முகப்பு

Wednesday, 22 June 2011

சீமானுடன் ஒரு சந்திப்பு..!!

வாங்க பங்காளி  வாங்க..! இப்படி ஒரு தலையங்கம் போட்டுத்தான் உங்களை என்னுடைய வலைப்பதிவுக்க..!வரவைக்கவேண்டியிருக்குது..!?இல்லாட்டி ஏதோ பரம்பரை பகையாளியை கண்டவன் மாதிரி பம்முறிங்களே பங்காளிங்க..

எனது ஈழத்து வாழ்கை முழுவதையும் கிராமத்திலேயே கழித்த
எனக்கு பாரீஸ் வந்த ஆரம்ப காலங்களில்  தவிர்கமுடியாத காரணங்களால் அதிக நெருக்கடி மிக்க இடத்தில் வாழவேண்டி இருந்த அந்த நாட்களை நினைக்கும்போது..! ஐய்யோ  வேனாம் விட்டிடுங்க...!

ஆனாலும் இப்பொழுது  எனது வேலை தலம் அமைந்திருப்பது 14ம் luis மன்னனின் வெர்சை கோட்டைக்கு அருகில் அழகிய காட்டு பகுதியில்..  காட்டுக்கு மத்தியில் மூன்று சிறிய குளங்கள் மான்,முயல் போன்ற சிறிய சாது மிருகங்களும் இருக்கின்றன வேலை நேரங்களில் போக்குவரத்து இடர்பாடு ஏற்பட்டால் (கோடை காலங்களில்)இக்குளக்கரையில் அமர்ந்து பத்திரிக்கைகள் பார்பது அல்லது கணணியில் மேய்வது என பொழுதை கழிப்பேன்..!

 இங்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதத்தின் மத்தியில் வரும் சனி ஞாயிற்று கிழமைகளில் தண்ணீர் திருவிழா (உண்மையானh20!!)நடத்துவார்கள் இது ஒரு சிறுவர்களிற்காண நிகழ்சி..!?கடந்த 10வருடங்களாக இவ்விழாவிற்கு வந்து (நானும் சின்னப்புள்ளதானுங்கோ..!!?)செல்கிறேன். இப்போது இப்படியான விழாக்களிக்கு முன்னர் போல் அதிகமானவர்கள் பங்கு பெறுவதில்லை.. கணணியுகத்தில் எல்லோரும்  வீட்டிக்குள் முடங்குகிறார்கள் இன்னும் சில ஆண்டுகளின் பின்னர் இப்படியான விழாக்கள் காணாமல் போகலாம்..!? இவ்வாண்டு கென்னிய நடனக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்கள் ..

எனக்கோர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது பிரான்ஸ் வந்த ஆரம்ப காலங்களில் என்னுடன் நட்பு பாராட்டிய சைமனை(தமிழில் சீமான்..!??)சந்தித்தேன் சைமன்   ஒரு சுவாரசியமான மனிதர் வாழ்கையின் போக்கை அதன் வழியே செல்லவிட்டு தான் அதன் பின்னே பறக்கும் ஒரு சுதந்திர பறவை..!

சைமன் மதங்களை பின் பற்றாத ஒரு யூதர் இவர் பிறந்தது மொரோக்கோ நாட்டின் காசபுலோங்கா நகரத்தில் இவருக்கு பதினொரு சகோதர சகோதரிகள்.(எனக்கு ஒரு சகோதரனை மட்டுமே தெரியும்)ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட பிரான்சுக்கெதிரான போராட்டத்தினால் தனது ஐந்து வயதிலேயே பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்து விட்டார்..!ஆரப்ப நாட்களில் எனக்கு சைமனை ஒரு தொழிலதிபராகவும்(பத்திற்கு மேற்பட்டோர் இவரி தளபாட பட்டறையி வேலை செய்தார்கள்) நல்ல மனிதராகவும்..!? தெரியும்..அன் நாட்களில் லைலா என்ற பெயருடைய அரேபிய பெண்னுடன் வாழ்ந்தார் திருமண ஒப்பந்தமின்றி..?(இருவருக்குமிடையி இருபது வயது வித்தியாசம் அது மட்டுமன்றி இவரின் குடுப்பத்திலும் குழப்பம் இதனால் ...?)

சீன பொருட்களின் இறக்குமதியும் பெரும் பல்பொருள் அங்காடிகளின் வரவும் சைமன் போன்ற சிறு தொழிலதிபர்களை நடுத் தெருவில் விட்டு  விட்டது..!? சைமன்  மட்டுமா? இவரை சார்ந்திருந்த பத்துக் குடும்பங்களையும் சேர்தே !!!?? (இப்படி எத்தனை சைமன்களோ?)இப்பொழுது சைமன் ஒர் கூலித்தொழிலாலி கையில் காசை வைத்திருக்கமாட்டார் அதைப்பற்றி கேட்டால் நாளை நான் இருப்பேனா தெரியாது ஆனால் எனது மனதுக்குள் ஒரு வைராக்கியம் இருக்கிறது இந்த உலகிற்கு எந்த ஒரு சல்லிக்காசையும் விட்டுச் செல்லமாட்டேன்.!!(சமூகத்தின் மேல் கோபம்!!??)

பேச்சு குடும்ப வாழ்கை பற்றி திருப்பியது மிசல்(எனது பெயரை இங்குள்ளவர்கள் உச்சரிக்க சிரமப்படுவதால் எனக்கு நானே இட்ட பெயர்)உனக்கு எத்தனை பிள்ளைகள்?எனக்கு இரண்டு பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டே கைதொலைபேசியில் உள்ள பிள்ளைகளின் புகைபடத்தை காட்டினேன் சிரித்துக்கொண்டே கூறினார் மிசல் நான் ஏன் பிள்ளைகளைப் பெறவில்லையென்று தெரியுமா.!?இப்ப உன்னை போன்ற ஒருவர்
செலவலிப்பது நான்கு பெயருக்கு போகிறது ஆனால் நான் செலவலிப்பது எனக்கு மட்டுமேயென்றான் சிரித்துக்கொண்டே..
இத்துடன் நகைசுவையாக கூறினார்..!!எனக்கு பிள்ளைகள்  பிறந்தால் அனாதையில்லதில் விட்டு விட்டு பதினெட்டு வயது வந்தவுடன் மகனே! நாந்தாண்டா உன் அப்பன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வந்து வேலைக்கனுப்புவேன் அப்பணத்தில் மிஞ்சிய வாழ்க்கையை  ஓட்டுவேன் என்கிறார்...!சிரித்துக்கொண்டே..!

நீண்ட அமைதியின் பின்பு சைமனே தொடங்குகிறார்..மிசல் உனக்கு தெரியாததல்ல இப்போதைய எனது நிலையில் திருமண பந்தத்தை நினைத்து பார்க்க முடியாது எனது எஞ்சிய காலத்தை இப்படியே கழிக்கப் போகிறேன்..ஏனெனில் எனது நட்பு வட்டாரத்தையும்  சொந்தங்களையும் பார்க்கிறேன் அதிகமானவர்கள் விவாகரத்து மீண்டும் திருமணபந்தம் இப்படி போகிறது அவர்கள் வாழ்க்கை இதில் எனக்கு இஸ்டமில்லை...

மாறிவரும் உலகம் வெற்றி பெற்றவர்களையே கணற்கில்  கொள்கிறது..?இவ்வுலகத்திற்கு சைமன் போன்ற சிறுதொழிலதிபர்கள் தேவை என்பதை கணற்கிட மறுக்கிறது உலகத்தில் உள்ள தொழிலாலர்களில் 70%மானவர்கள் சிறுதொழிலை நம்பியே வாழ்கிறார்கள்...சிறுதொழில் நலிவடைவது  உலகம் நலிவதற்குச் சமம்...??

8 comments:

Mahan.Thamesh said...

பாஸ் நல்ல இருக்கே . தொடர்தும் எழுதுங்கள் . நம்ம பக்கமும் வாங்க பாஸ்

ATHAVAN said...

நன்றி பாஸ் முதல் முதல் கைவிசேசஸம் நீங்கதான் பாஸ் இந்த கட்டுரை எழுதவே எனக்கு 2கிழமைகள் சென்றன ..!?அவ்வளவு பிசி பாஸ் ..!இனிமேல் உங்கள் வலைத்தலத்திற்கும் வந்து செல்வேன் நன்றி பாஸ்..

Nesan said...

புலம்பெயர்வில் ஏற்பட்ட மாற்றங்களை எழுதும் நீங்கள் அங்கங்கே சோகரசங்களையும் சேர்த்தால் இன்னும் போகலாம் இன்னும் பலரிடம்.

ATHAVAN said...

புலம்பெயர்வில் ஏற்பட்ட மாற்றங்களை எழுதும் நீங்கள் அங்கங்கே சோகரசங்களையும் சேர்த்தால் போகலாம் இன்னும் பலரிடம். 
மாப்பிள உனக்கே இது நல்லா இருக்கா எனக்கு எல்லா ரசமும் செய்ய தெரியும் சோகரசமெண்டா என்ன மாப்பு..!?

அம்பாளடியாள் said...

நம்ம காட்டானோட எழுத்த யாருதா நல்லா இல்லேன்னு
சொல்லுவாக .அருமையா இருக்கு காட்டான் அட அது போகட்டும்
நம்ம காட்டன் வரும் வரும் எண்டு பாத்துப் பாத்து கண்ணு பூத்துப்
போயி ஓடி வந்தேனுங்க. காட்டானே நம்ம வீட்ட வந்தவங்க எல்லாரும்
சிரிச்சுக்கிடே நிக்குறாங்க நம்ம குரு வரலேன்னு மனசு பதசுப் போயி
வந்தனுங்க .என்னாச்சு ஒருவேள இன்னைக்கு ஞாயிற்றுக் கிளமயின்னு
சரக்க அடிச்சிற்று தூங்கீற்றீங்களா?.....

ஆதி said...

மார்கழி பனியில் கட்டாயம் புலித்தோல் போர்த்தி தானே காட்டுல நிப்பீக இந்த குழிர் கால வேட்டக்கு கட்டாயம் வெர்சயில் காட்டில நிப்பன் mr காட்டானயும் பார்த்த மாதிரி இருக்கும் ஒரு காட்டு மான் அடிச்ச மாதிரியும் இருக்குமில்ல

அம்பாளடியாள் said...

காட்டான் நீங்கள் நலந்தானா?......அடுத்த பதிவு போடவில்லையா?....

ஆதி said...

mr காட்டான் முதலாழித்துவம் எல்லாத்தயும் வெல்லும் க்டசியில் தன்னை தானே கொல்லும் என படித்திருக்கிரேன் உங்க பதிவ பார்த்த பின்பு அதுக்கு இது ஒரு சாட்சி போல இருக்கு