமண பந்தத்தை நினைத்து பார்க்க முடியாது எனது எஞ்சிய காலத்தை இப்படியே கழிக்கப் போகிறேன்..ஏனெனில் எனது நட்பு வட்டாரத்தையும்  சொந்தங்களையும் பார்க்கிறேன் அதிகமானவர்கள் விவாகரத்து மீண்டும் திருமணபந்தம் இப்படி போகிறது அவர்கள் வாழ்க்கை இதில் எனக்கு இஸ்டமில்லை...

மாறிவரும் உலகம் வெற்றி பெற்றவர்களையே கணற்கில்  கொள்கிறது..?இவ்வுலகத்திற்கு சைமன் போன்ற சிறுதொழிலதிபர்கள் தேவை என்பதை கணற்கிட மறுக்கிறது உலகத்தில் உள்ள தொழிலாலர்களில் 70%மானவர்கள் சிறுதொழிலை நம்பியே வாழ்கிறார்கள்...சிறுதொழில் நலிவடைவது  உலகம் நலிவதற்குச் சமம்...??

Thursday, 16 June 2011

ஏதோ சொல்லுறேங்க..

அணு...!இந்த வார்த்தையை  இதன் செயல்பாட்டை..பள்ளியில்
வாத்தியார்(விஞ்ஞான பாட நேரம் முகட்டிலிருக்கும் மூஞ்சுருக்களைதானே பார்த்துக்கொண்டிருந்தோம்..!?) தலையால் தண்ணி குடித்து
சொல்லித்தந்தாலும் என் போன்ற மரமண்டைகளுக்கு புரியவே புரியாது..!

மார்ச்11க்கு  பின் இப்பொழுதெல்லாம் உலகம் முழுவதும்
அணுவுலைகலைப்பற்றி பேசாதவர்களே இல்லையெனலாம்.. ஜப்பானின் புக்கிசுமா
சம்பவம் உலக அணுவுலைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.!?

தலையிடியும்..காய்ச்சலும் தனக்கு  தனக்கு வந்தால்தான் தெரியுமென்பதுபோல்..!
இப்பத்தான் நானும் முளிச்சுப்பாக்கிறேன்
பிரான்சில் 90%க்கு மேல் அணு மின்சாரம்தானாம்( இலங்கையில் இருக்கும் போதுBBCதமிழ் ஒலி கேட்பதற்காக இரவு
9மணியிலிருந்து 10மணிவரை சைக்கிளை  சுத்திச் சுத்தி நாங்களும் மின்சாரம் தயாரிச்சிருக்கோம்க..!)


ஆற்காட்டாரால் ஆட்சியே போயுள்ள இந்தக்காலத்திலும்கூட..? அணுமின்சாரம் அவசியம்தானா? மிக வளர்சியடைந்த யப்பானாலேயே அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்த முடியாது கையை பிசைந்து
நிற்கும் இன்நேரத்தில் இந்தியாவில் மின்சாரத்திற்காக அதிக அணுவுலைகலை
உருவாக்க திட்டமிடுகிறார்கள்..!?

பிரான்சில் இப்பொழுது அணுவுலைகளைப் பற்றி அனைத்துக்கட்சிகளிடமும்  கருத்து
வேறுபாடுகள்.! பசுமைக்கட்சியைத் தவிர.?மற்றவர்கள் மதில் மேல்
பூனைகளே...ஏனெனில் உலகத்தில் அதிக அணுவுலைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பிரான்சின் அரேவா நிறுவனமும் ஒன்று.

இதற்காகத்தான் நம்ம சித்தப்பு சார்கோசி
அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சர்தாஜித்
தாத்தாவை சந்திச்சு பல ஒப்பந்தங்களை
போட்டுக்கொண்டு வாரார்? ஆனாலும் ஜரோப்பாவில் அணுவுலைகளுக்கு பரவலான எதிர்பு வளர்ந்து வருகிறது.!?

நான் பிரான்ஸ் வந்த ஆரம்ப நாட்களில்
இல்லாத ஒரு மாற்றத்தை கடந்த 5வருடங்களாக உணர்கிறேன்..! அது என்னவெனில் கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில்
உள்ள வீடுகளின் கூரைகளில் மின்சார உற்பத்தி பலகைகலையும் வயல் வெளிகளில் காற்றாலைகலையும் காணக்கூடியதாய் இருக்கிறது.. அத்துடன்
வாகன தரிப்பிட  இயந்திரங்கள் இயங்குவது சூரிய ஒளியிலேயே(இந்த குளிர்நாட்டிலேயே..!?)

இவை மட்டுமா? 14/06/2011இல் பெல்ஜியத்தின் தலை நகர் புருக்சலில் இருந்து solarimpulse என்று பெயரிடப்பட்ட சூரிய ஒளி விமானம் பாரிஸ் வந்தடைந்தது.! பாருங்கோப்பு சூரிய ஒளியில் விமானமே ஓட்ட முடியும்போது..(என்ன விமானத்தை காரின் வேகத்திற்கு  இனையாக ஓட்டினார்கள்...!?)
வீட்டுத்தேவைக்கு மின்சாரம் தயாரிக்க முடியாதா மக்கா..?

13/06/20011இல் இத்தாலியில் எடுக்கப்பட்ட
வாக்கெடுப்பில் சில்வியோ பெர்லஸ்கோனி(என்ன கன்றாவிப் பெயரோ..?)அரசின் அணுக்கொள்கையை
எதிர்த்து 95%மான மக்கள் வாக்களித்துள்ளார்கள்(இவருடைய பாலான செயல்பாட்டிற்கும் சேர்த்து குத்தோ குத்தென்று குத்தி விட்டார்கள் வாக்கால்)

இவ்விடயத்தில் சிறந்த செயல்பாடுகளை
யேர்மனியின் அஞ்சேலா மேர்கல் அரசு செயல்படுத்துகிறது 2022க்குள்
அனைத்து அணுவுலைகளையும் மூடவுள்ளது
அதனால்தான் ஜரோப்பாவில் பாச்சா பலிக்காதெண்டு சித்தப்பு இந்தியாவோடு
குழையிரார் இன்னும் இளிச்சவாயர்கள்
இருக்கிறார்களா  என்றுவேறு தேடுகிறார்..!?

இவ்விடயத்தில் இத்தாலியம்மா தன்னுடைய தாய்நாட்டு
மக்களின் முடிவை நினைத்தாவுதல் சித்தப்பு போன்றோரிடம் கவனமாக இருக்கலாம் (இஞ்ச ஆட்டோ வாராதென்று
நினைக்கிறேன்.!) இந்தியாவிற்கு சிறப்பான
மாற்று வழி சூரிய மின்சக்தியும் காற்றாலைகலுமே..!?

இந்திய குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் காற்றாலைக் கருவிகலால் ஜரோப்பாவில் ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள்..!(எல்லாவற்றையும் கண்டு பிடித்து கொடுப்போம் ஆனால் அதை அனுபவிக்க மாட்டோம்?)

நான் நினைக்கிறேன் ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமெண்டதை தவறாக விளங்கி விட்டார்களோ!? இதில வேற கனவுகானு..கனவுகானு..! 2020இல் நாமதான் வல்லரசு(இதுக்கு விளக்கமென்னப்பு.?) என்று கூவிக்கொண்டு திரியுரவர் நாங்க யுரேனியத்த பாவிக்கேலமக்கா... தோரியத்ததான் தோண்டுறம்ன்கிறார் கொக்கமக்கா தோரியம் வெடிச்சான்னா...!?
மனிதன்,மிருகம்ன்னு பிரிச்சு மேயுமோ.!?

தலையை சுத்தி மூக்க தொடாம விசயத்திற்கு வாரன் கொக்க மக்கா இந்தியாவில 365 நாளும் சூரிய ஒளி இருக்கு மக்கா  நன்றாக வீசக்கூடிய ..?
தென்மேற்கு பருவக்காற்று  இருக்கு மக்கா
இதுவும் காணாதென்னா மூன்று பக்கமும்
கட(ன்)ல் இருக்கு மக்கா (விழுந்தும் சாகலாம்,அலைகலை வைத்து மின்சாரமும்
செய்யலாம்) ஆனால் அரசியல் வாதிகளுக்கு தொலை நோக்கு பார்வைகள்..!இல்லை.? (உ+ம்  கலைஞர் போல் நீண்ட கால திட்டமிடல் ..!?இல்லை பின்ன என்ன மக்கா இலவச
தொலைக்காட்சியை கொடுத்த கையோடு கலைஞர் TVயை திறப்பது, கட்சிக்கு வருங்கால தலைவர் பதவிக்கு அண்ணன் தம்பிகளை மோத விடுவது யார் வென்றாலும் குடும்பத்துக்குள்ளாரதான் கட்சி ...!?)

அட நம்ம ராஜபக்ச ஐய்யாவே யப்பான்  மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் (இதவிட்டா வேற இடம் தெரியாது..!?)1237 மெகாவற் சக்தி கொண்ட சூரியசக்தி மின்நிலையம் ஒன்று அமைக்கப்படள்ளதாக 2010டிசம்பரில் அறிவித்திருந்தார்(இப்ப மாத்தையா யப்பானுக்கு உதவி செய்கிறார்..!!??)

எதுவாக இருந்தாலு ஜெயலலிதாம்மா கொண்டு வந்த மழை  நீர் சேகரிப்பு (இப்ப என்ன நிலை..!?சமசீர் கல்விக்கு ஆத்தா அடிச்ச ஆப்பு போல் மழை நீர் சேகரிப்புக்கு தாத்தா ஆப்படித்தாரா..!?) திட்டம் போல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் சூரிய ஒளி சேகரிப்பு பலகைகள் அமைக்க உத்தரவிடவேண்டும்.
அதுவரை அம்மா சொல்வதுபோல் குஜராத்தில இருந்து கொண்டுவாராக, மத்தியதொகுப்பில் இருந்து கொண்டுவாராங்க என்று சொல்வதை கேட்போம் காதுகள் எதற்கு இருக்கின்றன..?

Tuesday, 14 June 2011

இதுதாண்டா பிரான்ஸ்.....!!?


டொமினிக் பொரஸ்கான் இந்தப்பெயரை ..
உச்சரிக்காதவர்கள்..இன்று இங்கு இல்லையெனலாம் .....!!??.உலக நாணய நிதியத்தின் முன்னால்..!?தலைவர்
கிறீஸ்,அயர்லாந்து,போத்துக்கள்,...
போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை
தூக்கி நிறுத்த வந்த சோசலிச தூதன்(பாருங்கோ ஏழநாடுகளுக்கு உதவி செய்யமாட்டார்கள் அப்படி செய்தாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்...!!??)
88-91இல் நிதி,வர்த்தக அமைச்சர், வர்த்தக பேராசிரியர்
90களின் ஆரம்பத்தில் பிரன்சு மக்களை கட்டிப்போட்ட 7sur7 என்னும்  நிகழ்சியை நடத்தியஅழகி(நிசம்தாங்கோ..பெரும்செல்வந்தர் அக்காலத்தில் இவர் செய்த நிகழ்சிகளின் பார்வையாளர்களை வட்டத்தை இதுவரை எந்த ஒரு நிகழ்சியும்
முறியடிக்கவில்லை என நினைக்கிறேன்)

அன்சங்கிலரின் கணவர்,முன்னால் சோசலிச அரசின் கேபினட் அமைச்சர்
பாரிசின் புறநகர் சார்சலின் முன்னால் மேயர் அடுத்தவருடம் மே மத்தியில் நடக்கவுள்ள
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருந்த பிரதான சோசலிச கட்சி வேட்பாளர்(புள்ளி விபரங்களின்படி இவர்தான்அடுத்த ஜனாதிபதி...இவர் ஜனாதிபதித்தேர்தலில்
போட்டியிட்டால்..!?நம்ம சித்தப்பு.....?தற்போதய ஜனாதிபதி சார்கோசி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவாராம் இஞ்சதான்
நிக்கிறார்....!!??நம்ம சித்தப்பு ..? மூன்றாம் இடம் வருபவர் இரண்டாம் சுற்றில் போட்டியிட முடியாது..!) இப்படிப்
பட்ட திறமைகள் நிறைந்த பொரஸ்கான்..!?
நம்ம நித்தியானந்த சாமி மாதிரி பாலான விசயத்தில் மாட்டி(வைக்கப்பட்டு...?)நிற்கிறார்.
நியோக்கின் பிரபலமான உல்லாச ஓட்டல்
ஒன்றின் பணிப்பெண் இவர்மீது கற்பழிப்பு,வன்புனர்ச்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்(இங்கேயும் பாருங்கோ ரஞ்சிதா மாதிரி ஒரு கறுப்பழகிதான்?)இதற்கு தண்டணை கிடைத்தால்..?மாப்புவின் ஆயுசு முழுவதும் ஜெயில்தான்..கழிதான்...!!? இத்தனைக்கும் பிறகு ஒரு புள்ளி விவரப்படி பிரன்ஸ்சு மக்கள் 67வீதமானவர்கள் இதனை நம்பவில்லை..!! ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு
என்கிறார்கள்...?ஒரு கற்பனைக்குத்தான்..
பொரஸ்கான் ஜனாதிபதியாகினால்..?
பெரியண்ணாச்சி அமெரிக்காவின் கைப்புள்ளமாதிரி நடந்துகொள்ளமாட்டார்
(சோசலிச கட்சிக்கென்று சில கொள்கைகள் உண்டு )மறுபுறம் நம்ம மாப்புவும் ஏகபத்தினி விரதனில்லை இவர் மீது ஒரு பெண் நிருபர் பாலியல் புகார் அளித்துள்ளார் அத்துடன் சோசலிச கட்சியின்தொண்டணின் மகளுடனும் கசமுசாவென பத்திரிகைகள் கூறுகின்றன.!
வழக்கு நடக்கும் வரை மாப்பு அமெரிக்காவுலதான் நிற்கனும் .???அதற்குல்லாற ஜனாதிபதி தேர்தல் முடிந்து போயிடும்(சித்தப்புக்கு இதுதானே வேண்டும்..!?) இதில நாங்க கவனிக்க வேண்டியது சோசலிச கட்சியின் தலைவி
மாட்டினோ பிரியைதான் அம்மாவிற்குத் தெரியும் தான் ஜனாதிபதியாக முடியாதென்று...!? மாப்புவை ஜனதிபதியாக்கிவுட்டு...?தான் பிரதமர் பதவியை பிடிப்போமென்று (மாப்பு உலகம் சுத்தட்டும் தான் உள்ளுர் சுத்துவோமெண்டு )இரண்டு பேருக்கும்
ஆப்புத்தான்..சித்தப்பு ஒரு அரசியல் புலி முன்னால் ஜனாதிபதியாலேயே(ஜக்சிராக் ) ஒன்றும் செய்ய முடியவில்லை (இதைப் பற்றி பின்னர் ஒரு பதிவிடுகிறேன்) மொத்தத்தில் சித்தப்பு ஜனாதிபதியாவது
உறுதியாகிறது ..!? இத்துடன் ஜரோப்பாவில் இப்பொழுது வலதுசாரிகள்
வெற்றி பெற்றுக்கொண்டு வருகிறார்கள்!?
சித்தப்பு காட்டில மழைதான் ........எதற்குமிருக்கட்டும் 2012ல்மீண்டும்.?ஜனாதிபதியாய் பொறுப்பேற்கவுள்ள சார்கோசிக்கு எனது வாழ்த்துக்கள்.!?

Monday, 13 June 2011

மிதி வண்டிகளுடன்...எனது வாழ்க்கை பயணங்கள்...!இன்று காலையில் எனது மிதிவண்டியை(சைக்கிள் என்றே  எழுதுகிறேன் இலகுவாக இருக்கின்றது..?)எடுத்துக்கொண்டு வேலைத்தலத்திற்குசெல்கிறேன்.குளிர்காலங்களிலும் இங்கு  சைக்கிளை உபயோகிப்போர் அதிகரித்து வருகிறார்கள்... இதற்காகவே இங்கு  சைக்கிளுக்காக புதிய சாலைகளை உருவாக்கி வருகின்றார்கள்..எனது நினைவலைகள் பின் நோக்கிபயணிக்கிறது...
நான் பார்தவரை இங்கு தமிழர்கள் சைக்கிள்
பாவிப்பது மிக மிக குறைவே. இத்தனைக்கும்
பத்து வயதிக்குமேலிருக்கும் இலங்கையர்  ஒருவர்கூட சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் இல்லையெனலாம்..?இப்படித்தான் நானும்  எனது சிறுவயதில்                              

அப்பாவின் பெரிய சைக்கிளை எடுத்து (வாருக்கு கீழ் ) விழுந்து எழுந்து ஓட்டிப்பழகினேன் தழும்புகளுடன்.
ஓரளவு ஓடிப்பழகியவுடன் மனதுக்குள்
பட்டாம்பூச்சிகள்தான்.பட்டாம்பூசிகளுக்கு சாலை விதிகள் ஏது? எந்த ஒரு வாகனங்களுக்கும்  வழிவிடமாட்டோம்.
இப்படியான  செயல்பாடுகள் கட்டாயம்
எங்கள் வீட்டிற்கு தெரியவரும் ஏனெனில்
நாங்கள் தடுத்தோடும் வாகணங்களுக்குள்
யாரோ ஒரு சொந்தக்காரன் அல்லது
தெரிந்தவர் இருந்தேதீருவார்கள்(சிறிய கிராமம்தானே எல்லோருமே தெரிந்தவர்தான்..?)வீட்டிற்கு வந்தால் பொங்கல்தான் ..! எனது12வது வயதில்
போடாத குட்டிக்கருணமெல்லாம் போட்டு அம்மாவிடம் கெஞ்சி குளறி அம்மா போட்ட சிலகட்டுப்பாடுகளுக்கு இணங்குவதாக கூறி(அப்போதைக்கு மட்டும் வேறு வழி?)
ரூ1500க்கு(1986க் கடைசியில்)
 புதிய சைக்கிள் ஒன்று வாங்கினேன்.யாழ்பாணத்திலில் இருக்கும்
புகழ் பெற்ற E S P சைக்கிள்  கடையில்.
அன்றுலிருந்து அதிக பொய்களும் சொல்லாப்பழகினேன் பள்ளியில் புத்தகங்கள்
வாங்கவேண்டும்,பென்சில்,பேனா வேண்டுமென்று அம்மாவிடம் காசை கறப்பது சைக்கிளுக்கு  செலவழிப்பது அதை அவர்கள் கண்டு பிடிப்பது இப்படி நாட்கள்
நகர்ந்தன.....இந்திய இராணுவத்தின் கடைசிக்காலங்களில்..?எனது சைக்கிள்
அவர்களுக்கே டிமிக்கி கொடுத்திருக்கின்றது.(நாமதானே பட்டாம்
பூச்சிகள்.?எங்களுக்கு தெரியாத தெருக்களா!?)காலதேவன் விழுங்கும் நாட்களால்....நானும் மூன்று கிலோ மீற்றர்
தொலைவிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு
ஒரு நாளைக்கு நான்கு தடவைகள்(மதியபோசனம் வீட்டில்)சென்று
வருவேன்.(இப்போது எனது கிராமத்திலே இருபது ஆட்டோக்கள் ஒடுகிறதாம் சிறுவர்கள் அதில்தான் பள்ளி செல்கிறார்களாம். எனது முதல் ஆட்டோ
பயணம்12வயதில்...!?கொடுத்து வைத்தவர்கள்)இவை மட்டுமல்லாது பள்ளித்  தேவதைகளின் பின்னாலும் எங்கள் சைக்கிள்  அவர்களை வீடுவரை தேர்ந்த காவளாளி போல் பிந்தொடர்ந்து செல்லும்(சிலசமையங்களில் அடியும் வாங்குவோம்.!)பின்னர் புண்பட்ட நெஞ்சய்
மாரிமுத்து மாமாவின் தென்னந்தோப்பில் புகைவிட்டு ஆற்றி (எழுத்து பிழையா.!?) அங்கிருக்கும் இளநீரை குடித்து(களவாணிப்பயலே.!?)வீட்டுக்குசெல்வோம்.வழியெங்கிலும் பெருசுகள் ஒரு மாதிரியாக பார்பார்கள்.!வீட்டில் ஒரு மாநாடு கூட்டத்தோடு  எங்கள் அம்மாவும் அம்மம்மாவும்  நிற்பார்கள்..(இந்தியராணுவம் பிடித்து விட்டதோ...?)காலவோட்டத்தில்  நாங்களும்
புலம்பெயர்தோம்....இன்று பாரீசின் புறநகர் பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பத்தோடு வசிக்கும் நான் எனது லீவு
நாட்களில் பிள்ளைளோடு சைக்கிளில்
பட்டாம்பூச்சிப் பறப்புக்களை தவறவிடுவதில்லை....!!நான் நினைக்கிறேன்
எந்த ஒரு மனிதனையும் அவனது இளமைக்காலங்களே இயக்குகிறது....?என்னைப் பொறுத்தவரை சைக்கிள்  ஒரு குறியீடு!!!காலமென்னும் சக்கரங்களை பெடல் என்னும் நினைவுகளால் ஓட்டிச் செல்கிறேன்...(மற்றுமொரு பதிவில் பிரான்சில்  எனது சைக்கிள் அனுபவங்களை பதிவு செய்கிறேன்...)
              நன்றி மீண்டும் சந்திப்போம்.