முகப்பு

Monday, 13 June 2011

மிதி வண்டிகளுடன்...எனது வாழ்க்கை பயணங்கள்...!



இன்று காலையில் எனது மிதிவண்டியை(சைக்கிள் என்றே  எழுதுகிறேன் இலகுவாக இருக்கின்றது..?)எடுத்துக்கொண்டு வேலைத்தலத்திற்குசெல்கிறேன்.குளிர்காலங்களிலும் இங்கு  சைக்கிளை உபயோகிப்போர் அதிகரித்து வருகிறார்கள்... இதற்காகவே இங்கு  சைக்கிளுக்காக புதிய சாலைகளை உருவாக்கி வருகின்றார்கள்..எனது நினைவலைகள் பின் நோக்கிபயணிக்கிறது...
நான் பார்தவரை இங்கு தமிழர்கள் சைக்கிள்
பாவிப்பது மிக மிக குறைவே. இத்தனைக்கும்
பத்து வயதிக்குமேலிருக்கும் இலங்கையர்  ஒருவர்கூட சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் இல்லையெனலாம்..?இப்படித்தான் நானும்  எனது சிறுவயதில்                              

அப்பாவின் பெரிய சைக்கிளை எடுத்து (வாருக்கு கீழ் ) விழுந்து எழுந்து ஓட்டிப்பழகினேன் தழும்புகளுடன்.
ஓரளவு ஓடிப்பழகியவுடன் மனதுக்குள்
பட்டாம்பூச்சிகள்தான்.பட்டாம்பூசிகளுக்கு சாலை விதிகள் ஏது? எந்த ஒரு வாகனங்களுக்கும்  வழிவிடமாட்டோம்.
இப்படியான  செயல்பாடுகள் கட்டாயம்
எங்கள் வீட்டிற்கு தெரியவரும் ஏனெனில்
நாங்கள் தடுத்தோடும் வாகணங்களுக்குள்
யாரோ ஒரு சொந்தக்காரன் அல்லது
தெரிந்தவர் இருந்தேதீருவார்கள்(சிறிய கிராமம்தானே எல்லோருமே தெரிந்தவர்தான்..?)வீட்டிற்கு வந்தால் பொங்கல்தான் ..! எனது12வது வயதில்
போடாத குட்டிக்கருணமெல்லாம் போட்டு அம்மாவிடம் கெஞ்சி குளறி அம்மா போட்ட சிலகட்டுப்பாடுகளுக்கு இணங்குவதாக கூறி(அப்போதைக்கு மட்டும் வேறு வழி?)
ரூ1500க்கு(1986க் கடைசியில்)
 புதிய சைக்கிள் ஒன்று வாங்கினேன்.யாழ்பாணத்திலில் இருக்கும்
புகழ் பெற்ற E S P சைக்கிள்  கடையில்.
அன்றுலிருந்து அதிக பொய்களும் சொல்லாப்பழகினேன் பள்ளியில் புத்தகங்கள்
வாங்கவேண்டும்,பென்சில்,பேனா வேண்டுமென்று அம்மாவிடம் காசை கறப்பது சைக்கிளுக்கு  செலவழிப்பது அதை அவர்கள் கண்டு பிடிப்பது இப்படி நாட்கள்
நகர்ந்தன.....இந்திய இராணுவத்தின் கடைசிக்காலங்களில்..?எனது சைக்கிள்
அவர்களுக்கே டிமிக்கி கொடுத்திருக்கின்றது.(நாமதானே பட்டாம்
பூச்சிகள்.?எங்களுக்கு தெரியாத தெருக்களா!?)காலதேவன் விழுங்கும் நாட்களால்....நானும் மூன்று கிலோ மீற்றர்
தொலைவிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு
ஒரு நாளைக்கு நான்கு தடவைகள்(மதியபோசனம் வீட்டில்)சென்று
வருவேன்.(இப்போது எனது கிராமத்திலே இருபது ஆட்டோக்கள் ஒடுகிறதாம் சிறுவர்கள் அதில்தான் பள்ளி செல்கிறார்களாம். எனது முதல் ஆட்டோ
பயணம்12வயதில்...!?கொடுத்து வைத்தவர்கள்)இவை மட்டுமல்லாது பள்ளித்  தேவதைகளின் பின்னாலும் எங்கள் சைக்கிள்  அவர்களை வீடுவரை தேர்ந்த காவளாளி போல் பிந்தொடர்ந்து செல்லும்(சிலசமையங்களில் அடியும் வாங்குவோம்.!)பின்னர் புண்பட்ட நெஞ்சய்
மாரிமுத்து மாமாவின் தென்னந்தோப்பில் புகைவிட்டு ஆற்றி (எழுத்து பிழையா.!?) அங்கிருக்கும் இளநீரை குடித்து(களவாணிப்பயலே.!?)வீட்டுக்குசெல்வோம்.வழியெங்கிலும் பெருசுகள் ஒரு மாதிரியாக பார்பார்கள்.!வீட்டில் ஒரு மாநாடு கூட்டத்தோடு  எங்கள் அம்மாவும் அம்மம்மாவும்  நிற்பார்கள்..(இந்தியராணுவம் பிடித்து விட்டதோ...?)காலவோட்டத்தில்  நாங்களும்
புலம்பெயர்தோம்....இன்று பாரீசின் புறநகர் பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பத்தோடு வசிக்கும் நான் எனது லீவு
நாட்களில் பிள்ளைளோடு சைக்கிளில்
பட்டாம்பூச்சிப் பறப்புக்களை தவறவிடுவதில்லை....!!நான் நினைக்கிறேன்
எந்த ஒரு மனிதனையும் அவனது இளமைக்காலங்களே இயக்குகிறது....?என்னைப் பொறுத்தவரை சைக்கிள்  ஒரு குறியீடு!!!காலமென்னும் சக்கரங்களை பெடல் என்னும் நினைவுகளால் ஓட்டிச் செல்கிறேன்...(மற்றுமொரு பதிவில் பிரான்சில்  எனது சைக்கிள் அனுபவங்களை பதிவு செய்கிறேன்...)
              நன்றி மீண்டும் சந்திப்போம்.
                        

No comments: