முகப்பு

Wednesday, 3 August 2011

காட்டானும் பார்த்தானே..

கிருபானந்த வாரியார் ஒரு குட்டிக்கதை சொல்லுவார்.. சாகக்கிடக்கும் ஒரு தந்தை தன்னுடைய மகனை அழைத்து ஏதோ சொல்ல முற்படுகையில் இறந்து விடுவாராம்.. மகன் தந்தை என்ன சொல்லவந்தாரென்று தெரியாமல் அவர் கையில் இருக்கும் சுருட்டை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் சுருட்டுன்னு அர்த்தப்படுத்திக் கொண்டது போல் நானும் எதை எதையோ மாற்றி மாற்றி விளங்கிக்கொள்கிறேன்..!?

இன்று காலையில் வேலைக்கு செல்கையில் பிரான்சின் புகழ் பெற்ற France info ரேடியோவை கேட்டுக்கொண்டு செல்கையில் நானும் கிருபானந்தவாரியார் சொன்ன அந்த கதையில் வருகின்ற மகன் மாதிரித்தானோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!?

அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே  கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..

ஐரோப்பாவில் எனக்கு தெரிந்து ஹாலாந்தில்தான் சட்ட பூர்வமாக கனபி பாவிக்கலாம்.. அங்கு காட்டானும் 95ம் ஆண்டுகளில் அடிக்கடி சென்று வந்ததால்தான் சொல்கிறேன்.. கனபி பாவிப்பதற்கல்ல..!!?? எனது பழைய நண்பரை பார்பதற்காக அந்த காலங்களில் அடிக்கடி செல்வதுண்டு வேறு ஒன்றுமில்லை நம்புங்கோ மாப்பிளைங்களா..!!?

இப்ப விசயத்திற்கு வாரன் மாப்பிள.. பிரான்சில் பசுமை கட்சி கனபி பாவிப்போர் மீது ஒருவித மென்மையான போக்கே கொண்டுள்ளது அக்கட்சியின் முன்னால் தலைவர் நோயல் மம்மேர் கனபியை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்கிறார்..!

இப்ப இவர் போற இடமெல்லாம் சின்னபொடியங்க ஐயா கனபி தாங்கையா கனபின்னு ரவுசு பண்ணுறானுங்கோ மாப்பிளையும் அசடு வழியுறார்.. ஆனா காட்டானுக்கு மாப்பிளைய பிடிக்கும் தப்பா நினைக்காதீங்க.. அவர் பகிரங்கமாகவே தான் ஹோமோ செக்ஸ்சுக்கு ஆதரவெண்டு சொன்னது மட்டுமல்லாது..  தன்னுடைய நகர சபையில் சட்டம் அங்கீகரிக்காது என்று தெரிந்தும் இரண்டு ஆம்பிளைகளுக்கு திருமணம் செய்து வைச்சிட்டு ஓவென்று கதறி அழுத காட்சிய பார்த்த காட்டானும் கண் கலங்கீட்டான்யா...!!??

அட இவர விடுவம் இவர் ஒரு முன்னால் காலநிலை செய்திவாசிப்பாளர் மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!? ஆனா ரேடியோவில வந்து கனபிய பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறவர் ஒன்றும் காட்டானில்லை.. பிரான்சில் பிரபலமான sorbonne university பொருளாதார பேராசிரியர்.. இஞ்ச இருக்கிறவ காசோடதானே எல்லாத்தையும் பாப்பினம் இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்கவிட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?

அட காச பாக்கிற இவர்கள் எதிர்கால இளைஞர்களை யோசிக்கேல்ல நானும் ஆரம்பத்தில இஞ்ச இருக்கிற பொடியங்க சின்ன வெள்ள பேப்பரில சிக்கிரட்டு தூள வைச்சு சுருட்டேக்க பாத்திருக்கேன் என்ர அப்புச்சி சுருட்ட உறுட்டுற மாதிரி இவனுங்க இத உறுட்டுறாங்கன்னு..  அப்புறம் பார்த்தாதான் தெரியுது இவனுங்க கனபியதான் இப்பிடி செய்யுறாங்கன்னு..

கனபிய நிற்பாட்டுறதுக்கு வழிய பார்காம  அதை எதிர்காலத்தில் சட்டபூர்வமாக்கினால்..!!!?? சின்ன பொடியங்க கெடுவது மாத்திரமில்ல.. இனிப்பு வாங்க காச களவெடுத்த காட்டானைப்போல... இவர்கள் ரோட்டில் போற வர்ற ஆட்களை கொள்ளையடிக்க போகிறாங்க.. இப்பவே இது பரவலா இஞ்ச நடக்குது.. இனி இது தேசியமயமாகிடும்..!!?

இதில சோசலிசம்ன்னு கும்மியடிக்கிறவய நம்ப முடியாது..அதோட எங்கட தமிழ் பொடியங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிச்சுக்கொண்டு வாராங்க.. இவங்க பெற்றோரில கூடுதலானவங்க காசு காசுன்னு ஓடுவதையும்தாண்டி...!!?

 இஞ்ச கனபி விக்கிறவங்க எங்கட ஊரில பள்ளிகூடத்துக்கு முன்னால நிக்கிற ஐஸ்பழகாரன் போல பள்ளி பிள்ளைகள குறிவைச்சுத்தான் திரியுராங்க ஏன்னா இவங்கதான் எதிர்கால கஸ்ரமர்ன்னுராங்க.. முதல்ல இவர்களின் நண்பர்கள் மூலம் இலவசமாதான் கொடுப்பாங்க.. அதுக்கு பிறகு இவர்கள் அதற்கு அடிமையாகிட்டா..கதை கந்தல்தான்..!!?

அதுக்கு பிறகு பிள்ளய அடிச்சோ பிடிச்சோ திருத்த முடியாது.. எப்பிடியோ நாட்ட விட்டு வெளிக்கிட்டவ திரும்பிப்போய் அங்கேயே இருப்பார்கள் எண்டுறது பொய்..!? இப்பிடிதான் மணியண்ணை நான் இஞ்ச வந்த ஆரம்ப நாட்கள்ல டேய் காட்டான் இன்னும் ரெண்டு வருசத்தில காச உழைச்சுக்கொண்டு ஊருக்கு போய் என்ர மனிசி பிள்ளைகளோட செட்டிலாகப்போறேன்னு என்னட்ட அடிக்கடி சொல்லுவார்.. இப்ப இருவது வருசமாச்சு கொழும்பில வீட்டையும் வாங்கி விட்டிருக்கார் ஆனா இப்ப அங்க போற ஐடியா இல்லன்னுறார் கேட்டா குடும்பத்தை இஞ்ச கூப்பிட்டாச்சு பிள்ளைகள் இஞ்ச படிக்கினம் அவர்களுக்கு ஒரு கல்யாணம் காட்சி பார்க்கவேண்டாமோன்னுரார்.. இன்னும் கொஞ்ச காலம் போனா பேரப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயினம் அவர்கள நாங்க பார்கோனும்பார்... அதையும் விட்டா பேரபிள்ளைங்க வளர்ந்திட்டார்கள்ன்னு சொல்லிக்கொண்டே போவார்... இது எல்லாருக்கும் ஒரு காலத்தில வாறதுதான்...

சரி காட்டான் இதுக்கு என்ன செய்யலாம்ன்னு நீங்க கேக்கலாம் முதல்ல ஒன்றை சொல்கிறேன்.. காட்டானுக்கு இதில பெரிய அனுபவமில்லன்னாலும்.. எனக்கு தெரிந்த சில வழிகள சொல்லுகிறேன்...  உங்களுக்கும் தெரியும் எப்படி எங்கட பிள்ளைகளை இதில இருந்து காப்பாத்துறதெண்டு அத நீங்க உங்க கருத்துக்களா சொல்லுங்கோ அது மற்றவர்ளுக்கு பிரயோசனமாஇருக்கும்...!!!!!

எப்பிடியோ இண்டைக்கில்லாட்டியும் ஒரு நாள் இவர்கள் கனபிய பிரான்சில சட்டபூர்வமாக்கிடுவாங்கன்னுதான் காட்டான் நினைக்கிறான்...!? இப்ப இவர்கள் நூல் விட்டு பாக்கினம்.. இப்பிடியான.. பேராசிரியர்கள்,அரசியல்வாதிகள் மூலம்.. அதுக்கு முன்னால நாங்க உசாராகிடோனும்..

தோளுக்கு மேல வளர்ந்தா தோழன்னு சொல்வதுபோல்..! நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம.. அவர்களோடு நண்பர்களா,நண்பிகளா பழகுவோம்.. வாழ்க்கைக்கு காசு தேவைதான் அத இல்லைன்னு சொல்லல காட்டான்... ஆனா பிள்ளைகளுக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்...  லீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்..

இப்படியான சில செயற்பாடுகள் மூலம் கட்டாயம் அவர்கள் எங்களிடம் எதையும் மறைக்க மாடார்கள்...!? இது அவர்களை நல்வழிப்படுத்தும்..காட்டானுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது பிரன்சில் அடுலேசோன் என்று அழைக்கப்படும் டீனேச் பசங்களப்பற்றி..  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.... காட்டானிடமும் வருங்கால டீனேச் பொடியங்கள் இருக்கிறார்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் தேவை...!!!?

105 comments:

DrPKandaswamyPhD said...

வந்தேன், படித்தேன்.

காட்டான் said...

ஐயா இந்த‌ பதிவ இப்பதான் ஏற்றிவிட்டு நித்திரை கொள்ள போகிறேன் அதற்குள் நீங்கள் வாசித்து விட்டீர்களா...?? நன்றி ஐயா உங்கட வருகைக்கும் கருத்து பதிவிற்கும்...

மைந்தன் சிவா said...

ஹிஹி கனபி ஐயா கனபி ஐயா...அடிங்...

மைந்தன் சிவா said...

எல்லாத்தையும் சொல்லி விட்டு இறுதியில் ஒரு பொறுப்புள்ள தகப்பனாக என்ன செய்ய வேண்டுமென்று கூறினீர்கள்!!!சூப்பர் !!!

Rathnavel said...

அருமையான வழிகாட்டுதல் பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

காட்டானின் சமுக பொறுப்பை மனதார பாராட்டுகின்றேன் அது மட்டுமன்றி சோசியலிசம் குடும்ப தந்தையின் பொறுப்பு இப்படி அப்படி எண்டு சொல்லி கன சரக்கு காட்டநிண்ட கோவணத்துக்குள இருக்கு
ஒவோண்டோவண்டா அவுட்டு விடுறார்

கவி அழகன் said...

அவைக்கு அடங்கி அவையை அடக்கும் பண்பு உங்கள் எழுத்தில் நிறையவே உண்டு

♔ம.தி.சுதா♔ said...

////மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!?////

யோவ் எல்லாம் பணம் பண்ணற வேலை நம்மள விட்டால் காத்தை பார்த்தே காரியம் சொல்லிப் புடுவோமில்ல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

நிரூபன் said...

காட்டானும் பார்த்தானே..//

அவ்...என்னத்தைப் பார்த்தார் காட்டான்.

நிரூபன் said...

அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..//

அடடா....இது இசகு பிசகான மேட்டரா இருக்கே

நிரூபன் said...

விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. வெளி நாடுகளில் எமது இளைய தலைமுறையினரை எப்படியெல்லாம் பாதுகாத்து வளர்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல சிந்தனைங்கோ....

பிரகாஷ் குழ போட்டான்...

சி.பி.செந்தில்குமார் said...

காட்டான் பிளாக்ல கமெண்ட் போட்டுட்டான் சி பி ..

அது சரி.. என்ன ஒரே சீரியசா போகுது பதிவு?

காட்டான் said...

மைந்தன் சிவாsaid...
ஹிஹி கனபி ஐயா கனபி ஐயா...அடிங்...

மாப்பிள நீ நினைக்கிற மாதிரியில்ல காட்டான் ரொம்ப நல்லவன்யா...
சொன்னா கேளுங்கையா..

காட்டான் said...

மைந்தன் சிவாsaid...
எல்லாத்தையும் சொல்லி விட்டு இறுதியில் ஒரு பொறுப்புள்ள தகப்பனாக என்ன செய்ய வேண்டுமென்று கூறினீர்கள்!!!சூப்பர் !!!

ஆமா மாப்பிள எனக்கும் இரண்டு பொடியங்க இருக்கிறாங்க..கொஞ்சம் கவனமாதானே இருக்கோனும்..

காட்டான் said...

Rathnavel said...
அருமையான வழிகாட்டுதல் பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா உங்கட வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.. காட்டான் எல்லா நேரமும் கும்மியடிக்க முடியாதுதானேய்யா..

காட்டான் said...

சி.பி.செந்தில்குமார் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டான் பிளாக்ல கமெண்ட் போட்டுட்டான் சி பி ..

அது சரி.. என்ன ஒரே சீரியசா போகுது பதிவு? 

நன்றி மாப்பிள உங்கட கருத்து பதிவுக்கு.. நீங்க சொல்வது உண்மைதான்.. காட்டான் கொஞ்சம் உணர்சிவசப்பட்டுட்டான்...!?

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

அவைக்கு அடங்கி அவையை அடக்கும் பண்பு உங்கள் எழுத்தில் நிறையவே உண்டு 

என்ன தம்பி பெரிய பெரிய வார்தைகள் சொல்லுறீங்க காட்டான் யாருக்கு அடங்கிறானோ இல்லையோ மனிசிக்கு அடக்கம் ஐயா....,!!!! நன்றிங்க உங்கட வருகைக்கும் கருத்து பதிவுக்கும்...

காட்டான் said...

தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நல்ல சிந்தனைங்கோ....

பிரகாஷ் குழ போட்டான்...

நன்றி மாப்பிள பாருங்க நீங்க என்ர படலையில குழ போடுவதற்கு...!!!

காட்டான் said...

கவி அழகன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டானின் சமுக பொறுப்பை மனதார பாராட்டுகின்றேன் அது மட்டுமன்றி சோசியலிசம் குடும்ப தந்தையின் பொறுப்பு இப்படி அப்படி எண்டு சொல்லி கன சரக்கு காட்டநிண்ட கோவணத்துக்குள இருக்கு 
ஒவோண்டோவண்டா அவுட்டு விடுறார் 

நன்றி கவிக்கிழவரே.. நீங்க காட்டானிட்ட கொஞ்சம் சரக்கிருக்குதென்னுறீங்க..!!!???அப்பிடியெல்லாம் இல்லயப்பு.. சும்மா எடுத்து விடுறான் காட்டான் அவ்வளவுந்தான்..!!!!

காட்டான் said...

♔ம.தி.சுதா♔ has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

////மழை வருமோ வராதோனுகூட சரியா சொல்லமுடியாத இவர் சொல்லுறத எல்லோரும் கேப்பினமா..!?////

யோவ் எல்லாம் பணம் பண்ணற வேலை நம்மள விட்டால் காத்தை பார்த்தே காரியம் சொல்லிப் புடுவோமில்ல...

மாப்பிள இப்பையும் இருக்கிறாங்களா அப்பிடிப்பட்ட ஆட்கள்..!!? நான் நினைச்சேன் காட்டானுக்கு பின்னாலேயே அவங்களும் வெளிக்கிட்டுட்டாங்கண்ணு..!!???

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. வெளி நாடுகளில் எமது இளைய தலைமுறையினரை எப்படியெல்லாம் பாதுகாத்து வளர்க்க வேண்டியிருக்கிறது. 

ஒம் மாப்பிள.. இந்த பதிவால கருத்து போடுறவய கடிக்க முடியாம இருகையா..!!?

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..//

அடடா....இது இசகு பிசகான மேட்டரா இருக்கே 

அதுதான்யா எழுதேக்க நடுங்கி நடுங்கி எழுதினது.. மற்றும்படி கனபி பாவிச்சுக்கொண்டு எழுதேல்ல மாப்பிள...!!?

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

கட்டானிடம் இருந்து ஒரு வித்தியாசமான சமூக பொறுப்பு பதிவு,
முதலில் வாழ்த்துக்கள் மாமா :)

Yoga.s.FR said...

வணக்க,காட்டான் சார்!வந்துட்டேன்.நல்ல விழிப்புணர்வூட்டும் விடயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்.எம்மவர்கள் எத்தனை பேர் தமிழ்மணம் படிக்கிறார்களோ தெரியவில்லை.கொண்டு சேர்க்கும் வழி என்னவென்றும் புரியவில்லை!பார்க்கலாம்.

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

கட்டானிடம் இருந்து ஒரு வித்தியாசமான சமூக பொறுப்பு பதிவு, 
முதலில் வாழ்த்துக்கள் மாமா :) 

ஐய்யோ மாப்பிள நீ எழுதாத பதிவா.. நானும் சும்மா விளையாடிப்பார்தேன்...!!?

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

//அது ஒன்றுமில்லை ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்//

நெசம்தான் பாஸ்,
அது அவங்க விருப்பம் என்று
கண்டுக்காமா விட்டாலும்,
அதை பாவித்துவிட்டு ரோட்டில் நின்று
இவங்க பண்ணுற அலம்பல் தாங்க முடியாதுப்பா,
ஒரு வாரத்தின் முன் கூட நான் வேலை முடிந்து
வரும் வழியில் இவங்கள் நின்று என்னன மறித்து வைத்துகொண்டு
எங்களை ஏன் பார்த்த பார்த்த என்று பண்ணிய காமெடி இருக்கே
அப்பப்பா அவங்களிடம் இருந்து நான் தப்பி வர பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.

Yoga.s.FR said...

நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம..////நச்!!!!!!!!!!!!

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

அப்புறம்.. அந்த ஹோமோ செக்ஸ் மேட்டரில் நான் அவர் பக்கம் தான், ஒன்றை எதிர்க்க எதிர்க்க தான் அது வளர்ந்துட்டே வரும், அதை விட செக்ஸ் என்பது அவங்க அவங்க விருப்பம், இதில் அடுத்தவர் போய் மூக்கை நுழைக்கப்படாது.
ஓரினசெயர்க்கையோ ஈரினசெயர்க்கையோ அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை அது அவரவர் சுதந்திரம் என்பது என் கருத்து.

Yoga.s.FR said...

பிரான்சில் என்ன நடக்கிறதென்று பிரான்சில் இருக்கும் பெற்றோருக்கு மட்டுமல்ல,உலகிலுள்ள அத்தனை தமிழ்ப் பெற்றோருக்கும் சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது போல் உலகெங்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.பிரான்சில் இவ்வாறு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைப்பின்,அடுத்தது என்ன என்பது சிந்திக்க வேண்டியது தான்.உண்மையில் சிகரட்டினால் உயிரிழப்புகள்,நோய்கள்.அதனால் ஏற்படும் செலவுகளுக்கு அரசு விழி பிதுங்குவதால் விலை அதிகரிப்பை மேற்கொள்கிறது.இருப்பினும்,இளைய தலைமுறை அதனைப் பாவிப்பதில் அக்கறை கொள்கிறது.இத்தோடு கஞ்சாவும் சேர்ந்தால்????????????????

காட்டான் said...

நிரூபன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டானும் பார்த்தானே..//

அவ்...என்னத்தைப் பார்த்தார் காட்டான். 

அவ்.. அதை சொல்லுறேன்யா.. உங்களுக்கும் ஆசையாதான் இருக்கும் காத கிட்ட கொண்டுவாயா.. கடிச்சு தின்ன மாட்டேன்யா..!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் பரவா இல்லையா?

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

வணக்க,காட்டான் சார்!வந்துட்டேன்.நல்ல விழிப்புணர்வூட்டும் விடயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்.எம்மவர்கள் எத்தனை பேர் தமிழ்மணம் படிக்கிறார்களோ தெரியவில்லை.கொண்டு சேர்க்கும் வழி என்னவென்றும் புரியவில்லை!பார்க்கலாம். 

வாங்க அண்ணாத்த.. என்னண்ண சார் போடுறீங்க,,? காட்டான்னு கூப்பிடுறதுதாண்ண நல்லா இருக்குதண்ண... உல்லாசப்பயணம் லண்டன்லதானோ.. இந்த பதிவு எனக்கு மட்டும் சொந்தம் என்று கூறவில்லை இதை ஊரில் கோவிலுக்கு சாவல் நேந்து விட்ட மாதிரி விட்டிருக்கேன்..!? 

யார் வேண்டுமானாலும் இதை எடுத்து பாவிக்கலாம்.. காட்டானுக்கு கொஞ்ச நாளா பப்பிளிகுட்டி ஆசை வந்திட்டு என்ர பேர கீழ சின்ன எழுத்திலயாவது போட்டா காட்டான் சந்தோசமடைவான்...!!?தமிழ் மணத்தில இணைக்கவில்லை.. காலையில் நிரூபனின் ஈமெயில் பார்தேன் அவரும் தமிழ் மணத்தில் இணைக்க வழி சொல்லியுள்ளார்... பாப்பமண்ண..

காட்டான் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் பரவா இல்லையா? 

நீங்க வேற மாப்பிள கச்சேரி இனிதான் கள கட்டபோது யோகாண்ணையும் இப்பதான் உல்லாசப்பயணம் முடிச்சு வந்திருக்கிறார்..

உங்கட வரவுக்கும் கருத்திற்கும் நன்றி  பினேரம் வாறன் உங்கட வீட்டுக்கும் கும்மியடிக்க...

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

பிரான்சில் என்ன நடக்கிறதென்று பிரான்சில் இருக்கும் பெற்றோருக்கு மட்டுமல்ல,உலகிலுள்ள அத்தனை தமிழ்ப் பெற்றோருக்கும் சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது போல் உலகெங்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.பிரான்சில் இவ்வாறு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைப்பின்,அடுத்தது என்ன என்பது சிந்திக்க வேண்டியது தான்.உண்மையில் சிகரட்டினால் உயிரிழப்புகள்,நோய்கள்.அதனால் ஏற்படும் செலவுகளுக்கு அரசு விழி பிதுங்குவதால் விலை அதிகரிப்பை மேற்கொள்கிறது.இருப்பினும்,இளைய தலைமுறை அதனைப் பாவிப்பதில் அக்கறை கொள்கிறது.இத்தோடு கஞ்சாவும் சேர்ந்தால்????????????????

அண்ண அது மட்டுமா..!? இனி கஞ்சா அடிக்கிறதுக்கு எங்கட பொக்கற்ர புடுங்கி அரசாங்கத்திற்கு கஞ்சாவாங்குறதுக்கு கொடுப்பாங்கள் அடையாங்கள்.. அந்த கருமத்த குடிச்சு வார வியாதிக்கு ஆசுப்பத்திரி செலவன்னு வரியடிப்பானுங்க எங்களுக்கு...!!!!?
மொத்தத்தில எங்கள மாதிரி ஆட்களுக்கு தவில் மாதிரி ரெண்டு பக்கமும் அடிதாண்ண...!!!?

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நான் உன்ர அப்பண்டா அப்பிடிதாண்டா இருப்பேன் நான் சொல்லுறததாண்டா நீ கேக்கோனும்ன்னு இருக்காம..////நச்!!!!!!!!!!!! 

அண்ண உத நான் கண வீடுகள்ல பாக்கிறன்.. இஞ்ச மட்டுமல்ல எங்கேயும் பிள்ளைகளோடு நண்பர்களா பழகிப்பாருங்க.. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் மிக சிறந்த உறவு உண்டாகும் .. இத நான் ஒண்டும் புத்தகத்தில பார்த்து சொல்ல வேண்டிய தேவையே இல்லண்ண.. என்னுடைய அப்பாவே என்னுடைய மிகச்சிறந்த நண்பர்தண்ண.. நாங்கள் மனம் விட்டு கதைக்காத விடையங்களே இல்லையண்ண...!!!!

காட்டான் said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

அப்புறம்.. அந்த ஹோமோ செக்ஸ் மேட்டரில் நான் அவர் பக்கம் தான், ஒன்றை எதிர்க்க எதிர்க்க தான் அது வளர்ந்துட்டே வரும், அதை விட செக்ஸ் என்பது அவங்க அவங்க விருப்பம், இதில் அடுத்தவர் போய் மூக்கை நுழைக்கப்படாது.
ஓரினசெயர்க்கையோ ஈரினசெயர்க்கையோ அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை அது அவரவர் சுதந்திரம் என்பது என் கருத்து. 

ஆமாயா எந்த கருமத்த வேண்டுமானாலும் அவர்கள் செய்யட்டும்.. காட்டான் வேண்டாம்ன்னு சொல்லல.. ஆனால் காட்டான் இப்பிடி ஒரு ஹோமோ செக்சுவல்காரரோட இரண்டு வருசம் வேலை செய்தவன் அவர்கள் சமூகத்தின் மேலிருக்கும் கோவத்த காட்டானிடம் காட்டினால் என்ன செய்வது..? என்றாலும் இவர்களால் சமூகத்திற்கு ஒரு பிரச்சனையும் இல்லை கஞ்சா பிடிப்பவர்களைப்போல்...!!??

vidivelli said...

அருமையாக சுவாரசிகமாக விளிப்புணர்வூட்டியிருக்கிறீங்க காட்டான்...
நீங்களும் கவனம்...

காட்டான் said...

vidivelli has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..":

அருமையாக சுவாரசிகமாக விளிப்புணர்வூட்டியிருக்கிறீங்க காட்டான்...
நீங்களும் கவனம்...

நான் கவனமாய் தான்யா இருப்பேன்.. காட்டான் கஞ்சா வளர்கிரார்ன்னு என்னைய மாட்டி விடாத வரையப்பு..!!?
நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

ஆகுலன் said...

காட்டான் இது செல்லாது..திருப்பி இந்த பதிவை போடுங்கோ நான் முதலவாதா வாறன்.......சரி இனி என்ன செய்வது பதிவை வாசித்து விட்டு வாறன்....

Yoga.s.FR said...

உள்ளதைச் சொன்னால் பிரான்சில் மட்டுமல்ல,வேறும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பெற்றோர் எதிர்காலம் கருதி இரவு பகல் பாராது வேலை,வேலையென்று அலைகிறார்கள் தான்.பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைவு!ஒரு சில பிள்ளைகள் அந்த இக்கட்டிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.அந்த நாட்களில்,பலரும் உழைத்துக் கொண்டு செல்வோமென்றே இங்கு வந்தார்கள்.காலம் கை கொடுக்கவில்லையே,என்ன செய்ய?ஆனாலும் கூட பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக இங்கு தொடர வேண்டியிருக்கிறது என்று(மணியண்ணை போல்) சொல்வோர் பிள்ளைகள் மேல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.பிள்ளைகளின் நண்பர்களுடன் நாம் நட்பு பாராட்டுவதோடு நின்று விடாது,எங்கள் பிள்ளைகளின் மூஞ்சிப் புத்தக(பேஸ்புக்)நண்பர்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியம்!

Yoga.s.FR said...

ஆகுலன் said...

காட்டான் இது செல்லாது..திருப்பி இந்த பதிவை போடுங்கோ நான் முதலவாதா வாறன்.......சரி இனி என்ன செய்வது பதிவை வாசித்து விட்டு வாறன்....////ஆறு மணி நேர வித்தியாசம்,கண்ணா!ஒன்றும் செய்ய முடியாது.வெயில் காலம்,காட்டானுக்கு வேலை கூட!கிடைக்கும் இடைவெளியில் தான் பதிவிடுகிறார்.மன்னிக்க!!!!!!!!!!

ஆகுலன் said...

Yoga.s.FR said...,எங்கள் பிள்ளைகளின் மூஞ்சிப் புத்தக(பேஸ்புக்)நண்பர்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியம்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.என்னை உளவு பார்ப்பது போல் அல்லவா ஆகிவிடும்...பிள்ளைகளை நம்புங்கள்..சந்தேகம் வரும் பட்சத்தில் முயன்று பாருங்கள்

ஆகுலன் said...

காட்டான் உங்களுடைய பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு...
நீக்க சொன்னீங்களே பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள் எண்டு..அங்கதான் நீங்கள் நல்ல அப்பா எண்டு நிரூபிக்கிரீங்கள்....

நானும் இப்ப பிரஞ் படிக்கிறன்..என்னா கஷ்டம்...

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டான் இது செல்லாது..திருப்பி இந்த பதிவை போடுங்கோ நான் முதலவாதா வாறன்.......சரி இனி என்ன செய்வது பதிவை வாசித்து விட்டு வாறன்.... 

வாடா என்ர செல்லம்.. அதிக நேரம் காட்டானின் தோட்டத்துக்குள்ள நிக்காத கஞ்சா செடிய மணந்து பாக்கிறதே கூடாது... அப்ப ஏன் காட்டான் இத விதைச்சு வைச்சிருக்கான்னு பாக்கிறயோ ..!!? இதுகள கனவிலையும் நினைச்சுபோடாதீங்கன்னு சொல்லத்தான்யா... 

ஆகுலன் said...

கண்டிப்பா காட்டான்..ஒருநாள் கூடி நான் உதுகளை பற்றி நினைத்ததில்லை....நினைக்கவும் கூடாது எண்டு நினைக்கிறேன்.......

Yoga.s.FR said...

ஆகுலன் said...

Yoga.s.FR said...,எங்கள் பிள்ளைகளின் மூஞ்சிப் புத்தக(பேஸ்புக்)நண்பர்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியம்

////இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.என்னை உளவு பார்ப்பது போல் அல்லவா ஆகிவிடும்...பிள்ளைகளை நம்புங்கள்..சந்தேகம் வரும் பட்சத்தில் முயன்று பாருங்கள்.///கண்காணிப்பதென்றால் முன்னும்,பின்னும் திரிவதல்ல!சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தான்,மகனே!தொழில் நுட்ப வளர்ச்சி வரவேற்க வேண்டியது தான்!"அணு" மனித வளர்ச்சிக்கு வேண்டியது தான்!அதற்காக,ஹிரோஷிமாவை ஏற்றுக் கொள்ள முடியுமா?அது போல் தான்!

Yoga.s.FR said...

ஆகுலன்,உங்களுக்குத் தெரியுமோ,என்னவோ?"மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை" என்று ஓர் பழமொழி தமிழில் உண்டு!("அவளைத் தொடுவானேன்,அவலப்படுவானேன்"என்றும் ஒன்று உண்டு!அது எங்களுக்கு,அதாவது மணமுடித்தவர்களுக்கு)

Yoga.s.FR said...

50!!!!!!!!!!!!!

ஆகுலன் said...

நீங்க சொல்வது நூறு வீதம் சரி......
நான் சும்மா ஒரு இதில சொல்லிபுட்டன்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறு குறுகுறுக்கும்...(அதற்காக நான் குற்றம் செய்தவன் எண்டு சொல்ல வில்லை).....

காட்டான் said...

அண்ண வந்தாபிறகு கள கட்ட தொடங்கீற்று காட்டான்ட வீடு

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நீங்க சொல்வது நூறு வீதம் சரி......
நான் சும்மா ஒரு இதில சொல்லிபுட்டன்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறு குறுகுறுக்கும்...(அதற்காக நான் குற்றம் செய்தவன் எண்டு சொல்ல வில்லை)..... 

பாருங்கையா அண்ணையும் ஆகுலனும் சாட் பண்ணுறாங்க.. பண்ணுங்க... பண்ணுங்க.. எப்பிடியோ காட்டான்ட கருத்து பெட்டி நிறையப்போது.. அப்பிடியே கொண்டுபோய் என்ர மனிசிட்ட காட்டப்போறன்... பாரடி காட்டானுக்கு எவ்வளவு கருத்து வருகிறதெண்டு... இப்ப கொஞ்ச நாளா உங்கட தயவால வீட்டில தும்புக்கட்ட உடையுறதில்ல..!!!!!!!!!!!!!!???

Yoga.s.FR said...

மைந்தன் நித்திரை கொள்ளாம கொம்பியூட்டருக்கு முன்னால இருக்கிறார்!?ஆகுலன்,நான் சும்மா நடைமுறையையே சொன்னேன்!உங்கள் போன்றே என்னுடைய,காட்டானுடைய மற்றும் அனைவரினதும் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.அதற்காகவே அனுதினம் ஆண்டவனை வேண்டுகிறேன்!

Yoga.s.FR said...

ஆகுலன் said.....நானும் இப்ப பிரஞ் படிக்கிறன்..என்னா கஷ்டம்./////முயன்றால் முடியாதது எதுவுமேயில்லை!"இளமையில் கல்வி சிலையில் எழுத்து"முப்பது வயதுக்குப் பின்னர் பிரெஞ்சு கற்றவன் நான்.எனது பிள்ளைகள் ஸ்பெயின் மொழி மற்றும் ஆங்கிலம் கற்கிறார்கள்.படியுங்கள் கூடவே தேடுங்கள்,கிடைக்கும்.

Yoga.s.FR said...

காட்டான் said.....இப்ப கொஞ்ச நாளா உங்கட தயவால வீட்டில தும்புக்கட்ட உடையுறதில்ல..!!!!!!!!!!!!!!???///தும்புத் தடியை,தடியா வாங்காதயுங்கோ!இப்ப அலுமினியக் குழாயில செய்து விக்கிறாங்கள் தான,பிளாஸ்டிக் கவர் பண்ணி? அத வாங்கினியளெண்டா................................சிலவு மிச்சம் தான?எண்டு சொல்ல வந்தன்!

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

உள்ளதைச் சொன்னால் பிரான்சில் மட்டுமல்ல,வேறும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பெற்றோர் எதிர்காலம் கருதி இரவு பகல் பாராது வேலை,வேலையென்று அலைகிறார்கள் தான்.பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைவு!ஒரு சில பிள்ளைகள் அந்த இக்கட்டிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.அந்த நாட்களில்,பலரும் உழைத்துக் கொண்டு செல்வோமென்றே இங்கு வந்தார்கள்.காலம் கை கொடுக்கவில்லையே,என்ன செய்ய?ஆனாலும் கூட பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக இங்கு தொடர வேண்டியிருக்கிறது என்று(மணியண்ணை போல்) சொல்வோர் பிள்ளைகள் மேல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.பிள்ளைகளின் நண்பர்களுடன் நாம் நட்பு பாராட்டுவதோடு நின்று விடாது,எங்கள் பிள்ளைகளின் மூஞ்சிப் புத்தக(பேஸ்புக்)நண்பர்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியம்! 

உண்மைதாண்ண.. ஆனா மூஞ்சி புத்தகத்தில மூக்க நுளைக்கிறதவிட கணணிய விறாந்தேல போடலாமண்ண அதுக்கு பிறகு அவங்கள நாங்க கண்கானிக்கவே தேவையில்லைண்ண...!!!!!

காட்டான் said...

ஆகுலன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டான் உங்களுடைய பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு...
நீக்க சொன்னீங்களே பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள் எண்டு..அங்கதான் நீங்கள் நல்ல அப்பா எண்டு நிரூபிக்கிரீங்கள்....

நானும் இப்ப பிரஞ் படிக்கிறன்..என்னா கஷ்டம்... 

ஆகுலன் பிரான்சுக்கு வாங்கோ உங்கட விடுமுறயில்..பிரன்சும் படிக்கலாம்.. காட்டான் கோவணத்தோடும் கொக்குத்தடியோடும் எப்பிடி ஓடித்திரியுரான்னும் பார்கலாம்.. ஆனா டிக்கற் செலவு உங்கட... தங்குறதுக்கு வீட்டில இடமிருக்கு இப்ப பிரான்சில முன்ன மாதிரி இல்ல எங்கட ஆக்களின் வீடுகள் ஓரளவு வசதியாதான் இருக்கு... சாப்பாட்டைப்பற்றி கவலைப்படாதீங்கோ நீங்க வந்தா ஆடடிச்சு கொளம்பு வைப்பேன்.. பரீச என்ர லீவுநாள்ல காட்டுவன்... மற்றும்படி மெற்றோ மாப்ப வாங்கிதாரன்.. சுத்திபாருங்கோ... அதில ஒரே ஒரு சிக்கல்தான் இருக்கு...!!!??  அது என்னான்னா என்ர வீட்டில ரெண்டு குட்டிக்காட்டான்கள் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் சமாலிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. நான் ரெடி நீங்க ரெடியா...!!!!!??

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டான் said.....இப்ப கொஞ்ச நாளா உங்கட தயவால வீட்டில தும்புக்கட்ட உடையுறதில்ல..!!!!!!!!!!!!!!???///தும்புத் தடியை,தடியா வாங்காதயுங்கோ!இப்ப அலுமினியக் குழாயில செய்து விக்கிறாங்கள் தான,பிளாஸ்டிக் கவர் பண்ணி? அத வாங்கினியளெண்டா................................சிலவு மிச்சம் தான?எண்டு சொல்ல வந்தன்! 

கிளிஞ்சுதுபோ லம்பாடி லுங்கி.. நல்லா எடுத்துகொடுங்கோண்ண.. இப்ப நான் வீட்ட போய் சேரேக்க பதிவ பாத்த மனிசி கையில காசோட நிக்கப்போறாள்..!!? அண்ண சொன்ன தும்புக்கட்ட எக்கனோமிதானே..!? வாங்கிக்கொண்டு வாய்யான்னு சொல்லப்போறாள்..!!!!!!!!!))))

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

மைந்தன் நித்திரை கொள்ளாம கொம்பியூட்டருக்கு முன்னால இருக்கிறார்!?ஆகுலன்,நான் சும்மா நடைமுறையையே சொன்னேன்!உங்கள் போன்றே என்னுடைய,காட்டானுடைய மற்றும் அனைவரினதும் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.அதற்காகவே அனுதினம் ஆண்டவனை வேண்டுகிறேன்! 

நன்றியண்ண............

ஹேமா said...

காட்டான் ஐயாவுக்கு கொஞ்சம் உள்நடுக்கம் வரத்தொடங்கியிருக்கு.உந்தப் பிள்ளை குட்டிகளை எப்பிடி இந்த நாட்டில வளக்கிறதெண்டு.அதான் இந்தப் பதிவின் வெளிப்பாடு.

பிள்ளைகளைத் திட்டாம அடிக்காம அதில இருக்கிற நல்லது கெட்டதுகளை மெல்ல மெல்லச் சிநேகமா சொல்லிக் குடுங்கோ.
அல்லது இதனால் என்னென்ன பாதிப்பு.பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் காட்டுங்கோ.
நிச்சயம் எங்கட பிள்ளைகள் தவறமாட்டார்கள்.உதாரணதுக்கு இப்ப நீங்க இல்லையே !

Yoga.s.FR said...

அப்படியில்லை ஹேமா,எல்லாப் பெற்றோரும் கவனமெடுக்க வேண்டும் என்றே காட்டான் சொல்கிறார்,அவரையும் சேர்த்துத் தான்.

Mahan.Thamesh said...

நல்லதொரு பகிர்வு பாரும் இந்த பிரான்ஸ் மட்டுமில்ல எங்கேயும் இதுதானைய மாணவர்களின் பொழுதுபோக்காக மாறிவருது. நல்ல பெற்றோருக்கு நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க
சின்னன் குழ போட்டான்

காட்டான் said...

ஹேமா said...
காட்டான் ஐயாவுக்கு கொஞ்சம் உள்நடுக்கம் வரத்தொடங்கியிருக்கு.உந்தப் பிள்ளை குட்டிகளை எப்பிடி இந்த நாட்டில வளக்கிறதெண்டு.அதான் இந்தப் பதிவின் வெளிப்பாடு.

பிள்ளைகளைத் திட்டாம அடிக்காம அதில இருக்கிற நல்லது கெட்டதுகளை மெல்ல மெல்லச் சிநேகமா சொல்லிக் குடுங்கோ.
அல்லது இதனால் என்னென்ன பாதிப்பு.பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் காட்டுங்கோ.
நிச்சயம் எங்கட பிள்ளைகள் தவறமாட்டார்கள்.உதாரணதுக்கு இப்ப நீங்க இல்லையே !

என்ன ஹேமா இப்பிடி சொல்லீட்டீங்க காட்டான் ஒரு உதவாக்கரை இவனைபோய் உதாரணம் கூறாதீர்கள்..ஆனால் இந்த பதிவ நான் எழுதுவதற்கு காரணம் நீங்கதான் ஏன்னா நீங்கதானே சொன்னீர்கள் போன பதிவில் காட்டான் என்ன செய்யப்போறீயள்ன்னு..இத நான் வாரியார் சொன்ன கதையில் வரும் சுருட்ட பார்த்த மகனைப்போல் விளங்கி விட்டேனோ தெரியவில்லை.. அப்படி விளங்கியதும் நல்லதாய் போச்சு இப்ப பாருங்கோ இந்த பதிவுதான் காட்டான் எழுதினதில நல்ல பதிவெண்டு தம்பி ஆகுலன் சொல்கிறார்.. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரின்னு சொல்லுறாங்க உண்மையாகவா..!!???

ஆகுலன் said...

ஆகுலன் பிரான்சுக்கு வாங்கோ உங்கட விடுமுறயில்..பிரன்சும் படிக்கலாம்.. காட்டான் கோவணத்தோடும் கொக்குத்தடியோடும் எப்பிடி ஓடித்திரியுரான்னும் பார்கலாம்.. ஆனா டிக்கற் செலவு உங்கட... தங்குறதுக்கு வீட்டில இடமிருக்கு இப்ப பிரான்சில முன்ன மாதிரி இல்ல எங்கட ஆக்களின் வீடுகள் ஓரளவு வசதியாதான் இருக்கு... சாப்பாட்டைப்பற்றி கவலைப்படாதீங்கோ நீங்க வந்தா ஆடடிச்சு கொளம்பு வைப்பேன்.. பரீச என்ர லீவுநாள்ல காட்டுவன்... மற்றும்படி மெற்றோ மாப்ப வாங்கிதாரன்.. சுத்திபாருங்கோ... அதில ஒரே ஒரு சிக்கல்தான் இருக்கு...!!!?? அது என்னான்னா என்ர வீட்டில ரெண்டு குட்டிக்காட்டான்கள் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் சமாலிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. நான் ரெடி நீங்க ரெடியா...!!!!!?

நீங்கள் சொல்வதை கேட்கும் போது சந்தோசமாக இருக்கிறது..(நாம் தமிழர்)

காட்டான் நான் எப்ப வருவன் எண்டு தெரியாது..ஆனால் ஒருநாள் வருவேன்..உங்களையும் சந்திப்பேன்...(எனக்கு என்னம் காலம் இருக்குது..உங்கட காலத்துக்கு இடையில வருவான் இவன்..)

மதுரன் said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு காட்டான்..

மதுரன் said...

ஃஃலீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்ஃஃஃ

நிச்சயமாக இதை கடைப்பிடித்தால் நல்ல பலன் உண்டு

காட்டான் said...

Mahan.Thamesh has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": நல்லதொரு பகிர்வு பாரும் இந்த பிரான்ஸ் மட்டுமில்ல எங்கேயும் இதுதானைய மாணவர்களின் பொழுதுபோக்காக மாறிவருது. நல்ல பெற்றோருக்கு நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க சின்னன் குழ போட்டான் நன்றி மாப்பிள நீ என்னை தொடர்ந்து வருவதற்கு யாரை மறந்தாலும் உங்கள மறக்க முடியாது...!!!!!!

Yoga.s.FR said...

காட்டான் said... கணணிய விறாந்தேல போடலாமண்ண அதுக்கு பிறகு அவங்கள நாங்க கண்கானிக்கவே தேவையில்லைண்ண...!!!!!////அது வாங்கின நாள் தொடக்கம் விறாந்தயில தான் கிடக்கு!கன காலத்துக்குப் பிறகு எங்கட வீட்ட வந்த நண்பரின் மனைவி சொன்னா;சரியான இடத்தில தான் பெட்டிய வச்சிருக்கிறியள் எண்டு!காத்தோட்டமாயும் இருக்குமெல்லோ?????(கோவணம் மாதிரி!)

புலவர் சா இராமாநுசம் said...

நல்ல சமுதாய நோக்கோடு
எழுதப்பட்டுள்ள பதிவு
எதிர் கால இளைஞர், வளரும்
பருவத்தினர் அறிய வேண்டியன
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

மதுரன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு காட்டான்.. 

ஃஃலீவு நாட்களில் பிள்ளைகளை அவர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு அழைத்து செல்வோம்.. முக்கியமாக அவர்களின் நண்பர்களை தெரிந்து கொண்டு அவர்களுடனும் நண்பர்களாக பழகுவோம்ஃஃஃ

நிச்சயமாக இதை கடைப்பிடித்தால் நல்ல பலன் உண்டு 
நன்றி மதுரன் உங்கட கருத்துக்கும் வருகைக்கும்... இதில கும்மியடிக்க முடியவில்லைன்னு கவலைப்படாதீர்கள்.. அடுத்த பதிவில் கும்மியடிப்போம்...

காட்டான் said...

புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

நல்ல சமுதாய நோக்கோடு
எழுதப்பட்டுள்ள பதிவு
எதிர் கால இளைஞர், வளரும் 
பருவத்தினர் அறிய வேண்டியன
நன்றி!

புலவர் சா இராமாநுசம் 

நன்றி ஐயா உங்கட வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.. 

காட்டான் said...

Yoga.s.FR has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

காட்டான் said... கணணிய விறாந்தேல போடலாமண்ண அதுக்கு பிறகு அவங்கள நாங்க கண்கானிக்கவே தேவையில்லைண்ண...!!!!!////அது வாங்கின நாள் தொடக்கம் விறாந்தயில தான் கிடக்கு!கன காலத்துக்குப் பிறகு எங்கட வீட்ட வந்த நண்பரின் மனைவி சொன்னா;சரியான இடத்தில தான் பெட்டிய வச்சிருக்கிறியள் எண்டு!காத்தோட்டமாயும் இருக்குமெல்லோ?????(கோவணம் மாதிரி!) 

சூப்பரண்ண.. உங்கள் நண்பரின் மனைவிக்கு பிள்ளைகள் மீது அதிக கரிசனை இருக்குது...!!!!

விக்கியுலகம் said...

மாப்ள பல விஷயங்கள் புரிஞ்சுதுய்யா...என்னவெல்லாம் நடக்குது உலகத்துல!

Yoga.s.FR said...

75!!!!!!!!!!!

காட்டான் said...

75!!!!!!!!!!! 
அண்ணாத்த பாத்து பாத்து அடிகிறீங்கண்ண..!!!!!!!!!!!!!!!!!!!!

காட்டான் said...

விக்கியுலகம் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

மாப்ள பல விஷயங்கள் புரிஞ்சுதுய்யா...என்னவெல்லாம் நடக்குது உலகத்துல! 

ஆமா மாப்பிள.. ஆனா இஞ்ச இப்பிடி நடக்கிறயுக்கு காரணம் குடும்ப அமைப்பு அவ்வளவு பலமானது இல்லை எங்களைப்போல்..!!? அடுத்து அதிக சுதந்திரமும் ஒரு காரணமோ என்னவோ...!!!!??

ஹேமா said...

அட...நான் சொன்ன ஒரு சொல் பெரிய பதிவாப்போட்டுதே.
சந்தோஷம்.உங்களை உருவேத்த யோகா ஒருத்தர் போதாதே !

காட்டான் said...

ஹேமா has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

அட...நான் சொன்ன ஒரு சொல் பெரிய பதிவாப்போட்டுதே.
சந்தோஷம்.உங்களை உருவேத்த யோகா ஒருத்தர் போதாதே ! 

நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் உண்மை அதுதான்.. நீங்க சொன்னத நான் சுருட்டைப்பார்த்த மகன் போல் விளங்கி விட்டேன்...

Ramani said...

இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

காட்டான் said...

நன்றி நன்றி தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் உங்கள் பதிவுக்கும் வருகின்றேன்..

காட்டான் said...

நன்றி ஐயா அதையும் நான்பார்தேன்.. என்னுடன் துஷியையும் அறிமுகபடுத்தினீர்கள் அவர் சார்பாகவும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

பாசமுடன் காட்டான்...

அம்பாளடியாள் said...

அம்பாளடியாள் வந்தாள் காட்டான் ஆக்கத்தைப்
பார்த்தாள்.என்னத்த சொல்ல'..காட்டான் எது
எழுதினாலும் அருமையா எளுதுவாரில்ல!.......
வாங்கோ படியுங்கோ வாழ்த்துங்கோ இந்தக்
காட்டான.நானும் வாழ்த்துறன் அருமையான
ஆக்கங்கண்டு.நன்றி காட்டான் பகிர்வுக்கு.

காட்டான் said...

அம்பாளடியாள் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

அம்பாளடியாள் வந்தாள் காட்டான் ஆக்கத்தைப் 
பார்த்தாள்.என்னத்த சொல்ல'..காட்டான் எது 
எழுதினாலும் அருமையா எளுதுவாரில்ல!.......
வாங்கோ படியுங்கோ வாழ்த்துங்கோ இந்தக் 
காட்டான.நானும் வாழ்த்துறன் அருமையான 
ஆக்கங்கண்டு.நன்றி காட்டான் பகிர்வுக்கு. 

ஐயோ.... என்ர அம்மா உங்கட வாழ்த்துக்கள் ஆசிகள் என்னை செம்மைப்படுத்துகிறது.. உங்கள் வாழ்த்துக்களுக்கேற்ப நான் நடக்க முயற்சிக்கிறேன்..நன்றியம்மா நன்றி... 

மாலதி said...

ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..//வழிகாட்டுதல் பதிவு.

Yoga.s.FR said...

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!

காட்டான் said...

மாலதி has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

ஐரோப்பாவிலேயே கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்..//வழிகாட்டுதல் பதிவு. 

நன்றி சகோதரி உங்கட வரவுக்கும் கருத்து பதிவுக்கும்.. வழிகாட்டுதல் பதிவு என்கிறீர்களே..!!!!!?????  இதில் ஒன்றும் உள்குத்து இல்லைத்தானே சகோதரி..?? ஏனென்றால் நாங்கள் போடும் பின்னூட்டங்களையும் ஒரு குறும்பாடு பாத்துக்கொண்டிருக்கு சகோதரி... 

உலக சினிமா ரசிகன் said...

கஞ்சாவை நமது தமிழ் மருத்துவத்தில் மூலிகையாக பாவிக்கிறார்கள் என கதை கட்டுவார்கள் கஞ்சா ரசிகர்கள்.
பாம்பின் நஞ்சு கூட மருந்துதான்.
அதற்க்காக குடிக்க முடியுமா?
மாணவர்களை மந்தனாக்கி...பித்தனாக்கி விடும் கஞ்சா.
உ.ம்:எனது ஆருயிர் நண்பனது அண்ணன்.

Chitra said...

இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்க விட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!?

...... தமிழ் நாட்டில் இதை சொல்லி விடாதீங்க.... அப்புறம் டாஸ்மார்க் மாதிரி, இதையும் கடை போட்டு விற்க ஆரம்பிச்சுடுவாங்க.... ஹி,ஹி,ஹி....

காட்டான் said...

உலக சினிமா ரசிகன் has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

கஞ்சாவை நமது தமிழ் மருத்துவத்தில் மூலிகையாக பாவிக்கிறார்கள் என கதை கட்டுவார்கள் கஞ்சா ரசிகர்கள்.
பாம்பின் நஞ்சு கூட மருந்துதான்.
அதற்க்காக குடிக்க முடியுமா?
மாணவர்களை மந்தனாக்கி...பித்தனாக்கி விடும் கஞ்சா.
உ.ம்:எனது ஆருயிர் நண்பனது அண்ணன். 

நன்றி மாப்பிள உங்கட வருகைக்கும் கருத்து பதிவுக்கும்..  இஞ்ச நடக்கிற வழிப்பறி சம்பவங்களுக்கு முக்கிய காரணமே இந்த கஞ்சாதான்... 

காட்டான் said...

Chitra has left a new comment on your post "காட்டானும் பார்த்தானே..": 

இவர் சொல்கிறார் கனபியை அங்கீகரித்து அதை கடைகளில் விற்க விட்டால் அரசுக்கு எவ்வளவோ மில்லியார் யூரோ வருமானம் வருமாம்...!? 

...... தமிழ் நாட்டில் இதை சொல்லி விடாதீங்க.... அப்புறம் டாஸ்மார்க் மாதிரி, இதையும் கடை போட்டு விற்க ஆரம்பிச்சுடுவாங்க.... ஹி,ஹி,ஹி.... 
 
நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.. இப்பதான் எனக்கு புரிகிறது உங்கள் தலத்தை பின்பற்றுபவர்கள் ஏன் அதிகமென்று... பின்ன காட்டானுக்கும் கருத்து போட ஓடோடி வருகிறீர்கள் என்றால் பதிவுலகை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்... சந்தோஷம் சகோதரி...

அம்பாளடியாள் said...

வணக்கம் காட்டான் என் தளத்தில் அருமையா
ஒரு குளையல் வச்சு இருக்குறன் முதற்கருத்து
காட்டான்தான் போடணும் என்று என் மனம் சொன்னது
அதனால இந்த அழைப்பைத் தவற விடாதீக நன்றி
வரவு நல்வரவாகட்டும்......

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு தரும் பொறுப்பு மிக்க பகிர்வை மனதார பாராட்டுகின்றேன்

காட்டான் said...

இராஜராஜேஸ்வரிsaid...
விழிப்புணர்வு தரும் பொறுப்பு மிக்க பகிர்வை மனதார பாராட்டுகின்றேன்

நன்றியம்மா உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்..

சாய் பிரசாத் said...

பயனுள்ள பதிவு, ஆரம்பத்தில் எனக்கும் இதே குளப்பம் தான் எல்லோரும் சுருட்டி ,சுருட்டி தம் அடிக்கிறார்களஏன்று பிறகுதன் புரிந்தஹ்டு அதன் உண்மை, பயனுள்ள பதிவு நண்பரே :)

காட்டான் said...

மிக்க நன்றி நன்பரே.. எனது பதிவிற்கு வருகை தந்ததற்கும் கருத்து பதிவிட்டதற்கும்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

ஐயோ கேட்கவே பயங்கரமாக உள்ளது, ஒரு அரசாங்கமே மக்களை கெடுக்கும் உரிமையை அளித்துள்ளதை நினைத்து வேதனை படுகிறேன்,, நல்ல பகிர்வு,

அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

♔ம.தி.சுதா♔ said...

////கஞ்சா என்றழைக்கப்படும் கனபி பாவிப்போர் பிரான்சில்தானாம் அதிகம் இளைஞர்களில் 23%மானவர்கள் கனபி பாவிக்கிறார்களாம்////

விரைவில் சூட்டுப் பயிற்சி பெற விரும்புவோருக்க நல்ல ஒரு இடமாக பிரான்ஸ் விளங்கும் என்பதில் ஐயமில்லை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

siva said...

100...

siva said...

எண்ட வாழ்த்துக்களும்
வாழ்க வளமுடன்

Anonymous said...

காட்டான் நலமா!!!

Anonymous said...

காட்டான் நலமா!!!

அம்பாளடியாள் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

கஞ்சா என்று அழககாகத் தமிழில் சொல்வதுதானே?