முகப்பு

Saturday 30 July 2011

நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)

 வாங்க அண்ணாத்த வாங்க எப்பிடி இருக்கிறீங்க... இவ்வளவு காலமும் முகம்தெரியாம என்னை கும்முனீங்க... இப்ப நேரில கும்முங்கோன்னுதாண்ண உங்கள இந்த கடைக்கு முன்னால வரச்சொன்னது.. 

அப்புறம் ஊர் புதினம் எப்புடி.. தேர்தல் முடிவு தெரிந்தோன லாச்சப்பல்ல இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடினிங்களாம்..  ஊருக்கு இப்ப போற எண்ணம் இல்லைப்போல தெரியுது ..

 ஏன் அண்ண உடம்ப இப்பிடி ஊத விட்டிட்டிங்க.. ஒழுங்கா டொக்டர் தந்த கொலஸ்ரோல் குளிசய போடுங்கோண்ண அக்கா சொல்லச் சொல்ல கேட்காம இப்பிடி இனிப்ப சாப்பிட்டா சலரோகம் ஏன் வராது கவனமண்ண லங்கா சிறீயில வார சங்கூதப்பட்டவங்க வயத பார்கேக்க பயமா இருக்கண்ண சின்ன சின்ன பொடியங்க எல்லாம் போறாங்க உங்கள பயப்படுத்திறத்துக்கு சொல்லல கவனமா இருங்கோன்னு சொல்லத்தான்ண...!!?

கிட்டடியில ஒரு விசயம் கேள்விப்பட்டேன் அண்ண எங்கட மணியண்ணையிண்ட மனிசி ரோட்டில போகேக்க ஒரு கறுவள் வந்து மடம் உங்களோட ஒருத்தர் கதைக்கோனுமாம்ன்னு டெலிபோன கொடுக்கிறானாம்..
இந்த மனிசியும் என்னத்துக்கு எதுக்குன்னு யோசிக்காம டெலிபோன வாங்கி கதைகிறாண்ண.. அங்கால ஒரு தமிழ் குரலண்ண அக்கா உங்களுக்கு பக்கத்தில நிக்கிற ஆபிரிக்ககாரங்க பொல்லாதவங்க.. மரியாதயா உங்களிட்ட இருக்கிற நகையெல்லாம் களட்டி கொடுத்துடுங்கன்னுறான்...

திரும்பிப்பார்த்தா பத்து பன்னிரெண்டு கறுவல் சுத்தி நிக்கிறாங்களாம்.. வேற என்ன செய்ய முடியுமண்ண இருக்கிற நகைகள கலட்டி கொடுத்திட்டு வீட்ட வந்திட்டாண்ண..மணியண்ண வீட்ட வர விசயத்த சொல்லி பொலிசுக்கு போய் வழக்கு போட்டுட்டு வந்திருக்கினம்..

 இல்ல நான் தெரியாமதான் கேக்குறன் அந்த மனிசியிட்ட டெலிபோன்ல கதைச்சது என்ன ஆபிரிக்ககாரனா..? அவன் எப்பயண்ண தமிழ் கதைச்சு பழகினாண்ண..!!?

அது மட்டுமேண்ண இப்ப இஞ்ச இருக்கிற தமிழர்கள் வீட்டிலதானேண்ண அதிகமா களவுபோகுது.. எங்கட சனமும் வாயகட்டி வயித்த கட்டி உழைச்ச காச நகையிலதானே போடுகினம் ஏன்னு கேட்டா பொம்புள பிள்ளை இருக்கு நாளைக்கு தேவை எண்டினம் அப்ப இங்க இருக்கிற ஆம்பிளைகளின் கழுத்திளையும் கையிலயும் தேடா கயிறு மாதிரி ஒண்டு இருக்கிதே அது எதுக்கண்ண... அவையும் பொம்புள பிள்ளதானோண்ண...

அட இவங்கதான் இப்பிடி சொல்லினம் ஆனா இஞ்ச பிறந்த பிள்ளைகளுக்கு பவுண்ல ஆசையில்ல... அவையெல்லாம் தாங்க போடுற உடுப்புக்கும் செருப்புக்கும் ஏற்ற மாதிரி பிளாஸ்டிக்கில செய்ததைத்தானேண்ண போடுனம்.. இவ எவ்வளத்த அடம்பிடிச்சாலும் அவங்க நகை போடுறத்துக்கு விரும்பினமில்லை.. இதுவும் நல்லதுதானே..!?

இப்பிடி களவப்பற்றி காட்டான் பேசுறான்னு நக்கலா சிரிக்காதீங்கண்ண.. காட்டான் இப்ப முந்தின மாதிரி இல்ல.. காட்டானும் இப்பிடி பாதிக்கப்பட்டதாலதான் சொல்லுறேன்..

இப்பிடித்தான் போனமாசம் வேல முடிச்சுப்போட்டு அரக்க பறக்க ஓடியந்து மெற்றோவ பிடிச்சு வீட்டுக்கு வார வழியில ஒரு பத்து பதினைந்து அடையாங்கள் நிக்கிறாங்க... அவங்கள் நிக்கிற நிலமைய பார்தோன காட்டானுக்கு விளங்கிப்போச்சு இண்டைக்கு ஏதோ நடக்கப்போவுதென்னு..

அதில ஒருத்தன் மிசு உங்களிட்ட சிக்கிரட்டு இருக்கோன்னான்.. மன்னிச்சுகோங்க காட்டான் சிக்கிரட்டு பத்திறதில்லைன்னு சொல்லிமுடிக்கேல்ல இன்னுமொருத்தன் வந்து காட்டாண்ட கோவனத்துக்குள்ள சிக்கிரட்டு பக்கற் இருக்கென்னு போட்டு கொடுத்திட்டான்..!?

அட அது வேறொன்னுமில்ல வேலை முடிச்சு வீட்டுக்கு வரும் வரை டெலிபோன இந்த கள்ளன்களுக்கு பயந்து கோவணத்துக்குள்ளதாண்ண வைச்சுக்கொண்டு வாறது.. அத பாத்துட்டுதான் இவனுங்க சிக்கிரட்டு பைக்கற்தான் இருக்கெண்டு நினைச்சு அத எடுடான்னு நின்னாங்க.. காட்டானும் கோவணத்த காப்பாத்தோனுமே..!? புதுசா வாங்கின ஐபோன காட்டினேன் அதவாங்கி வைச்சிக்கொண்டு... போடான்னு அனுப்பிவைச்சிட்டாங்கண்ணே...

இந்த வயசில இவ்வளவு பேரோட அடிபடவா முடியும்... கொக்குதடிய கமக்கட்டுக்குள்ள வைச்சிக்கொண்டு திருப்பி பாக்காம வீட்ட வந்து சேர்ந்தன்..! அடுத்தநாள்தாண்ண எனக்கு ஞாபகம் வந்திச்சு டெலிபோனுக்கு இன்சுரன்சு போட்டிருக்கிறது..!

ஏன் காட்டான் இன்சூரன்சு போட்டான்னு நீங்க யோசிக்கிறது எனக்கு விளங்குதண்ண... நானும் உந்த டெலிபோன வாங்கேக்க முதல்ல எனக்கு இன்சூரன்சு வேண்டாம்ன்னுதான் சொன்னனான்.. அதுக்கு டெலிபோன வித்த அந்த அழகான பொண்னு எனக்கு கிட்ட வந்து செல்லமா சொல்லிச்சு மிசு காட்டான் இந்த டெலிபோனு விலை அதிகம்... நாளைக்கு நீங்க தொலைச்சுப்போட்டால் புதுசா வாங்கிறதுக்கு  அதிகமா செலவு செய்வீங்க..

ஆனா மாதா மாதம் ஆறு யூரோ கட்டினீங்கன்னா எது வந்தாலும் உங்களுக்கு புது டெலிபோனு நாங்க தருவோமென்னா... காட்டானும் அந்த பிள்ளை கதைக்கிறத  ஜொல்லு விட்டபடி பார்த்ததை அந்த பிள்ள பார்திட்டு அதிலேயே முத்திரைய தடவி இன்சுரன்சு கொம்பனிக்கு கடிதத்தை அனுப்பி வைச்சுட்டாண்ண...  இப்ப அது காட்டானுக்கு வாச்சு போச்சு.. இதுதானப்பு ஜொல்லு விடுவதில் தவறு இல்லைன்னு காட்டான் அடிக்கடி சொல்லுறான்...!!??

புது டெலிபோன எடுக்கிறதெண்டால் போலீஸ் அறிக்கை வேண்டுமாம்.. அதுதான் இந்த பொலீஸ் அறிக்கைய கொண்டுபோய் டெலிபோன் வாங்கின கடையில கொடுத்திட்டு இந்த புது டெலிபோன வாங்கியாறன்..!

அட எனக்கு இதெல்லாம் கவலையில்லண்ண...!? அந்த அறிக்கைய தருவதுக்கு இந்த பொலீஸ் படுத்தினாங்களேபாடு அத இந்த காட்டானால தாங்க முடியலண்ண..!!??

 எதோ காட்டாண்ட அக்கா காட்டான் வைச்சிருக்கிற ஐபோன படத்தில பார்திட்ட மாதிரியும்,அதபோல தனக்கும் தேவையென்று கேட்ட மாதிரியும்,ஊருக்கு போன மணியண்ணையிட்ட தான் வைச்சிருந்த ஐபோன கொடுத்து விட்ட மாதிரியும்,அத எப்புடி போடுறதென்னு தெரியாம அக்கா காட்டானுட்ட அடிக்கடி டெலிபோனில கேக்குற மாதிரியுமல்லோ இருக்குது அந்த பொலீஸ்காரன் பார்வையும் பேச்சுமண்ண.. இது நல்லாவா இருக்கண்ண....!? காட்டான் திருந்தி ரெம்ப நாளாச்சு அண்ணாத்த....!!!!???

77 comments:

ஆகுலன் said...

வடை.........
இவ்வளவு கெதியா வருவன் என்று எதிர் பார்க்க வில்லை....வாசித்து விட்டு வருகிறேன்....

ஆகுலன் said...

இவ்வளவு நடக்குதா....காட்டான் ரொம்பதான் கஷ்டபடுறியள்......

காட்டான் said...

என்ன மாப்பிள கணணிக்கு முன்னாலேயே 24மணித்தியாலமும் இருக்கிறீர்களா...!!??

ஆகுலன் said...

இல்லை......சும்மா வந்தாபோல புடிச்சிட்டன்.. என்னம் ஒருமாதம் தான் இப்படி அப்புறம் யாருக்கு தெரியும்...

காட்டான் said...

ஆகுலன் பாரீசில் காட்டான மாதிரி கஸ்ரபடுகிறவர்களை நீங்கள் உலகில் எங்கும் பார்க்க மாட்டீர்கள்....!!!!???

Unknown said...

மாப்ள இம்புட்டு கஷ்டமாய்யா!...முடிந்தால் தமிழ் மறுமொழிப்பொட்டி இனைக்கவும்.....நன்றி!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

காட்டான் said...

விக்கியுலகம் said...
மாப்ள இம்புட்டு கஷ்டமாய்யா!...முடிந்தால் தமிழ் மறுமொழிப்பொட்டி இனைக்கவும்.....நன்றி!

30 July 2011 17:26

நன்றி மாப்பிள நீங்க சொன்னதை முயற்சிக்கிறேன்...

காட்டான் said...

Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

30 July 2011 17:48
ந‌ன்றி ஐய்யா....

சக்தி கல்வி மையம் said...

காட்டான் திருந்தி ரொம்ப நாலாச்சா?

சக்தி கல்வி மையம் said...

காட்டான் குழ போட்டுதான் ,.. ன்னு சொல்றாங்களே அப்படீன்னா என்ன?

கூடல் பாலா said...

விவரமான காட்டான் .......ஜொள்ளு காட்டான் ........திருந்திய காட்டான் ......கலக்குங்க மாப்ளோய்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

காட்டான் ரொம்ப குஷ்டமைய்யா... சாரி கஷ்டமையா

காட்டான் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

காட்டான் குழ போட்டுதான் ,.. ன்னு சொல்றாங்களே அப்படீன்னா என்ன

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்து பதிவிற்கும்... குழ போடுவதை பற்றி கேட்டீர்கள்.. இது எங்கள் ஊரில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒரு நடை முறை..  ராமாநுசம் ஐய்யாவிற்கு ஒரு முறை இதைப்பற்றி சொல்லியிருந்தேன்.. அதை மீண்டும் உங்களுக்காக தருகின்றேன்...

இந்த காட்டான் பிள்ளை பிடிக்கத்தான் வந்தான்(பதிவுக்கு ஆள் சேர்க்க)இடத்தை மாறி வந்து விட்டேன்..!? ஏனென்றாள் காட்டான் கோழியடித்து வைத்துள்ளான் புலவரிடம் கோழி சாப்பிட வாங்கோன்னு கேட்க வெக்கமாக இருக்கின்றது...!?
 என்றாலும் குழய படலையில் செருகி விட்டேன் ...!!?( ஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்.. நீங்கள் பக்கத்து வீட்டிற்கு போக வேண்டாம் நேரே காட்டானின் வீட்டிற்கு வாருங்கள் எனது படலை திறந்தே இருக்கிறது.. 
(காட்டான் குழ போட்டான்னா உங்கள் பதிவிற்கு வந்து சென்றிருக்கான்,அதை வசித்து விட்டான்னு நீங்கள் அர்த்தம் கொள்ள வேண்டுகிறேன்)

காட்டான் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

காட்டான் திருந்தி ரொம்ப நாலாச்சா? 
சொன்னா நம்புறாயில்லயே மாப்பிள.... !? காட்டான பற்றி தப்பான ஒரு அபிப்பிராயம் தோன்றி விட்டது பிளாக்கிள் அதை மாற்ற முயற்சிக்கிறேன் மாப்பிள...!!!!!!

காட்டான் said...

தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

காட்டான் ரொம்ப குஷ்டமைய்யா... சாரி கஷ்டமையா 

பாருங்கப்பு.. காட்டான் வீட்டு கதவ தட்டும் போதே தடுமாறுறாங்கப்பு..!? உள்ள வந்தா இன்னும் என்னன்னவோ...!?

கவி அழகன் said...

காட்டான் நீங்கள் நல்லா இருக்க வைரவருக்கு வடை மாலை போடுறன்

தனிமரம் said...

இந்த கைபேசிகள் பல களவு போவதால் அதுக்காக அலையும் நேரம்  அதுவும் பொலிஸ் வாக்கு மூலத்திற்கு போவதென்றால் என்ன கொடுமை சரவனா!
அடிக்கடி லாச்சப்பல் போவீர்கள் போல அந்தக்கடை படம் கண்டால் சிலர் குரூப் உடன்வருவார்கள் காட்டான்!

தனிமரம் said...

என்னையா ஓட்டுப்போட ஒன்றிலும் இனைக்கவில்லை இண்ட்லியில் வாக்குப் போடுவம் இல்ல! 

காட்டான் said...

koodal bala said...
விவரமான காட்டான் .......ஜொள்ளு காட்டான் ........திருந்திய காட்டான் ......கலக்குங்க மாப்ளோய்...

நான்றி மாப்பிள‌ நீங்க இருக்கும்வரை காட்டானுக்கு கவளையேது... நாங்களும் கலக்குவோமில்ல...!!?

காட்டான் said...

கவி அழகன் said...
காட்டான் நீங்கள் நல்லா இருக்க வைரவருக்கு வடை மாலை போடுறன்

என்ன மாப்பிள கஷ்டப்பட்டு எழுத்து கூட்டி எழுதினது நான் வைரவருக்கா வடை மாலை...? காட்டானுக்கு போட்டா வேண்டாமென்று சொல்லவாபோறான்..!!?

காட்டான் said...

Nesan said...
என்னையா ஓட்டுப்போட ஒன்றிலும் இனைக்கவில்லை இண்ட்லியில் வாக்குப் போடுவம் இல்ல!

அப்பிடியா..!! மற்றவர்கள் எப்பிடி மாப்பு ஓட்டு போட்டாங்க.. காட்டானுக்கு...?

காட்டான் said...

Nesan said...
இந்த கைபேசிகள் பல களவு போவதால் அதுக்காக அலையும் நேரம் அதுவும் பொலிஸ் வாக்கு மூலத்திற்கு போவதென்றால் என்ன கொடுமை சரவனா!
அடிக்கடி லாச்சப்பல் போவீர்கள் போல அந்தக்கடை படம் கண்டால் சிலர் குரூப் உடன்வருவார்கள் காட்டான்!

காட்டானை பொறுத்தவரை பொலீசுக்கு போவது இன்சூரன்சுக்கு மட்டும்தான்..!!? அவர்கள் தொலைந்த பொருட்களை மீட்டு தருவார்கள் என்பது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்... கதை போல்தான்!!?

ஹேமா said...

காட்டான்...நானும் அடிக்கடி லங்காஸ்ரீ சங்கூதல் பக்கம் பாக்கிறன்.நீங்களும் பாக்கிறியள்போல!

Mathuran said...

ஐபோன ஏனய்யா கண்ட கண்ட இடத்திலயெல்லாம் வைக்கிறயள்... இத அப்பிள்காரன் கேள்விப்பட்டான் எண்டா கிணத்துக்குள்ளதான் விழுவான்

Mathuran said...

ஒரு முக்கியமான விடயத்தை நகைச்சுவை கலந்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள் காட்டான்.. இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களுடன் எம்மவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.இது தொடர்பாக விரிவான ஒரு பதிவை விரைவில் எழுதவுள்ளேன்

ஹேமா said...

இந்தப் பதிவுக்குள்ள நிறைய விஷயம் சொல்லியிருக்கியள்.நாங்கள் எப்பவும் திருந்தமாட்டம் எண்டு ஒற்றைக்காலில நிக்கிறம்.என்ன செய்யப்போறியள் !

காட்டான் said...

ஹேமா has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

இந்தப் பதிவுக்குள்ள நிறைய விஷயம் சொல்லியிருக்கியள்.நாங்கள் எப்பவும் திருந்தமாட்டம் எண்டு ஒற்றைக்காலில நிக்கிறம்.என்ன செய்யப்போறியள் ! 

நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நீங்கள் சொல்வது உண்மைதான்.. அதுவும் கடைசியில் காட்டான் சொல்வதை இரண்டு விதமாகவும் பார்க்கலாம் இதுக்கு மேல காட்டான் சொன்னால் காட்டான் களவு செய்ய தூண்டுகிறான்னு ஆகுலனின் அம்மா காட்டாண்ட பதிவ பார்க விட மாட்டா..!?  அடுத்த பதிவ ஆச்சியோடு கொண்டுவாறேன்.. பாவம் ஆச்சியும் காட்டான் கை விட்டுட்டானோன்னு கலங்கி நிக்கிறா..!?

காட்டான் said...

மதுரன் has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

ஒரு முக்கியமான விடயத்தை நகைச்சுவை கலந்து சிறப்பாக எழுதியுள்ளீர்கள் காட்டான்.. இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களுடன் எம்மவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.இது தொடர்பாக விரிவான ஒரு பதிவை விரைவில் எழுதவுள்ளேன்  

எழுதுங்க மாப்பிள வாழ்த்துக்கள்..

காட்டான் said...

மதுரன் has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

ஐபோன ஏனய்யா கண்ட கண்ட இடத்திலயெல்லாம் வைக்கிறயள்... இத அப்பிள்காரன் கேள்விப்பட்டான் எண்டா கிணத்துக்குள்ளதான் விழுவான் 

என்ன மாப்பிள இப்பிடி கேட்டிட்டியல் காட்டானுக்கு ஒழித்து வைப்பதற்கு அதை விட்டா எங்கையா இடமிருக்கு.. காட்டானின் தேசிய உடுப்பே கோவணந்தாயா..?!

YogaS said...

Hallo,Mister kaddaan how are you?

Yoga.S.Fr said...

காட்டானுக்கே இந்த நிலையென்றால்? ந்ல்ல வேளை,எனக்கு இந்தப் பிரச்சினை வராது ஏனெண்டா என்னட்டத் தான் உது இல்லையே?

Yoga.S.Fr said...

இந்த்ப் பிரச்சினை இன்று நேற்று ஆரல்பித்ததல்ல. நீ
ண்ட காலமாகவே இருக்கிறது தான்!என்ன செய்ய?காட்டான் போன்றோருக்கு வேறு வழியும் இல்லையே?பாவமில்லையா?Ha!
Ha!

Yoga.S.Fr said...

நிரூபனுக்கு போட்ட கமெண்ட் மாறி காட்டானுக்குப் போட்டுது!!!!!!!!!!

Yoga.S.Fr said...

ஏன் ஐயா, உல்லாசப் பிரயாணம் போறீங்களோ?
தமிழ்மணம் பழைய மாதிரி இயங்கத் தொடங்கி விட்டது, ஓடி வாங்கோ.§§§§§ நாலாம் திகதி ஊரில[பரிசில]நிப்பன்.கும்மி தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

காட்டான் said...

Yoga.S.Fr has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

ஏன் ஐயா, உல்லாசப் பிரயாணம் போறீங்களோ?
தமிழ்மணம் பழைய மாதிரி இயங்கத் தொடங்கி விட்டது, ஓடி வாங்கோ.§§§§§ நாலாம் திகதி ஊரில[பரிசில]நிப்பன்.கும்மி தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 

அண்ணாத்த வணக்கமுங்கோ... உங்களோடதாண்ண பதிவில கதைக்கிறேன்.. உல்லாச பயணத்த நன்றாக அனுபவிங்கோ இதுதானேண்ண எங்களுக்கு அடுத்து வரும் ஒரு வருடத்திற்கான சார்ச்..!? நாலாம் திகதிவரை ஒரு பதிவும் போடமாட்டன்..(நேரம் கிடைக்கோனுமேண்ண)நீங்க வந்து  கும்மியடிக்காம என்ர பதிவு நிறைவு பெறாதண்ண.. பதிவின் தொடக்கத்திலேயே sfrன்னு போட்டாச்சண்ண..!?

இண்டைக்கு நிரூபண்ட வண்டி புதையுரமாதிரி இருந்தது..!! ஏறி கும்முவம்ன்னு பார்தா சண்ட பிடிச்ச ரெண்டு பேரும்  வெள்ள வானுக்கு பயந்து சமாதாணமாயிட்டாங்கண்ண.. நீங்களும் இல்லாம போட்டீங்க மாப்பிளைய கோழி அமுக்கிற மாதிரி அமுக்கியிருக்கலாம்..!!!!!
சந்தர்ப்பம் வராமலா போகும் ஆச்சி அரிசி போடுற மாதிரி போட்டு வைப்பம்.... மற்ற கருத்துக்களுக்கு வீட்ட போய் கும்முகிறேன்ண....!!!!!!?????

Anonymous said...

///தேர்தல் முடிவு தெரிந்தோன லாச்சப்பல்ல இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடினிங்களாம்.. ஊருக்கு இப்ப போற எண்ணம் இல்லைப்போல தெரியுது ..//ஹிஹி

Anonymous said...

///அட அது வேறொன்னுமில்ல வேலை முடிச்சு வீட்டுக்கு வரும் வரை டெலிபோன இந்த கள்ளன்களுக்கு பயந்து கோவணத்துக்குள்ளதாண்ண வைச்சுக்கொண்டு வாறது.. /// ஏனுங்கோ நீங்க பிரான்சிலையும் கோமணத்தோட தான் சுத்துறிங்களா ஹிஹி.... பாத்துங்கோ ....

காட்டான் said...

கந்தசாமி. has left a new comment on your post "நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)": 

///அட அது வேறொன்னுமில்ல வேலை முடிச்சு வீட்டுக்கு வரும் வரை டெலிபோன இந்த கள்ளன்களுக்கு பயந்து கோவணத்துக்குள்ளதாண்ண வைச்சுக்கொண்டு வாறது.. /// ஏனுங்கோ நீங்க பிரான்சிலையும் கோமணத்தோட தான் சுத்துறிங்களா ஹிஹி.... பாத்துங்கோ .... 
என்னையா காட்டானின் தேசிய உடையை கேவலப்படுத்துகிறீர்களே..!? இது நல்லாவா இருக்கு மாப்பிள.. இப்போ இங்கு அடிக்கும் வெய்யிலுக்கு இதுதானப்பு சரியான உடை.. நீங்களும் இதை முயற்சிக்கலாமே ..? இதனால் உங்களுக்கு சோப்பு செலவு மிச்சமாகும்..!!?

vidivelli said...

aakaa !supper.....
eppidiyellaam sinthichchu poddu thaakkirinka parissil ninrukondu,,,,

Unknown said...

சகோ!
வளர்ந்த நாடுகளிலும் வழிப்
பறியா..? உழைக்காமல்
உண்டு வாழ விரும்பும் கூட்டம்
உலகெங்கும் உள்ளனர் போலும்
நாளும் நடைபறும் நிகழ்ச்சியை
சுவைபட சொல்லியுள்ளீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

vidivelli said...
aakaa !supper.....
eppidiyellaam sinthichchu poddu thaakkirinka parissil ninrukondu,,,,

மாப்பிள அக்காவ பார்கிறீங்க வேண்டாமெண்டு சொல்லல... அப்புடியே உன்ர காட்டானுக்கும் ஒரு ஓட்ட போட்டாய்ன்னா.. காட்டான் காட்டானும் நீங்க அக்காவ பார்த்த சந்தோசம் கொள்வான்யா..!

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம்said

நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.. பிரான்சில் எங்கள் ஊரில் இல்லாத களவு கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றது ஆனால் அதை செய்பவர்கள் ஒரு குறிப்ட்ட ஒரு சமூகத்தவர்களே...
இப்படியான வழிப்பறியில் ஈடுபடுபவர்களை நாங்கள் அடையான்கள்,கறுவல், என்று அழைக்கின்றோம்.. எனக்கு தெரிந்தவரை தமிழர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடு படுவதில்லை இந்த சமூகத்தால் வெளிநாட்டவர்களுக்கு எதிரான மனநிலை பிரன்சு மக்களிடையே வேகமாக வளர்ந்து வருகின்றது...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இப் முக்கியமான விடயம் உள்ளடக்கி நகைச்சுவையாக பகிர்ந்துள்ளீர்கள்...

Yoga. said...

காட்டானுக்கு வணக்கம்!நிரூபன் பதிவு பார்த்தேன்.இன்னும் கருத்திடவில்லை!கொழும்புத் தம்பி கும்மியிருந்தார்.உங்கள் கோமணத்துண்டை கேலி செய்கிறார்கள்.கொக்கத் தடியால் கொழுவி இழுத்து விடுங்கள்!எதையென்றெல்லாம் சின்னப் புள்ளத் தனமா கேக்கப்படாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga. said...

காட்டானுக்கு வணக்கம்!நிரூபன் பதிவு பார்த்தேன்.இன்னும் கருத்திடவில்லை!கொழும்புத் தம்பி கும்மியிருந்தார்.உங்கள் கோமணத்துண்டை கேலி செய்கிறார்கள்.கொக்கத் தடியால் கொழுவி இழுத்து விடுங்கள்!எதையென்றெல்லாம் சின்னப் புள்ளத் தனமா கேக்கப்படாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நிரூபன் said...

நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)//

வணக்கம் காட்டான், தலைப்பே ஒரு டெரராக இருக்கு. யோகா ஐயா என்ன உங்கடை பக்கத்தோடை ஐக்கியமாகிட்டார்.
பதிவின் தலைப்பிலே SFR என்று வருவது, யோகா ஐயாவைச் சிறப்பிக்கத் தானே?

நிரூபன் said...

வாங்க அண்ணாத்த வாங்க எப்பிடி இருக்கிறீங்க... இவ்வளவு காலமும் முகம்தெரியாம என்னை கும்முனீங்க... இப்ப நேரில கும்முங்கோன்னுதாண்ண உங்கள இந்த கடைக்கு முன்னால வரச்சொன்னது.. //

ஏதோ...அப்பாயிமெண்ட் வைச்சு, அடிக்கிற மாதிரிப் பேசுறீங்களே, வெளிநாட்டிலை டைம் எல்லாம் பிக்ஸ் பண்ணிப் போட்டுத் தாக்குவாங்களோ.
இண்டர்நேசனல் ரவுடிங்கள் ரொம்பப் பயங்கரமாக இருக்கிறாங்களே.

நிரூபன் said...

அப்புறம் ஊர் புதினம் எப்புடி.. தேர்தல் முடிவு தெரிந்தோன லாச்சப்பல்ல இனிப்பெல்லாம் கொடுத்து கொண்டாடினிங்களாம்.. ஊருக்கு இப்ப போற எண்ணம் இல்லைப்போல தெரியுது //

நீங்கள் ஊருக்கு வாற சாட்டிலை, கவரெடுக்கிறீங்கள். அவங்களைப் போட்டுக் கொடுத்து, நல்லவன் என்று, ஆமியிண்டை ஆக்கள் யாராச்சும் ப்ளாக் படிச்சால் நம்பட்டும் என்று சைட் கப்பில் போட்டுத் தாக்குறீங்களே.
இது நியாயமா காட்டான்?

நிரூபன் said...

ஏன் அண்ண உடம்ப இப்பிடி ஊத விட்டிட்டிங்க.//

ஓவராச் சாப்பிடுறார் போல இருக்கும்,

இல்லாவிட்டால் காற்றடித்திருப்பார்

நிரூபன் said...

லங்கா சிறீயில வார சங்கூதப்பட்டவங்க வயத பார்கேக்க பயமா இருக்கண்ண சின்ன சின்ன பொடியங்க எல்லாம் போறாங்க உங்கள பயப்படுத்திறத்துக்கு சொல்லல கவனமா இருங்கோன்னு சொல்லத்தான்ண...!!?//

மண்வாசனையை 25 வருசம் ஆனாலும் மறக்கவில்லை என்பதற்குச் சான்றாக எம் தமிழில் போட்டுத் தாக்குறீங்களே,.
சின்னப் பொடியளுக்குத் தானே இப்ப பல விதமான பலான நோய்கள் எல்லாம் பிடிக்குது, ஒருவேளை அதாயிருக்குமோ அண்ணாச்சி.

நிரூபன் said...

அங்கால ஒரு தமிழ் குரலண்ண அக்கா உங்களுக்கு பக்கத்தில நிக்கிற ஆபிரிக்ககாரங்க பொல்லாதவங்க.. மரியாதயா உங்களிட்ட இருக்கிற நகையெல்லாம் களட்டி கொடுத்துடுங்கன்னுறான்...//

இது ரொம்ப நல்லா இருக்கே, மறைஞ்சிருந்து திருடுவது.
திருடர் கூட்டத் தலைவன் தப்பிடுவான் போலிருக்கே;-))))

நிரூபன் said...

அதில ஒருத்தன் மிசு உங்களிட்ட சிக்கிரட்டு இருக்கோன்னான்.. மன்னிச்சுகோங்க காட்டான் சிக்கிரட்டு பத்திறதில்லைன்னு சொல்லிமுடிக்கேல்ல இன்னுமொருத்தன் வந்து காட்டாண்ட கோவனத்துக்குள்ள சிக்கிரட்டு பக்கற் இருக்கென்னு போட்டு கொடுத்திட்டான்..!?//

இது தான் கோவணத்திற்குள் வைக்கக் கூடாதென்பது, பேசாமல் இரு ஜட்டி வாங்கி அதனுள் பதுக்கி வைச்சிருக்கலாம் தானே(((((;

நிரூபன் said...

அதில ஒருத்தன் மிசு உங்களிட்ட சிக்கிரட்டு இருக்கோன்னான்.. மன்னிச்சுகோங்க காட்டான் சிக்கிரட்டு பத்திறதில்லைன்னு சொல்லிமுடிக்கேல்ல இன்னுமொருத்தன் வந்து காட்டாண்ட கோவனத்துக்குள்ள சிக்கிரட்டு பக்கற் இருக்கென்னு போட்டு கொடுத்திட்டான்..!?//

பிழைக்கத் தெரிந்த மனுசனைய்யா நீங்கள்.

நிரூபன் said...

அந்த பிள்ள பார்திட்டு அதிலேயே முத்திரைய தடவி இன்சுரன்சு கொம்பனிக்கு கடிதத்தை அனுப்பி வைச்சுட்டாண்ண.//

இதிலை எழுத்துப் பிழை ஒன்றும் இல்லையே,
நான் முத்தத்தினைத் தடவி என்றெல்லே வாசித்திட்டேன்.

நிரூபன் said...

ஊரே சேர்ந்து உங்களைக் கும்மியிருக்கே.
என்ன கொடுமை பாஸ்.

வேணும்னா சொல்லுங்க.

ஓசியிலை விசாத் தந்து ஸ்பொன்ஸர் பண்ணுவீங்க என்றால், சிலோனிலை இருந்து அடியாளா வர நான் ரெடி.

நிரூபன் said...

எழுத்து நடை அருமை. தொடர்ந்தும் சுவாரஸ்யமான- நகைச்சுவையான பதிவுகளைப் பகிர்ந்து எங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துங்கோ.

நிரூபன் said...

உங்கடை ஊரிலை திருட எங்கடையளை, பிடிச்சு, சிலோனுக்கு அனுப்ப மாட்டாங்களோ?
இங்கே வந்தால் தானே- இப்ப வன்னிக் காடு இருக்கு,
நல்லா மாடு மேய்க்கலாம், நெல்லு விதைக்கலாம், ஆயுதம் தோண்டி எடுக்கலாம்;-)))

நிரூபன் said...

@
YogaS said...
Hallo,Mister kaddaan how are you?//

என்னய்யா, உல்லாசப் பயணம் போன இடத்திலை பாஸ்வேர்ட்டை மறந்திட்டீங்கள் போல இருக்கே,
என் வலையில் அரசியல் பதிவுகளுக்கு
எல்லா வகையான கமெண்ட் போடும் ஆப்சனையும் வைத்திருக்கும் போது ஒரு சில கறுப்பு ஆடுகள்- பெயரில்லாமல் பின்னூட்டம் போட்டு குளறுபடி செய்ததாலை....அதனை நீக்கி விட்டேன், அதான் நீங்கள் கமெண்ட் போட முடியவில்லை.

என் மெயிலுக்கு உங்கடை கமெண்டைப் போடுங்கோ,
நான் அதனை ப்ளாக்கிலை சேர்க்கிறேன்.

நிரூபன் said...

@Yoga.S.Fr said...
நிரூபனுக்கு போட்ட கமெண்ட் மாறி காட்டானுக்குப் போட்டுது!!!!!!!!!//

ஆகா...உல்லாசப் பிரயாணத்திலை, உல்லாசமா இருந்தாலும், என்னையும் மறக்காமல் இருப்பதற்கு நன்றி ஐயா.

ஒரு சந்தோசமான செய்தி.
உங்கடை பேரந் ஓட்டவடை பரிஸிலை ஊர் சுற்றி அலுத்துப் போய்ச்சுதாம், அதனாலை வாற கிழமையில் இருந்து மீண்டும் ப்ளாக்கிற்கு வரப் போறனாம்.

நிரூபன் said...

Yoga.S.Fr said...
ஏன் ஐயா, உல்லாசப் பிரயாணம் போறீங்களோ?
தமிழ்மணம் பழைய மாதிரி இயங்கத் தொடங்கி விட்டது, ஓடி வாங்கோ.§§§§§ நாலாம் திகதி ஊரில[பரிசில]நிப்பன்.கும்மி தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

வாங்கோ...வாங்கோ!
நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிரூபன் said...

@Yoga. said...
காட்டானுக்கு வணக்கம்!நிரூபன் பதிவு பார்த்தேன்.இன்னும் கருத்திடவில்லை!கொழும்புத் தம்பி கும்மியிருந்தார்//

ஓ...அந்த காப்பி பேஸ்ட் பதிவிலையா.
அவருக்கு இப்பத் தான் முறையாக நல்ல குடுவை குடுத்திருக்கிறேன்.

ஒரு நல்லவனைப் பார்த்து வெள்ளை வான் வரும் என்று சொல்லிப் பயமுறுத்திட்டான் ஐயா.

இது நியாயமா.

காட்டான் said...

காட்டானுக்கு வணக்கம்!நிரூபன் பதிவு பார்த்தேன்.இன்னும் கருத்திடவில்லை!கொழும்புத் தம்பி கும்மியிருந்தார்.உங்கள் கோமணத்துண்டை கேலி செய்கிறார்கள்.கொக்கத் தடியால் கொழுவி இழுத்து விடுங்கள்!எதையென்றெல்லாம் சின்னப் புள்ளத் தனமா கேக்கப்படாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அண்ண எனக்காவது கோமணம் இருக்கண்ண நாளைக்கு ஒரு பிரச்சனைன்னா அவருக்கு அதையும் உருவி விட்டுவிடுவார்கள்..!! இத காட்டானே நேரில பாத்திருக்காண்ண...

காட்டான் said...

காட்டானுக்கு வணக்கம்!நிரூபன் பதிவு பார்த்தேன்.இன்னும் கருத்திடவில்லை!கொழும்புத் தம்பி கும்மியிருந்தார்.உங்கள் கோமணத்துண்டை கேலி செய்கிறார்கள்.கொக்கத் தடியால் கொழுவி இழுத்து விடுங்கள்!எதையென்றெல்லாம் சின்னப் புள்ளத் தனமா கேக்கப்படாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அண்ண எனக்காவது கோமணம் இருக்கண்ண நாளைக்கு ஒரு பிரச்சனைன்னா அவருக்கு அதையும் உருவி விட்டுவிடுவார்கள்..!! இத காட்டானே நேரில பாத்திருக்காண்ண...

காட்டான் said...

Yoga.S.Fr said...
இந்த்ப் பிரச்சினை இன்று நேற்று ஆரல்பித்ததல்ல. நீ
ண்ட காலமாகவே இருக்கிறது தான்!என்ன செய்ய?காட்டான் போன்றோருக்கு வேறு வழியும் இல்லையே?பாவமில்லையா?Ha!
Ha!

அப்பிடி நீங்க சொல்லாதீங்க.. காட்டானிடம் என்ன இருக்கென்று அவர்கள் வந்தார்கள்.. இஞ்ச இருக்கிற அடையாங்கள் இலவசமா கோவணம் கிடைதாலும் அதை உருவிவிடுவார்கள்.. உங்களுக்கு தெரியாத விசயமல்ல இது...!!!??

காட்டான் said...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
இப் முக்கியமான விடயம் உள்ளடக்கி நகைச்சுவையாக பகிர்ந்துள்ளீர்கள்...

நன்றி தோழி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.. அதுவும் முதல் வருகை உங்களுக்கு இங்கேயே குழ போடுறான் காட்டான்...

காட்டான் said...

நிரூபன் said...
நடந்தது என்ன..!? (காட்டானின் வாக்கு மூலம்)//

வணக்கம் காட்டான், தலைப்பே ஒரு டெரராக இருக்கு. யோகா ஐயா என்ன உங்கடை பக்கத்தோடை ஐக்கியமாகிட்டார்.
பதிவின் தலைப்பிலே SFR என்று வருவது, யோகா ஐயாவைச் சிறப்பிக்கத் தானே?

ஆமா அண்ணாத்த என்னுடைய பதிவுக்கு எவ்வளவு கருத்துரை இட்டு என்னை போப்பிலர் ஆக்கியிருக்கார் அண்ணைக்கு இதுவும் செய்யாட்டி ஏன் எனக்கு கோவணமும் கொக்குதடியும்..அத்தோடு sfr என்ற அந்த சுலோகம் இங்கு இருக்கும் முன்னனி டெலிபோனின் சுலோகம் அண்ணைக்கும் பொருந்தி வருகிரது...!!

அப்புரம் போட்டு கொடுப்பது எங்கட ரத்தத்தில் ஊறிபோன விடயமாச்சே...!!!??

காட்டான் said...

நிரூபன் said...
எழுத்து நடை அருமை. தொடர்ந்தும் சுவாரஸ்யமான- நகைச்சுவையான பதிவுகளைப் பகிர்ந்து எங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துங்கோ.

நன்றி மாப்பிள நானும் கவிதைகள்,கட்டுரைகள்,சினிமா விமர்சனங்கள்,மாட்டு மூத்திரத்தில் மண்ணெண்ணை எடுப்பது எப்படி என்பது போன்ற புத்திசாலித்தனமான,அறிவியல் பதிவுகள் போடலாம்ன்னு இருந்தேன்... நீதானே அதில் மண் அள்ளி போட்டுவிட்டாய்..!!!?? கொப்பி பேஸ் செய்யாது இவற்றை என்னால் பதிவிட முடியாது காட்டானுக்கு தெரிந்தது ஆச்சியும் அப்புவும்தான்...!!!அதை வைத்து காலத்தை ஓட்டுவோம்..!!?

காட்டான் said...

நிரூபன் said...
அந்த பிள்ள பார்திட்டு அதிலேயே முத்திரைய தடவி இன்சுரன்சு கொம்பனிக்கு கடிதத்தை அனுப்பி வைச்சுட்டாண்ண.//

இதிலை எழுத்துப் பிழை ஒன்றும் இல்லையே,
நான் முத்தத்தினைத் தடவி என்றெல்லே வாசித்திட்டேன்.

வாசிப்ப மாப்பிள வாசிப்ப.... அண்ணிக்கு நல்லா எடுத்து கொடு காட்டானை நடு ரோட்டில விட்டுட்டுதான் அடுத்த வேலை பாக்க போறாயா..? இது உனக்கே நல்லாவா இருக்கு மாப்பிள்ள.. ஏற்கனவே காட்டானின் செம்பு நெளிந்து போச்சைய்யா..!!??

மாலதி said...

நல்ல பதிவு.

காட்டான் said...

நன்றி மாலதி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

ம.தி.சுதா said...

காட்டான் கோமணத்தோட நிண்டாலும் விசியகாரன் தான்டா...

சி.பி.செந்தில்குமார் said...

நம்மளைத்தவிர ஊர்ல எல்லாரும் விவரமாத்தான்யா இருக்காங்க

Anonymous said...

உணர்வோடு வாழ்ந்தால்
வழியெங்கும் பூக்காடு
உணர்ச்சியற்று வீழ்ந்தால்
படுக்கையே சாக்காடு

அம்பாளடியாள் said...

இப்புடித்தான் காட்டான் நம்ம இருக்குற நாட்டிலையும்
மாலைபோட்டு மரியாத செய்யப்போறம். இண்டைக்கு
எங்கட மதத்தில அப்புடி ஒரு விசேசம் எண்டு சொல்லி
உங்களால போடமுடிஞ்ச காச போடச் சொல்லீற்று
நம்ம தமிழச்சி கழுத்தில மாலையைப் போட்டு களத்துறமாதிரிக்
களட்டிக்கொண்டு ஓடினாங்களாம் தாலியோட சங்கிலியையும்.
உங்க கதையப் பாத்ததும் அதுதான் அப்பு நினைவுக்கு வந்தது .
அப்பச்சரி உங்க கத நல்லாத்தான் போகுது .நான் போயிற்று
வரப்போறான் .வந்தவிசயமும் காட்டானுக்கு விளங்கி இருக்கும் .
அப்பப் பின்ன ஆட்டுக்கு பாராட்டுச் சொல்லி குழையப் போய்ப் போடண அப்பு .

அம்பாளடியாள் said...

காட்டானின் வரவுக்காக என் தளம் காத்திருக்கின்றது .
அடுத்த ஆக்கத்தை தொடர்வது எப்போ?.............

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......