முகப்பு

Sunday 27 November 2011

மூன்று தகவல்கள் ...

வணக்கம்..!!

டிஸ்கி- எல்லாரும் டிஸ்கியை கடைசியாக தான் எழுதுவாங்க. ஆனா நான் பதிவு எழுதணும் எண்டு எழுதல, என்ர மாப்பிள எழுதுற சங்கிலியன் தொடர் பிடிச்சிருக்கு.. இது கட்டாயம் அதிகமான பேரை சென்றடையவேண்டும் என்ற காரணத்தால அது பற்றி என் வலைத்தளத்திலே அறிமுகத்துடன்; என்ர மூஞ்சி புத்தகத்தில் போட்ட இரு தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடர் உண்மையிலே நாம தெரிஞ்சுக்க வேண்டியது. யாரும் தவறவிடாதேங்கோ. 


நான் பார்த்தவரை இலங்கை இந்தியா போன்ற கீழத்தேய நாடுகளில்தான் பெண் அதிபர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள்...!!??


இன்னும் குறிப்பாய் வல்லரசுகள் என்னும் வீட்டோ அதிகார நாடுகளில் அதிபர்கள் அனைவருமே ஆண்கள்.. பிரான்சில் அதிபர் தேர்தலில் (அங்கேலா மேர்கர் அம்மையார் போன்றோர் விதி விலக்கு..).போட்டியிடும் பிரதான இரண்டு வேட்பாளர்களும் ஆண்களே...! ஆகையால் இன்னும் ஐந்து வருடம் இங்கும் பெண் அதிபர்கள் வரமாட்டார்கள்...!!!

ஐயா நான் காட்டானுங்க.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..?

 மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!! 

ஆனால் கீழத்தேய நாட்டில் பெண்களுக்கு சம உரிமை இல்லை.. ஆனால் பெரிய பதவிகளில் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். உலகத்தின் முதல் பிரதமர் சிறீமாவோ தொடக்கம் முதலாவது இஸ்லாமிய பிரதமர் பெனாஷிர் பூட்டோ வரை பட்டியல் நீளம்

ஐயா..! 
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா


டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊரில் ஆச்சி அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை தை பிறந்தால் வழி பிறக்கும் என்று.??!!

இதை நான் பல இடங்களில் வெவ்வேறு அர்த்தத்தில் பேசுவதை கேள்விப்பட்டிருக்கிறேன்..

1 :-தை பிறந்தால் விவசாயிகள் அறுவடை முடித்து தானியங்களை விற்பனை செய்து வரும் வருமானத்தில் சந்தோஷமாய் நற் காரியங்கள் செய்வார்கள்.(திருமணங்கள் கூடுதலாக தை மாதத்தில்தான் செய்கிறார்கள்..!!! அப்போதுதான் ஆடி மாதத்தில் மாசமான பெண்னை பிரித்து வைக்கலாம்.. ஹி ஹி ஹி!!)

2:-இப்படியும் சொல்கிறார்கள் அந்த காலத்தில ஒவ்வோர் ஊருக்கும் இடையில் இப்ப இருப்பது போல் சாலை வசதி இல்லை.. விவசாய நிலங்களாலும் நீராலும் சூழப்பட்ட கிராமத்தில் மாரி காலத்தில் பாதை அடைபட்டு போகின்றது. 

தை மாதத்தில் நீரும் வற்றி அறுவடையும் முடியும்போது பாதை அதாவது வழி தெரிகின்றது.. ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் சொல்கிறார்கள்...!!!!!!))) 

எது சரி? இக்காலத்திலும் இந்த பழமொழி எமக்கு சரி வருமா..? தை பிறந்தால் இப்போ இருக்கும் விவசாயிகளும் முன்னைப்போல் சந்தோஷமாய் இருக்கிறார்களா..? 

44 comments:

அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான், உங்கள் நல்ல மனதிற்கு முதலில் வாழ்த்துக்கள். திறமைசாலிகள், நல்லகருத்துக்கள், சகபதிவர்கள் எழுதும் சிறந்த பதிவுகள் பலரிடமும் சென்றடையவேண்டும் என்ற பரந்த உள்ளம் வெகு சிலரிடமே இருக்கும் உங்களிடம் அது நிறைய இருக்கிறதென்பதை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன் . இன்றைய பதிவும் அதற்கு ஒரு அத்தாட்சி. வாழ்த்துக்கள்.

காட்டான் said...

வருகைக்கு நன்றி அம்பலத்தார்.. மற்ற தகவல்கள் நீங்க மூஞ்சிப்புத்தகத்தில் பார்த்ததுதானே..ஹி ஹி ஹி

Unknown said...

உங்கட மாப்பிள்ளைக்கு நல்ல விளம்பரம் :) அதுசரி கடைசியில் மற்றவர்கள் எப்படி மாப்பிளை போட்டியில் விலகி போனார்கள்?

காட்டான் said...

M.Shanmugan said...
உங்கட மாப்பிள்ளைக்கு நல்ல விளம்பரம் :) அதுசரி கடைசியில் மற்றவர்கள் எப்படி மாப்பிளை போட்டியில் விலகி போனார்கள்?

ஆஹா பிடிய கொடுத்துட்டேனோ?? இனி மற்றவங்க பொல்லோட வரப்போறாங்களோ?? ஹி ஹி

KANA VARO said...

என்ர மாப்பிள எழுதுற சங்கிலியன் தொடர் பிடிச்சிருக்கு.. //

அங்கை நிரூ.. இங்கை நானா? நடக்கட்டும்.. நடக்கட்டும்..

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

காலை வணக்கங்கள்... இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா பகிர்வுக்கு நன்றி.. முக நூல் என்ற அழகிய சொல்லாடலை விட்டு முஞ்சி புக்? ஒய் திஸ் கொலை வெறி?

நிரூபன் said...

வணக்கம் மாமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


என்னா நடக்குது?
ஒரு நீதி நியாயம் வேணாம்?
என்னா பண்றீங்க?

ஆமா வரோ மாப்பிளைன்னா நாமெல்லாம் யாரு?
ஹி.....ஹி....

அப்போ நம்மளோட கலியாண நிலமை என்னாவது?

இராஜராஜேஸ்வரி said...

இந்த தொடர் உண்மையிலே நாம தெரிஞ்சுக்க வேண்டியது. யாரும் தவறவிடாதேங்கோ.


தவறவிடக்கூடாத அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

தினேஷ்குமார் said...

நல்ல பகிர்வு

கவி அழகன் said...

Kaddan sir vanakkam valthukal

SURYAJEEVA said...

அருமை போங்கள்... ஆனால் பெண்கள் அடிமை பட்டிருப்பது ஆண்களிடம் அல்ல, பெண்களிடமே என்பது என் வாதம்... நாம தான் பெண்களிடம் அடிமை பட்டு கிடக்கிறோம் என்பது தான் உண்மை.. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் வளர்ச்சியை ஒரு ஆண் மூலமாக தடுக்கிறாள் என்பது என் கணிப்பு..

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான..... அருமையான..... தகவலுக்கு நன்றி நண்பரே!

Unknown said...

நல்ல ஆய்வு !
சிந்திக்க வைக்கிறது!
அருமை யான பதிவு!


புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said...

அன்புநிறை காட்டான் மாமா,
சக பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களின்
மேம்பட்ட உள்ளத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..
மேலைநாடுகளில் பெண் சுதந்திரம் இருக்கும் ஆனாலும் ஆணாதிக்கம் மேலோங்கி இருக்கும். நாம் அப்படி இல்லையே கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்கள்.. திறமைசாலிகள் யாராயிருந்தாலும் அடையாளம் காட்ட தயங்காதவர்கள்..
அடையாளம் காட்டப்பட்ட பெண் ஆளுநர்கள் தவறான பாதையில் சென்றாலும் அதை மேம்போக்காக பேசியே காலத்த ஒட்டி விடுவோம்.. அவர்களை குற்றம் சொல்ல மாட்டோம்!!!!
சுயநலம் ஏறிப்போய் திரியும் நம்மவர்கள் ஆனாய் இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி எல்லாம் ஒண்ணுபோல தான் யோசிக்கிறாங்க..
என்னாத்த சொல்ல...

"தை பிறந்தால் வழி பிறக்கும்" பழமொழி பண்டைய விவசாய வாழ்க்கையையே குறிக்கிறது என்றே எண்ணுகிறேன் மாமா...
இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாவிட்டாலும்..
பொருந்த வைக்கலாம்..
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலா..
விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தலாம்.. (ஒரு கூட்ட நெல்லை ரூபாய் ஐந்நூறுக்கு விற்கும் விவசாயிகள் ஒரு மூட்ட உரம் அறுநூறுக்கு வாங்குகிறார்கள்.. கலி காலம் யா!!!)

கேள்விகள் பிறக்கவேண்டும்
அப்போதுதான் அதன் விடைகாணும் தகுதியும் நமக்கு வளரும்..
அருமையான பதிவுக்கு நன்றிகள் பல மாமா..

RAMA RAVI (RAMVI) said...

//ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா


டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) //

சொல்லரதையும் சொல்லிட்டு டிஸ்கி வேற......

பழமொழிகளெல்லாம் நம் முன்னோர்களின் அனுபவமே என்று தான் எனக்கு தோன்றுகிறது.காலம் மாறி போனதனால் எல்லாமே மறி போயிடுத்து.

Unknown said...

நல்ல தகவல்கள் மூன்றும்!
பெண்கள் தொடர்பான உங்க சந்தேகம் நல்லாத்தானிருக்கு! :-)

நாய் நக்ஸ் said...

பகிர்வுக்கு நன்றி ...!!!

Admin said...

காட்டானை காண்பது இதுதான் முதல் தடவை..யோசிக்க வைக்கும் பதிவுதான்..

Anonymous said...

இலங்கையை குட்டி சுவராக்கிய பெரும் பங்கு சந்திரிக்கா அம்மையாருக்கு எண்டா, இந்தியாவுக்கு சோனியாகாந்தி....

Anonymous said...

தைபிறந்தால் வழி பிறக்கும் என்டதுக்கு நீங்க சொன்ன இரு தகவலும் சரியாக தான் இருக்கு ..ஆனா எனக்கு இரண்டாவது தகவல் புதிது...

Anonymous said...

வரோவுக்கு வாழ்த்துக்கள் ...

Anonymous said...

வணக்கம் காட்டான்...

சிந்திக்க வைக்கிறது உங்கள் எழுத்து...தொடருங்கள்...கற்றுக்கொள்கிறேன்...

அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்...

BTW,மற்றவர்கள் எப்படி மாப்பிளை போட்டியில் விலகி போனார்கள்?

டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ// -:)

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

காட்டான் அண்ணன், உங்கள் தலைப்பு மேலே வருகுதே இல்லை... காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை....

சரி அதுபோகட்டும்....

எல்லோரும் நம்பியிருக்க... திடுதிப்பென ஒருவரை மட்டும் மாப்பிள்ளை என அறிவித்தமையை நானும் நானும்.... வன்மையாகக் கண்டிக்கிறேன்....:).

அதுசரி நிரூபனில, மாயாவில என்ன குறை கண்டீங்க?:)... என் மாப்பிள்ளைகளில் ஒருவரான என பதிவில சொல்லியிருந்தால் நானும் ஆமோதித்திருப்பேன்..:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))).


உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பத்த வச்சாச்சு:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா


டிஸ்கி:- நான் பெண்களின் எதிரி இல்லைங்கோ!!!))) ///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டிவிட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

பெண்கள் அதிபர்களாக இருந்தாலும் நம் நாடுகளில் மந்திரிமார் ஆண்கள்... அதுதான் பிரச்சனையே..:)).

மேலை நாடுகளில் அதிபர் ஆண்கள் மந்திரிமார் பெண்கள்... இப்போ புரியுதோ... மந்திரியின் சொல்லுக்குத்தான் பவர் அதிகம்.... புரிஞ்சால் சரி...:))).

கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).. நீங்க இதைப்படிக்காதீங்க... சிவலயனைக் கவனியுங்க...:)))))

முற்றும் அறிந்த அதிரா said...

//தை பிறந்தால் வழி பிறக்கும் //

நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீங்க... போனதடவை வெற்றிலை பற்றிய பாடம்... ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொள்கிறேன் உங்கள் பதிவிலிருந்து.

திருமகள் said...

சிவலயனை அடக்கியோ இல்லை உங்கட பொட்டைய தூக்கியோ உலகம் பூரா இருக்கிற மருமோன்களில யாருக்கு தை பிறந்தால் வழி பிறக்குது எண்டு பாப்பம்...:)))

ம.தி.சுதா said...

/////மேலை நாட்டுக்காரர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறார்கள் என்றாலும் அதி முக்கிய பதவிகள் ஆண்களுக்கே ஒதுக்குகிறார்கள்..!! ////

அண்ணே குழுமத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருந்தேனே இப்பத் தான் பதிவப் பக்கம் வர முடிந்தது...

விடுங்க விடுங்க அங்க பல விசயத்தில் சம உரிமை இருக்கு படங்கள் பார்க்கிறதில்லியா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

எஸ் சக்திவேல் said...

ஐயா..!
எனக்கு ஒரு சந்தேகம்.. மேலைத்தேய நாடுகளின் வளர்ச்சிக்கு பெண்கள் அதிபர்களாக இல்லாததுதான் காரணமா
---

எனக்கும் அதே சந்தேகம் உண்டு. நானும் பெண்களின் எதிரி இல்லைங்கோ.

எஸ் சக்திவேல் said...

முன்னமே உங்கள் profile ஐப் பார்த்திருந்தால் உங்களுக்கே சமர்ப்பணம் செய்திருப்பேன்:-). இப்பவும் மாத்தலாம், ஆனால் பழனி முருகன் கோவித்துக் கொள்வார் என்பதால் விட்டு விடுகிறேன்.

http://www.ssakthivel.com/2011/10/blog-post.html

ஆகுலன் said...

மாமோய் அருமை.....

யேர்மன் அதிபர் (அதிபர் எண்டு சொல்லுறது இல்லை எண்டு தெரியும் ஆனா இப்ப chancellor இன் தமிழ் மொழி பெயர்ப்பு தெரியவில்லை..)பெண் தானே...

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் காட்டான் .

Unknown said...

ஈழத்து நக்கல் சூப்பராக இருக்கிறது....

மாலதி said...

பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்திக்கத் தூண்டிப் போகும் தகவலக்ள்
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஹேமா said...

காட்டான்....அட இப்பவும் உங்களை இணைத்துக்கொண்டபிறகும்கூட பதிவைத் தவறவிட்டிருக்கிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.புதுசா இருக்கு செய்தி.

என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

கதம்ப உணர்வுகள் said...

பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா..

மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

ad said...

பழமொழி சொன்னா அனுபவிக்கணூம்.இப்புடியெல்லாம் கேட்டா என்ன சொல்றது?(தெரிஞ்சாதான சொல்றதுக்கு.)

அந்த சங்கிலியன் தொடர் சம்பந்தமான அறிவிப்பு நிச்சயம் தேவையான ஒன்று.வித்தியாசமான முயற்சி.
ஆனால்,வலையில் இதை எழுதும்போது,இதை வேறு யாராவது கொப்பியடித்து,தங்களுடைய உரிமையில் நூலாக்கிவிட்டால் என்ன செய்வது?என்றொரு கேள்வி மனதிலுண்டு.

அன்புடன் மலிக்கா said...

உங்களின் தளத்துக்கு முதல் முறை வருகிறேன்

நல்லதொரு அருமையான பதிவு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Unknown said...

அப்பச்சி!வணக்கம்! வருடத்திக்கு முப்போகம்...காசு பணத்தை ஒவ்வறு போகமா சேர்த்துவாங்க.. கடைசி போகம் தைபோகம், முப்போக பணத்தை மொத்தமா தை மாதம்தான் சேரும்,அப்பத்தான் பொண்ணு..பயங்களுக்கு நல்லது..பண்ணுவாங்க...கல்யாணம் காட்சின்னு..அதான் தை பிறந்தால் வழி பிறக்கும்ன்னு சொல்லுவாங்க இது எங்க அப்பச்சி சொன்னது...(போட்டாவை பார்த்து அப்பச்சின்ட்டேன் மன்னிச்சுக்கங்க அப்பச்சி)

Admin said...

மற்றவர்களை புகழ்வது சிலருக்கு பிடிக்காது. பல பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்கள் மனதிற்கு தலை வணங்குகின்றேன். நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

மாலதி said...

அருமையான பகிர்வுகள்..